ரிச்சர்ட் கார்பே: Difference between revisions
Thirumalai.p (talk | contribs) (Final) |
(Corrected [[Category:தத்துவவியலாளர்] to Category:தத்துவ அறிஞர்) |
||
| (4 intermediate revisions by 2 users not shown) | |||
| Line 1: | Line 1: | ||
[[File:Richard garbe.jpg|thumb|ரிச்சர்ட் கார்ல் வான் கார்பே | [[File:Richard garbe.jpg|thumb|ரிச்சர்ட் கார்ல் வான் கார்பே, நன்றி - https://www.unimuseum.uni-tuebingen.de/]] | ||
ரிச்சர்ட் கார்பே | ரிச்சர்ட் கார்பே (ரிச்சர்ட் கார்ல் வான் கார்பே, Richard Karl von Garbe) (மார்ச் 9, 1857 - செப்டம்பர் 22, 1927) ஜெர்மானிய தத்துவவியலாளர், இந்தியவியலாளர். இந்தியத் தத்துவங்களை, குறிப்பாக சாங்கிய தத்துவத்தை முறையாக ஆவணப்படுத்தியதில் முக்கியமானவர். | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
ரிச்சர்ட் கார்பே மார்ச் 9, 1857 | ரிச்சர்ட் கார்பே மார்ச் 9, 1857-ல் அப்போதைய ப்ரஷ்ஷியா நாட்டில் ஸ்டெட்டின் நகருக்கு அருகே ப்ரெட்டோ என்ற ஊரில் குஸ்டவ் கார்பே-யூஜீன் இணையருக்கு மகனாக பிறந்தார். | ||
கார்பே ஹெர்மன் க்ராஸ்மன் என்ற பலகலை வல்லுனரிடம் கல்வி கற்றார். கூடுதலாக சமஸ்கிருதத்தையும் கற்று 1873-ல் மேல்நிலைக் கல்வி முடித்தார். பின்னர் ஜெர்மனியில் டுபிஞ்ஜன் பல்கலைகழகத்தில் (Tübingen University) சமஸ்கிருதம் மற்றும் ஜெர்மானிய மொழியியல் கல்வியை புகழ்பெற்ற இந்தியவியலாளரான ருடோல்ப் வான் ரோத் (Rudolph von Roth) இடம் பயின்று 1876-ல் முனைவர் பட்டம் பெற்றார். | |||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
கிறித்தவ ப்ரோடஸ்டண்ட் பிரிவை சேர்ந்தவரான ரிச்சர்ட் கார்பே 1887-ல் அன்னா விச்செர்ட் என்பவரை ப்ரஷ்ஷியாவின் கோனீஸ்பெர்க் நகரில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், இரு மகள்களும் பிறந்தனர். | |||
ரிச்சர்ட் கார்பே 1878-ல் கோனிக்ஸ்பெர்க் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்து | ரிச்சர்ட் கார்பே 1876-ல் இங்கிலாந்துக்கு சென்று ஒரு நூலகத்தில் சில காலம் பணி புரிந்தார். அப்போது புகழ்பெற்ற இந்தியவியலாளரான மாக்ஸ் முல்லரை சந்தித்தார். பின்னர் 1878-ல் கோனிக்ஸ்பெர்க் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்து இரு வருடங்களில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். | ||
கார்பே பேராசிரியராக பணிபுரிந்த போது அதர்வ வேதத்தை ஒர் ஆய்வுப்பதிப்பாக ஜெர்மானிய மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். இந்திய தத்துவத்தைப்பற்றி பல கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டார். மிக முக்கியமாக பொ.மு 1-ஆம் நூற்றாண்டு நூலான ஆபஸ்தம்ப தர்மசூத்திரம் என்ற நூலை மொழிபெயர்த்து வெளியிட்டார். | |||
1885-ல் ஒரு நல்கை பெற்று வாரணாசி சென்று இரண்டு ஆண்டுகள் ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது தமது அனுபவ குறிப்புகளை | 1885-ல் ஒரு நல்கை பெற்று வாரணாசி சென்று இரண்டு ஆண்டுகள் ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது தமது அனுபவ குறிப்புகளை Reiseskizzen (Travelling Sketches) என்ற பெயரில் எழுதி வெளியிட்டார். அக்காலகட்டத்தில் அவை ஜெர்மானிய அறிவியக்க்தினரிடையே பெருமதிப்பு பெற்றன. குறுகிய காலத்திற்குள் இரு பதிப்புகள் வெளிவந்தன. | ||
