under review

கொடும்பாளூர் மூவர் கோவில்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors; ; Added info on Finalised date)
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 39: Line 39:
  பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய  
  பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய  
  அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும்<ref>சிலப்பதிகாரம் - எல்லோர்க்குமான எளிய உரையுடன் - டாக்டர் ப.சரவணன் - பக்க எண்: 205</ref>
  அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும்<ref>சிலப்பதிகாரம் - எல்லோர்க்குமான எளிய உரையுடன் - டாக்டர் ப.சரவணன் - பக்க எண்: 205</ref>
கொடும்பாளூர், முற்கால சோழ அரசின் முக்கிய நகரங்களில் ஒன்று. இருக்குவேளிர் என்ற அரசவம்சம் இவ்வூரை ஆண்டு வந்தது. யாதவ வம்சமாக தங்களை கூறிக்கொள்ளும் இவர்கள், சோழர்களுடன் நெருக்கிய மணவுறவு கொண்டு, அவர்களின் கீழ் சிற்றரசர்களாக இருந்தனர். 63 நாயன்மார்களில் ஒருவரான இடங்கழி நாயனார், கொடும்பாளூர் இருக்குவேளிர் குலத்தை சேர்ந்தவர். இடங்கழி நாயனார்‌ புராணம்‌ இதை குறிப்பிடுகிறது.
கொடும்பாளூர், முற்கால சோழ அரசின் முக்கிய நகரங்களில் ஒன்று. இருக்குவேளிர் என்ற அரசவம்சம் இவ்வூரை ஆண்டு வந்தது. யாதவ வம்சமாக தங்களை கூறிக்கொண்ட இவர்கள், சோழர்களுடன் நெருங்கிய மணவுறவு கொண்டு, அவர்களின் கீழ் சிற்றரசர்களாக இருந்தனர். 63 நாயன்மார்களில் ஒருவரான இடங்கழி நாயனார், கொடும்பாளூர் இருக்குவேளிர் குலத்தை சேர்ந்தவர். இடங்கழி நாயனார் புராணம் இதை குறிப்பிடுகிறது.
  முருகுறுசெங்‌ கமலமது மலா்‌துதைந்த மொய்யளிகள்‌
  முருகுறுசெங் கமலமது மலா்துதைந்த மொய்யளிகள்
  பருகுறுதெண்‌ டிரைவாவிப்‌ பயில்பெடையோ டிரையருந்தி
  பருகுறுதெண் டிரைவாவிப் பயில்பெடையோ டிரையருந்தி
  வருகுறுதண்‌ டுளிவாடை மறையமா தவிச்சூழல்‌
  வருகுறுதண் டுளிவாடை மறையமா தவிச்சூழல்
  குருகுறக்குங்‌ கோனாட்டுக்‌ கொடிநகரங்‌ '''''கொடும்பாளூர்‌'''''
  குருகுறக்குங் கோனாட்டுக் கொடிநகரங் '''''கொடும்பாளூர்'''''
   
  அந்நகரத்‌ தினி'''''லிருக்கு''' '''வேளிர்குலத்‌''''' தரசளித்து
  அந்நகரத் தினி'''''லிருக்கு''' '''வேளிர்குலத்''''' தரசளித்து
  மன்னியபொன்‌ னம்பலத்து மணிமுகட்டிற்‌ பாக்கொங்கின்‌
  மன்னியபொன் னம்பலத்து மணிமுகட்டிற் பாக்கொங்கின்
  பன்னுதுலைப்‌ பசும்பொன்னாற்‌ பயில்பிழம்பா மிசையணிந்த
  பன்னுதுலைப் பசும்பொன்னாற் பயில்பிழம்பா மிசையணிந்த
  பொன்னெடுந்தோ ளாதித்தன்‌ புகழ்‌மரபிற்‌ குடிமுதலோர்‌<ref>[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0008070_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.pdf பெரியபுராணம் - இடங்கழி நாயனார்‌ புராணம்‌]</ref>
  பொன்னெடுந்தோ ளாதித்தன் புகழ்மரபிற் குடிமுதலோர்<ref>[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0008070_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.pdf பெரியபுராணம் - இடங்கழி நாயனார் புராணம்]</ref>
கொடும்பாளூர் முற்காலத்தில் காஞ்சி மற்றும் கும்பகோணம் போன்று கோவில்களின் நகரமாக விளங்கியது. அப்போது இங்கே 108 கோவில்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
கொடும்பாளூர் முற்காலத்தில் காஞ்சி மற்றும் கும்பகோணம் போன்று கோவில்களின் நகரமாக விளங்கியது. அப்போது இங்கே 108 கோவில்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

Line 56: Line 56:
கோவிலின் மூலவரான சிவலிங்கம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.  
கோவிலின் மூலவரான சிவலிங்கம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.  

கருவறையை சுற்றியுள்ள விமானத்தின் கோஷ்டத்தில் ரிஷபாந்திக அர்த்த நாரீஸ்வரர், பிக்‌ஷாடனர், வீணாதர தக்‌ஷிணா மூர்த்தி, கங்காதரர் போன்ற சிற்பங்கள் உள்ளன.
கருவறையை சுற்றியுள்ள விமானத்தின் கோஷ்டத்தில் ரிஷபாந்திக அர்த்த நாரீஸ்வரர், பிக்ஷாடனர், வீணாதர தக்ஷிணா மூர்த்தி, கங்காதரர் போன்ற சிற்பங்கள் உள்ளன.

== கோவில் கட்டிடக்கலை அமைப்பு ==
== கோவில் கட்டிடக்கலை அமைப்பு ==
Line 86: Line 86:

======அதிஷ்டானம்======
======அதிஷ்டானம்======
விமானத்தின் மொத்த கட்டுமானத்தையும் தாங்கும் அடித்தள அமைப்பான அதிஷ்டானமானது உபானம், மகா பத்மம், கம்பு, அதம பத்மம், விருத்த குமுதம், பத்ம வரி, கம்பு மற்றும் யாளி வரி போன்ற உறுப்புகளை கொண்டுள்ளது. யாளி வரியின் ஓரங்களில் மகரத்தின் திறந்த வாயிலிருந்து வீரர்கள் வெளிவருவது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் மொத்த கட்டுமானத்தையும் தாங்கும் அடித்தள அமைப்பான அதிஷ்டானம் உபானம், மகா பத்மம், கம்பு, அதம பத்மம், விருத்த குமுதம், பத்ம வரி, கம்பு மற்றும் யாளி வரி போன்ற உறுப்புகளை கொண்டுள்ளது. யாளி வரியின் ஓரங்களில் மகரத்தின் திறந்த வாயிலிருந்து வீரர்கள் வெளிவருவது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

பத்ம பந்த அதிஷ்டானமாக வகைப்படுத்தப்படுகிறது.  
பத்ம பந்த அதிஷ்டானமாக வகைப்படுத்தப்படுகிறது.  
Line 97: Line 97:
கிழக்கு கோஷ்டத்தில் ரிஷபாந்திக அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் பத்ம பீடத்தின் மீது நின்ற நிலையில் உள்ளது. ஒரு கை, சிதைந்த நிலையில் உள்ள ரிஷபத்தின் மீது பல்லவ ஹஸ்தமாகவும் மற்றொரு கை மலரை ஏந்தியவாறும் அமைந்துள்ளது. ஜடாமகுடத்துடன் கண்டிகை, சரப்பளி, உதரபந்தம், கடகம், தோள்வளை மற்றும் இடைக்கட்டு போன்ற அணிகலன்களும் காணப்படுகின்றன. சிற்பத்தின் வலப்பக்கம் அரையாடையாகவும் இடப்பக்கம் பாதம் வரை ஆடையுடனும் காணப்படுகிறது.

[[File:மைய சன்னிதி வடக்கு கோஷ்டம்.jpg|thumb|வடக்கு கோஷ்டம் - பிக்‌ஷாடனார்|300x300px]]
[[File:மைய சன்னிதி வடக்கு கோஷ்டம்.jpg|thumb|வடக்கு கோஷ்டம் - பிக்ஷாடனார்|300x300px]]
வடக்கு கோஷ்டத்தில் பிக்‌ஷாடனர் சிற்பம் வைசாக ஸ்தானகத்தில் அமைந்துள்ளது. சிதைந்த நிலையில் உள்ள சிற்பத்தின் ஒரு கை மானை தொட்டுக்கொண்டு உள்ளது.
வடக்கு கோஷ்டத்தில் பிக்ஷாடனர் சிற்பம் வைசாக ஸ்தானகத்தில் அமைந்துள்ளது. சிதைந்த நிலையில் உள்ள சிற்பத்தின் ஒரு கை மானை தொட்டுக்கொண்டு உள்ளது.

