under review

சிலோன் விஜயேந்திரன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(14 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
[[File:Ceylon Vijayendran.jpg|thumb|சிலோன் விஜயேந்திரன்]]
[[File:Ceylon Vijayendran.jpg|thumb|சிலோன் விஜயேந்திரன்]]
சிலோன் விஜயேந்திரன் ( ) திரைநடிகர், நாடக நடிகர், பாடகர். கவிஞர் கம்பதாசனின் தீவிரமான வாசகர். கம்பதாசனின் கவிதைகளை தொகுத்து நூலாக்குவதை வாழ்நாள் பணியாகச் செய்தவர்
[[File:சிலோன் விஜயேந்திரன் திரைப்படத்தில்.jpg|thumb|சிலோன் விஜயேந்திரன் திரைப்படத்தில்]]
சிலோன் விஜயேந்திரன் ( (1946 - 2004)) திரைநடிகர், நாடக நடிகர், பாடகர். கவிஞர் கம்பதாசனின் தீவிரமான வாசகர். கம்பதாசனின் கவிதைகளை தொகுத்து நூலாக்குவதை வாழ்நாள் பணியாகச் செய்தவர்.
==பிறப்பு, கல்வி==
சிலோன் விஜயேந்திரன் [[கல்லடி வேலுப்பிள்ளை]]யின் பேரன் சிலோன் விஜயேந்திரனின் இயற்பெயர் ராஜேஸ்வரன். யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் பிறந்தவர். தந்தை சைவ சமயத்தவர், தாயார் மதுரையைச் சேர்ந்த கிறித்தவர்
 
மாவிட்டபுரம் க. சச்சிதானந்தனிடம் தமிழ் கற்ற சிலோன் விஜயேந்திரன் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., டி.லிட் பட்டம், டாக்டர் பட்டம் பெற்றவர்.
== தனிவாழ்க்கை ==
சிலோன் விஜயேந்திரனின் மனைவி இஸ்லாமியர், இவர் சில காலம் இசுலாமிய மதத்தினைத் தழுவி இசுலாமியராகவும் வாழ்ந்தார் எனப்படுகிறது.
 
1991-ல் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதை ஒட்டி சிலோன் விஜயேந்திரன் ஓராண்டுக்காலம் விசாரணைக் கைதியாகச் சிறையில் இருந்தார்.
 
சிலோன் விஜயேந்திரன் நூறுபடங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் உணவுக்கும் உறைவிடத்துக்கும் போராடும் சூழலில் கடுமையான வறுமையிலேயே இருந்தார் என்று திருப்பூர் கிருஷ்ணன் பதிவு செய்திருக்கிறார்.
== நாடகவாழ்க்கை ==
சிலோன் விஜயேந்திரன் 1960-ல் கோப்பாய் கலைவளர்ச்சிக் கழகம் மேடையேற்றிய "கட்டபொம்மன்' நாடகத்தில் எதிர்நாடக வேடத்தில் நடித்தார். தொடர்ந்து காதலா கடமையா, மலர்ந்த வாழ்வு போன்ற பல மேடை நாடகங்களில் நடித்தார்.
 
