under review

க்ஷேத்ரக்ஞர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "க்ஷேத்ரக்ஞர் (பொ.யு. 1620-1675) இசைவாணர். == வாழ்க்கைக் குறிப்பு == தெலுங்குப்‌ பிராமணர்‌. இவர்‌ பிறந்தது ஆந்திர மாகாணத்தில்‌ சித்தூர்‌ ஜில்லாவிலுள்ள முவ்வாபுரி என்ற சிற்றூர்‌. இவரது இ...")
 
m (Spell Check done)
 
(20 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
க்ஷேத்ரக்ஞர் (பொ.யு. 1620-1675) இசைவாணர்.  
[[File:க்ஷேத்ரக்ஞன்.jpg|thumb|க்ஷேத்ரக்ஞர்]]
க்ஷேத்ரக்ஞர் (பொ.யு. 1620-1675) இசைவாணர். தெலுங்கில் கோபாலன் (கண்ணன்) மீது காமச்சுவை கொண்ட பதங்கள் நான்காயிரத்திற்குமேல் பாடினார்.
== பெயர்க்காரணம் ==
கீதையின் அடிப்படையில் வேதாந்த மரபில் உடல் க்ஷேத்ரம் (ஆலயம்) என்றும் உடலில் உறையும் ஆத்மா க்ஷேத்ரக்ஞன்‌ (ஆலயத்தில் உறைவோன்) என்றும் சொல்லப்படுகிறது. ஞானம் முதிர்ந்த அவதூதர் உடலில்லாமல் தூய ஆத்மாவாகவே ஆனவர்கள் என்னும் பொருளில் க்ஷேத்ரக்ஞன்‌ எனப்படுவதுண்டு. இவர் அவதூதராக கருதப்பட்டமையால் இப்பெயர் வழக்கத்திற்கு வந்தது.

க்ஷேத்திரங்கள் தோறும் சுற்றிய காரணத்தினால்‌ இவருக்கு 'க்ஷேத்ரக்ஞர்‌' என்று பெயர்‌ வந்தது என்பவரும் உண்டு. க்ஷேத்ரக்ஞன்‌ என்ற சொல்லுக்கு க்ஷேத்ரங்களை அறிந்தவன்‌ என்றும் பொருள்‌ அளிக்கிறார்கள். 
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
தெலுங்குப்‌ பிராமணர்‌. இவர்‌ பிறந்தது ஆந்திர மாகாணத்தில்‌ சித்தூர்‌ ஜில்லாவிலுள்ள முவ்வாபுரி என்ற சிற்றூர்‌. இவரது இயற்பெயர்‌ வரதையன்‌ என்பது. (இன்று ஆந்திரத்தில்‌ சித்தூர்‌ ஜில்லா என்று சொல்வது அன்று தமிழ்நாட்டில்தான்‌ இருந்தது?. ஞானிகள்‌ க்ஷேத்ரக்ஞன்‌ என்று சொல்லப்படுகிறார்கள். இவர்‌ தம்முடைய பக்தி ஞானமுதிர்வினால்‌ இந்தச்‌ சரீரத்தை நன்கு அறிந்தவராய்‌ அதுகொண்டே க்ஷத்ரக்ஞர்‌ என்று பெயர்‌ பெற்றிருக்கலாம்‌.
க்ஷேத்ரக்ஞரின் இயற்பெயர்‌ வரதையன்‌. ஆந்திர மாகாணத்தில்‌ சித்தூர்‌ மாவட்டத்திலுள்ள  முவ்வாபுரி என்ற சிற்றூரில் தெலுங்கு அந்தண குடும்பத்தில் பிறந்தார்.
 
இளமையில்‌ இவருக்குத்‌ துறவியொருவர்‌ கோபால மந்திரத்தை உபதேசித்தார்‌. மந்திரத்தை நன்கு செபித்த: வரதையருக்குக்‌ கோபாலவிரகம்‌ தலைக்கேறிவிட்டது. சிருங்காரம்‌ தோய்ந்த பாடல்களால்‌ கோபாலனையே பாடிக்கொண்டு நாடெங்கும்‌ சஞ்சரிக்கலானார்‌. பெரும்பான்மையான நேரம்‌ கோபாலனையே பூதித்துக்கொண்டு அவன்‌ சந்நிதியிலேயே கிடந்தார்‌. க்ஷேத்ரக்ஞரும்‌ வேங்கடமகியும்‌ சமகாலத்திலிருந்தவர்கள்‌.