======பிரஸ்தாரம்======
======பிரஸ்தாரம்======
Line 109: Line 109:
முதல் தளத்தின் மேற்கு கோஷ்டத்தில் சிற்பம் இல்லை.
முதல் தளத்தின் மேற்கு கோஷ்டத்தில் சிற்பம் இல்லை.

தெற்கு கோஷ்டத்தில் தக்‌ஷிணா மூர்த்தி சிற்பம் உள்ளது.
தெற்கு கோஷ்டத்தில் தக்ஷிணா மூர்த்தி சிற்பம் உள்ளது.

கிழக்கு கோஷ்டத்தில் உமாசகிதர் சிற்பம் காணப்படுகிறது. சிதைந்த நிலையில் உள்ள சிவன் சிற்பம், சுகாசனத்தில் அமர்ந்து இடது தொடையில் உமையை தாங்கியவாரும் இடக்கையால் உமையை அணைத்தவாரும் காணப்படுகிறது.
கிழக்கு கோஷ்டத்தில் உமாசகிதர் சிற்பம் காணப்படுகிறது. சிதைந்த நிலையில் உள்ள சிவன் சிற்பம், சுகாசனத்தில் அமர்ந்து இடது தொடையில் உமையை தாங்கியவாரும் இடக்கையால் உமையை அணைத்தவாரும் காணப்படுகிறது.
Line 121: Line 121:
மேற்கில் உள்ள கிரீவ கோஷ்டத்தில் உமாசகிதர் சிற்பம் உள்ளது. சுகாசனத்தில் அமர்ந்துள்ள சிவன் சிற்பத்தின் இடது முன்கை தேவியை அணைத்தும் வலது முன்கை தேவியை நோக்கிவாறும் அமைந்துள்ளது. வலது பின்கையில் மழு உள்ளது. தேவியின் சிற்பம் உத்குடிகாசனத்தில், இடது கையை பீடத்தில் ஊன்றியவாறு காணப்படுகிறது.

தெற்கில் உள்ள கிரீவ கோஷ்டத்தில் தக்‌ஷிணா மூர்த்தியின் சிற்பம் காணப்படுகிறது.
தெற்கில் உள்ள கிரீவ கோஷ்டத்தில் தக்ஷிணா மூர்த்தியின் சிற்பம் காணப்படுகிறது.

கிழக்கில் உள்ள கிரீவ கோஷ்டத்தில் இந்திரன் சிற்பம் யானை மீது அமர்ந்த நிலையில் உள்ளது. சிற்பத்தின் வலதுகை அபய ஹஸ்தமாகவும், இடதுகை தொடையின் மீது வைத்தவாறும் அமைந்துள்ளது. கண்டிகை, சரப்பளி, தோள்வளை, கடகம், இடைக்கட்டு மற்றும் வீரசங்கிலி போன்ற அணிகலன்களுடன் காணப்படுகிறது.

Line 141: Line 141:
======பாதவர்க்கம்======
======பாதவர்க்கம்======
பாதவர்க்க பகுதியில் உள்ள அரைத்தூண்களும் கோஷ்டங்களும் கோஷ்ட தூண்களும் மகர தோரணமும் மைய சன்னிதியுடன் ஒத்துள்ளன.
பாதவர்க்க பகுதியில் உள்ள அரைத்தூண்களும் கோஷ்டங்களும் கோஷ்ட தூண்களும் மகர தோரணமும் மைய சன்னிதியுடன் ஒத்துள்ளன.
[[File:வீணாதரர் தெற்கு சன்னிதி தெற்கு கோஷ்டம்.jpg|thumb|240x240px|தெற்கு கோஷ்டம் - வீணாதர தக்‌ஷிணா மூர்த்தி]]
[[File:வீணாதரர் தெற்கு சன்னிதி தெற்கு கோஷ்டம்.jpg|thumb|240x240px|தெற்கு கோஷ்டம் - வீணாதர தக்ஷிணா மூர்த்தி]]
தெற்கு கோஷ்டத்தில் வீணாதர தக்‌ஷிணா மூர்த்தி சிற்பம், பத்ம பீடத்தின் மீது நின்ற நிலையில் முன்னிரு கைகளிலும் வீணையை ஏந்தியுள்ளது. வலது பின்கையில் அக்‌ஷமாலை உள்ளது. ஜாடபாரத்துடன் பத்ர குண்டலம், மகர குண்டலம், கண்டிகை, சரப்பளி, உதரபந்தம், கடகம், தோள்வளை மற்றும் இடைக்கட்டு போன்ற அணிகலன்களுடன் காணப்படுகிறது.
தெற்கு கோஷ்டத்தில் வீணாதர தக்ஷிணா மூர்த்தி சிற்பம், பத்ம பீடத்தின் மீது நின்ற நிலையில் முன்னிரு கைகளிலும் வீணையை ஏந்தியுள்ளது. வலது பின்கையில் அக்ஷமாலை உள்ளது. ஜாடபாரத்துடன் பத்ர குண்டலம், மகர குண்டலம், கண்டிகை, சரப்பளி, உதரபந்தம், கடகம், தோள்வளை மற்றும் இடைக்கட்டு போன்ற அணிகலன்களுடன் காணப்படுகிறது.
[[File:Gangatharar - தெற்கு சன்னிதி கிழக்கு கொஷ்டம் .jpg|thumb|237x237px|கிழக்கு கோஷ்டம் - கங்காதரர்]]
[[File:Gangatharar - தெற்கு சன்னிதி கிழக்கு கொஷ்டம் .jpg|thumb|237x237px|கிழக்கு கோஷ்டம் - கங்காதரர்]]
கிழக்கு கோஷ்டத்தில் கங்காதரர் சிற்பம் பத்ம பீடத்தின் மீது வைசாக ஸ்தானகத்தில் அமைந்துள்ளது. கங்காதரரின் ஜடா மகுடம் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. சிற்பத்தின் வலது முன்கை தலையில் கங்கையை தாங்கியவாறும், இடது முன்கை ஊறு ஹஸ்தமாகவும் உள்ளது. வலது பின்கை ரிஷபத்தின் மீது பல்லவ ஹஸ்தமாகவும், இடது பின்கை சிதைந்தும் உள்ளது.

வடக்கு கோஷ்டத்தில் பிக்‌ஷாடனர் சிற்பம் ஜடாமகுடத்துடன் நின்ற நிலையில் ஒரு கை மானை தொட்டுக்கொண்டு உள்ளது. சிற்பத்தின் பெரும்பகுதி சிதைந்துள்ளது.
வடக்கு கோஷ்டத்தில் பிக்ஷாடனர் சிற்பம் ஜடாமகுடத்துடன் நின்ற நிலையில் ஒரு கை மானை தொட்டுக்கொண்டு உள்ளது. சிற்பத்தின் பெரும்பகுதி சிதைந்துள்ளது.

