under review

திருவாக்குப் புராணம்: Difference between revisions

From Tamil Wiki
(புதிய பக்கம் உருவாக்கம்)
 
(Added First published date)
 
(23 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
கிறீத்துவ தமிழ்க் காப்பியங்களில் [[எச்.. கிருஷ்ண பிள்ளை]] இயற்றிய ‘[[இரட்சணிய யாத்திரிகம்]]மற்றும் [[வீரமாமுனிவர்]] இயற்றிய ‘[[தேம்பாவணி|தேம்பாவணியும்]]’ புகழ்பெற்றவை. இவற்றை தவிர்த்து சில அறியப்படாத கிறீத்துவ காப்பியங்களும் எழுதப்பட்டுள்ளன. திருவாக்குப் புராணம் அவற்றில் ஒன்றாகும்.  
[[File:திருவாக்குப் புராணம்.jpg|alt=திருவாக்குப் புராணம்|thumb|346x346px|திருவாக்குப் புராணம்]]
திருவாக்குப் புராணம் (1866) கிறிஸ்தவக் காப்பியம். தமிழில் எழுதப்பட்ட தொடக்ககால கிறிஸ்தவக் காப்பியங்களில் ஒன்று. அளவெட்டி கனகசபைப் புலவர் இதை இயற்றினார்
== எழுத்து, வெளியீடு ==
திருவாக்குப் புராணம் 1866-ம் ஆண்டு இலங்கையில் வெளியிடப்பட்டது. அளவெட்டி [[கனகசபைப் புலவர்]] இதை இயற்றினார்
== வரலாற்றுப் பின்னணி ==
இந்த நூல் உருவாகிய காலகட்டத்தை குறித்து பேராசிரியர் கா.சிவத்தம்பி பின்வருமாறு கூறியுள்ளார். "1619 – 1796 வரையுள்ள காலகட்டத்தில் கிறிஸ்தவம் தமிழரிடையே பரவுவதைக் காணலாம். இக்காலகட்டத்திலேயே போர்த்துக்கேயர் கத்தோலிக்க மதத்தினையும் ஒல்லாந்தர் புரட்டஸ்தத் கிறிஸ்தவத்தினையும் பரப்பினர். இவ்வாறு பரப்பும்போது தமிழிலக்கிய பாரம்பரியத்தின் சிற்றிலக்கிய வடிவமாக போற்றப்படும் அடிநிலை மக்கள் தொடர்புடைய இலக்கிய வடிவங்களை கையாண்டுள்ளனர்". திருவாக்குப் புராணம் 1866-ல் அச்சிடப்பட்டாலும் அதன் அடித்தளம் மேற்கூறப்பட்ட காலத்திலிருந்து உருவாகியது எனலாம்.
==நோக்கம்==
1866-ல் வெளியான இதன் அச்சு வடிவத்தின் முகப்பில் 'தமிழில் கவிதை வடிவில் விவிலியத்தை எழுதும் முயற்சி’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. ‘இஃது கிறிஸ்து சமய வித்தியாசாலை மாணாக்கரும் பிறரும் சத்தியவேத நூலை கற்றுக்கொள்வதற்கு உபயோகமாக மெக்காதர் ஐயரால் புராணநடையாகச் செய்விக்கப்பட்டது’ என்று திருவாக்கு புராணத்தின் முதல்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
== பெயர்க்காரணம்==
பைபிளின் முதல் வசனம் ‘ஆதியில் வார்த்தை இருந்தது...’ என தொடங்குகிறது. அதை ஒட்டியே வாக்காகத் தோன்றிய கடவுளைப் பற்றிய காப்பியத்துக்கு திருவாக்கு புராணம் என ஆசிரியர் பெயரிட்டிருக்கிறார். "அனைத்துலகுந் திருவாக்கால் அளித்து அகில சராசரமும் அருட்சித்தத்தே நினைத்துளவப் படியமைத்து காத்தழிக்குந் தனிமுதலாம்...’"என நூலின் முதல்பாடல் இதை சொல்கிறது.  
==உள்ளடக்கம்==
[[File:திருவாக்குப் புராணம் - இறைவணக்கம்.jpg|alt=திருவாக்குப் புராணம் - இறைவணக்கம்|thumb|357x357px|திருவாக்குப் புராணம் - இறைவணக்கம்]]
[[இரட்சணிய யாத்திரிகம்]] மற்றும் [[தேம்பாவணி]] கிறிஸ்தவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தாலும் அவை விவிலியத்தை நேரடியாகச் சொல்பவை அல்ல. [[இரட்சணிய யாத்திரிகம்|இரட்சணிய யாரத்திரிகம்]] ஒரு கிறிஸ்தவ பக்தரின் பயணத்தையும், [[தேம்பாவணி]] அதிகம் அறியப்படாத இயேசுவின் தந்தை சூசையின் கதையை காப்பிய வடிவிலும் சொல்பவை ஆகும். கனகசபை விவிலியத்தை, அதில் உள்ளவாறே, காப்பிய வடிவில் மாற்றும் முயற்சியில் திருவாக்குப் புராணத்தை எழுதினார்.
ஆனால் விவிலியத்தின் முதல் இரு புத்தகங்களான துவக்க நூல் (ஆதியாகமம் - Genesis) மற்றும் விடுதலைப் பயணம் (யாத்திராகமம் - Exodus) ஆகியவற்றைத் தாண்டி அவரால் எழுதி முடிக்க இயலவில்லை. இவை இரண்டும் முறையே 'ஜநந காண்டம்', 'யாத்திரைக் காண்டம்' என்றும் தலைப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ளன.

