under review

அருண் மகிழ்நன்: Difference between revisions

From Tamil Wiki
(கனகலதா)
(Added First published date)
 
(25 intermediate revisions by 7 users not shown)
Line 1: Line 1:
அருண் மகிழ்நன் (பிறப்பு- 1945) சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் இலக்கிய, பண்பாட்டுச் செயல்பாட்டாளர்.  
[[File:Arun Mahizhnan 1.jpg|thumb|377x377px|அருண் மகிழ்நன்]]
 
அருண் மகிழ்நன் (பிறப்பு- 1945) சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் இலக்கிய, பண்பாட்டுச் செயல்பாட்டாளர். அரசாங்கத்திலும் தனியார் நிறுவனங்களிலும் பல்கலைக் கழகங்களிலும் பல்வேறு பதவிகளும், பொறுப்புகளும் வகித்து, குழுக்களில் பங்காற்றி, கலை, இலக்கியம், பொது விவகாரங்கள், ஊடகத் துறை போன்றவற்றில் நிபுணத்துவப் பங்களிப்பை வழங்கி வருகிறார். சிங்கப்பூரில் ஊடகங்கள், சமூகப் பிரச்சினைகள், கலைகள் பற்றிய நூல்களின் ஆசிரியராகவும் இணையாசிரியராகவும் இருந்துள்ளார்.
அரசாங்கத்திலும் தனியார் நிறுவனங்களிலும் பல்கலைக் கழகங்களிலும் பல்வேறு பதவிகளிலும் பொறுப்புகளிலும் குழுக்களிலும் செயலாற்றி, கலை, இலக்கியம், பொது விவகாரங்கள்,  ஊடகத் துறை போன்றவற்றில்  நிபுணத்துவப் பங்களிப்பை வழங்கி வருபவர்.  சிங்கப்பூரில் ஊடகங்கள், சமூகப் பிரச்சினைகள்,  கலைகள் பற்றிய நூல்களின் ஆசிரியராகவும் இணையாசிரியராகவும் இருந்துள்ளார்.
== பிறப்பு, கல்வி ==
தமிழ்நாட்டில் புதுக்கோட்டையில் 1945--ம் ஆண்டு பிறந்தார். தந்தை பெயர் அருணாசலம். தாயார் நாச்சியம்மை. மகிழ்நன் அருணாச்சலம் எனும் பெயரை அருண் மகிழ்நன் என மாற்றி வைத்துக்கொண்டார். தமிழகத்தில் தமிழ் வழிப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வி பயின்றார். ஏற்கெனவே சிங்கப்பூரில் குடியேறிவிட்டிருந்த பெற்றோருடன் இணைய 1959--ம் ஆண்டில் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார். பின்னர் சிங்கப்பூரில் ஆங்கில வழியில் இடைநிலை பள்ளியில் படிக்கும் போது தமிழை ஒரு பாடமாக மட்டும் கற்றார். 1967 முதல் 1970 வரை மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வுத் துறையில் அரசாங்க உபகாரச் சம்பளத்துடன் கல்வி கற்றார். ஹானர்சில், முதல் நிலையில் தேர்ச்சி பெற்று சிங்கப்பூர் திரும்பினார். பின் 1991-ல் ஆஸ்திரேலியாவின் ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
=== தனி வாழ்க்கை ===
சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் மாணவப் பருவத்தில் வானொலி, தொலைக்காட்சியில் தமிழ் ஒலி/ஒளிபரப்பில் தீவிரமாக ஈடுபட்டார். பின்னர் கல்வி உபகாரச் சம்பளத்திற்கான மூன்று ஆண்டுக் கட்டாயச் சேவைக்காக 'ரேடியோ டெலிவிஷன் சிங்கப்பூர்' (Radio Television Singapore) ஆங்கில மொழி ஒளிபரப்புத் துறையில் 1970--ம் ஆண்டு பணியைத் தொடங்கி 1979 வரை பணியாற்றினார்.  

== பிறப்பு, கல்வி ==
ரேடியோ டெலிவிஷன் சிங்கப்பூரின் மத்திய தயாரிப்புப் பிரிவில் மூத்த தயாரிப்பாளராகப் பணிபுரிந்தபோது, கலைத் துறையில் பணிசார்ந்த இவரது ஈடுபாடு தொடங்கியது. நடப்புவிவகார நிகழ்ச்சிகளுடன், கலை தொடர்பான நிகழ்ச்சிகள், ஆவணப்படங்களின் தயாரிப்புகளில் இவர் ஈடுபட்டார். இப்பணி. சிங்கப்பூரின் முன்னோடி நாடகக் கலைஞரான கோ பாவ் கூன் போன்றவர்களுடனான நட்பை இவருக்குப் பெற்றுத்தந்தது. இது பின்னாளில் சிங்கப்பூரில் தரமான கலைகளுக்கான தேவையையும் இடத்தையும் பெறுவதற்கான முயற்சிகளில் பங்காற்றுவதற்கான உந்துதலை இத்தகைய நட்புகள் வளர்த்தன.
தமிழ்நாட்டில் புதுக்கோட்டையில் 1945ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை பெயர் அருணாசலம். தாயார் நாச்சியம்மை. மகிழ்நன் அருணாச்சலம்  எனும் பெயரை அருண் மகிழ்நன் என மாற்றி வைத்துக்கொண்டார். தமிழகத்தில் தமிழ் வழிப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வி பயின்றார். ஏற்கெனவே சிங்கப்பூரில் குடியேறிவிட்டிருந்த பெற்றோருடன் இணைய 1959ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார். பின்னர்  சிங்கப்பூரில்  ஆங்கில வழியில் இடைநிலை பள்ளியில் படிக்கும் போது தமிழ் ஒரு பாடமாக மட்டும் கற்றார். 1967 முதல் 1970 வரை மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வுத் துறையில் அரசாங்க உபகாரச்சம்பளத்துடன் கல்வி கற்றார். ஹானர்சில், முதல் நிலையில் தேர்ச்சி பெற்று  சிங்கப்பூர் திரும்பினார்.