======பிரஸ்தாரம்======
======பிரஸ்தாரம்======
Line 199: Line 199:
|கோஷ்டம்
|கோஷ்டம்
|இல்லை
|இல்லை
|வீணாதர தக்‌ஷிணா மூர்த்தி
|வீணாதர தக்ஷிணா மூர்த்தி
|-
|-
|
|
|முதல் தளம்
|முதல் தளம்
|தக்‌ஷிணா மூர்த்தி
|தக்ஷிணா மூர்த்தி
|நடராஜர்
|நடராஜர்
|-
|-
|
|
|கிரீவம்
|கிரீவம்
|தக்‌ஷிணா மூர்த்தி
|தக்ஷிணா மூர்த்தி
|கஜசம்ஹார மூர்த்தி
|கஜசம்ஹார மூர்த்தி
|-
|-
Line 228: Line 228:
|வடக்கு
|வடக்கு
|கோஷ்டம்
|கோஷ்டம்
|பிக்‌ஷாடனர்
|பிக்ஷாடனர்
|பிக்‌ஷாடனர்
|பிக்ஷாடனர்
|-
|-
|
|
Line 246: Line 246:
கொடும்பாளூர் மூவர் கோவிலில் பூதி விக்ரமகேசரி மற்றும் முதலாம் ராஜேந்திரனின் காலத்தை சேர்ந்த 2 கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
கொடும்பாளூர் மூவர் கோவிலில் பூதி விக்ரமகேசரி மற்றும் முதலாம் ராஜேந்திரனின் காலத்தை சேர்ந்த 2 கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

*பூதி விக்ரமகேசரி கால கல்வெட்டு மைய சன்னிதியின் தென்புற சுவரில் காணப்படுகிறது. சமஸ்கிருத மொழியில் பல்லவ கிரந்தத்தில் அமைந்த இக்கல்வெட்டின் முற்பகுதி சிதைந்துள்ளது. கல்வெட்டில் 24 வரிகள் சிதைவடையாமல் உள்ளன. இதில் வேளிர்களின் 9 தலைமுறை வம்ச வரிசையும், பல்லவர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு எதிரான அவர்களின் போர் வெற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. வேளிர்கள் யது வம்சத்தை (யதுவம்ச கேது) சேர்ந்தவர்கள். விக்ரமகேசரியின் தாய் அனுபமா, சோழ குலத்தை சேர்ந்தவர். கல்வெட்டில் பூதி விக்ரமகேசரி, அவர் மற்றும் அவரது இரண்டு மனைவிகளான வரகுணா, கற்றளி ஆகியோரின் பெயர்களில் மூன்று கோவில்களை கட்டி அதில் மகேஸ்வரனை (சிவன்) நிறுவியதை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் காலாமுகத்தின் தலைமைத் துறவியான மல்லிகார்ஜுனர் என்பவருக்கு விக்ரமகேசரி ஒரு மடத்தை அளித்து, 11 கிராமங்களையும் தானமாக கொடுத்துள்ளார். இந்த கிராமங்களின் வருமானத்திலிருந்து, கோவிலின் பூஜைகளை பார்த்துக்கொண்டு, அசிதவக்த்ர (காலாமுக) பிரிவின் 50 துறவிகளுக்கு உணவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த மல்லிகார்ஜுனர், வித்யாரசியின் சீடரும் அத்ரேய கோத்ரத்தை சேர்ந்தவரும் ஆவார். கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: ஶ்ரீ வீரதுங்கன், அதிவீரன், அனுபமா, நிர்பகேசரி, பரதுர்க்க மர்த்தனன், சமராபிராமன், யதுவம்சகேது, பூதி, மின்னமலை விக்ரமகேசரி, பல்லவ, வீரபாண்டியன், கொடும்பாளூர், கற்றளி, வரகுணா, பராந்தகன், ஆதித்யவர்மன், மல்லிகார்ஜுன, வித்யாரசி, அத்ரேய கோத்ர.<ref>புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் ([https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdlZl9&tag=Inscriptions+%28texts%29+of+the+Pudukkottai+state#book1/ Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority]) கல்வெட்டு எண்: 14, பக்க எண்: 9</ref>
*பூதி விக்ரமகேசரி கால கல்வெட்டு மைய சன்னிதியின் தென்புற சுவரில் காணப்படுகிறது. சமஸ்கிருத மொழியில் பல்லவ கிரந்தத்தில் அமைந்த இக்கல்வெட்டின் முற்பகுதி சிதைந்துள்ளது. கல்வெட்டில் 24 வரிகள் சிதைவடையாமல் உள்ளன. இதில் வேளிர்களின் 9 தலைமுறை வம்ச வரிசையும், பல்லவர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு எதிரான அவர்களின் போர் வெற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. வேளிர்கள் யது வம்சத்தை (யதுவம்ச கேது) சேர்ந்தவர்கள். விக்ரமகேசரியின் தாய் அனுபமா, சோழ குலத்தை சேர்ந்தவர். கல்வெட்டில் பூதி விக்ரமகேசரி, அவர் மற்றும் அவரது இரண்டு மனைவிகளான வரகுணா, கற்றளி ஆகியோரின் பெயர்களில் மூன்று கோவில்களை கட்டி அதில் மகேஸ்வரனை (சிவன்) நிறுவியதை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் காளாமுகத்தின் தலைமைத் துறவியான மல்லிகார்ஜுனர் என்பவருக்கு விக்ரமகேசரி ஒரு மடத்தை அளித்து, 11 கிராமங்களையும் தானமாக கொடுத்துள்ளார். இந்த கிராமங்களின் வருமானத்திலிருந்து, கோவிலின் பூஜைகளை பார்த்துக்கொண்டு, அசிதவக்த்ர (காளாமுக) பிரிவின் 50 துறவிகளுக்கு உணவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த மல்லிகார்ஜுனர், வித்யாரசியின் சீடரும் அத்ரேய கோத்ரத்தை சேர்ந்தவரும் ஆவார். கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: ஶ்ரீ வீரதுங்கன், அதிவீரன், அனுபமா, நிர்பகேசரி, பரதுர்க்க மர்த்தனன், சமராபிராமன், யதுவம்சகேது, பூதி, மின்னமலை விக்ரமகேசரி, பல்லவ, வீரபாண்டியன், கொடும்பாளூர், கற்றளி, வரகுணா, பராந்தகன், ஆதித்யவர்மன், மல்லிகார்ஜுன, வித்யாரசி, அத்ரேய கோத்ர.<ref>புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் ([https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdlZl9&tag=Inscriptions+%28texts%29+of+the+Pudukkottai+state#book1/ Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority]) கல்வெட்டு எண்: 14, பக்க எண்: 9</ref>
*முதலாம் இராஜேந்திரனின் 11 அல்லது 12-ஆம் ஆட்சியாண்டு (பொ.யு. 1023 - 1024) கல்வெட்டு மைய சன்னிதியின் வடபுற சுவரில் காணப்படுகிறது. 35 வரிகளை கொண்ட இக்கல்வெட்டு, 'திருமன்னி வளர இருநில மடந்தையும்' என தொடங்கும் ராஜேந்திரனின் சோழனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது. கல்வெட்டின் பிற்பகுதி சிதைந்துள்ளதால் கல்வெட்டின் செய்தி கிடைக்கவில்லை. மெய்க்கீர்த்தியில் பாண்டிய, கேரள, சாளுக்ய மற்றும் ஈழத்தின் மன்னர்களை இராஜேந்திரன் போரில் வென்றதை பற்றி உள்ளது. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: இடைதுரை நாடு, வனவாசி, கொள்ளிப்பாக்கம், மண்ணைக்கடக்கம், சுந்தர முடியும் இந்திரன் ஆரமும், ஈழமண்டலம், எறிபடை கேரளம், செங்கதிர் மாலை, பரசுராமன், சான்திமத்தீவு.<ref>புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் ([https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdlZl9&tag=Inscriptions+%28texts%29+of+the+Pudukkottai+state#book1/ Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority]) கல்வெட்டு எண்: 104, பக்க எண்: 53</ref>

Line 265: Line 265:
*[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdlZl9&tag=Inscriptions+%28texts%29+of+the+Pudukkottai+state#book1/ Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority]

==அடிக்குறிப்புகள்==
== அடிக்குறிப்புகள் ==
<references />

<references />
[[Category:Tamil Content]]
[[Category:இந்து மத ஆலயம்]]
{{Finalised}}
{{Fndt|11-Mar-2025, 21:03:38 IST}}

Latest revision as of 01:04, 12 March 2025

கொடும்பாளூர் மூவர் கோவில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகாவில் அமைந்துள்ள வேளிர் கால கோவில். இக்கோவில் 10-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பூதி விக்ரமகேசரி என்ற வேளிர் சிற்றரசரால் கட்டப்பட்டது.

கொடும்பாளூர் மூவர் கோவில் - மைய மற்றும் தெற்கு சன்னிதிகள்
கொடும்பாளூர் மூவர் கோவில் - மூலவர்

ஆலய அறிமுகம்

கொடும்பாளூர் மூவர் கோவில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகாவில் அமைந்துள்ளது. இக்கோவில், தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கோவிலின் மூலவராக சிவலிங்க சிற்பம் உள்ளது. கோவிலின் ஆகம முறைகள், தலபுராணங்கள் பற்றிய விவரங்கள் அறியக் கிடைக்கவில்லை.