== ஆசிரியர் ==
ஜநந காண்டத்தில் பத்துப் படலங்களும், யாத்திரைக் காண்டத்தில் எட்டு படலங்களும் உள்ளன. பழைய ஏற்பாட்டில் 'பத்துகற்பனைப்படலத்துடன்’ முதல் பகுதி நிறைவு பெறுகிறது. இரண்டாம் பாகத்தில் சுவிசேட காண்டம் எனும் தலைப்பில் 67 பாடல்கள் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. இவற்றில் புதிய ஏற்பாட்டு துவக்க கதைகளும் கருத்துக்களும் உள்ளன. நூலின் துவக்கத்தில் வரும் பதிகத்தில் ஆசிரியர் புதிய மற்றும் பழைய ஏற்பாட்டின் பல நிகழ்வுகளைக் குறித்தும் எழுதியுள்ளார்.
திருவாக்குப் புராணம் கனகசபை என்பவரால் இயற்றப்பட்டு 1853ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அளவெட்டி கனகசபை புலவர் எனவும் அறியப்படும் இவர் 1815ல் இலங்கையில் யாழ்ப்பாணத்திலுள்ள அளவெட்டியில் பிறந்தார். இவர் பிறந்த வருடம் 1825 என்றும் சில குறிப்புகள் உள்ளன. இவரது முழுப் பெயர் ஜெர்மையா எவாட்த் கனகசபை பிள்ளை என்றும் இவரது பெற்றோர்கள் சைவ சமயத்திலிருந்து சீர்திருத்த கிறீத்துவத்தை தழுவினர்.
==காவிய அமைப்பு==
 
=====ஜநந காண்டம்=====
== காலம் ==
*உற்பத்தி படலம்
இந்த நூல் உருவாகிய காலம் குறித்து பேராசிரியர் கா.சிவத்தம்பி பின்வருமாறு கூறியுள்ளார்.  “1619 – 1796 வரையுள்ள காலகட்டத்தில் கிறிஸ்தவம் தமிழரிடையே பரவுவதைக் காணலாம்.  இக்காலகட்டத்திலேயே போர்த்துக்கேயர் கத்தோலிக்க மதத்தினையும் ஒல்லாந்தர் புரட்டஸ்தத் கிறிஸ்தவத்தினையும் பரப்பினர்.  இவ்வாறு பரப்பும்போது தமிழிலக்கிய பாரம்பரியத்தின் சிற்றிலக்கிய வடிவமாக போற்றப்படும் அடிநிலை மக்கள் தொடர்புடைய இலக்கிய வடிவங்களை கையாண்டுள்ளனர்’. திருவாக்குப் புராணம் 1866ல் அச்சிடப்பட்டாலும் அதன் அடித்தளம் மேற்கூறப்பட்ட காலத்திலிருந்து உருவாகியது எனலாம்.
*வினைசூழ் படலம்
 