வாழ்க்கை
அதன் பின்னர் சிங்கப்பூர் மொபில் எண்ணெய் நிறுவனத்தின் பொது விவகாரக் குழுவின் மேலாளராக 1979ல் சேர்ந்த திரு அருண் மகிழ்நன், அங்கு பணிபுரிந்த காலத்தில், சிங்கப்பூர் கலைத்துறையில் தனது ஈடுபாட்டை ஆழப்படுத்தினார், 1982 சிங்கப்பூர் கலை விழாவிற்கு மொபில் நிறுவனம் $500,000 நிதியுதவி வழங்கச் செய்தவர் இவர். நிதியுதவியுடன், விழாவுக்கு நிபுணத்துவ வழிகாட்டலுக்கும் ஏற்பாடு செய்தார். அடிலெய்ட் கலை விழாவின் கலை இயக்குநரான ஆண்டனி ஸ்டீல், சிங்கப்பூர் கலை விழாவின் முதல் கலை இயக்குநராகப் பணியாற்றி, விழாவின் நிகழ்ச்சிகளுக்கு புதிய மதிப்பைப் பெற்றுத் தந்தார்.

சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் மாணவப் பருவத்தில் வானொலி, தொலைக்காட்சியில் தமிழ் ஒலி/ஒளிபரப்பில் தீவிரமாக ஈடுபட்டார். பின்னர் கல்வி உபகாரச் சம்பளத்திற்கான மூன்று ஆண்டுக் கட்டாயச் சேவையை 'ரேடியோ டெலிவிஷன் சிங்கப்பூர்' (Radio Television Singapore) ஆங்கில மொழி ஒளிபரப்புத் துறையில்  1970 ஆம் ஆண்டு தொடங்கிய அவர் 1979 வரை அந்நிறுவனத்திலேயே பணியாற்றினார்.
மேலும் தேசிய கலை விழாவின் வழிகாட்டல் குழு உறுப்பினராகவும், விழாவின் ஆலோசகராகவும் தலைவராகவும் 1980 முதல் 2006 வரை பல்வேறு காலகட்டங்களில் அருண் மகிழ்நன் பங்களித்துள்ளார்.

சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வீ கிம் வீ தொடர்பு,  தகவல் பள்ளியில் சார்புநிலைப் பேராசிரியராகப் பணியாற்றினர். கொள்கை ஆய்வுக் கழகத்தின் சிறப்பு ஆராய்ச்சி ஆலோசகராக பணியாற்றுகிறார்.
1987 முதல் 1990 வரை ஹில் அண்ட் நோல்டன் (Hill and Knowlton) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்தார். இடையில் ஓராண்டு காலம் முதுநிலைப் பட்டப்படிப்பை மேற்கொண்டவர், 1991-ல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின், சிங்கப்பூர் கொள்கை ஆய்வுக் கழகத்தில் (Institute of Policy Studies, National University of Singapore) துணை இயக்குநராகப் பதவி ஏற்றார். 2004 முதல் 2008 வரை ஆய்வுக் கழகத்தின் தற்காலிக இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். தற்போது அங்கு சிறப்பு ஆராய்ச்சி ஆலோசகராக இருக்கிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலான இந்தப் பணியில், ஆய்வுக் கழகத்தின் பல நூல்களில் ஆசிரியராகவும் தொகுப்பாசிரியராகவும் கட்டுரையாளராகவும் பங்களித்துள்ளார். அனைத்துலக அளவிலான மாநாடுகளில் பங்கேற்று, வழிநடத்தியும் உள்ளார்.

Intercultural Theatre Institute, சிங்கப்பூர் அனைத்துலகக் கலை விழா ஆகியவற்றின் தலைவராகவும் சிங்கப்பூர்t தேசிய கலைகள் மன்றம், சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம், தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், புத்தக மேம்பாட்டு மன்றம், தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், இந்திய மரபுடைமை மையம் உட்பட பல்வேறு கலை அமைப்புகளின் குழு உறுப்பினர் அல்லது ஆலோசகராக இருந்துள்ளார்.
1994 முதல் 2017 வரையில் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வீ கிம் வீ தகவல் தொடர்பு பள்ளியில் (Wee Kim Wee School of Communication and Information) சார்புநிலைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.  