தனிமனித நடிப்பாக நவரசநடிப்பை மேடையில் நிகழ்த்திவந்த சிலோன் விஜயேந்திரன் நவரச நாயகன் என்றே அறியப்பட்டார்.
==திரை வாழ்க்கை==
இலங்கையில் நாடகநடிகராக அறியப்பட்டிருந்த சிலோன் விஜயேந்திரன் இலங்கை பின்னணியில் தயாரிக்கப்பட்டு 1978-ல் வெளிவந்த பைலட் பிரேம்நாத் என்ற படத்தில் அறிமுகமானார். `புன்னகை மன்னன், பொல்லாதவன், ஓசை, ஏமாறாதே ஏமாற்றாதே, கொலுசு, எரிமலை, லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, மங்கம்மா சபதம், சிவப்பு நிலா` எனத் தம் வாழ்நாளில் 77 படங்களுக்கு மேல் நடித்தார். தெலுங்கில் பிரளயசிம்மன் என்னும் படத்தில் அறிமுகமாகி ஐம்பது படங்களுக்குமேல் நடித்தார். பெரும்பாலும் எதிர்மறை கதாபாத்திரங்களிலேயே நடித்திருக்கிறார்.
== இதழியல் ==
சிலோன் விஜயேந்திரன் 'வைகறை', 'விஜயா', 'நடிகன்' ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார்
== இலக்கிய வாழ்க்கை ==
சிலோன் விஜயேந்திரன் நாடகங்கள் எழுதியிருக்கிறார். பாடல்களும், மரபுக்கவிதைகளும் எழுதியிருக்கிறார். ஆனால் முதன்மையாக அவர் கவிஞர் [[கம்பதாசன்]]ன் தீவிரமான ரசிகராகவே அறியப்படுகிறார். கம்பதாசன் பரவலாக மறக்கப்பட்ட சூழலில் அவருடைய திரையிசைப் பாடல்கள், காவியங்கள், சிறுகதைகள், நாடகங்கள்` ஆகிய தொகுப்பு நூல்களை வெளியிட்டார்.
 
சிலோன் விஜயேந்திரன் `கம்பதாசன் கவிதா நுட்பங்கள்` என்ற ஒரு நூலையும் எழுதி வெளியிட்டார். `கம்பதாசன் வாழ்வும் பணியும்` என்ற இவர் நூலும் குறிப்பிடத் தக்கது. `கவியரசர் கண்ணதாசன் பா நயம்` என்றும் ஒரு நூல் எழுதியிருக்கிறார்.
 
`அவள்` என்ற நாவல், `செளந்தர்ய பூஜை` என்ற சிறுகதைத் தொகுதி, `உலக நடிகர்களும் நடிக மேதை சிவாஜியும்`, `மானஸ மனோகரி` போன்ற இவரது புத்தகங்களும் குறிப்பிடத் தக்கவைதான்.
 
சிலோன் விஜயேந்திரன் கவிதைகள் தொகுக்கப்பட்டு `விஜயேந்திரன் கவிதைகள்` என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளாக வந்துள்ளன. `அறுபதாண்டு காலத் திரைப்பாடல்களும் பாடலாசிரியர்களும்` என்ற அவரது நூல் வரலாற்று மதிப்புடையது.
 
ஆன்மிகத்திலும் நாட்டமுடையவர். அவரது பாரதியார் வரலாற்று நாடகம், சுத்தானந்த பாரதியார் சிறப்புரையுடன் வெளிவந்தது.
 
'ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை’ என்னும் வாழ்க்கை வரலாற்றுநூலையும் எழுதியுள்ளார்.
==மறைவு==
சிலோன் விஜயேந்திரன் ஆகஸ்ட் 26, 2004 அன்று தன் 58-வது வயதில் தான் தனித்து குடியிருந்த அறையில் ஒரு தீவிபத்தில் மறைந்தார். அவருடைய மாடி அறைக்கு நேர்கீழே இருந்த மண்ணெண்ணை கடையில் தீப்பிடித்து எரிந்தபோது அவர் கீழே குதித்தார், ஆனால் தீ தொடர்ந்து பரவவே அவரால் தப்ப முடியவில்லை.
== இலக்கிய இடம் ==
சிலோன் விஜயேந்திரன் கம்பதாசனின் நூல்களை தொகுத்து பதிப்பித்தவர் என்னும் வகையில் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆய்வாளராக கருதப்படுகிறார்.
== நூல்கள் ==
====== எழுதியவை. ======
# ஈழத்துக் கலை இலக்கிய நினைவுகள்
# விஜயேந்திரன் கவிதைகள் (1968)
# அவள் ( நாவல்) (1968)
# அண்ணா என்றொரு மானிடன் (1969)
# செளந்தர்ய பூஜை (சிறு கதைகள்)(1970)
# பிரேம தியானம் (வசன காவியம்) (1971)
# ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை (வரலாறு) (1973)
# விஜயேந்திரன் கதைகள் (1975)
# பாரதி வரலாற்று நாடகம் (1982)
# நேசக் குயில் (கவிதைகள்) (1984)
# உலக நடிகர்களும் நடிகமேதை சிவாஜியும் (1985)
# கவிஞர் கம்பதாசன் வாழ்வும் பணியும் (1986)
# சிலோன் விஜயேந்திரன் கவிதைகள் (பாகம் 2) (1990)
# ஈழத்துக் கவிதை விமர்சனம் (1992)
# மூன்று கவிதைகள் (1993)
# சிலோன் விஜயேந்திரன் கவிதைகள் (பாகம் 3) (1994)
# இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களும் கவிதைகளும் (1994)
# அல்லாஹு அக்பர் (1996)
====== தொகுத்தவை ======
# கல்லடிவேலன் நகைச்சுவை கதைகள் (1987)
# கம்பதாசன் கவிதைத் திரட்டு (1987)
# கம்பதாசன் திரை இசைப்பாடள்கள் (1987)
# கம்பதாசன் காவியஙள் (1987)
# கம்பதாசன் சிறுகதைகள் (1988)
# கம்பதாசன் நாடகங்கள் (1988)
# கம்பதாசன் கவிதா நுட்பங்கள் (1997)
# கலைஞர் திரை இசைப் பாடல்கள் (1988)
# ஈழத்துக் கவிதைக் கனிகள் (1990)
# அறுபது காலத் திரைப்பாடல்களும் பாடலாசிரியர்களும் (1992)
== உசாத்துணை ==
* [https://www.worldcat.org/identities/lccn-n85-104089/ http://www.worldcat.org/identities/lccn-n85-104089/]
* இலக்கியப் பூக்கள் முல்லை அமுதன்
* [https://www.jeyamohan.in/132375/ திருப்பூர் கிருஷ்ணன் சிலோன் விஜயேந்திரன் பற்றி]
* [https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D சிலோன் விஜயேந்திரன் நூல்கள் நூலகம் இணையதளம்]
* [https://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/ சிலோன் விஜயேந்திரன் இறுதிநாள் நினைவு]
* [https://sachithananthan.blogspot.com/2022/03/blog-post.html மறவன் புலவு சச்சிதானந்தன், சிலோன் விஜயேந்திரன் நினைவு]
* [https://www.sirukathaigal.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/ சிலோன் விஜயேந்திரன் சிறுகதைகள் இணையவாசிப்பு]
 
{{Finalised}}
 
{{Fndt|15-Nov-2022, 13:39:03 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:கவிஞர்கள்]]

Latest revision as of 16:52, 13 June 2024

சிலோன் விஜயேந்திரன்
சிலோன் விஜயேந்திரன் திரைப்படத்தில்

சிலோன் விஜயேந்திரன் ( (1946 - 2004)) திரைநடிகர், நாடக நடிகர், பாடகர். கவிஞர் கம்பதாசனின் தீவிரமான வாசகர். கம்பதாசனின் கவிதைகளை தொகுத்து நூலாக்குவதை வாழ்நாள் பணியாகச் செய்தவர்.

பிறப்பு, கல்வி

சிலோன் விஜயேந்திரன் கல்லடி வேலுப்பிள்ளையின் பேரன் சிலோன் விஜயேந்திரனின் இயற்பெயர் ராஜேஸ்வரன். யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் பிறந்தவர். தந்தை சைவ சமயத்தவர், தாயார் மதுரையைச் சேர்ந்த கிறித்தவர்

மாவிட்டபுரம் க. சச்சிதானந்தனிடம் தமிழ் கற்ற சிலோன் விஜயேந்திரன் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., டி.லிட் பட்டம், டாக்டர் பட்டம் பெற்றவர்.

