உலகஜோதி: Difference between revisions
(Corrected Category:கிறிஸ்தவம் to Category:மதம்:கிறிஸ்தவம்) Tag: Reverted |
(Corrected Category:கிறிஸ்தவ இலக்கியங்கள் to Category:கிறிஸ்தவ இலக்கியம்) |
||
(One intermediate revision by the same user not shown) | |||
Line 73: | Line 73: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:கிறிஸ்தவ | [[Category:கிறிஸ்தவ இலக்கியம்]] | ||
[[Category | [[Category:கிறிஸ்தவம்]] | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] |
Latest revision as of 11:57, 17 November 2024
உலகஜோதி (2005) இறையரசன் எழுதிய கிறிஸ்தவ காப்பியம். ஏசுவை உலகின் ஒளியாகச் சித்தரிக்கிறது.
எழுத்து, வெளியீடு
உலகஜோதி காவியத்தை இறையரசன் எழுதினார். இதை அவர் 1991 முதல் எழுதிவந்தார். அவருடைய மறைவுக்குப்பின் டிசம்பர் 30, 2005-ல் இந்நூல் வெளியாகியது. ஜேசுராஜா நினைவு அறக்கட்டளை இந்நூலை வெளியிட்டது.
உள்ளடக்கம்
உலகஜோதி கிறிஸ்தவ மும்மை என சொல்லப்படும் தந்தை, மகன், தூயஆவி என்னும் மூன்று தெய்வங்களின் புகழாக மூன்று காண்டங்களாக அமைக்கப்பட்டுள்ளது. 33 படலங்கள் கொண்டது. 1530 பாடல்கள் கொண்டது
பாயிரம்
- இறையடி சரணம்
- காப்பு
- கடவுள் வாழ்த்து
- தூய ஆவியிடம் வேண்டல்
- வாழ்த்து
- உலகஜோதி
- பயன் போற்றுதல்
அகவாழ்வுக் காண்டம்
இது ஏசுகிறிஸ்துவின் பிறப்பு பற்றிய செய்திகளைச் சொல்லும் பகுதி
- படைப்புப் படலம்
- பழங்கதைப் படலம்
- பிறப்புப் படலம்
- இடையர் காண் படலம்
- அறிஞர் காண் படலம்
- எகிப்து சென்ற படலம்
- குழந்தைகள் கொலை படலம்
- காணிக்கை படலம்
- பிள்ளைப்பருவப் படலம்
- கர்த்தரை கண்டுகொண்ட படலம்
புறவாழ்வுக் காண்டம்
இது இயேசு திருமுழுக்கு பெற்றது முதல் சிலுவையேற்றம் வரையிலான செய்திகளைச் சொல்வது
- விடுதலை வேட்கைப் படலம்
- திருமுழுக்குப் படலம்
- திருத்தவப் படலம்
- தேவ அழைப்புப் படலம்
- புதுமைப்படலம்
- போதனைப் படலம்
- சிறுகதைப் படலம்
- புரட்சிப்படலம்
- சாபமிட்ட படலம்
- சந்திப்புப் படலம்
- தன்னை வெளிப்படுத்திய ஒடலம்
- திருவிருந்து படலம்
- இறுதி மன்றாட்டு படலம்
- ஒலிவமலை படலம்
- விசாரணைப் படலம்
- சித்ரவதைப் படலம்
- சிலுவைப்பாதை படலம்
- திருப்பலி படலம்
- காட்டிக்கொடுத்தவர் படலம்
புதுவாழ்வு காண்டம்
இது ஏசு உயிர்ந்த்தெழுந்ததும் திருச்சபை உருவானதும் விவரிக்கப்படும் பகுதி
- உயிர்ப்பு படலம்
- திருச்சபை படலம்
- இறையரசு படலம்
மொழி, நடை
உலக ஜோதி நேரிசை வெண்பா, கலிவிருத்தம், ஆசிரிய விருத்தம், அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், பன்னிருசீர் நெடிலடி ஆசிரிய விருத்தம், கலிப்பா, ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா போன்ற யாப்பு வகைகளில் அமைந்தது
கடவுளின் மகனார் நீரானால் கற்களை அப்பமாக்கி உண்டும்
திடமுடன் அலகை இதுகூற தேவன் தந்த பதிலிதுதான்
உணவினால் மட்டும் ஒரு மனிதன் உயிர்வாழ்கிறான் என்பதில்லை
மனதில் இறைவன் பேசுகின்ற மறைமொழியாலும் வாழ்கின்றான்
இலக்கிய இடம்
கிறிஸ்தவக் காப்பியங்களில் அண்மைக்கால மொழிநடையில் அமைந்த நூல் இது. இந்நூலில் சிலப்பதிகாரம், திருவாசகம், பாம்பாட்டி சித்தர் பாடல்கள், ராமலிங்க வள்ளலார் பாடல்கள் ஆகிய நூல்களின் தாக்கமும், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் ஆசியஜோதியின் தாக்கமும் உண்டு என்று யோ.ஞானசந்திர ஜான்சன் கருதுகிறார். இந்நூல் ஏசுவை காவியநாயகனாகவும் உலகின் ஒளியாகவும் காட்டுகிறது.
உசாத்துணை
- கிறிஸ்தவக் காப்பியங்கள் -யோ.ஞானசந்திர ஜான்சன் இணையநூலகம்
- கிறிஸ்தவக் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Dec-2022, 12:25:08 IST