Intercultural Theatre Institute, சிங்கப்பூர் அனைத்துலகக் கலை விழா ஆகியவற்றின் தலைவராகவும் சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றம், சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம், தேசிய நூலக வாரியம், புத்தக மேம்பாட்டு மன்றம், தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், இந்திய மரபுடைமை மையம் உட்பட பல்வேறு கலை அமைப்புகளின் குழு உறுப்பினர் அல்லது ஆலோசகராகப் பங்காற்றியுள்ளார்.
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
மகிழ்நனின் 50 ஆண்டுகால நீண்ட பணி வாழ்க்கை பெரும்பாலும் தமிழ் மொழி அல்லது பண்பாட்டுடன் எவ்விதத் தொடர்பும் அற்ற துறைகளிலேயே நீடித்தது. எனினும் அவர் தனது மொழி, கலாசாரம், சமூகத்துடன் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வந்துள்ளார். சமூகத்தில் தான் அடைந்த இடத்தின் காரணமாக, தமிழ் சமூகத்தின் நலனுக்காக முக்கிய முடிவுகளை எடுப்பவர்களையும் கொள்கைகளையும் வழிப்படுத்த முடிந்தவராக கருதப்படுகிறார்.
[[File:Arun Mahizhnan 3 Tommy Koh 2017 Dec.jpg|thumb|250x250px|பேராசிரியர் டாமி கோ-வுடன் அருண் மகிழ்நன். டாமி கோவின் 80வது பிறந்தநாளின் போது.]]
 
மகிழ்நனின் 50 ஆண்டுகால நீண்ட பணி வாழ்க்கை பெரும்பாலும் தமிழ் மொழி அல்லது பண்பாட்டுடன் எவ்விதத் தொடர்பும் அற்ற துறைகளிலேயே நீடித்தது. எனினும் அவர் தனது மொழி, கலாசாரம் மற்றும் சமூகத்தின் மேல் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வந்துள்ளார். தமிழ் சமூகத்தின் நலனுக்காக முக்கிய முடிவுகளை எடுப்பவர்களையும் கொள்கைகளையும் வழிப்படுத்த முடிந்தவராக கருதப்படுகிறார். சிங்கப்பூர் அனைத்துலகக் கலை விழாவுக்கு அடித்தளம் இட்டவர்களில் முக்கியமானவர் அருண் மகிழ்நன். சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றம் உருவாக்க ஆலோசனைக் குழுவிலும் பின்னர் தேசிய கலைகள் மன்றத்தில் ஆலோசகர் குழுவிலும் இடம்பெற்று தேசிய கலை, இலக்கிய முயற்சிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார். சிங்கப்பூரில் கலை, இலக்கிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் அரசாங்கம் அளிக்கும் ஆதரவை மிகச் சரியான முறையில் பயன்படுத்தி, பெருங்காரியங்களைச் செய்துவருபவர். திரு அருண் மகிழ்நனின் பணிகளில் முதன்மையானது, சிங்கப்பூர் தமிழர்களின் வரலாற்றுக் கருவூலத்தின் அடிப்படைகளை ஆவணப்படுத்தும் முயற்சி.
சிங்கப்பூர் அனைத்துலகக் கலை விழாவுக்கு அடித்தளம் இட்டவர்களில் முக்கியமானவர் அருண் மகிழ்நன். சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றம் உருவாக்க ஆலோசனைக் குழுவிலும் பின்னர் தேசிய கலைகள் மன்றத்தில் ஆலோசகர் குழுவிலும் இடம்பெற்று தேசிய கலை, இலக்கிய முயற்சிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
 
== பங்களிப்புகள் ==
== பங்களிப்புகள் ==
1982ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் முதல் இந்திய கலாசார விழாவை நடத்துவதற்கான முயற்சிக்குத் தலைமை தாங்கினார். அந்த விழாவின் நோக்கமும் தாக்கமும் அதற்கு முன்னர் இல்லாதது. இன்றுவரையில் குறிப்பிட்டுச் சொல்லும் சிறப்பான  கலை விழாவாக அது விளங்குகிறது.
[[File:Arun Mahizhnan 2.jpg|thumb|250x250px|பொதுத் தொடர்புத் துறைக் கழகத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றபோது.]]
1982--ம் ஆண்டில், சிங்கப்பூரில் முதல் இந்திய கலாசார விழாவை நடத்துவதற்கான முயற்சிக்குத் தலைமை தாங்கினார். அந்த விழாவின் நோக்கமும் தாக்கமும் அதற்கு முன்னர் -ல்லாதது. இன்றுவரையில் குறிப்பிட்டுச் சொல்லும் சிறப்பான கலை விழாவாக அது விளங்குகிறது.  

