under review

பிரம்மவாதின்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "பிரம்மவாதின் (1895 - 1914) சென்னையிலிருந்து வெளிவந்த ஆங்கில பத்திரிக்கை. சுவாமி விவேகானந்தரின் நவவேதாந்தத்தை பரப்பும் பொருட்டு அளசிங்கப் பெருமாளால் தொடங்கப்பட்டது.")
 
(; Added info on Finalised date)
 
(8 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
பிரம்மவாதின் (1895 - 1914) சென்னையிலிருந்து வெளிவந்த ஆங்கில பத்திரிக்கை. சுவாமி விவேகானந்தரின் நவவேதாந்தத்தை பரப்பும் பொருட்டு அளசிங்கப் பெருமாளால் தொடங்கப்பட்டது.
[[File:Brahmavadin.jpg|thumb]]
பிரம்மவாதின்(Brahmavadin) (1895 - 1914) சென்னையிலிருந்து வெளிவந்த ஆங்கில இதழ். [[விவேகானந்தர்|சுவாமி விவேகானந்தரின்]] நவவேதாந்தத்தை பரப்பும் பொருட்டு [[அளசிங்கப் பெருமாள்|அளசிங்கப் பெருமாளால்]] தொடங்கப்பட்டது.
 
== இதழ் தொடக்கம் ==
[[File:Brahmavadin1.jpg|thumb]]
பிரம்மவாதின் இதழ் சுவாமி விவேகானந்தரின் மாணவர் அளசிங்கப் பெருமாளின் ஆசிரியவத்துவத்தில் செப்டெம்பர் 1895-ல் தொடங்கப்பட்டது. இதன் முதல் இதழ் செப்டெம்பர் 15, 1895 அன்று வெளிவந்தது.  விவேகானந்தரின் நவவேதாந்தத்தை பரப்பும் பொருட்டு அளசிங்கப் பெருமாள், டாக்டர் எம்.சி. நஞ்சுண்ட ராவ், வேங்கடரங்க ராவ் ஆகியோருடன் இணைந்து இந்த இதழைத் தொடங்கினார். விவேகானந்தர் ஜனவரி 1895-ல் அளசிங்கப் பெருமாளுக்கு எழுதிய கடிதத்தில் இதழ் தொடங்கும் படி கடுமையாக கேட்டுக் கொண்டதன் பெயரில் இவ்விதழ் தொடங்கப்பட்டது.<ref>''ஜனவரி 12, 1895 அன்று சுவாமி விவேகானந்தர் அளசிங்கப் பெருமாளுக்கு எழுதிய கடிதம்: “இப்போது அறுதி முடிவாக ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்: பெயரையோ, புகழையோ, அவைபோன்ற வேறெந்த புரட்டையோ நான் பொருட்படுத்துவதில்லை. உலக நன்மைக்காக என் கருத்துக்களை நான் பிரச்சாரம் செய்ய விரும்புகிறேன். நீங்கள் மகத்தான பணி செய்துள்ளீர்கள், ஆனால் அது எனக்குப் பெயரையும், புகழையும் மட்டுமே சம்பாதித்துத் தந்துள்ளது. உலகத்தின் பாராட்டைப் பெறுவதற்காகச் செலவிடுவதைவிட என் வாழ்க்கை அதிக மதிப்புள்ளது. அத்தகைய முட்டாள்தனங்களுக்கெல்லாம் எனக்கு நேரமில்லை. கருத்துக்களைப் பரவச் செய்வதற்காக, அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காக இதுவரை இந்தியாவில் என்ன செய்திருக்கிறீர்கள்? ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை, ஒன்றுமேயில்லை.” என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.''</ref>
 
பிரம்மவாதின் முதல் இதழில் விவேகானந்தர் ‘சன்னியாசி கீதம்’ என்ற தலைப்பில் பாடலொன்றை எழுதியுள்ளார்.
 