இடம்

கொடும்பாளூர் மூவர் கோவில் புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 43 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே 39 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள கொடும்பாளூர் என்ற ஊரில் அமைந்துள்ளது.

கோவில் வரலாறு, பெயர்

கொடும்பாளூர் மூவர் கோவில் பற்றிய முதன்மையான வரலாற்று செய்திகள் எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம், வெங்கடரங்க ராஜு, டக்லஸ் பேரட் (Douglas Barrett), கே.ஜி. கிருஷ்ணன் மற்றும் கே.வி. சௌந்தர ராஜன் ஆகிய வரலாற்று ஆய்வாளர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. இக்கோவிலுக்குள்ளும் தமிழ்நாட்டின் மற்ற சில பகுதிகளிலும் கிடைத்த கல்வெட்டு சான்றுகளைக் கொண்டு கோவில் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

கொடும்பாளூர் மூவர் கோவில் பூதி விக்ரமகேசரி என்ற இருக்குவேளிர் சிற்றரசரால், அவர் பெயரிலும், அவரது இரு மனைவியரான வரகுணா மற்றும் கற்றளியின் பெயரில் கட்டப்பட்டுள்ளது.

ஆய்வாளர்களின் கருத்துகள், விவாதங்கள்

கொடும்பாளூர் மூவர் கோவிலை கட்டிய பூதி விக்ரமகேசரியின் காலத்தை பற்றி ஆய்வாளர்களிடம் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

வெங்கடரங்க ராஜு, இக்கோவில் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதுகிறார்.[1]

கே.ஜி. கிருஷ்ணன், கீழூர் கல்வெட்டில் உள்ள மாறவன் பூதி என்றழைக்கப்படும் தென்னவன் இளங்கோ வேலனும் மூவர் கோவில் கல்வெட்டில் உள்ள பூதி விக்ரமகேசரியும் ஒருவரே என்கிறார். அதன்படி விக்ரமகேசரி, 3-ஆம் நந்திவர்ம பல்லவன் (பொ.யு. 826 - 849) மற்றும் முதலாம் ஆதித்ய சோழனின் (பொ.யு. 871 - 907) சமகாலத்தவர். மேலும் முதலாம் ஆதித்ய சோழனின் (இராஜகேசரிவர்மன்) காலத்தை சேர்ந்த இரு வெவ்வேறு கல்வெட்டுகளில் உள்ள 'கற்றளி' மற்றும் 'வரகுணா' என்ற பெயர்களும், மூவர் கோவில் கல்வெட்டில் வரும் விக்ரமகேசரியுன் மனைவியரின் பெயர்களும் ஒன்றாக உள்ளது. இத்துடன் வேளிர் மற்றும் சோழர்களின் மணத்தொடர்புகளையும் விரிவாக விவாதித்து, விக்ரமகேசரியின் காலம் 9-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்கிறார்[2].

கே.வி. சௌந்தர ராஜன், விக்ரமகேசரி, விஜயாலயன் மற்றும் முதலாம் ஆதித்ய சோழனின் சமகாலத்தவர் என்கிறார். அதன்படி இக்கோவில் கட்டப்பட்ட காலம் 9-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. விமானத்தின் சாலை அமைப்பு பாண்டியர் காலத்தை சேர்ந்ததாகவும், சிற்பங்களின் படிமவியல் பல்லவர்கள் மற்றும் பாண்டியர்களின் காலத்தை ஒத்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.[3]

எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம், அனைத்து ஆய்வாளர்களின் கருத்துகளையும் எடுத்துக்கொண்டு, ஏற்றும் மறுத்தும் விரிவாக விவாதித்து, விக்ரமகேசரியின் காலத்தை 10-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி என வரையறுக்கிறார். அவரின் ஆய்வு முடிவுகள்:[4]

  1. மூவர் கோவிலின் மைய சன்னிதியில் உள்ள கல்வெட்டு, கோவிலை கட்டியவர் பூதி விக்ரமகேசரி எனவும், கோவிலுக்கு அவர் அளித்த தானங்கள் பற்றியும் பேசுகிறது. இந்த கல்வெட்டின் எழுத்தமைதி, 7,8 மற்றும் 9-ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுகளுடன் சேராமல், 10-ஆம் நூற்றாண்டுடன் தான் சரியாக பொருந்துகிறது.
  2. கல்வெட்டில் விக்ரமகேசரியின் எதிரியாக 'சோழ தலை கொண்ட வீரபாண்டியன்' குறிப்பிடப்பட்டுள்ளார். முதலாம் பராந்தகனின் காலத்திலும் (பொ.யு. 907 - 950), அதற்கு முந்தைய காலத்திலும், இந்த பட்டபெயருடன் வீரபாண்டியன் என்ற பெயர் கொண்ட பாண்டிய அரசன் இருந்ததற்கான சான்றுகள் இல்லை.
  3. கரந்தை தமிழ் சங்க செப்பேடுகளின்படி, இரண்டாம் பராந்தகனின் (பொ.யு. 957 - 973) ஆட்சி காலத்தில் இரண்டாம் ஆதித்யன், வீரபாண்டியனை சேவூர் போர்க்களத்தில் வென்றுள்ளான். பூதி விக்ரமகேசரியின் மகன்களின் பெயர்களான 'பராந்தகன்' மற்றும் 'ஆதித்யவர்மன்', இரண்டாம் பராந்தகன் மற்றும் இரண்டாம் ஆதித்யனின் பெயரை பின்பற்றி வைக்கப்பட்டிருக்கலாம்.
  4. கீழூர் கல்வெட்டில் உள்ள மாறவன் பூதி என்றழைக்கப்படும் தென்னவன் இளங்கோ வேலனும் மூவர் கோவில் கல்வெட்டில் உள்ள பூதி விக்ரமகேசரியும் ஒருவரே என்பது சரியல்ல. மேலும், முதலாம் ஆதித்யன் கால கல்வெட்டுகளில் உள்ள 'கற்றளி' மற்றும் 'வரகுணா' என்ற பெண்களும், மூவர் கோவில் கல்வெட்டில் உள்ள விக்ரமகேசரியின் மனைவியரும் ஒருவரே என்பதற்கு உறுதியான சான்றுகள் எதுவும் இல்லை. அது வெறும் பெயர் ஒற்றுமை மட்டுமே.

இதன்படி விக்ரமகேசரியின் காலம் 10-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி என எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம் கூறுகிறார்.

டக்லஸ் பேரட், விக்ரமகேசரி, சுந்தர சோழன் மற்றும் இரண்டாம் ஆதித்யனின் சமகாலத்தவர் என்கிறார். அதன்படி கோவில் கட்டப்பட்ட காலம் பொ.யு 950 - 970 க்குள் இருக்கலாம். அத்துடன் மூவர் கோயிலின் கட்டிடக்கலை அமைப்பு 10-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பதற்கான புறவயமான சான்றுகள் எதுவும் இல்லை என்பதால், எஸ்.ஆர். பாலசுப்ரமண்யத்தின் கருத்தை ஏற்று கோவில் கட்டப்பட்ட காலம் 10-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்கிறார்.[5]

ஊர் வரலாறு

கொடும்பாளூர், தமிழின் தொன்மையான காப்பியமான சிலப்பதிகாரத்தில் 'கொடும்பை' என்ற பெயரில் வருகிறது. மாங்காட்டு மறையோன், கோவலனுக்கு மதுரை செல்ல வழி சொல்லும்போது, கொடும்பாளூர்க்கும் நெடுங்குளத்திற்கும் இடையே வழி மூன்றாக பிரியும் என்கிறார். கொடும்பாளூர் அப்போது சோழர்களின் தலைநகரான உறையூரையும் பாண்டியர்களின் தலைநகரமான மதுரையையும் இணைக்கும் பாதையாக இருந்துள்ளது.

கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால் 
பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய 
அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும்[6]

கொடும்பாளூர், முற்கால சோழ அரசின் முக்கிய நகரங்களில் ஒன்று. இருக்குவேளிர் என்ற அரசவம்சம் இவ்வூரை ஆண்டு வந்தது. யாதவ வம்சமாக தங்களை கூறிக்கொண்ட இவர்கள், சோழர்களுடன் நெருங்கிய மணவுறவு கொண்டு, அவர்களின் கீழ் சிற்றரசர்களாக இருந்தனர். 63 நாயன்மார்களில் ஒருவரான இடங்கழி நாயனார், கொடும்பாளூர் இருக்குவேளிர் குலத்தை சேர்ந்தவர். இடங்கழி நாயனார் புராணம் இதை குறிப்பிடுகிறது.

முருகுறுசெங் கமலமது மலா்துதைந்த மொய்யளிகள்
பருகுறுதெண் டிரைவாவிப் பயில்பெடையோ டிரையருந்தி
வருகுறுதண் டுளிவாடை மறையமா தவிச்சூழல்
குருகுறக்குங் கோனாட்டுக் கொடிநகரங் கொடும்பாளூர்

அந்நகரத் தினிலிருக்கு வேளிர்குலத் தரசளித்து
மன்னியபொன் னம்பலத்து மணிமுகட்டிற் பாக்கொங்கின்
பன்னுதுலைப் பசும்பொன்னாற் பயில்பிழம்பா மிசையணிந்த
பொன்னெடுந்தோ ளாதித்தன் புகழ்மரபிற் குடிமுதலோர்[7]

கொடும்பாளூர் முற்காலத்தில் காஞ்சி மற்றும் கும்பகோணம் போன்று கோவில்களின் நகரமாக விளங்கியது. அப்போது இங்கே 108 கோவில்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

கோவில் தெய்வங்கள்

மூலவர்

கோவிலின் மூலவரான சிவலிங்கம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

கருவறையை சுற்றியுள்ள விமானத்தின் கோஷ்டத்தில் ரிஷபாந்திக அர்த்த நாரீஸ்வரர், பிக்ஷாடனர், வீணாதர தக்ஷிணா மூர்த்தி, கங்காதரர் போன்ற சிற்பங்கள் உள்ளன.

கோவில் கட்டிடக்கலை அமைப்பு

கொடும்பாளூர் மூவர் கோவில் வளாகத்தில் மேற்கு நோக்கி வரிசையாக அமைந்த மூன்று தனித்தனி சன்னிதிகள் உள்ளன. வடபுற சன்னிதியில், தற்போது அடித்தளம் மட்டுமே உள்ளது. மைய மற்றும் தென்புற சன்னிதியின் விமானங்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளன[8]. இரண்டு விமானங்களும் முழுவதுமாக கருங்கற்களால் நாகர பாணியில் கட்டப்பட்டுள்ளன. வடபுற சன்னிதிக்கு வடகிழக்கில் 3 மீட்டர் விட்டமுள்ள கிணறு ஒன்று உள்ளது.

இரு சன்னிதிகளும் தனித்தனி கருவறை மற்றும் அர்த்தமண்டபத்துடன் அமைந்துள்ளன. அர்த்தமண்டபத்தை அடுத்துள்ள மகாமண்டபம் மூன்று சன்னிதிகளுக்கும் பொதுவாக இருந்திருக்க வேண்டும். தற்போது மண்டபங்களின் அடித்தளம் மட்டுமே காணக்கிடைக்கிறது. இரு சன்னிதிகளின் கட்டிட அமைப்பும், கோஷ்ட சிற்பங்கள் மற்றும் சில பகுதிகளை தவிர, ஏறத்தாழ ஒரே அமைப்பில் உள்ளது.

மகாமண்டபத்தின் முன்புறம் ரிஷப மண்டபம், பலிபீடம் அல்லது கொடிமரத்தின் (துவஜஸ்தம்பம்) அடித்தளங்கள் உள்ளன.

இந்த மூன்று சன்னிதிகளையும் சுற்றி, 15 அல்லது 16 சுற்றாலயங்கள் இருந்துள்ளன. சிதைந்த அடித்தளத்தை வைத்து பார்க்கும்போது சுற்றாலயங்களும் கருவறை மற்றும் அர்த்த மண்டபத்துடன் இருந்திருக்க வேண்டும். இவை அனைத்தையும் சுற்றி இரண்டு வாயில்கள் கொண்ட திருச்சுற்று மதிலும் அவற்றில் ஒரு வாயிலில் கோபுரமும் இருந்திருக்க வேண்டும்.[9]

கருவறை

இரு சன்னிதிகளின் கருவறைகளும் 6.4 மீட்டர் பக்க அளவு கொண்ட சதுரமாக உள்ளன. கருவறைகளின் சுவர்கள் 1.5 மீட்டர் தடிமனானவை.

அர்த்தமண்டபம்

கருவறையை அடுத்துள்ள அர்த்தமண்டபம் 5.5 மீட்டர் பக்க அளவு கொண்ட சதுரமாக உள்ளது. கருவறையின் வாயிலில் ரிஷபமும் இரு துவார பாலகர் சிற்பங்களும் தனியாக வைக்கப்பட்டுள்ளன.

மைய சன்னிதியில் உள்ள துவாரபாலகர் சிற்பங்கள் ஜடாபந்தத்துடன் பத்ர குண்டலம், சரப்பளி, கடகம், தோள்வளை, யக்ஞோபவீதம், உதரபந்தம் மற்றும் இடைக்கட்டு போன்ற அணிகலன்களுடன் காணப்படுகிறது. வலது கை கதையின் மீது பல்லவ ஹஸ்தமாகவும், இடது கை விஸ்மய ஹஸ்தமாகவும் அமைந்துள்ளது. இடப்பக்க சிற்பத்தின் இடது கால் நிலத்தில் ஊன்றியும், வலது கால் கதையின் மீது ஊர்த்துவ ஜானுவாகவும் உள்ளது.

தெற்கு சன்னிதியின் துவாரபாலகர் சிற்பங்கள் ஜடாபந்தத்துடன் ஒரு கை கதையின் மீது பல்லவ ஹஸ்தமாகவும், மற்றொரு கை விஸ்மய ஹஸ்தமாகவும் அமைந்துள்ளது. சிற்பங்களின் பெரும்பான்மையான பகுதிகள் சிதைந்துள்ளன.

மகாமண்டபம்

மூன்று சன்னிதிகளுக்கும் பொதுவான மகாமண்டபம் 28 மீட்டர் நீளமும் 12.5 மீட்டர் அகலமும் கொண்டு செவ்வக வடிவில் அமைந்துள்ளது.

மைய சன்னிதியின் விமான அமைப்பு

விமானத்தின் உள்பகுதி - உட்கூடு

அதிஷ்டானம் (அடித்தளம்), பாதவர்க்கம் (சுவர்ப்பகுதி), பிரஸ்தாரம் (கூரை), கிரீவம் (கழுத்து), சிகரம் மற்றும் கலசம் ஆகிய உறுப்புகளைக் கொண்டு ஏகதள (ஒருதள) விமானமாக அமைந்துள்ளது. விமானத்தின் உயரம் 9.8 மீட்டர். கருவறையின் உள்ளிருந்து பார்த்தால், சிகரம் வரை தெரியுமாறு விமானத்தின் உட்கூடு வெற்றிடமாக உள்ளது.[10]

மூவர் கோவில் - அதிஷ்டானம்
அதிஷ்டானம்

விமானத்தின் மொத்த கட்டுமானத்தையும் தாங்கும் அடித்தள அமைப்பான அதிஷ்டானம் உபானம், மகா பத்மம், கம்பு, அதம பத்மம், விருத்த குமுதம், பத்ம வரி, கம்பு மற்றும் யாளி வரி போன்ற உறுப்புகளை கொண்டுள்ளது. யாளி வரியின் ஓரங்களில் மகரத்தின் திறந்த வாயிலிருந்து வீரர்கள் வெளிவருவது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

பத்ம பந்த அதிஷ்டானமாக வகைப்படுத்தப்படுகிறது.