*குலமுறை உரைத்த படலம்
== ஆசிரியரின் பிற நூல்கள் ==
*சலப்பிரளய படலம்
கனகப்பிள்ளை ஒரு நிகண்டு நூலையும் அழகர்சாமி மடல் எனும் பிரபந்த நூலையும் இயற்றியுள்ளார்.
*நோவாவின் வமிசப் படலம்
 
*தேவன் ஆபிரகாமை அழைத்த படலம்
== உள்ளடக்கம் ==
*ஈசாக்குப் படலம்
[[இரட்சணிய யாத்திரிகம்]] மற்றும் [[தேம்பாவணி]] கிறீத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தாலும் அவை விவிலியத்தை நேரடியாகச் சொல்பவை அல்ல. [[இரட்சணிய யாத்திரிகம்|இரட்சணிய யாரத்திரிகம்]] ஒரு கிறீத்துவ பக்தரின் பயணத்தையும், [[தேம்பாவணி]] அதிகம் அறியப்படாத இயேசுவின் தந்தை சூசையின் கதையை காப்பிய வடிவிலும் சொல்பவை ஆகும். கனகசபை விவிலியத்தை, அதில் உள்ளவாறே, காப்பிய வடிவில் மாற்றும் முயற்சியில் திருவாக்குப் புராணத்தை எழுதினார். கடவுளின் வார்த்தை என்பதையே திருவாக்கு என அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் விவிலியத்தின் முதல் இரு புத்தகங்களான துவக்க நூல் (ஆதியாகமம் - Genesis) மற்றும் விடுதலைப் பயணம் (யாத்திராகமம் - Exodus) ஆகியவற்றைத் தாண்டி அவரால் எழுதி முடிக்க இயலவில்லை. இவை இரண்டும் முறையே 'ஜநந காண்டம்',  'யாத்திரைக் காண்டம்' என்றும் தலைப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ளன. 
* யாக்கோப்பு படலம்
 
* யோசேப்புப் படலம்
ஜநந காண்டத்தில் பத்துப் படலங்களும்,  யாத்திரைக் காண்டத்தில் எட்டு படலங்களும் உள்ளன. பழைய ஏற்பாட்டில் ‘பத்துகற்பனைப்படலத்துடன்’ முதல் பகுதி நிறைவு பெறுகிறது. இரண்டாம் பாகத்தில் சுவிசேட காண்டம் எனும் தலைப்பில் 67 பாடல்கள் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. இவற்றில் புதிய ஏற்பாட்டு துவக்க கதைகளும் கருத்துக்களும் உள்ளன. நூலின் துவக்கத்தில் வரும் பதிகத்தில் ஆசிரியர் புதிய மற்றும் பழைய ஏற்பாட்டின் பல நிகழ்வுகளைக் குறித்தும் எழுதியுள்ளார்.
=====யாத்திரைக் காண்டம்=====
 
*சிறைபுரிப்படலம்
== அச்சு வடிவம் ==
*மோசே அவதார படலம்
1866ல் வெளியான இதன் அச்சு வடிவத்தின் முகப்பில் ‘தமிழில் கவிதை வடிவில் விவிலியத்தை எழுதும் முயற்சி’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. ‘இஃது கிறிஸ்துசமய வித்தியாசாலை மாணாக்கரும் பிறரும் சத்தியவேதநூலைக் கற்றுக்கொள்ளுவதற்குபயோகமாக மெக்காதர் ஐயரால் புராணனடையாகச் செய்விக்கப்பட்டது’ எனும் குறிப்பும் உள்ளது.
*மோசே காட்சிபெற்ற படலம்
 
*மோசே தூது சென்றபடலம்
== அதிகம் அறியப்படாத கிறீத்துவ காப்பியங்கள் ==
*பஸ்கா விரதப் பட்லாம்
 
*மீட்சிப்படலம்
* கிறிஸ்து மான்மியம் - சங்கை தொஷ் ஐயர் (வெளியீடு தரங்க்கம்பாடி லூத்தரன் மிஷன் அச்சகம் 1891)
*வனம்புகு படலம்
* திருஅவதாரம் - மாணிக்கவாசகம் ஆசீர்வாதம், சூரங்க்குடி, திருநெல்வேலி(பிறப்பு 1865)
*பத்து கற்பனைப் படலம்
* சுடர்மணி - ஆரோக்கியசாமி (பிறப்பு 1912, கோலியனூர், விழுப்புரம்) (வெளியீடு 1976)
=====சுவிசேட காண்டம்=====
* சுவிசேட புராணம் - ஸ்காட்
இப்பகுதியில் 67 பாடல்கள் மட்டுமே உள்ளன.
* கிறிஸ்தாயணம் - ஜான் பால்மர்
*சுவிசேட வரலாற்று படலம்
* ஞானாதிக்க ராயர் காப்பியம் - சாமிநாத பிள்ளை
*யோவானுற்பவித்த படலம்
* இயெசு புராணம் - ஈழத்துப்பூராடனார்
=====பதிகம்=====
* திருச்செல்வர் காவியம் - அருளப்பர் நாவலர்
இப்பகுதி 111 விருத்தப்பாக்கள் கொண்டது.
 