பிரம்மவாதின் இதழ் சென்னை போபம்ஸ் பிராட்வேயில் (Popham's Broadway)<ref>''தற்போதைய பிரகாசம் சாலை''</ref> அமைந்த பிரம்மவாதின் அச்சகத்தில் வெளியிடப்பட்டது. இவ்விதழ் ஆங்கில இதழாக வெளிவந்தது. சி.ஜி. நரசிம்மாச்சார், ஆர்.ஏ. கிருஷ்ணம்மாச்சார், ஜி. வேங்கடரங்க ராவ் இதழ் வெளிவர உதவி செய்தனர்.
 
== ஆசிரியர் ==
பிரம்மவாதின் இதழின் முதன்மை ஆசிரியராக அளசிங்கப் பெருமாள் இருந்தார். அவருக்கு துணையாக டாக்டர் நஞ்சுண்ட ராவும், வேங்கடரங்க ராவும் பணியாற்றினார். அளசிங்கப் பெருமாளின் பெயர் இதழாசிரியர் என இதழில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.
 
== நோக்கம் ==
பிரம்மவாதின் இதழ் விவேகானந்தரின் நவவேதாந்தத்தை பரப்பும் நோக்கில் உருவாக்கப்பட்டது. முதலில் மாதம் இரு இதழாக தொடங்கப்பட்ட பிரம்மவாதின் ஐந்தாவது இதழிலிருந்து மதம், தத்துவத்திற்கான மாத இதழாக அறிவிக்கப்பட்டது.
 
== உள்ளடக்கம் ==
[[சங்கரர்]], [[ராமானுஜர்]], [[சதாசிவ பிரம்மேந்திரர்]], பதஞ்ஜலி ஆகியோரின் நூல்களின் மொழிபெயர்ப்பு. இந்து மதம் பற்றிய கட்டுரைகள். [[இம்மானுவேல் காண்ட்|காண்ட்]] முதலான மேலை தத்துவ அறிஞர்களின் கட்டுரைகள். ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்கள், தர்மபாலர், [[மேக்ஸ் முல்லர்|மாக்ஸ் முல்லர்]] ஆகியோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சுவாமி விவேகானந்தர் பிரம்மவாதினின் முதல் இதழ் தொடங்கி தொடர்ந்து இதழுக்காக கட்டுரைகள் எழுதியுள்ளார். [[பி.ஆர். ராஜம் ஐயர்]] 'மனிதனின் சிறுமையும் பெருமையும்' (Man his littleness and greatness) என்ற தனது முதல் கட்டுரையை இந்த இதழில் எழுதினார்.
 
== தொகுப்பு ==
பத்திரிக்கை வெளியீட்டின் ஒரு பகுதியாக அளசிங்கப் பெருமாள் பிரம்மவாதின் வெளியீட்டு நிறுவனத்தையும் தொடங்கினார். அதன்வழி வெவ்வேறு நூல்களை வெளியிட்டார். பத்திரிக்கையில் வெளியானவற்றை தொகுத்து நூலாக்கினார். அளசிங்கப் பெருமாளின் முயற்சியால் விவேகானந்தரின் கொழும்பு முதல் அல்மோரா வரையான சொற்பொழிவுகள் பொ.யு. 1897-ல் வெளிவந்தன. பொ.யு. 1896-ல் நியூயார்க்கில் கர்மயோகம் பற்றி விவேகானந்தர் ஆற்றிய உரையின் தொகுதி மார்ச் 1897 இறுதியில் சென்னையில் வெளிவந்தது. அளசிங்கப் பெருமாள் 'பிரம்மவாதின் தொடர் (Brahmavadin Series)' என்ற தலைப்பின் கீழ் விவேகானந்தரின் நூல்களை செம்மைப்படுத்தி வெளியிட்டார். அதன் முதல் நூல் 'கர்மயோகம்' (1896), இரண்டாவது நூல் 'உலகம் தழுவிய மதத்தின் குறிக்கோள்' (The Ideal of a Universal Religion; செப்டெம்பர் 1896) வெளிவந்தது.
 