1887-ல் பெர்லினில் உள்ள அறிவியல் கழகத்தின் (Royal Academy of Sciences in Berlin ) உதவியுடன் மேலும் பல ஆண்டுகள் இந்தியாவில் ஆய்வுகள் மேற்கொண்டார். | கார்பே 1887-ல் பெர்லினில் உள்ள அறிவியல் கழகத்தின் (Royal Academy of Sciences in Berlin) உதவியுடன் மேலும் பல ஆண்டுகள் இந்தியாவில் ஆய்வுகள் மேற்கொண்டார். ஆய்வுகளின் பலனாக சமஸ்கிருத நூல்களை உருவாக்கி வழங்கினார். | ||
ரிச்சர்ட் கார்பே இந்தியாவிலிருந்து கோனிஸ்பெர்க் திரும்பிய பின் அவருடைய பெரும் படைப்பான, இந்திய ஆறு தரிசனங்களில் ஒன்றான, சாங்கியத்தைப்பற்றி Samkhya Philosophie என்ற நூலை வெளியிட்டார். மேலும் சாங்கிய தரிசனத்தின் பல மூல நூல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1892-ல் வெளியிட்டார். | |||
ரிச்சர்ட் கார்பே 1894-ல் மீண்டும் கோனிக்ஸ்பெர்க் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். | ரிச்சர்ட் கார்பே 1894-ல் மீண்டும் கோனிக்ஸ்பெர்க் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். | ||
1895-ல் இவரின் ஆசிரியர் ருடோல்ப் வான் ரோத் | 1895-ல் இவரின் ஆசிரியர் ருடோல்ப் வான் ரோத் டுபிஞ்ஜன் பல்கலைகழகத்தில் மறைந்ததால், அவர் வகித்துவந்த சமஸ்கிருதம் மற்றும் ஒப்பியல் மத ஆய்வியல் இருக்கைக்கு விண்ணப்பித்து பணியில் அமர்ந்தார். அப்போது இந்திய தத்துவங்களையும், குறிப்பாக பகவத்கீதையை மொழிபெயர்த்து வெளியிட்டார். | ||
ரிச்சர்ட் கார்பே 1908-ல் டுபிஞ்ஜன் பல்கலைகழகத்தின் | ரிச்சர்ட் கார்பே 1908-ல் டுபிஞ்ஜன் பல்கலைகழகத்தின் முதல்வாரக பதவி உயர்வு பெற்று, இந்திய தத்துவத்தையும், மதக்கல்வியும் அளித்து பல மாணவர்களை உருவாக்கினார். இவர்களில் இந்தியவியலாளரான ருடோல்ப் ஓட்டோ முதன்மையானவராக கருதப்படுகிறார். | ||
== மறைவு == | == மறைவு == | ||
ரிச்சர்ட் கார்பே தமது 70-வது வயதில் | ரிச்சர்ட் கார்பே தமது 70-வது வயதில் டுபிஞ்ஜன் நகரில் மறைந்தார். | ||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
* 1909 Cross of Honour of the Order | * 1909 Cross of Honour of the Order of the Württemberg Crown | ||
* 1926 Honorary diploma of the | * 1926 Honorary diploma of the Faculty of Philosophy, Tübingen University | ||
== பங்களிப்பு == | == பங்களிப்பு == | ||
| Line 42: | Line 42: | ||
* von Garbe, Indien and das Christentum: eine untersuchung der religions-geschichtlichen zusammenhänge (1914) | * von Garbe, Indien and das Christentum: eine untersuchung der religions-geschichtlichen zusammenhänge (1914) | ||
* von Garbe, Die Sâmkhya-Philosophie: eine Darstellung des indischen Rationalismus (1917) | * von Garbe, Die Sâmkhya-Philosophie: eine Darstellung des indischen Rationalismus (1917) | ||