2000ஆம் ஆண்டில், முதல் தமிழ் இணைய அனைத்துலக மாநாட்டை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்காற்றினார். இது தமிழ் இணைய வளர்ச்சியை வழிநடத்தும் உலகளாவிய அமைப்பான உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தை (உத்தமம்) உருவாக்க வழிவகுத்தது.  
2000--ம் ஆண்டில், முதல் தமிழ் இணைய அனைத்துலக மாநாட்டை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்காற்றினார். இது தமிழ் இணைய வளர்ச்சியை வழிநடத்தும் உலகளாவிய அமைப்பான உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தை (உத்தமம்) உருவாக்க வழிவகுத்தது.  

2011ஆம் ஆண்டில், அவர் உறுப்பினராக இல்லாத சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள் கழகத்திற்கு வழிகாட்டி, முதல் உலக புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்த உதவினார். சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்குப் பல்வேறு நிலைகளில்  ஆலோசகராக இருந்துள்ளார்.
2011--ம் ஆண்டில், அவர் உறுப்பினராக -ல்லாத சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள் கழகத்திற்கு வழிகாட்டி, முதல் உலக புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்த உதவினார். சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்குப் பல்வேறு நிலைகளில் ஆலோசகராக இருந்துள்ளார்.

தமிழ் வளங்களை மின்மயமாக்க வேண்டும் என்னும் பெருநோக்கோடு 2013ஆம் ஆண்டு தமிழ் மின்மரபுடைமைத் திட்டத்தைத் தொடங்கினார்.  சிங்கப்பூரின்  50வது சுதந்திர தினத்தை ஒட்டி, 2015ஆம் ஆண்டில், சிங்கப்பூர் சுதந்திரமடைந்த 1965ஆம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையில்  தமிழ் இலக்கிய வெளியீடுகளின் முழுத் தொகுப்பும் மின்னிலக்கமயமாக்கப்பட்டு, உலகில் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பொதுவில் அணுகக்கூடியதாக்கப்பட்டது. சமூக ஆதரவுடனும் அரசாங்கப் பங்களிப்புடனும் இடம்பெற்ற ஒரு முன்னோடித் திட்டம் இது. தொடர்ந்து சிங்கைத் தமிழ் நாடகங்கள், சிங்கைத் தமிழ் இசை, சிங்கைத் தமிழ் நடனம் ஆகியவையும் மின் தொகுப்பாக்கப்பட்டன.  
தமிழ் வளங்களை எண்மமயமாக்க (digitize) வேண்டும் என்னும் பெருநோக்கோடு 2013--ம் ஆண்டு தமிழ் மின்மரபுடைமைத் திட்டத்தைத் (Tamil Digital Heritage) தொடங்கினார். சிங்கப்பூரின் 50-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, 2015-ம் ஆண்டில், சிங்கப்பூர் சுதந்திரமடைந்த 1965--ம் ஆண்டு முதல் 2015--ம் ஆண்டு வரையிலான தமிழ் இலக்கிய வெளியீடுகளில் பெரும்பான்மை எண்மமயமாக்கப்பட்டு, உலகில் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பொதுவில் அணுகக்கூடியதாக்கப்பட்டது. இது சமூக ஆதரவுடனும் அரசாங்கப் பங்களிப்புடனும் இடம்பெற்ற ஓர் முன்னோடித் திட்டம். தொடர்ந்து சிங்கைத் தமிழ் நாடகங்கள், சிங்கைத் தமிழ் இசை, சிங்கைத் தமிழ் நடனம் ஆகியவையும் மின் தொகுப்பாக்கப்பட்டன. தமிழ் இலக்கியம், கலைகளின் வரலாற்றுபூர்வத்தை மின்னிலக்கமாகியது சிங்கப்பூர் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுக்கு முக்கிய பங்களிப்பு.  

2015ஆம் ஆண்டு  சிங்கப்பூரின் பொன்விழாவை முன்னிட்டு, கொள்கை ஆய்வியல் கழகம் வெளியிட்ட சிங்கப்பூரை  விவரிக்கும் 50 நூல்களின் தலமை ஆசிரியர் மகிழ்நன்.  ஆட்சி முதல் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, உணவு, விளையாட்டு, இலக்கியம் வரை பரந்த அளவிலான தலைப்புகளில் இந்நூல்கள் வெளிவந்தன.  
2015--ம் ஆண்டு சிங்கப்பூரின் பொன்விழாவை முன்னிட்டு, கொள்கை ஆய்வியல் கழகம் வெளியிட்ட சிங்கப்பூரை விவரிக்கும் 50 நூல்களின் அசிரியர் குழுத் தலைவராக இருந்தார். ஆட்சி, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, உணவு, விளையாட்டு, இலக்கியம் எனப் பரந்த அளவிலான தலைப்புகளில் இந்நூல்கள் வெளிவந்தன.  