பிரம்ம சூத்திரத்திற்கு ராமானுஜர் எழுதிய விளக்கவுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு (1899), எம்.டெஸ்ட்யூட் (Desdouit) எழுதிய காண்டின் தத்துவமுறை (System of Kant; பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு; 1901), தட்சிணேசுவர தீர்க்கதரிசி (The Prophet of Dakshineswar; 1905), ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள் (The Sayings of Sri Ramakrishna; 1906), ராமானுஜாச்சாரியரின் வாழ்வும், வாக்கும் (Life and Teachings of Ramanujacharya; 1901), காளிதாசரின் மேகதூதம் (An Appreciation of Kalidasa's Meghasandesam; 1910) ஆகிய நூல்கள் வெளிவந்தன.
 
சுவாமி விவேகானந்தர் பிரம்மவாதின் பத்திரிக்கைக்கு எழுதிய கட்டுரையின் தொகுதி 'பக்தி யோகம்' என்ற தலைப்பில் ராமகிருஷ்ண மடத்தால் பொ.யு. 1915-ல் நூலாக்கப்பட்டுள்ளது.
 
==விலை==
பிரம்மவாதின் இதழின் விலை ஒரு இதழுக்கு 4 அணா என்றும், வருடாந்திர சந்தா 4 ருபாய் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதழ் அமெரிக்காவிற்கும், பிரட்டனுக்கும் அனுப்பப்பட்டது. அமெரிக்காவிற்கு இரண்டு டாலரும், பிரிட்டனுக்கு ஆறு ஷில்லிங்கும் என விலை நிர்ணயிக்கப்பட்டது.
 
==இதழ் முடிவு==
பொ.யு. 1909-ல் அளசிங்கப் பெருமாள் இறப்பிற்கு பின் இதழ் தேக்கம் கண்டது. பொ.யு. 1914-ல் இதழ் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பொ.யு. 1915-ல் பிரம்மவாதின் இதழின் தொடர்ச்சியாக 'வேதாந்த கேசரி' (Vedanta Kesari) இதழ் தொடங்கப்பட்டது. வேதாந்த கேசரி தொடர்ந்து வெளிவந்துக் கொண்டிருக்கிறது.
 
== உசாத்துணை ==
 
* அளசிங்கப் பெருமாள், சுவாமி விவேகானந்தரின் அருமைச் சீடர், சுவாமி சுநிர்மலானந்தர்
* [https://www.dinamani.com/specials/kannottam/2013/Oct/05/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-757663.html பிரம்மவாதின் ஆங்கில பத்திரிக்கை தொடக்கம், தினமணி, அக்டோபர் 05, 2013]
 
== வெளி இணைப்புகள் ==
 
* [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0004692_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf பக்தி யோகம், சுவாமி விவேகானந்தர்]
* [https://www.vedanta.com/store/Brahmavadin-or-The-messenger-of-Truth_moreinfo.html மின்னாக்கப்பட்ட பிரம்மவாதின் இதழ்களின் தொகுப்பு]
* [https://vk.rkmm.org/s/vkm/m/vedanta-kesari-2014/a/04-the-brahmavadin-chronicler-of-early-ramakrishna-movement-dec-2014 The Brahmavadin: Chronicler of Early Ramakrishna Movement (Dec 2014), Somenath Mukherjee]
 
== அடிக்குறிப்புகள் ==
<references />
 
{{Finalised}}
{{Fndt|29-Mar-2025, 11:51:49 IST}}
 
[[Category:Tamil Content]]

Latest revision as of 01:04, 30 March 2025

Brahmavadin.jpg

பிரம்மவாதின்(Brahmavadin) (1895 - 1914) சென்னையிலிருந்து வெளிவந்த ஆங்கில இதழ். சுவாமி விவேகானந்தரின் நவவேதாந்தத்தை பரப்பும் பொருட்டு அளசிங்கப் பெருமாளால் தொடங்கப்பட்டது.