பாதவர்க்கம்

கருவறையின் அதிஷ்டானத்திற்கு மேல் உள்ள பாதவர்க்க பகுதியில் அரைத்தூண்களும் (குட்யஸ்தம்பம்) கோஷ்டங்களும் உள்ளன. அரைத்தூண்கள் கலசம், தாடி, ஆமலகம், பலகை, வீரகண்டம் மற்றும் தரங்க போதிகையுடன் காணப்படுகின்றன. ஆமலகம் மற்றும் பலகையில் மூவிதழ் வடிவ பூ வேலைப்படுகள் உள்ளன. கோஷ்டங்களின் இருபுறமும் இரண்டு சிறிய அரைத்தூண்களும் இரண்டு பெரிய அரைத்தூண்களும் அமைந்துள்ளன. கோஷ்டங்களின் மேல் பகுதியில் பெரிய அரைத்தூண்களுக்கு இடையே மகர தோரணமும் அதற்கு கீழே பத்ம வரியும் காணப்படுகிறது.

கிழக்கு கோஷ்டம் - ரிஷபாந்திக அர்த்தநாரீஸ்வரர்

மூன்று கோஷ்டங்களில், தெற்கு கோஷ்டத்தில் சிற்பம் இல்லை.

கிழக்கு கோஷ்டத்தில் ரிஷபாந்திக அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் பத்ம பீடத்தின் மீது நின்ற நிலையில் உள்ளது. ஒரு கை, சிதைந்த நிலையில் உள்ள ரிஷபத்தின் மீது பல்லவ ஹஸ்தமாகவும் மற்றொரு கை மலரை ஏந்தியவாறும் அமைந்துள்ளது. ஜடாமகுடத்துடன் கண்டிகை, சரப்பளி, உதரபந்தம், கடகம், தோள்வளை மற்றும் இடைக்கட்டு போன்ற அணிகலன்களும் காணப்படுகின்றன. சிற்பத்தின் வலப்பக்கம் அரையாடையாகவும் இடப்பக்கம் பாதம் வரை ஆடையுடனும் காணப்படுகிறது.

வடக்கு கோஷ்டம் - பிக்ஷாடனார்

வடக்கு கோஷ்டத்தில் பிக்ஷாடனர் சிற்பம் வைசாக ஸ்தானகத்தில் அமைந்துள்ளது. சிதைந்த நிலையில் உள்ள சிற்பத்தின் ஒரு கை மானை தொட்டுக்கொண்டு உள்ளது.

பிரஸ்தாரம்

பிரஸ்தாரத்தின் வலபியில் பூதகணங்கள் நடனமாடிக் கொண்டும் இசைக்கருவிகளுடனும் உள்ளன. கபோத பகுதியில் இடைவெளி விட்டு கூடுகளும் ஓரப்பகுதியில் கோடிப்பாளை கருக்குகளும் உள்ளன. கருக்குகளுக்கு கீழும் கபோதக்கூடுகளுக்கு இடதும் வலதும் தொடர்ந்து சந்திரமண்டலம் காட்டப்பட்டுள்ளது. கபோதத்தின் மேல் யாளி வரிகள் அமைந்துள்ளன.

மைய சன்னிதி - விமானத்தின் கிழக்கு பகுதி
முதல் தளம்

முதல் தளத்தில் நான்கு பக்கங்களிலும் சாலை, பஞ்சரம்(கூடு) மற்றும் கர்ண கூடு போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன. கர்ண கூடுகளின் சிகரங்களின் மீது கலசம் உள்ளது. சாலை இரண்டு அடுக்காக அமைந்துள்ளது. முதல் அடுக்கின் கோஷ்டத்தில் ஒரு தெய்வ உருவமும் பக்கத்திற்கு இரண்டாக நான்கு அரைத்தூண்களும் இடம்பெற்றுள்ளன. கோஷ்டத்தின் மேல் கபோதப்பகுதியில் 4 கூடுகளும், அதற்கும் மேல் யாளி வரியும் அமைந்துள்ளது. இரண்டாம் அடுக்கின் சிகர மையத்தில் ஒரு நாசிகை அமைந்துள்ளது. சிகரத்திற்கு இணையாக, இருபுறமும், பஞ்சரங்களுக்கு மேல் உள்ள பகுதியில் இரு அரைத்தூண்களின் இடையே அமைக்கப்பட்ட விருத்த ஸ்புடிதம் உள்ளது. இந்த மொத்த அமைப்புக்கும் மேல் ஹர்மியமாக கபோதமும் யாளி வரியும் அமைந்துள்ளது.

முதல் தளத்தின் மேற்கு கோஷ்டத்தில் சிற்பம் இல்லை.

தெற்கு கோஷ்டத்தில் தக்ஷிணா மூர்த்தி சிற்பம் உள்ளது.

கிழக்கு கோஷ்டத்தில் உமாசகிதர் சிற்பம் காணப்படுகிறது. சிதைந்த நிலையில் உள்ள சிவன் சிற்பம், சுகாசனத்தில் அமர்ந்து இடது தொடையில் உமையை தாங்கியவாரும் இடக்கையால் உமையை அணைத்தவாரும் காணப்படுகிறது.

வடக்கு கோஷ்டத்தில் சிவன் சிற்பம் சுகாசனத்தில் வலது பின்கையில் மழு ஏந்தியும் வலது முன்கை அபய ஹஸ்தமாகவும் உள்ளது. பத்ம பீடத்தின் மீது அமைந்த சிற்பத்தின் பெரும்பகுதி சிதைந்த நிலையில் உள்ளது.

கிரீவம்
மைய சன்னிதி - விமானத்தின் வடக்கு பகுதி

கிரீவப் பகுதியில் நான்கு கிரீவ (கண்டம்) கோஷ்டங்கள் உள்ளன. கிரீவத்தின் மேல் உள்ள வலபியில் பூத வரிகளும் நான்கு மூலைகளில் நான்கு ரிஷபங்களும் காணப்படுகின்றன.

மேற்கில் உள்ள கிரீவ கோஷ்டத்தில் உமாசகிதர் சிற்பம் உள்ளது. சுகாசனத்தில் அமர்ந்துள்ள சிவன் சிற்பத்தின் இடது முன்கை தேவியை அணைத்தும் வலது முன்கை தேவியை நோக்கிவாறும் அமைந்துள்ளது. வலது பின்கையில் மழு உள்ளது. தேவியின் சிற்பம் உத்குடிகாசனத்தில், இடது கையை பீடத்தில் ஊன்றியவாறு காணப்படுகிறது.

தெற்கில் உள்ள கிரீவ கோஷ்டத்தில் தக்ஷிணா மூர்த்தியின் சிற்பம் காணப்படுகிறது.

கிழக்கில் உள்ள கிரீவ கோஷ்டத்தில் இந்திரன் சிற்பம் யானை மீது அமர்ந்த நிலையில் உள்ளது. சிற்பத்தின் வலதுகை அபய ஹஸ்தமாகவும், இடதுகை தொடையின் மீது வைத்தவாறும் அமைந்துள்ளது. கண்டிகை, சரப்பளி, தோள்வளை, கடகம், இடைக்கட்டு மற்றும் வீரசங்கிலி போன்ற அணிகலன்களுடன் காணப்படுகிறது.

வடக்கில் உள்ள கிரீவ கோஷ்டத்தில் பாரசிவன் சிற்பம் உத்குடிகாசனத்தில் அமர்ந்து தோளில் லிங்கத்தை பிடித்தவாறு உள்ளது. வலது முன்கை ரிஷபத்தின் தலை மீது பல்லவ ஹஸ்தமாகவும் வலது பின்கை தோளில் உள்ள லிங்கத்தை பிடித்தவாறும் உள்ளது. சிவனின் இடது பின்கை கர்த்தரி ஹஸ்தத்தில் அமைந்து ஆயுதங்கள் சிதைந்த நிலையில் உள்ளன.

சிகரம், கலசம்

விமானத்தின் சிகரம் நாகர பாணியில் அமைந்துள்ளது. சிகரத்தின் நாற்புறமும் மையத்தில் (கிரீவ கோஷ்டங்களின் மேல் பகுதி) மகா நாசிகைகள் காணப்படுகின்றன. நாசிகைகளின் மேல் சிம்ம லலாடமும், சிகரத்தின் ஓரங்களில் கோடிப்பாளை கருக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. சிகரத்தின் மேல் பகுதியில் பத்ம வரிகள் காணப்படுகின்றன.

கலசப் பகுதியில், ஒன்றின் மீது ஒன்றாக உள்ள இரு பலகைகள் உள்ளன. கீழ்பலகை ரத்னபீடம் என்றும் மேல்பலகை கமலபீடம் என்றும் அழைக்கப்படுகிறது. கமலபீடத்தின் மீது கல்லால் செய்யப்பட்ட கலசம் பொருத்தப்பட்டுள்ளது.

