சேலை சகதேவ முதலியார்: Difference between revisions
No edit summary |
(Added First published date) |
||
(5 intermediate revisions by 2 users not shown) | |||
Line 3: | Line 3: | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
[[File:நூல் 4.png|thumb|331x331px]] | [[File:நூல் 4.png|thumb|331x331px]] | ||
சென்னை திருவள்ளூரை அடுத்த சேலை என்ற ஊரில் 1874- | சென்னை திருவள்ளூரை அடுத்த சேலை என்ற ஊரில் 1874-ம் ஆண்டு சிங்கார முதலியாருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு அண்ணன் ஒருவரும், தம்பி ஒருவரும் உடன் பிறந்தவர்கள். | ||
இவர் திருவள்ளூர் வெஸ்லி மிஷன் உயர் நிலைப்பள்ளியில் படித்து மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். பின் தமிழ் இலக்கண, இலக்கியங்களை தனியாகவும், அறிஞர்களின் உதவியுடனும் | இவர் திருவள்ளூர் வெஸ்லி மிஷன் உயர் நிலைப்பள்ளியில் படித்து மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். பின் தமிழ் இலக்கண, இலக்கியங்களை தனியாகவும், அறிஞர்களின் உதவியுடனும் கற்றுத் தேர்ந்தார். | ||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
சகதேவ முதலியாரின் புலமையை அறிந்து, இவர் படித்த வெஸ்லி பள்ளி இவரை தமிழாசிரியராக அமர்த்திகொண்டது. ஓய்வு நேரங்களில் ஈக்காடு என்ற ஊரில் இருந்து வரும் பாதிரியார்களுக்கு தமிழ் கற்பித்தார். | சகதேவ முதலியாரின் புலமையை அறிந்து, இவர் படித்த வெஸ்லி பள்ளி இவரை தமிழாசிரியராக அமர்த்திகொண்டது. ஓய்வு நேரங்களில் ஈக்காடு என்ற ஊரில் இருந்து வரும் பாதிரியார்களுக்கு தமிழ் கற்பித்தார். | ||
Line 13: | Line 13: | ||
[[File:நூல்கள்1.png|thumb|300x300px]] | [[File:நூல்கள்1.png|thumb|300x300px]] | ||
== பங்களிப்பு == | == பங்களிப்பு == | ||
[[திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்|திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக]]த்தின் பதிப்பாசிரியராகவும், செந்தமிழ்ச்செல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்த [[மணி திருநாவுக்கரசு]] கோரியதற்கு இணங்க பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான ''கழகத் தமிழ்ப்பாட வரிசை''யில் ஆறு நூல்களை சேலை | [[திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்|திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக]]த்தின் பதிப்பாசிரியராகவும், செந்தமிழ்ச்செல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்த [[மணி திருநாவுக்கரசு]] கோரியதற்கு இணங்க பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான ''கழகத் தமிழ்ப்பாட வரிசை''யில் ஆறு நூல்களை சேலை சகதேவ முதலியார் செம்மை படுத்திக் கொடுத்தார். அந்நிறுவனம் வெளியிட்ட கழகத் தமிழ் கையகராதியிலும் பணியாற்றினார். | ||
== நூல்கள் == | == நூல்கள் == | ||
====== ''எழுதிய நூல்கள்'' ====== | ====== ''எழுதிய நூல்கள்'' ====== | ||
Line 19: | Line 19: | ||
* ''வாஸ்கோடகாமா'' | * ''வாஸ்கோடகாமா'' | ||
* ''பேசாதவர் பேச்சு'' | * ''பேசாதவர் பேச்சு'' | ||
* மார்க்கண்டேயர் | * மார்க்கண்டேயர் | ||
* நந்தனார் | * நந்தனார் | ||
Line 34: | Line 33: | ||
* [https://ia800903.us.archive.org/17/items/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZQ6juMy.TVA_BOK_0007670/TVA_BOK_0007670_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_text.pdf தமிழ் புலவர் வரிசை - எட்டாம் புத்தகம், சு அ இராமசாமிப் புலவர், 1955] | * [https://ia800903.us.archive.org/17/items/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZQ6juMy.TVA_BOK_0007670/TVA_BOK_0007670_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_text.pdf தமிழ் புலவர் வரிசை - எட்டாம் புத்தகம், சு அ இராமசாமிப் புலவர், 1955] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|15-Nov-2022, 13:34:19 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 16:23, 13 June 2024
சேலை சகதேவ முதலியார் (1874 - ஜூலை 28, 1953) தமிழ்ப் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார்.
பிறப்பு, கல்வி
சென்னை திருவள்ளூரை அடுத்த சேலை என்ற ஊரில் 1874-ம் ஆண்டு சிங்கார முதலியாருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு அண்ணன் ஒருவரும், தம்பி ஒருவரும் உடன் பிறந்தவர்கள்.
இவர் திருவள்ளூர் வெஸ்லி மிஷன் உயர் நிலைப்பள்ளியில் படித்து மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். பின் தமிழ் இலக்கண, இலக்கியங்களை தனியாகவும், அறிஞர்களின் உதவியுடனும் கற்றுத் தேர்ந்தார்.
தனிவாழ்க்கை
சகதேவ முதலியாரின் புலமையை அறிந்து, இவர் படித்த வெஸ்லி பள்ளி இவரை தமிழாசிரியராக அமர்த்திகொண்டது. ஓய்வு நேரங்களில் ஈக்காடு என்ற ஊரில் இருந்து வரும் பாதிரியார்களுக்கு தமிழ் கற்பித்தார்.
இவருக்கு இரு மனைவிகள். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஐந்து ஆண் குழந்தைகளும் பிறந்தனர்.
பங்களிப்பு
திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பாசிரியராகவும், செந்தமிழ்ச்செல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்த மணி திருநாவுக்கரசு கோரியதற்கு இணங்க பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான கழகத் தமிழ்ப்பாட வரிசையில் ஆறு நூல்களை சேலை சகதேவ முதலியார் செம்மை படுத்திக் கொடுத்தார். அந்நிறுவனம் வெளியிட்ட கழகத் தமிழ் கையகராதியிலும் பணியாற்றினார்.
நூல்கள்
எழுதிய நூல்கள்
- நல்லொழுக்கப்பாடம்
- வாஸ்கோடகாமா
- பேசாதவர் பேச்சு
- மார்க்கண்டேயர்
- நந்தனார்
- துருவ பிரகலாதர்
தொகுத்த நூல்கள்
- கழகத் தமிழ் கையகராதி
- தமிழ்ப்பாடத்திரட்டு 1,2
மறைவு
சேலை சகதேவ முதலியார் 28 ஜூலை 1953 அன்று முதுமையின் காரணமாக, உடல் நலங்குன்றி தமது 73-ஆவது வயதில் மறைந்தார்.
இலக்கிய இடம்
தனித்தமிழில் எழுதப்பட்ட பாடநூல்களை தமிழ்க்கல்விக்காக உருவாக்கியவர். அகராதி அறிஞர்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:34:19 IST