2019ஆம் ஆண்டில், சிங்கப்பூர் ஒரு பிரிட்டிஷ் காலனியாக நிறுவப்பட்டதன் 200வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சிங்கப்பூர் இந்திய மரபுடைமை நிலையம் வெளியிட்ட, 'ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: சிங்கப்பூரிலும் தென்கிழக்காசியாவிலும் தமிழர்' எனும் நூலின் இணை ஆசிரியராகப் பங்களித்துள்ளார்.
2019--ம் ஆண்டில், சிங்கப்பூர் ஒரு பிரிட்டிஷ் காலனியாக நிறுவப்பட்டதன் 200-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சிங்கப்பூர் இந்திய மரபுடைமை நிலையம் வெளியிட்ட, 'Sojourners to Settlers – Tamils in Southeast Asia and Singapore’ எனும் நூலின் இணை ஆசிரியராகப் பங்களித்துள்ளார். தென்கிழக்காசியாவில் தமிழர் வரலாறு, வாழ்வு பற்றி ஆய்வு அடிப்படையில் உலகெங்கும் வாழும் துறைசார்ந்த நிபுணர்களாலும் சிங்கப்பூர் கல்வியாளர்கள் மற்றும் துறைசார்ந்தவர்களாலும் எழுதப்பட்டுள்ள முதல் தொகுப்பு நூல் இது. இரு பாகங்களாக ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட (2019) நூலிலிருந்து சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் தேவை, ஆர்வம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு 18 இயல்களைத் தேர்ந்தெடுத்து, மொழிபெயர்த்து, செம்மைசெய்து, தொகுத்து ‘ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர்’ எனும் தமிழ்ப்பதிப்பு 2021 மே மாதம் வெளியிடப்பட்டது.

2019ஆம் ஆண்டில் தமிழர்களுக்கிடையே தங்கள் பண்பாட்டைப்பற்றிய புரிதலை மேலும் வலுப்படுத்துவதையும் சிங்கப்பூரிலுள்ள மற்ற பண்பாடுகளுடன் பாலம் அமைப்பதையும் இலக்காகக் கொண்டு சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையத்தைத் தொடங்கினார். அதே ஆண்டில், இதுவரை கண்டிராத சிங்கப்பூர்த் தமிழர் கலைக் களஞ்சியம் உருவாக்குவதற்கான திட்டத்தை முன்வைத்தார். 2022ல் அத்திட்டம் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவோடு தொடங்கப்பட்டது. தற்போது  பல்வேறு அதிகாரப் பொறுப்புகளிலிருந்தும்  ஓய்வுபெற்று, மையத்தின் இயக்குநராக முழு நேரமாகச் செயலாற்றி வருகிறார்.
2019--ம் ஆண்டில் தமிழர்களுக்கிடையே தங்கள் பண்பாட்டைப் பற்றிய புரிதலை மேலும் வலுப்படுத்துவதையும் சிங்கப்பூரிலுள்ள மற்ற பண்பாடுகளுடன் பாலம் அமைப்பதையும் இலக்காகக் கொண்டு சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையத்தைத் தொடங்கினார்.  

அதே ஆண்டில், இதுவரை கண்டிராத சிங்கப்பூர்த் தமிழர் கலைக் களஞ்சியம் உருவாக்குவதற்கான திட்டத்தை முன்வைத்தார். 2022-ல் அத்திட்டம் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவோடு தொடங்கப்பட்டது. தற்போது பல்வேறு அதிகாரப் பொறுப்புகளிலிருந்தும் ஓய்வுபெற்று, மையத்தின் இயக்குநராக முழு நேரம் செயலாற்றி வருகிறார்.
== விருதுகள் ==
== விருதுகள் ==
 
* சிங்கப்பூர் பொதுத் தொடர்புத் துறைக் கழகத்தின் (Institute of Public Relations) வாழ்நாள் சாதனையாளர் விருது
* சிங்கப்ப்பூர் பொதுத் தொடர்புத் துறைக் கழகத்தின் (Institute of Public Relations) வாழ்நாள் சாதனையாளர் விருது
* Fellow, Institute of Public Relations, Singapore

== நூல்கள் ==
== நூல்கள் ==
* Singapore: Re-Engineering Success, edited by Arun Mahizhnan and Lee Tsao Yuan, 2001

* Sojourners to Settlers: Tamils in Southeast Asia and Singapore, edited by Arun Mahizhnan and Nalina Gopal, 2019

* Battle for hearts and minds: New media and elections in Singapore, edited by Tan, T. H., Mahizhnan, A., & Ang, P. H., (2016).  

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://lkyspp.nus.edu.sg/ips/about-us/staff-directory/arun-mahizhnan#:~:text=Arun%20Mahizhnan%20is%20Special%20Research,50th%20anniversary%20of%20Singapore's%20Independence Arun Mahizhnan, Special Research Advisor, Institute of Policy Studies, National University of Singapore].