==திருவாக்குப் புராணத்திலிருந்து சில பாடல்கள்==
== திருவாக்குப் புராணத்திலிருந்து சில பாடல்கள் ==
=== முதற்பாடல்===
 
<poem>
=== முதற்பாடல் ===
''துள்ளு தெண்டிரைத் தொல்கடற் பாரினுள்
துள்ளு தெண்டிரைத் தொல்கடற் பாரினுள்
''கள்ள மற்ற கருத்துமெய்ஞ் ஞானிகள்
 
''வள்ள லென்று வழுத்து மொருபொருள்
கள்ள மற்ற கருத்துமெய்ஞ் ஞானிகள்
''உள்ள முற்றென் நுணர்வினு ணிற்பதே.
 
</poem>
வள்ள லென்று வழுத்து மொருபொருள்
===உற்பத்திப் படலம்===
 
====துவக்க நூல் முதல் பாடல்====
உள்ள முற்றென் நுணர்வினு ணிற்பதே.
<poem>
 
''அனைத்துககுந் திருவாக்கால் அளித்தகில சராசரமும் அருட்சித் தத்தே''
=== உற்பத்திப் படலம் ===
''நினைத்துளவப் படியமைத்துக் காத்தழிக்குந் தனிமுதலாம் நிகரிலாதான்''
 
''றனைத்துதிசெய் தெண்ணுகின்ற தகுங்கருமஞ்சித்திபெறத் தருகவென்றே''
==== துவக்க நூல் முதல் பாடல் ====
''இனைத்தெனவாப் போதரிய இணைமலர்த்தாள் சிரந்தேந்தி இறைஞ்சுவ மே.''
அனைத்துககுந் திருவாக்கால் அளித்தகில சராசரமும் அருட்சித் தத்தே
</poem>
 
=== சலப்பிரளயப்படலம்===
நினைத்துளவப் படியமைத்துக் காத்தழிக்குந் தனிமுதலாம் நிகரிலாதான்
====நோவா காலத்துப் பிரளயம்====
 
<poem>
றனைத்துதிசெய் தெண்ணுகின்ற தகுங்க்கருமஞ்சித்திபெறத் தருகவென்றே
''இன்னவாறுயர் புன்ற்பெருக்கிடை இறையவன்றனது முனிவினால்
 
''பின்னவாறுபடு மன்குலம்பெரிது பீழையுற்றுயிர் மடிந்தன
இனைத்தெனவாப் போதரிய இணைமலர்த்தாள் சிரந்தேந்தி இறைஞ்சுவ மே.
''அன்னவாறுபல புள்விலங்க்குகளு மன்றுமாய்ந்துயி ரழிந்தன
 
''சொன்னவாறுகெழு பேழையாழமிகு தோயமெலுலவி நின்றதே.
=== சலப்பிரளயப்படலம் ===
</poem>
 
=== புதிய ஏற்பாடு===
==== நோவா காலத்துப் பிரளயம் ====
====மரியாளின் நன்றிப்பாடலின் பகுதி====
இன்னவாறுயர் புன்ற்பெருக்கிடை இறையவன்றனது முனிவினால்
<poem>
 
''தயவுறுமவனிரக்கந் தலைமுறை தொறுமவற்குப்
பின்னவாறுபடு மன்குலம்பெரிது பீழையுற்றுயிர் மடிந்தன
''பயமுறுகின்றோர் மீது பற்றிநின் றிடுவதாகும்
 