தனிவாழ்க்கை

சிலோன் விஜயேந்திரனின் மனைவி இஸ்லாமியர், இவர் சில காலம் இசுலாமிய மதத்தினைத் தழுவி இசுலாமியராகவும் வாழ்ந்தார் எனப்படுகிறது.

1991-ல் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதை ஒட்டி சிலோன் விஜயேந்திரன் ஓராண்டுக்காலம் விசாரணைக் கைதியாகச் சிறையில் இருந்தார்.

சிலோன் விஜயேந்திரன் நூறுபடங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் உணவுக்கும் உறைவிடத்துக்கும் போராடும் சூழலில் கடுமையான வறுமையிலேயே இருந்தார் என்று திருப்பூர் கிருஷ்ணன் பதிவு செய்திருக்கிறார்.

நாடகவாழ்க்கை

சிலோன் விஜயேந்திரன் 1960-ல் கோப்பாய் கலைவளர்ச்சிக் கழகம் மேடையேற்றிய "கட்டபொம்மன்' நாடகத்தில் எதிர்நாடக வேடத்தில் நடித்தார். தொடர்ந்து காதலா கடமையா, மலர்ந்த வாழ்வு போன்ற பல மேடை நாடகங்களில் நடித்தார்.

தனிமனித நடிப்பாக நவரசநடிப்பை மேடையில் நிகழ்த்திவந்த சிலோன் விஜயேந்திரன் நவரச நாயகன் என்றே அறியப்பட்டார்.

திரை வாழ்க்கை

இலங்கையில் நாடகநடிகராக அறியப்பட்டிருந்த சிலோன் விஜயேந்திரன் இலங்கை பின்னணியில் தயாரிக்கப்பட்டு 1978-ல் வெளிவந்த பைலட் பிரேம்நாத் என்ற படத்தில் அறிமுகமானார். `புன்னகை மன்னன், பொல்லாதவன், ஓசை, ஏமாறாதே ஏமாற்றாதே, கொலுசு, எரிமலை, லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, மங்கம்மா சபதம், சிவப்பு நிலா` எனத் தம் வாழ்நாளில் 77 படங்களுக்கு மேல் நடித்தார். தெலுங்கில் பிரளயசிம்மன் என்னும் படத்தில் அறிமுகமாகி ஐம்பது படங்களுக்குமேல் நடித்தார். பெரும்பாலும் எதிர்மறை கதாபாத்திரங்களிலேயே நடித்திருக்கிறார்.

இதழியல்

சிலோன் விஜயேந்திரன் 'வைகறை', 'விஜயா', 'நடிகன்' ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார்

இலக்கிய வாழ்க்கை

சிலோன் விஜயேந்திரன் நாடகங்கள் எழுதியிருக்கிறார். பாடல்களும், மரபுக்கவிதைகளும் எழுதியிருக்கிறார். ஆனால் முதன்மையாக அவர் கவிஞர் கம்பதாசன்ன் தீவிரமான ரசிகராகவே அறியப்படுகிறார். கம்பதாசன் பரவலாக மறக்கப்பட்ட சூழலில் அவருடைய திரையிசைப் பாடல்கள், காவியங்கள், சிறுகதைகள், நாடகங்கள்` ஆகிய தொகுப்பு நூல்களை வெளியிட்டார்.

சிலோன் விஜயேந்திரன் `கம்பதாசன் கவிதா நுட்பங்கள்` என்ற ஒரு நூலையும் எழுதி வெளியிட்டார். `கம்பதாசன் வாழ்வும் பணியும்` என்ற இவர் நூலும் குறிப்பிடத் தக்கது. `கவியரசர் கண்ணதாசன் பா நயம்` என்றும் ஒரு நூல் எழுதியிருக்கிறார்.