* [https://www.esplanade.com/offstage/arts/arun-mahizhnan Arun Mahizhnan, Arts administrator and advisor, esplanade.com June 2016]

Line 53: Line 51:
* [https://www.youtube.com/watch?v=KZ0qwGGmdF0 IPS Oral History Project - Arun Mahizhnan, youtube.com]

* [https://selliyal.com/archives/190487 அருண் மகிழ்நனுக்கு சிங்கை அரசின் தேசிய தின பொதுச் சேவை விருது, செல்லியல்.காம், ஆகஸ்ட் 2019]

{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 12:06:20 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:சிங்கப்பூர் ஆளுமைகள்]]
[[Category:Spc]]

Latest revision as of 16:28, 13 June 2024

அருண் மகிழ்நன்

அருண் மகிழ்நன் (பிறப்பு- 1945) சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் இலக்கிய, பண்பாட்டுச் செயல்பாட்டாளர். அரசாங்கத்திலும் தனியார் நிறுவனங்களிலும் பல்கலைக் கழகங்களிலும் பல்வேறு பதவிகளும், பொறுப்புகளும் வகித்து, குழுக்களில் பங்காற்றி, கலை, இலக்கியம், பொது விவகாரங்கள், ஊடகத் துறை போன்றவற்றில் நிபுணத்துவப் பங்களிப்பை வழங்கி வருகிறார். சிங்கப்பூரில் ஊடகங்கள், சமூகப் பிரச்சினைகள், கலைகள் பற்றிய நூல்களின் ஆசிரியராகவும் இணையாசிரியராகவும் இருந்துள்ளார்.

பிறப்பு, கல்வி

தமிழ்நாட்டில் புதுக்கோட்டையில் 1945--ம் ஆண்டு பிறந்தார். தந்தை பெயர் அருணாசலம். தாயார் நாச்சியம்மை. மகிழ்நன் அருணாச்சலம் எனும் பெயரை அருண் மகிழ்நன் என மாற்றி வைத்துக்கொண்டார். தமிழகத்தில் தமிழ் வழிப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வி பயின்றார். ஏற்கெனவே சிங்கப்பூரில் குடியேறிவிட்டிருந்த பெற்றோருடன் இணைய 1959--ம் ஆண்டில் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார். பின்னர் சிங்கப்பூரில் ஆங்கில வழியில் இடைநிலை பள்ளியில் படிக்கும் போது தமிழை ஒரு பாடமாக மட்டும் கற்றார். 1967 முதல் 1970 வரை மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வுத் துறையில் அரசாங்க உபகாரச் சம்பளத்துடன் கல்வி கற்றார். ஹானர்சில், முதல் நிலையில் தேர்ச்சி பெற்று சிங்கப்பூர் திரும்பினார். பின் 1991-ல் ஆஸ்திரேலியாவின் ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் மாணவப் பருவத்தில் வானொலி, தொலைக்காட்சியில் தமிழ் ஒலி/ஒளிபரப்பில் தீவிரமாக ஈடுபட்டார். பின்னர் கல்வி உபகாரச் சம்பளத்திற்கான மூன்று ஆண்டுக் கட்டாயச் சேவைக்காக 'ரேடியோ டெலிவிஷன் சிங்கப்பூர்' (Radio Television Singapore) ஆங்கில மொழி ஒளிபரப்புத் துறையில் 1970--ம் ஆண்டு பணியைத் தொடங்கி 1979 வரை பணியாற்றினார்.

ரேடியோ டெலிவிஷன் சிங்கப்பூரின் மத்திய தயாரிப்புப் பிரிவில் மூத்த தயாரிப்பாளராகப் பணிபுரிந்தபோது, கலைத் துறையில் பணிசார்ந்த இவரது ஈடுபாடு தொடங்கியது. நடப்புவிவகார நிகழ்ச்சிகளுடன், கலை தொடர்பான நிகழ்ச்சிகள், ஆவணப்படங்களின் தயாரிப்புகளில் இவர் ஈடுபட்டார். இப்பணி. சிங்கப்பூரின் முன்னோடி நாடகக் கலைஞரான கோ பாவ் கூன் போன்றவர்களுடனான நட்பை இவருக்குப் பெற்றுத்தந்தது. இது பின்னாளில் சிங்கப்பூரில் தரமான கலைகளுக்கான தேவையையும் இடத்தையும் பெறுவதற்கான முயற்சிகளில் பங்காற்றுவதற்கான உந்துதலை இத்தகைய நட்புகள் வளர்த்தன.

அதன் பின்னர் சிங்கப்பூர் மொபில் எண்ணெய் நிறுவனத்தின் பொது விவகாரக் குழுவின் மேலாளராக 1979ல் சேர்ந்த திரு அருண் மகிழ்நன், அங்கு பணிபுரிந்த காலத்தில், சிங்கப்பூர் கலைத்துறையில் தனது ஈடுபாட்டை ஆழப்படுத்தினார், 1982 சிங்கப்பூர் கலை விழாவிற்கு மொபில் நிறுவனம் $500,000 நிதியுதவி வழங்கச் செய்தவர் இவர். நிதியுதவியுடன், விழாவுக்கு நிபுணத்துவ வழிகாட்டலுக்கும் ஏற்பாடு செய்தார். அடிலெய்ட் கலை விழாவின் கலை இயக்குநரான ஆண்டனி ஸ்டீல், சிங்கப்பூர் கலை விழாவின் முதல் கலை இயக்குநராகப் பணியாற்றி, விழாவின் நிகழ்ச்சிகளுக்கு புதிய மதிப்பைப் பெற்றுத் தந்தார்.