* von Garbe, | * von Garbe, "Die" Bhagavadgītā (1921) | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
[https://archive.org/details/samkhyapravacana00kapi/page/n13/mode/2up The Sāṁkhya-pravacana-bhāṣya] | * [https://archive.org/details/samkhyapravacana00kapi/page/n13/mode/2up The Sāṁkhya-pravacana-bhāṣya] | ||
[https://archive.org/details/philosophyancie01garbgoog The philosophy of ancient India] | * [https://archive.org/details/philosophyancie01garbgoog The philosophy of ancient India] | ||
[https://archive.org/details/diesamkhyaphilos00garb_0/page/n13/mode/2up Die Sâṃkhya-philosophie] | * [https://archive.org/details/diesamkhyaphilos00garb_0/page/n13/mode/2up Die Sâṃkhya-philosophie] | ||
[https://www.leo-bw.de/detail/-/Detail/details/PERSON/kgl_biographien/116420073/Garbe+Richard+von+Karl ரிச்சர்ட் கார்பே வாழ்க்கை குறிப்பு] | * [https://www.leo-bw.de/detail/-/Detail/details/PERSON/kgl_biographien/116420073/Garbe+Richard+von+Karl ரிச்சர்ட் கார்பே வாழ்க்கை குறிப்பு] | ||
{{Finalised}} | |||
{{Fndt|01-Apr-2025, 07:19:34 IST}} | |||
[[Category:Tamil Content]] | |||
[[Category:இந்தியவியல் அறிஞர்]] | |||
[[Category:தத்துவ அறிஞர்]]] | |||
[[Category:ஜெர்மானியர்]] | |||
Latest revision as of 21:30, 8 January 2026
ரிச்சர்ட் கார்பே (ரிச்சர்ட் கார்ல் வான் கார்பே, Richard Karl von Garbe) (மார்ச் 9, 1857 - செப்டம்பர் 22, 1927) ஜெர்மானிய தத்துவவியலாளர், இந்தியவியலாளர். இந்தியத் தத்துவங்களை, குறிப்பாக சாங்கிய தத்துவத்தை முறையாக ஆவணப்படுத்தியதில் முக்கியமானவர்.
பிறப்பு, கல்வி
ரிச்சர்ட் கார்பே மார்ச் 9, 1857-ல் அப்போதைய ப்ரஷ்ஷியா நாட்டில் ஸ்டெட்டின் நகருக்கு அருகே ப்ரெட்டோ என்ற ஊரில் குஸ்டவ் கார்பே-யூஜீன் இணையருக்கு மகனாக பிறந்தார்.
கார்பே ஹெர்மன் க்ராஸ்மன் என்ற பலகலை வல்லுனரிடம் கல்வி கற்றார். கூடுதலாக சமஸ்கிருதத்தையும் கற்று 1873-ல் மேல்நிலைக் கல்வி முடித்தார். பின்னர் ஜெர்மனியில் டுபிஞ்ஜன் பல்கலைகழகத்தில் (Tübingen University) சமஸ்கிருதம் மற்றும் ஜெர்மானிய மொழியியல் கல்வியை புகழ்பெற்ற இந்தியவியலாளரான ருடோல்ப் வான் ரோத் (Rudolph von Roth) இடம் பயின்று 1876-ல் முனைவர் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
கிறித்தவ ப்ரோடஸ்டண்ட் பிரிவை சேர்ந்தவரான ரிச்சர்ட் கார்பே 1887-ல் அன்னா விச்செர்ட் என்பவரை ப்ரஷ்ஷியாவின் கோனீஸ்பெர்க் நகரில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், இரு மகள்களும் பிறந்தனர்.
ரிச்சர்ட் கார்பே 1876-ல் இங்கிலாந்துக்கு சென்று ஒரு நூலகத்தில் சில காலம் பணி புரிந்தார். அப்போது புகழ்பெற்ற இந்தியவியலாளரான மாக்ஸ் முல்லரை சந்தித்தார். பின்னர் 1878-ல் கோனிக்ஸ்பெர்க் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்து இரு வருடங்களில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.