தெற்கு சன்னிதி - விமானத்தின் தெற்கு பகுதி

தெற்கு சன்னிதியின் விமான அமைப்பு

தெற்கு சன்னிதியும் மைய சன்னிதி போலவே, உட்கூடு வெற்றிடமான 9.8 மீட்டர் உயரம் கொண்ட விமானத்தை கொண்டுள்ளது.

அதிஷ்டானம்

மைய சன்னிதியின் அதிஷ்டான உறுப்புகளே இங்கும் உள்ளன. பத்ம பந்த அதிஷ்டானமாக வகைப்படுத்தப்படுகிறது.

பாதவர்க்கம்

பாதவர்க்க பகுதியில் உள்ள அரைத்தூண்களும் கோஷ்டங்களும் கோஷ்ட தூண்களும் மகர தோரணமும் மைய சன்னிதியுடன் ஒத்துள்ளன.

தெற்கு கோஷ்டம் - வீணாதர தக்ஷிணா மூர்த்தி

தெற்கு கோஷ்டத்தில் வீணாதர தக்ஷிணா மூர்த்தி சிற்பம், பத்ம பீடத்தின் மீது நின்ற நிலையில் முன்னிரு கைகளிலும் வீணையை ஏந்தியுள்ளது. வலது பின்கையில் அக்ஷமாலை உள்ளது. ஜாடபாரத்துடன் பத்ர குண்டலம், மகர குண்டலம், கண்டிகை, சரப்பளி, உதரபந்தம், கடகம், தோள்வளை மற்றும் இடைக்கட்டு போன்ற அணிகலன்களுடன் காணப்படுகிறது.

கிழக்கு கோஷ்டம் - கங்காதரர்

கிழக்கு கோஷ்டத்தில் கங்காதரர் சிற்பம் பத்ம பீடத்தின் மீது வைசாக ஸ்தானகத்தில் அமைந்துள்ளது. கங்காதரரின் ஜடா மகுடம் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. சிற்பத்தின் வலது முன்கை தலையில் கங்கையை தாங்கியவாறும், இடது முன்கை ஊறு ஹஸ்தமாகவும் உள்ளது. வலது பின்கை ரிஷபத்தின் மீது பல்லவ ஹஸ்தமாகவும், இடது பின்கை சிதைந்தும் உள்ளது.

வடக்கு கோஷ்டத்தில் பிக்ஷாடனர் சிற்பம் ஜடாமகுடத்துடன் நின்ற நிலையில் ஒரு கை மானை தொட்டுக்கொண்டு உள்ளது. சிற்பத்தின் பெரும்பகுதி சிதைந்துள்ளது.

பிரஸ்தாரம்

பிரஸ்தாரத்தில் உள்ள பூதகணங்களும், கபோத உறுப்புகளும், யாளி வரியும் மைய சன்னிதியை ஒத்து அமைந்துள்ளன.

தெற்கு சன்னிதி - விமானத்தின் மேற்கு பகுதி
முதல் தளம்

முதல் தளத்தின் பஞ்சரம், கர்ண கூடு, கோஷ்டம் போன்றவை மைய சன்னிதியை போலவே இருந்தாலும், சில பகுதிகள் வேறுபடுகின்றன. சாலையில் சிகரத்தில் மூன்று பக்கமும் நாசிகைகள் அமைந்துள்ளன. சிகரத்திற்கு இணையாக, இருபுறமும் விருத்த ஸ்புடிதத்திற்கு பதிலாக இரு சாமரம் வீசும் பெண்கள் (சாமர தாரா) சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

முதல் தளத்தின் மேற்கு கோஷ்டத்தில் ஹரிஹரர் சிற்பம் நின்ற நிலையில் உள்ளது. முன்னிரு கைகள் அபய மற்றும் ஊறு ஹஸ்தமாகவும், வலது பின்கையில் மழுவும், இடது பின்கையில் சங்கும் ஏந்தி காணப்படுகிறது.

தெற்கு கோஷ்டத்தில் நடராஜர் சிற்பம் ஜடாமகுடத்துடன் பத்ம பீடத்தின் மீது அமைந்துள்ளது. முன்னிரு கைகள் அபய மற்றும் கஜ ஹஸ்தமாக உள்ளது.

முதல் தளம்-கிழக்கு கோஷ்டம்-கால சம்ஹார மூர்த்தி

கிழக்கு கோஷ்டத்தில் கால சம்ஹார மூர்த்தியின் சிற்பம் அமைந்துள்ளது. சிவன் சிற்பம், கீழே கிடக்கும் காலனின் மீது ஒரு காலை ஊன்றி, மற்றொரு காலை சற்று மேலே தூக்கி நடனமாடியவாறு காணப்படுகிறது. இடது முன்கை ஸுஷி ஹஸ்ததில் காலனை சுட்டியவாறும் வலது முன்கை மேல்நோக்கி அங்குசத்தை ஏந்தியவாறும் உள்ளது. சிற்பத்தின் பின்னிரு கைகள் மான் மற்றும் மழுவை ஏந்தியுள்ளன.

முதல் தளம்-வடக்கு கோஷ்டம்-ஆலிங்கன மூர்த்தி

வடக்கு கோஷ்டத்தில் சிவன் பார்வதி சிற்பம் நின்ற நிலையில் ஆலிங்கன மூர்த்தியாக உள்ளது. சிவன் சிற்பம் வலது பின்கையில் மழு ஏந்தி, வலது முன்கை ஊறு ஹஸ்தமாகவும், இடது முன்கை தேவியை அணைத்தவாறும் உள்ளது. தேவியின் சிற்பம் இடது கையில் மலர் ஏந்தி, கரண்ட மகுடத்துடன், குண்டலம், கண்டிகை, சரப்பளி, தோள்வளை, கடகம், சன்ன வீரம் மற்றும் இடைகட்டு போன்ற அணிகலன்களுடன் காணப்படுகிறது.

கிரீவம்

கிரீவப் பகுதியில் நான்கு கிரீவ கோஷ்டங்கள் உள்ளன. கிரீவத்தின் மேல் உள்ள வலபியில் பூத வரிகளும் நான்கு மூலைகளில் நான்கு ரிஷபங்களும் காணப்படுகின்றன.

மேற்கில் உள்ள கிரீவ கோஷ்டத்தில் சிற்பங்கள் இல்லை.

தெற்கில் உள்ள கிரீவ கோஷ்டத்தில் கஜசம்ஹார மூர்த்தியின் சிற்பம் ஆடைகள் பறக்க முன்னிரு கைகளில் யானையை உரித்தவாறு அமைந்துள்ளது. ஒரு கால் ஊர்த்துவ ஜானுவாகவும் ஒரு காலை நிலத்தில் ஊன்றியும் காணப்படுகிறது. பின்னிரு கைகளில் ஒரு கை யானையின் தந்தத்தை ஏந்தியவாறும், மற்றொரு கை உமையை சுட்டியவாறும் உள்ளது. சிவனின் முகம் சற்று திரும்பி அருகில் நிற்கும் உமையை பார்த்தவாறு உள்ளது.

கிழக்கில் உள்ள கிரீவ கோஷ்டத்தில் திரிபுராந்தகர் சிற்பம் முன் இடதுகையில் வில்லை பிடித்து, முன் வலதுகை அம்பாரத் தூணியிலிருந்து அம்பை எடுத்தவாறும் உள்ளது. சிவன் சிற்பம் ஜடா மகுடத்துடன் ஆடைகள் பறக்க ஒரு காலை உயர்த்தியவாறு அமைந்துள்ளது. இது சிவன், திரிபுரத்தை எரித்தபின் ஆடும் 'கொடுகொட்டி' எனும் நடனம் என ஆர். நாகசுவாமி குறிப்பிடுகிறார்.[11]

வடக்கில் உள்ள கிரீவ கோஷ்டத்தில் சிவனும் பார்வதியும் நின்ற நிலையில் உள்ள சிற்பம் உள்ளது.