மேலும் தேசிய கலை விழாவின் வழிகாட்டல் குழு உறுப்பினராகவும், விழாவின் ஆலோசகராகவும் தலைவராகவும் 1980 முதல் 2006 வரை பல்வேறு காலகட்டங்களில் அருண் மகிழ்நன் பங்களித்துள்ளார்.

1987 முதல் 1990 வரை ஹில் அண்ட் நோல்டன் (Hill and Knowlton) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்தார். இடையில் ஓராண்டு காலம் முதுநிலைப் பட்டப்படிப்பை மேற்கொண்டவர், 1991-ல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின், சிங்கப்பூர் கொள்கை ஆய்வுக் கழகத்தில் (Institute of Policy Studies, National University of Singapore) துணை இயக்குநராகப் பதவி ஏற்றார். 2004 முதல் 2008 வரை ஆய்வுக் கழகத்தின் தற்காலிக இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். தற்போது அங்கு சிறப்பு ஆராய்ச்சி ஆலோசகராக இருக்கிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலான இந்தப் பணியில், ஆய்வுக் கழகத்தின் பல நூல்களில் ஆசிரியராகவும் தொகுப்பாசிரியராகவும் கட்டுரையாளராகவும் பங்களித்துள்ளார். அனைத்துலக அளவிலான மாநாடுகளில் பங்கேற்று, வழிநடத்தியும் உள்ளார்.

1994 முதல் 2017 வரையில் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வீ கிம் வீ தகவல் தொடர்பு பள்ளியில் (Wee Kim Wee School of Communication and Information) சார்புநிலைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

Intercultural Theatre Institute, சிங்கப்பூர் அனைத்துலகக் கலை விழா ஆகியவற்றின் தலைவராகவும் சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றம், சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம், தேசிய நூலக வாரியம், புத்தக மேம்பாட்டு மன்றம், தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், இந்திய மரபுடைமை மையம் உட்பட பல்வேறு கலை அமைப்புகளின் குழு உறுப்பினர் அல்லது ஆலோசகராகப் பங்காற்றியுள்ளார்.

இலக்கிய இடம்

பேராசிரியர் டாமி கோ-வுடன் அருண் மகிழ்நன். டாமி கோவின் 80வது பிறந்தநாளின் போது.

மகிழ்நனின் 50 ஆண்டுகால நீண்ட பணி வாழ்க்கை பெரும்பாலும் தமிழ் மொழி அல்லது பண்பாட்டுடன் எவ்விதத் தொடர்பும் அற்ற துறைகளிலேயே நீடித்தது. எனினும் அவர் தனது மொழி, கலாசாரம் மற்றும் சமூகத்தின் மேல் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வந்துள்ளார். தமிழ் சமூகத்தின் நலனுக்காக முக்கிய முடிவுகளை எடுப்பவர்களையும் கொள்கைகளையும் வழிப்படுத்த முடிந்தவராக கருதப்படுகிறார். சிங்கப்பூர் அனைத்துலகக் கலை விழாவுக்கு அடித்தளம் இட்டவர்களில் முக்கியமானவர் அருண் மகிழ்நன். சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றம் உருவாக்க ஆலோசனைக் குழுவிலும் பின்னர் தேசிய கலைகள் மன்றத்தில் ஆலோசகர் குழுவிலும் இடம்பெற்று தேசிய கலை, இலக்கிய முயற்சிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார். சிங்கப்பூரில் கலை, இலக்கிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் அரசாங்கம் அளிக்கும் ஆதரவை மிகச் சரியான முறையில் பயன்படுத்தி, பெருங்காரியங்களைச் செய்துவருபவர். திரு அருண் மகிழ்நனின் பணிகளில் முதன்மையானது, சிங்கப்பூர் தமிழர்களின் வரலாற்றுக் கருவூலத்தின் அடிப்படைகளை ஆவணப்படுத்தும் முயற்சி.

பங்களிப்புகள்

பொதுத் தொடர்புத் துறைக் கழகத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றபோது.

1982--ம் ஆண்டில், சிங்கப்பூரில் முதல் இந்திய கலாசார விழாவை நடத்துவதற்கான முயற்சிக்குத் தலைமை தாங்கினார். அந்த விழாவின் நோக்கமும் தாக்கமும் அதற்கு முன்னர் -ல்லாதது. இன்றுவரையில் குறிப்பிட்டுச் சொல்லும் சிறப்பான கலை விழாவாக அது விளங்குகிறது.

2000--ம் ஆண்டில், முதல் தமிழ் இணைய அனைத்துலக மாநாட்டை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்காற்றினார். இது தமிழ் இணைய வளர்ச்சியை வழிநடத்தும் உலகளாவிய அமைப்பான உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தை (உத்தமம்) உருவாக்க வழிவகுத்தது.