''புயம்தனாலே யன்னான் பலத்தவை புரிவோனாகி
அன்னவாறுபல புள்விலங்க்குகளு மன்றுமாய்ந்துயி ரழிந்தன
''வயமுறு மிறுமாப்புற்றோர் மனங்களைச் சிதறத்தாக்கி.
</poem>
===கடைசிப் பாடல்===
<poem>
''இந்தநல் லுரையைக்கேட்டோ ரெலிசபெத் தினைபார்த்தேயுன்
''பந்தமானவரு ளிப்பேர் படைத்தவ ரில்லையென்னாத்
''தந்தைதன் வதன்நோக்கிச் சைகையாலென்ன பேருன்
''மைந்தனுக்கீயவுள்ளம் வைத்தனை யுரைநீயென்றார்.
</poem>
==இலக்கிய இடம்==
திருவாக்கு புராணத்துக்கு தமிழிலக்கியத்தின் தொடக்ககாலக் கிறிஸ்தவக் காப்பியம் என்னும் வகையில் இடமுண்டு. பைபிள் இந்திய மொழிகளில் தமிழிலேயே முதலில் காப்பியமாக எழுதப்பட்டது. அம்முயற்சி முழுமையடையவில்லை என்றாலும் வரலாற்றுநோக்கில் அது ஆய்வாளர்களால் கருத்தில்கொள்ளப்படுகிறது.
== உசாத்துணை ==
*[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0008073_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.pdf திருவாக்குப் புராணம் - இணைய நூலகம்]
*[https://www.tamilvu.org/courses/degree/a011/a0113.pdf A0113. தேம்பாவணி, சீறாப்புராணம், பிற கிறித்தவ இசுலாமியக் காப்பியங்கள்]
*[https://ourjaffna.com/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/ Ourjaffna.com அளவெட்டி கனகசபை-புலவர்]
*[https://noolaham.net/project/88/8751/8751.pdf இயேசு புராணம் - நூலகம்.காம்]

சொன்னவாறுகெழு பேழையாழமிகு தோயமெலுலவி நின்றதே.

=== புதிய ஏற்பாடு ===
{{Finalised}}

==== மரியாளின் நன்றிப்பாடலின் பகுதி ====
{{Fndt|15-Nov-2022, 13:35:20 IST}}
தயவுறுமவனிரக்கந் தலைமுறை தொறுமவற்குப்

பயமுறுகின்றோர் மீது பற்றிநின் றிடுவதாகும்
புயம்தனாலே யன்னான் பலத்தவை புரிவோனாகி
வயமுறு மிறுமாப்புற்றோர் மனங்களைச் சிதறத்தாக்கி.
=== கடைசிப் பாடல் ===
இந்தநல் லுரையைக்கேட்டோ ரெலிசபெத் தினைபார்த்தேயுன்
பந்தமானவரு ளிப்பேர் படைத்தவ ரில்லையென்னாத்
தந்தைதன் வதன்நோக்கிச் சைகையாலென்ன பேருன்
மைந்தனுக்கீயவுள்ளம் வைத்தனை யுரைநீயென்றார்.
== உசாத்துணை ==

* [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0008073_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.pdf திருவாக்குப் புராணம் - இணைய நூலகம்]
[[Category:Tamil Content]]
* [https://www.tamilvu.org/courses/degree/a011/a0113.pdf A0113. தேம்பாவணி, சீறாப்புராணம், பிற கிறித்தவ இசுலாமியக் காப்பியங்கள்]
[[Category:புலவர்கள்]]
* [https://ourjaffna.com/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/ Ourjaffna.com]
[[Category:கிறிஸ்தவம்]]

Latest revision as of 16:28, 13 June 2024

திருவாக்குப் புராணம்
திருவாக்குப் புராணம்

திருவாக்குப் புராணம் (1866) கிறிஸ்தவக் காப்பியம். தமிழில் எழுதப்பட்ட தொடக்ககால கிறிஸ்தவக் காப்பியங்களில் ஒன்று. அளவெட்டி கனகசபைப் புலவர் இதை இயற்றினார்

எழுத்து, வெளியீடு

திருவாக்குப் புராணம் 1866-ம் ஆண்டு இலங்கையில் வெளியிடப்பட்டது. அளவெட்டி கனகசபைப் புலவர் இதை இயற்றினார்