கார்பே பேராசிரியராக பணிபுரிந்த போது அதர்வ வேதத்தை ஒர் ஆய்வுப்பதிப்பாக ஜெர்மானிய மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். இந்திய தத்துவத்தைப்பற்றி பல கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டார். மிக முக்கியமாக பொ.மு 1-ஆம் நூற்றாண்டு நூலான ஆபஸ்தம்ப தர்மசூத்திரம் என்ற நூலை மொழிபெயர்த்து வெளியிட்டார்.
1885-ல் ஒரு நல்கை பெற்று வாரணாசி சென்று இரண்டு ஆண்டுகள் ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது தமது அனுபவ குறிப்புகளை Reiseskizzen (Travelling Sketches) என்ற பெயரில் எழுதி வெளியிட்டார். அக்காலகட்டத்தில் அவை ஜெர்மானிய அறிவியக்க்தினரிடையே பெருமதிப்பு பெற்றன. குறுகிய காலத்திற்குள் இரு பதிப்புகள் வெளிவந்தன.
கார்பே 1887-ல் பெர்லினில் உள்ள அறிவியல் கழகத்தின் (Royal Academy of Sciences in Berlin) உதவியுடன் மேலும் பல ஆண்டுகள் இந்தியாவில் ஆய்வுகள் மேற்கொண்டார். ஆய்வுகளின் பலனாக சமஸ்கிருத நூல்களை உருவாக்கி வழங்கினார்.
ரிச்சர்ட் கார்பே இந்தியாவிலிருந்து கோனிஸ்பெர்க் திரும்பிய பின் அவருடைய பெரும் படைப்பான, இந்திய ஆறு தரிசனங்களில் ஒன்றான, சாங்கியத்தைப்பற்றி Samkhya Philosophie என்ற நூலை வெளியிட்டார். மேலும் சாங்கிய தரிசனத்தின் பல மூல நூல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1892-ல் வெளியிட்டார்.
ரிச்சர்ட் கார்பே 1894-ல் மீண்டும் கோனிக்ஸ்பெர்க் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.
1895-ல் இவரின் ஆசிரியர் ருடோல்ப் வான் ரோத் டுபிஞ்ஜன் பல்கலைகழகத்தில் மறைந்ததால், அவர் வகித்துவந்த சமஸ்கிருதம் மற்றும் ஒப்பியல் மத ஆய்வியல் இருக்கைக்கு விண்ணப்பித்து பணியில் அமர்ந்தார். அப்போது இந்திய தத்துவங்களையும், குறிப்பாக பகவத்கீதையை மொழிபெயர்த்து வெளியிட்டார்.
ரிச்சர்ட் கார்பே 1908-ல் டுபிஞ்ஜன் பல்கலைகழகத்தின் முதல்வாரக பதவி உயர்வு பெற்று, இந்திய தத்துவத்தையும், மதக்கல்வியும் அளித்து பல மாணவர்களை உருவாக்கினார். இவர்களில் இந்தியவியலாளரான ருடோல்ப் ஓட்டோ முதன்மையானவராக கருதப்படுகிறார்.
மறைவு
ரிச்சர்ட் கார்பே தமது 70-வது வயதில் டுபிஞ்ஜன் நகரில் மறைந்தார்.
விருதுகள்
- 1909 Cross of Honour of the Order of the Württemberg Crown
- 1926 Honorary diploma of the Faculty of Philosophy, Tübingen University
பங்களிப்பு
நூல்கள்
- von Garbe, Vaitâna sûtra: das ritual des Atharvaveda (1878)
- von Garbe, Die indischen Mineralien: ihre Namen und die ihnen zugeschriebenen Kräfte (repr. Gerstenberg, 1974)
- von Garbe, Indien and das Christentum: eine untersuchung der religions-geschichtlichen zusammenhänge (1914)
- von Garbe, Die Sâmkhya-Philosophie: eine Darstellung des indischen Rationalismus (1917)
- von Garbe, "Die" Bhagavadgītā (1921)
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Apr-2025, 07:19:34 IST ]