சிகரம், கலசம்

விமானத்தின் சிகரம் நாகர சிகரம். நான்கு கிரீவ கோஷ்டங்களின் மேல் பகுதியிலும் மகா நாசிகைகள் அமைந்துள்ளன. நாசிகைகளின் மேல் சிம்ம லலாடமும் கூடு பகுதியில் அல்ப விமானமும் அமைந்துள்ளது. சிகரத்தின் ஓரங்களில் கோடிப்பாளை கருக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கலசத்தின் அமைப்பு மைய சன்னிதியை ஒத்துள்ளது.

சிற்பங்கள் பட்டியல்

கொடும்பாளூர் மூவர் கோவிலில் மூலவர் சிவலிங்கம், துவார பாலர் மற்றும் ரிஷபம் ஆகிய சிற்பங்களுடன் கீழுள்ள கோஷ்ட சிற்பங்கள் உள்ளன.

திசை இடம் மைய சன்னிதி தென்புற சன்னிதி
மேற்கு முதல் தளம் இல்லை ஹரிஹரர்
கிரீவம் உமாசகிதர் இல்லை
தெற்கு கோஷ்டம் இல்லை வீணாதர தக்ஷிணா மூர்த்தி
முதல் தளம் தக்ஷிணா மூர்த்தி நடராஜர்
கிரீவம் தக்ஷிணா மூர்த்தி கஜசம்ஹார மூர்த்தி
கிழக்கு கோஷ்டம் ரிஷபாந்திக அர்த்தநாரீஸ்வரர் கங்காதரர்
முதல் தளம் உமாசகிதர் கால சம்ஹார மூர்த்தி
கிரீவம் இந்திரன் திரிபுராந்தகர்
வடக்கு கோஷ்டம் பிக்ஷாடனர் பிக்ஷாடனர்
முதல் தளம் சிவன் ஆலிங்கன மூர்த்தி
கிரீவம் பாரசிவன் (தோளின் மீது லிங்கம்) சிவன் பார்வதி

கல்வெட்டுகள்

கல்வெட்டு

கொடும்பாளூர் மூவர் கோவிலில் பூதி விக்ரமகேசரி மற்றும் முதலாம் ராஜேந்திரனின் காலத்தை சேர்ந்த 2 கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

  • பூதி விக்ரமகேசரி கால கல்வெட்டு மைய சன்னிதியின் தென்புற சுவரில் காணப்படுகிறது. சமஸ்கிருத மொழியில் பல்லவ கிரந்தத்தில் அமைந்த இக்கல்வெட்டின் முற்பகுதி சிதைந்துள்ளது. கல்வெட்டில் 24 வரிகள் சிதைவடையாமல் உள்ளன. இதில் வேளிர்களின் 9 தலைமுறை வம்ச வரிசையும், பல்லவர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு எதிரான அவர்களின் போர் வெற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. வேளிர்கள் யது வம்சத்தை (யதுவம்ச கேது) சேர்ந்தவர்கள். விக்ரமகேசரியின் தாய் அனுபமா, சோழ குலத்தை சேர்ந்தவர். கல்வெட்டில் பூதி விக்ரமகேசரி, அவர் மற்றும் அவரது இரண்டு மனைவிகளான வரகுணா, கற்றளி ஆகியோரின் பெயர்களில் மூன்று கோவில்களை கட்டி அதில் மகேஸ்வரனை (சிவன்) நிறுவியதை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் காளாமுகத்தின் தலைமைத் துறவியான மல்லிகார்ஜுனர் என்பவருக்கு விக்ரமகேசரி ஒரு மடத்தை அளித்து, 11 கிராமங்களையும் தானமாக கொடுத்துள்ளார். இந்த கிராமங்களின் வருமானத்திலிருந்து, கோவிலின் பூஜைகளை பார்த்துக்கொண்டு, அசிதவக்த்ர (காளாமுக) பிரிவின் 50 துறவிகளுக்கு உணவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த மல்லிகார்ஜுனர், வித்யாரசியின் சீடரும் அத்ரேய கோத்ரத்தை சேர்ந்தவரும் ஆவார். கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: ஶ்ரீ வீரதுங்கன், அதிவீரன், அனுபமா, நிர்பகேசரி, பரதுர்க்க மர்த்தனன், சமராபிராமன், யதுவம்சகேது, பூதி, மின்னமலை விக்ரமகேசரி, பல்லவ, வீரபாண்டியன், கொடும்பாளூர், கற்றளி, வரகுணா, பராந்தகன், ஆதித்யவர்மன், மல்லிகார்ஜுன, வித்யாரசி, அத்ரேய கோத்ர.[12]
  • முதலாம் இராஜேந்திரனின் 11 அல்லது 12-ஆம் ஆட்சியாண்டு (பொ.யு. 1023 - 1024) கல்வெட்டு மைய சன்னிதியின் வடபுற சுவரில் காணப்படுகிறது. 35 வரிகளை கொண்ட இக்கல்வெட்டு, 'திருமன்னி வளர இருநில மடந்தையும்' என தொடங்கும் ராஜேந்திரனின் சோழனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது. கல்வெட்டின் பிற்பகுதி சிதைந்துள்ளதால் கல்வெட்டின் செய்தி கிடைக்கவில்லை. மெய்க்கீர்த்தியில் பாண்டிய, கேரள, சாளுக்ய மற்றும் ஈழத்தின் மன்னர்களை இராஜேந்திரன் போரில் வென்றதை பற்றி உள்ளது. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: இடைதுரை நாடு, வனவாசி, கொள்ளிப்பாக்கம், மண்ணைக்கடக்கம், சுந்தர முடியும் இந்திரன் ஆரமும், ஈழமண்டலம், எறிபடை கேரளம், செங்கதிர் மாலை, பரசுராமன், சான்திமத்தீவு.[13]

தொடர்புடைய ஆளுமைகள்

  • கொடும்பாளூர் மூவர் கோவில் கல்வெட்டுகளின் வாயிலாக கோவிலைக் கட்டி திருப்பணிகள் செய்த ஆளுமைகளாக பூதி விக்ரமகேசரி, கற்றளி, வரகுணா மற்றும் முதலாம் ராஜேந்திரன் ஆகியோர் அறியப்படுகின்றனர்.
  • கொடும்பாளூர் மூவர் கோவில் பற்றி நவீன காலகட்டத்தில் வரலாற்றாய்வுகளை தொகுத்தவர்கள் வெங்கடரங்க ராஜு, எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம், கே.ஜி. கிருஷ்ணன், கே.வி. சௌந்தர ராஜன் மற்றும் டக்லஸ் பேரட் ஆகியோர்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. Cola temples in Pudukkottai by Venkataranga Raju - Journal of the Indian Socienty of Oriental Art - 1937
  2. Epigraphia Indica - Volume XXXII - Kilur Inscriptions of Nandivarman Year 16 by K.G. Krishnan - Page no: 99 - 102
  3. Early Pandya, Muttarayar and Irukkuvel Architecture : Studies In Indian Temple Architecture by K.V Soundara Rajan
  4. Early Chola Temples by S.R. Balasubrahmanyam
  5. Early Cola architecture and sculpture ; 866-1014 A.D by Douglas Barrett - Page number: 86
  6. சிலப்பதிகாரம் - எல்லோர்க்குமான எளிய உரையுடன் - டாக்டர் ப.சரவணன் - பக்க எண்: 205
  7. பெரியபுராணம் - இடங்கழி நாயனார் புராணம்
  8. முன்பு, மைய மற்றும் தென்புற சன்னிதியும் இடிந்த நிலையில்தான் இருந்துள்ளது. அன்றைய புதுக்கோட்டை அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக இருந்த கே. வெங்கடரங்க ராஜு, இந்த சன்னிதிகளை அவற்றின் பழமை மற்றும் கட்டமைப்பு மாறாமல் கவனமாக புனரமைத்துள்ளார். இதை எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம் தனது 'Middle Chola Art' நூலில் பதிவு செய்துள்ளார்.
  9. Manual of the Pudukkottai State Volume II Part II by K.R. Venkatarama Ayyar
  10. மூவர் கோவிலுக்கு பின் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலின் விமானமும், இதேபோல் உட்கூடு வெற்றிடமாக அமைந்துள்ளது.
  11. Tripurantaka, Vinadhara Dakshinamurti or Kirata murti?
  12. புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 14, பக்க எண்: 9
  13. புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 104, பக்க எண்: 53

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Mar-2025, 21:03:38 IST