வரலாற்றுப் பின்னணி

இந்த நூல் உருவாகிய காலகட்டத்தை குறித்து பேராசிரியர் கா.சிவத்தம்பி பின்வருமாறு கூறியுள்ளார். "1619 – 1796 வரையுள்ள காலகட்டத்தில் கிறிஸ்தவம் தமிழரிடையே பரவுவதைக் காணலாம். இக்காலகட்டத்திலேயே போர்த்துக்கேயர் கத்தோலிக்க மதத்தினையும் ஒல்லாந்தர் புரட்டஸ்தத் கிறிஸ்தவத்தினையும் பரப்பினர். இவ்வாறு பரப்பும்போது தமிழிலக்கிய பாரம்பரியத்தின் சிற்றிலக்கிய வடிவமாக போற்றப்படும் அடிநிலை மக்கள் தொடர்புடைய இலக்கிய வடிவங்களை கையாண்டுள்ளனர்". திருவாக்குப் புராணம் 1866-ல் அச்சிடப்பட்டாலும் அதன் அடித்தளம் மேற்கூறப்பட்ட காலத்திலிருந்து உருவாகியது எனலாம்.

நோக்கம்

1866-ல் வெளியான இதன் அச்சு வடிவத்தின் முகப்பில் 'தமிழில் கவிதை வடிவில் விவிலியத்தை எழுதும் முயற்சி’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. ‘இஃது கிறிஸ்து சமய வித்தியாசாலை மாணாக்கரும் பிறரும் சத்தியவேத நூலை கற்றுக்கொள்வதற்கு உபயோகமாக மெக்காதர் ஐயரால் புராணநடையாகச் செய்விக்கப்பட்டது’ என்று திருவாக்கு புராணத்தின் முதல்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

பெயர்க்காரணம்

பைபிளின் முதல் வசனம் ‘ஆதியில் வார்த்தை இருந்தது...’ என தொடங்குகிறது. அதை ஒட்டியே வாக்காகத் தோன்றிய கடவுளைப் பற்றிய காப்பியத்துக்கு திருவாக்கு புராணம் என ஆசிரியர் பெயரிட்டிருக்கிறார். "அனைத்துலகுந் திருவாக்கால் அளித்து அகில சராசரமும் அருட்சித்தத்தே நினைத்துளவப் படியமைத்து காத்தழிக்குந் தனிமுதலாம்...’"என நூலின் முதல்பாடல் இதை சொல்கிறது.

உள்ளடக்கம்

திருவாக்குப் புராணம் - இறைவணக்கம்
திருவாக்குப் புராணம் - இறைவணக்கம்

இரட்சணிய யாத்திரிகம் மற்றும் தேம்பாவணி கிறிஸ்தவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தாலும் அவை விவிலியத்தை நேரடியாகச் சொல்பவை அல்ல. இரட்சணிய யாரத்திரிகம் ஒரு கிறிஸ்தவ பக்தரின் பயணத்தையும், தேம்பாவணி அதிகம் அறியப்படாத இயேசுவின் தந்தை சூசையின் கதையை காப்பிய வடிவிலும் சொல்பவை ஆகும். கனகசபை விவிலியத்தை, அதில் உள்ளவாறே, காப்பிய வடிவில் மாற்றும் முயற்சியில் திருவாக்குப் புராணத்தை எழுதினார். ஆனால் விவிலியத்தின் முதல் இரு புத்தகங்களான துவக்க நூல் (ஆதியாகமம் - Genesis) மற்றும் விடுதலைப் பயணம் (யாத்திராகமம் - Exodus) ஆகியவற்றைத் தாண்டி அவரால் எழுதி முடிக்க இயலவில்லை. இவை இரண்டும் முறையே 'ஜநந காண்டம்', 'யாத்திரைக் காண்டம்' என்றும் தலைப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ளன.

ஜநந காண்டத்தில் பத்துப் படலங்களும், யாத்திரைக் காண்டத்தில் எட்டு படலங்களும் உள்ளன. பழைய ஏற்பாட்டில் 'பத்துகற்பனைப்படலத்துடன்’ முதல் பகுதி நிறைவு பெறுகிறது. இரண்டாம் பாகத்தில் சுவிசேட காண்டம் எனும் தலைப்பில் 67 பாடல்கள் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. இவற்றில் புதிய ஏற்பாட்டு துவக்க கதைகளும் கருத்துக்களும் உள்ளன. நூலின் துவக்கத்தில் வரும் பதிகத்தில் ஆசிரியர் புதிய மற்றும் பழைய ஏற்பாட்டின் பல நிகழ்வுகளைக் குறித்தும் எழுதியுள்ளார்.