இதழ் தொடக்கம்

Brahmavadin1.jpg

பிரம்மவாதின் இதழ் சுவாமி விவேகானந்தரின் மாணவர் அளசிங்கப் பெருமாளின் ஆசிரியவத்துவத்தில் செப்டெம்பர் 1895-ல் தொடங்கப்பட்டது. இதன் முதல் இதழ் செப்டெம்பர் 15, 1895 அன்று வெளிவந்தது. விவேகானந்தரின் நவவேதாந்தத்தை பரப்பும் பொருட்டு அளசிங்கப் பெருமாள், டாக்டர் எம்.சி. நஞ்சுண்ட ராவ், வேங்கடரங்க ராவ் ஆகியோருடன் இணைந்து இந்த இதழைத் தொடங்கினார். விவேகானந்தர் ஜனவரி 1895-ல் அளசிங்கப் பெருமாளுக்கு எழுதிய கடிதத்தில் இதழ் தொடங்கும் படி கடுமையாக கேட்டுக் கொண்டதன் பெயரில் இவ்விதழ் தொடங்கப்பட்டது.[1]

பிரம்மவாதின் முதல் இதழில் விவேகானந்தர் ‘சன்னியாசி கீதம்’ என்ற தலைப்பில் பாடலொன்றை எழுதியுள்ளார்.

பிரம்மவாதின் இதழ் சென்னை போபம்ஸ் பிராட்வேயில் (Popham's Broadway)[2] அமைந்த பிரம்மவாதின் அச்சகத்தில் வெளியிடப்பட்டது. இவ்விதழ் ஆங்கில இதழாக வெளிவந்தது. சி.ஜி. நரசிம்மாச்சார், ஆர்.ஏ. கிருஷ்ணம்மாச்சார், ஜி. வேங்கடரங்க ராவ் இதழ் வெளிவர உதவி செய்தனர்.

ஆசிரியர்

பிரம்மவாதின் இதழின் முதன்மை ஆசிரியராக அளசிங்கப் பெருமாள் இருந்தார். அவருக்கு துணையாக டாக்டர் நஞ்சுண்ட ராவும், வேங்கடரங்க ராவும் பணியாற்றினார். அளசிங்கப் பெருமாளின் பெயர் இதழாசிரியர் என இதழில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.

நோக்கம்

பிரம்மவாதின் இதழ் விவேகானந்தரின் நவவேதாந்தத்தை பரப்பும் நோக்கில் உருவாக்கப்பட்டது. முதலில் மாதம் இரு இதழாக தொடங்கப்பட்ட பிரம்மவாதின் ஐந்தாவது இதழிலிருந்து மதம், தத்துவத்திற்கான மாத இதழாக அறிவிக்கப்பட்டது.

உள்ளடக்கம்

சங்கரர், ராமானுஜர், சதாசிவ பிரம்மேந்திரர், பதஞ்ஜலி ஆகியோரின் நூல்களின் மொழிபெயர்ப்பு. இந்து மதம் பற்றிய கட்டுரைகள். காண்ட் முதலான மேலை தத்துவ அறிஞர்களின் கட்டுரைகள். ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்கள், தர்மபாலர், மாக்ஸ் முல்லர் ஆகியோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சுவாமி விவேகானந்தர் பிரம்மவாதினின் முதல் இதழ் தொடங்கி தொடர்ந்து இதழுக்காக கட்டுரைகள் எழுதியுள்ளார். பி.ஆர். ராஜம் ஐயர் 'மனிதனின் சிறுமையும் பெருமையும்' (Man his littleness and greatness) என்ற தனது முதல் கட்டுரையை இந்த இதழில் எழுதினார்.

தொகுப்பு

பத்திரிக்கை வெளியீட்டின் ஒரு பகுதியாக அளசிங்கப் பெருமாள் பிரம்மவாதின் வெளியீட்டு நிறுவனத்தையும் தொடங்கினார். அதன்வழி வெவ்வேறு நூல்களை வெளியிட்டார். பத்திரிக்கையில் வெளியானவற்றை தொகுத்து நூலாக்கினார். அளசிங்கப் பெருமாளின் முயற்சியால் விவேகானந்தரின் கொழும்பு முதல் அல்மோரா வரையான சொற்பொழிவுகள் பொ.யு. 1897-ல் வெளிவந்தன. பொ.யு. 1896-ல் நியூயார்க்கில் கர்மயோகம் பற்றி விவேகானந்தர் ஆற்றிய உரையின் தொகுதி மார்ச் 1897 இறுதியில் சென்னையில் வெளிவந்தது. அளசிங்கப் பெருமாள் 'பிரம்மவாதின் தொடர் (Brahmavadin Series)' என்ற தலைப்பின் கீழ் விவேகானந்தரின் நூல்களை செம்மைப்படுத்தி வெளியிட்டார். அதன் முதல் நூல் 'கர்மயோகம்' (1896), இரண்டாவது நூல் 'உலகம் தழுவிய மதத்தின் குறிக்கோள்' (The Ideal of a Universal Religion; செப்டெம்பர் 1896) வெளிவந்தது.