2011--ம் ஆண்டில், அவர் உறுப்பினராக -ல்லாத சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள் கழகத்திற்கு வழிகாட்டி, முதல் உலக புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்த உதவினார். சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்குப் பல்வேறு நிலைகளில் ஆலோசகராக இருந்துள்ளார்.

தமிழ் வளங்களை எண்மமயமாக்க (digitize) வேண்டும் என்னும் பெருநோக்கோடு 2013--ம் ஆண்டு தமிழ் மின்மரபுடைமைத் திட்டத்தைத் (Tamil Digital Heritage) தொடங்கினார். சிங்கப்பூரின் 50-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, 2015-ம் ஆண்டில், சிங்கப்பூர் சுதந்திரமடைந்த 1965--ம் ஆண்டு முதல் 2015--ம் ஆண்டு வரையிலான தமிழ் இலக்கிய வெளியீடுகளில் பெரும்பான்மை எண்மமயமாக்கப்பட்டு, உலகில் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பொதுவில் அணுகக்கூடியதாக்கப்பட்டது. இது சமூக ஆதரவுடனும் அரசாங்கப் பங்களிப்புடனும் இடம்பெற்ற ஓர் முன்னோடித் திட்டம். தொடர்ந்து சிங்கைத் தமிழ் நாடகங்கள், சிங்கைத் தமிழ் இசை, சிங்கைத் தமிழ் நடனம் ஆகியவையும் மின் தொகுப்பாக்கப்பட்டன. தமிழ் இலக்கியம், கலைகளின் வரலாற்றுபூர்வத்தை மின்னிலக்கமாகியது சிங்கப்பூர் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுக்கு முக்கிய பங்களிப்பு.

2015--ம் ஆண்டு சிங்கப்பூரின் பொன்விழாவை முன்னிட்டு, கொள்கை ஆய்வியல் கழகம் வெளியிட்ட சிங்கப்பூரை விவரிக்கும் 50 நூல்களின் அசிரியர் குழுத் தலைவராக இருந்தார். ஆட்சி, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, உணவு, விளையாட்டு, இலக்கியம் எனப் பரந்த அளவிலான தலைப்புகளில் இந்நூல்கள் வெளிவந்தன.

2019--ம் ஆண்டில், சிங்கப்பூர் ஒரு பிரிட்டிஷ் காலனியாக நிறுவப்பட்டதன் 200-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சிங்கப்பூர் இந்திய மரபுடைமை நிலையம் வெளியிட்ட, 'Sojourners to Settlers – Tamils in Southeast Asia and Singapore’ எனும் நூலின் இணை ஆசிரியராகப் பங்களித்துள்ளார். தென்கிழக்காசியாவில் தமிழர் வரலாறு, வாழ்வு பற்றி ஆய்வு அடிப்படையில் உலகெங்கும் வாழும் துறைசார்ந்த நிபுணர்களாலும் சிங்கப்பூர் கல்வியாளர்கள் மற்றும் துறைசார்ந்தவர்களாலும் எழுதப்பட்டுள்ள முதல் தொகுப்பு நூல் இது. இரு பாகங்களாக ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட (2019) நூலிலிருந்து சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் தேவை, ஆர்வம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு 18 இயல்களைத் தேர்ந்தெடுத்து, மொழிபெயர்த்து, செம்மைசெய்து, தொகுத்து ‘ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர்’ எனும் தமிழ்ப்பதிப்பு 2021 மே மாதம் வெளியிடப்பட்டது.

2019--ம் ஆண்டில் தமிழர்களுக்கிடையே தங்கள் பண்பாட்டைப் பற்றிய புரிதலை மேலும் வலுப்படுத்துவதையும் சிங்கப்பூரிலுள்ள மற்ற பண்பாடுகளுடன் பாலம் அமைப்பதையும் இலக்காகக் கொண்டு சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையத்தைத் தொடங்கினார்.

அதே ஆண்டில், இதுவரை கண்டிராத சிங்கப்பூர்த் தமிழர் கலைக் களஞ்சியம் உருவாக்குவதற்கான திட்டத்தை முன்வைத்தார். 2022-ல் அத்திட்டம் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவோடு தொடங்கப்பட்டது. தற்போது பல்வேறு அதிகாரப் பொறுப்புகளிலிருந்தும் ஓய்வுபெற்று, மையத்தின் இயக்குநராக முழு நேரம் செயலாற்றி வருகிறார்.

விருதுகள்

  • சிங்கப்பூர் பொதுத் தொடர்புத் துறைக் கழகத்தின் (Institute of Public Relations) வாழ்நாள் சாதனையாளர் விருது
  • Fellow, Institute of Public Relations, Singapore

நூல்கள்

  • Singapore: Re-Engineering Success, edited by Arun Mahizhnan and Lee Tsao Yuan, 2001
  • Sojourners to Settlers: Tamils in Southeast Asia and Singapore, edited by Arun Mahizhnan and Nalina Gopal, 2019
  • Battle for hearts and minds: New media and elections in Singapore, edited by Tan, T. H., Mahizhnan, A., & Ang, P. H., (2016).

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:06:20 IST