காவிய அமைப்பு

ஜநந காண்டம்
  • உற்பத்தி படலம்
  • வினைசூழ் படலம்
  • குலமுறை உரைத்த படலம்
  • சலப்பிரளய படலம்
  • நோவாவின் வமிசப் படலம்
  • தேவன் ஆபிரகாமை அழைத்த படலம்
  • ஈசாக்குப் படலம்
  • யாக்கோப்பு படலம்
  • யோசேப்புப் படலம்
யாத்திரைக் காண்டம்
  • சிறைபுரிப்படலம்
  • மோசே அவதார படலம்
  • மோசே காட்சிபெற்ற படலம்
  • மோசே தூது சென்றபடலம்
  • பஸ்கா விரதப் பட்லாம்
  • மீட்சிப்படலம்
  • வனம்புகு படலம்
  • பத்து கற்பனைப் படலம்
சுவிசேட காண்டம்

இப்பகுதியில் 67 பாடல்கள் மட்டுமே உள்ளன.

  • சுவிசேட வரலாற்று படலம்
  • யோவானுற்பவித்த படலம்
பதிகம்

இப்பகுதி 111 விருத்தப்பாக்கள் கொண்டது.

திருவாக்குப் புராணத்திலிருந்து சில பாடல்கள்

முதற்பாடல்

துள்ளு தெண்டிரைத் தொல்கடற் பாரினுள்
கள்ள மற்ற கருத்துமெய்ஞ் ஞானிகள்
வள்ள லென்று வழுத்து மொருபொருள்
உள்ள முற்றென் நுணர்வினு ணிற்பதே.

உற்பத்திப் படலம்

துவக்க நூல் முதல் பாடல்

அனைத்துககுந் திருவாக்கால் அளித்தகில சராசரமும் அருட்சித் தத்தே
நினைத்துளவப் படியமைத்துக் காத்தழிக்குந் தனிமுதலாம் நிகரிலாதான்
றனைத்துதிசெய் தெண்ணுகின்ற தகுங்கருமஞ்சித்திபெறத் தருகவென்றே
இனைத்தெனவாப் போதரிய இணைமலர்த்தாள் சிரந்தேந்தி இறைஞ்சுவ மே.

சலப்பிரளயப்படலம்

நோவா காலத்துப் பிரளயம்

இன்னவாறுயர் புன்ற்பெருக்கிடை இறையவன்றனது முனிவினால்
பின்னவாறுபடு மன்குலம்பெரிது பீழையுற்றுயிர் மடிந்தன
அன்னவாறுபல புள்விலங்க்குகளு மன்றுமாய்ந்துயி ரழிந்தன
சொன்னவாறுகெழு பேழையாழமிகு தோயமெலுலவி நின்றதே.

புதிய ஏற்பாடு

மரியாளின் நன்றிப்பாடலின் பகுதி

தயவுறுமவனிரக்கந் தலைமுறை தொறுமவற்குப்
பயமுறுகின்றோர் மீது பற்றிநின் றிடுவதாகும்
புயம்தனாலே யன்னான் பலத்தவை புரிவோனாகி
வயமுறு மிறுமாப்புற்றோர் மனங்களைச் சிதறத்தாக்கி.

கடைசிப் பாடல்

இந்தநல் லுரையைக்கேட்டோ ரெலிசபெத் தினைபார்த்தேயுன்
பந்தமானவரு ளிப்பேர் படைத்தவ ரில்லையென்னாத்
தந்தைதன் வதன்நோக்கிச் சைகையாலென்ன பேருன்
மைந்தனுக்கீயவுள்ளம் வைத்தனை யுரைநீயென்றார்.

இலக்கிய இடம்

திருவாக்கு புராணத்துக்கு தமிழிலக்கியத்தின் தொடக்ககாலக் கிறிஸ்தவக் காப்பியம் என்னும் வகையில் இடமுண்டு. பைபிள் இந்திய மொழிகளில் தமிழிலேயே முதலில் காப்பியமாக எழுதப்பட்டது. அம்முயற்சி முழுமையடையவில்லை என்றாலும் வரலாற்றுநோக்கில் அது ஆய்வாளர்களால் கருத்தில்கொள்ளப்படுகிறது.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:35:20 IST