`அவள்` என்ற நாவல், `செளந்தர்ய பூஜை` என்ற சிறுகதைத் தொகுதி, `உலக நடிகர்களும் நடிக மேதை சிவாஜியும்`, `மானஸ மனோகரி` போன்ற இவரது புத்தகங்களும் குறிப்பிடத் தக்கவைதான்.

சிலோன் விஜயேந்திரன் கவிதைகள் தொகுக்கப்பட்டு `விஜயேந்திரன் கவிதைகள்` என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளாக வந்துள்ளன. `அறுபதாண்டு காலத் திரைப்பாடல்களும் பாடலாசிரியர்களும்` என்ற அவரது நூல் வரலாற்று மதிப்புடையது.

ஆன்மிகத்திலும் நாட்டமுடையவர். அவரது பாரதியார் வரலாற்று நாடகம், சுத்தானந்த பாரதியார் சிறப்புரையுடன் வெளிவந்தது.

'ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை’ என்னும் வாழ்க்கை வரலாற்றுநூலையும் எழுதியுள்ளார்.

மறைவு

சிலோன் விஜயேந்திரன் ஆகஸ்ட் 26, 2004 அன்று தன் 58-வது வயதில் தான் தனித்து குடியிருந்த அறையில் ஒரு தீவிபத்தில் மறைந்தார். அவருடைய மாடி அறைக்கு நேர்கீழே இருந்த மண்ணெண்ணை கடையில் தீப்பிடித்து எரிந்தபோது அவர் கீழே குதித்தார், ஆனால் தீ தொடர்ந்து பரவவே அவரால் தப்ப முடியவில்லை.

இலக்கிய இடம்

சிலோன் விஜயேந்திரன் கம்பதாசனின் நூல்களை தொகுத்து பதிப்பித்தவர் என்னும் வகையில் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆய்வாளராக கருதப்படுகிறார்.

நூல்கள்

எழுதியவை.
  1. ஈழத்துக் கலை இலக்கிய நினைவுகள்
  2. விஜயேந்திரன் கவிதைகள் (1968)
  3. அவள் ( நாவல்) (1968)
  4. அண்ணா என்றொரு மானிடன் (1969)
  5. செளந்தர்ய பூஜை (சிறு கதைகள்)(1970)
  6. பிரேம தியானம் (வசன காவியம்) (1971)
  7. ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை (வரலாறு) (1973)
  8. விஜயேந்திரன் கதைகள் (1975)
  9. பாரதி வரலாற்று நாடகம் (1982)
  10. நேசக் குயில் (கவிதைகள்) (1984)
  11. உலக நடிகர்களும் நடிகமேதை சிவாஜியும் (1985)
  12. கவிஞர் கம்பதாசன் வாழ்வும் பணியும் (1986)
  13. சிலோன் விஜயேந்திரன் கவிதைகள் (பாகம் 2) (1990)
  14. ஈழத்துக் கவிதை விமர்சனம் (1992)
  15. மூன்று கவிதைகள் (1993)
  16. சிலோன் விஜயேந்திரன் கவிதைகள் (பாகம் 3) (1994)
  17. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களும் கவிதைகளும் (1994)
  18. அல்லாஹு அக்பர் (1996)
தொகுத்தவை
  1. கல்லடிவேலன் நகைச்சுவை கதைகள் (1987)
  2. கம்பதாசன் கவிதைத் திரட்டு (1987)
  3. கம்பதாசன் திரை இசைப்பாடள்கள் (1987)
  4. கம்பதாசன் காவியஙள் (1987)
  5. கம்பதாசன் சிறுகதைகள் (1988)
  6. கம்பதாசன் நாடகங்கள் (1988)
  7. கம்பதாசன் கவிதா நுட்பங்கள் (1997)
  8. கலைஞர் திரை இசைப் பாடல்கள் (1988)
  9. ஈழத்துக் கவிதைக் கனிகள் (1990)
  10. அறுபது காலத் திரைப்பாடல்களும் பாடலாசிரியர்களும் (1992)

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:39:03 IST