பிரம்ம சூத்திரத்திற்கு ராமானுஜர் எழுதிய விளக்கவுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு (1899), எம்.டெஸ்ட்யூட் (Desdouit) எழுதிய காண்டின் தத்துவமுறை (System of Kant; பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு; 1901), தட்சிணேசுவர தீர்க்கதரிசி (The Prophet of Dakshineswar; 1905), ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள் (The Sayings of Sri Ramakrishna; 1906), ராமானுஜாச்சாரியரின் வாழ்வும், வாக்கும் (Life and Teachings of Ramanujacharya; 1901), காளிதாசரின் மேகதூதம் (An Appreciation of Kalidasa's Meghasandesam; 1910) ஆகிய நூல்கள் வெளிவந்தன.

சுவாமி விவேகானந்தர் பிரம்மவாதின் பத்திரிக்கைக்கு எழுதிய கட்டுரையின் தொகுதி 'பக்தி யோகம்' என்ற தலைப்பில் ராமகிருஷ்ண மடத்தால் பொ.யு. 1915-ல் நூலாக்கப்பட்டுள்ளது.

விலை

பிரம்மவாதின் இதழின் விலை ஒரு இதழுக்கு 4 அணா என்றும், வருடாந்திர சந்தா 4 ருபாய் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதழ் அமெரிக்காவிற்கும், பிரட்டனுக்கும் அனுப்பப்பட்டது. அமெரிக்காவிற்கு இரண்டு டாலரும், பிரிட்டனுக்கு ஆறு ஷில்லிங்கும் என விலை நிர்ணயிக்கப்பட்டது.

இதழ் முடிவு

பொ.யு. 1909-ல் அளசிங்கப் பெருமாள் இறப்பிற்கு பின் இதழ் தேக்கம் கண்டது. பொ.யு. 1914-ல் இதழ் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பொ.யு. 1915-ல் பிரம்மவாதின் இதழின் தொடர்ச்சியாக 'வேதாந்த கேசரி' (Vedanta Kesari) இதழ் தொடங்கப்பட்டது. வேதாந்த கேசரி தொடர்ந்து வெளிவந்துக் கொண்டிருக்கிறது.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. ஜனவரி 12, 1895 அன்று சுவாமி விவேகானந்தர் அளசிங்கப் பெருமாளுக்கு எழுதிய கடிதம்: “இப்போது அறுதி முடிவாக ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்: பெயரையோ, புகழையோ, அவைபோன்ற வேறெந்த புரட்டையோ நான் பொருட்படுத்துவதில்லை. உலக நன்மைக்காக என் கருத்துக்களை நான் பிரச்சாரம் செய்ய விரும்புகிறேன். நீங்கள் மகத்தான பணி செய்துள்ளீர்கள், ஆனால் அது எனக்குப் பெயரையும், புகழையும் மட்டுமே சம்பாதித்துத் தந்துள்ளது. உலகத்தின் பாராட்டைப் பெறுவதற்காகச் செலவிடுவதைவிட என் வாழ்க்கை அதிக மதிப்புள்ளது. அத்தகைய முட்டாள்தனங்களுக்கெல்லாம் எனக்கு நேரமில்லை. கருத்துக்களைப் பரவச் செய்வதற்காக, அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காக இதுவரை இந்தியாவில் என்ன செய்திருக்கிறீர்கள்? ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை, ஒன்றுமேயில்லை.” என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  2. தற்போதைய பிரகாசம் சாலை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Mar-2025, 11:51:49 IST