இளமையில்‌ இவருக்குத்‌ துறவியொருவர்‌ கோபால மந்திரத்தை உபதேசித்தார்‌. மந்திரத்தை நன்கு ஜெபித்த வரதையருக்குக்‌ கோபாலன் மீது விருப்பம் மிகுந்தது. சிருங்காரம்‌ மிகுந்த  பாடல்களால்‌ கோபாலனையே பாடிக்கொண்டு நாடெங்கும்‌ சஞ்சரித்தார்‌. பெரும்பான்மையான நேரம்‌ கோபாலனையே துதித்துக் கொண்டு அவன்‌ சந்நிதியிலேயே கிடந்தார்‌. க்ஷேத்ரக்ஞரும்‌ [[வேங்கடமகி]]யும்‌ சமகாலத்திலிருந்தவர்கள்‌.
== தொன்மம் ==
== தொன்மம் ==
இவர்‌ முவ்வாகோபாலன்‌ மீது பதங்கள்‌ பாடிக்கொண்டே கோயிலிலேயே தங்கியிருந்த காலத்தில்‌ அவ்வூரில்‌ மோகனா என்ற தாசி மீது மிக்க மோகங்கொண்டு தமக்கு இணங்கும்படி வற்புறுத்தினார். கோபாலன்‌ மீது சிற்றின்பம்‌ கலவாத பக்திப்‌ பாடல்கள்‌ மட்டுமே பாடிவந்தால்தான்‌ அவருக்கு இணங்குவதாகச்‌ சொன்னதால் பக்திப்‌ பாடல்களாகவே பாடினார். மூன்றுநாள்‌ இரவும்‌ பகலும்‌ அவருடைய பக்திப்பாடல்களுக்கு ஆடியவள் மூன்றுநாள்‌ அவருடைய ஆற்றல்‌ கண்டு தான்‌ அவருக்கு இணங்குவதாகச்‌ சொன்னாள்‌. அவர் அந்தப் பாடல்களின் வழி அடைந்த ஞானத்தால் தன் மோகத்தைக் கைவிட்டு அங்கிருந்து வெளிப்பட்டுப்‌ பல ஊர்களும்‌ சுற்றினார். இவ்வாறு பல க்ஷேத்திரங்களும்‌ சுற்றிய காரணத்தினால்‌ இவருக்கு 'க்ஷேத்திரக்ஞர்‌' என்று பெயர்‌ வந்தது என்பர். க்ஷேத்திரக்ஞன்‌ என்ற சொல்லுக்கு க்ஷேத்திரங்களை அறிந்தவன்‌ என்பது பொருள்‌. பகவத்கீதை பாடலொன்று க்ஷேத்திரமாகிய சரீரத்தை நன்கு உணர்ந்தவன்‌ கேஷேத்திரக்ஞன்‌ என்று சொல்லும்‌.
க்ஷேத்ரக்ஞர்‌ முவ்வா கோபாலன்‌ மீது பதங்கள்‌ பாடிக்கொண்டே கோயிலிலேயே தங்கியிருந்த காலத்தில்‌ அவ்வூரில்‌ மோகனா என்ற தாசி மீது மோகங்கொண்டு தமக்கு இணங்கும்படி வற்புறுத்தினார். கோபாலன்‌ மீது சிற்றின்பம்‌ கலவாத பக்திப்‌ பாடல்கள்‌ மட்டுமே பாடிவந்தால்தான்‌ அவருக்கு இணங்குவதாகச்‌ சொன்னதால் பக்திப்‌ பாடல்கள் மட்டுமே பாடினார். மூன்றுநாள்‌ இரவும்‌ பகலும்‌ அவருடைய பக்திப்பாடல்களுக்கு ஆடியவள் மூன்றாம் நாள் அவருடைய ஆற்றல்‌ கண்டு தான்‌ அவருக்கு இணங்குவதாகச்‌ சொன்னாள்‌. அவர் அந்தப் பாடல்களின் வழி அடைந்த ஞானத்தால் தன் மோகத்தைக் கைவிட்டு அங்கிருந்து வெளியேறி பல ஊர்களும்‌ சுற்றினார்.  
 
== இசை வாழ்க்கை ==
== இசை வாழ்க்கை ==
இவர்‌ காமச்சுவை அதிகம்‌ வெளிப்படுகின்ற தெலுங்குப்‌ பதங்களை அதிகம் இயற்றினார். 4200க்கு மேற்பட்ட பதங்கள்‌ பாடினார். பதங்களை ரக்தி இராகத்தில்‌ செய்தார். நாயகி - நாயக இலட்சணங்கள்‌ அமையுமாறு பதங்கள்‌ செய்தார்‌. இவர்‌ காலத்தில்‌ கீர்த்தனை கிருதி என்ற பெயர்கள்‌ அதிகம்‌ வரவில்லை. இவர்‌ பாடியனவெல்லாம்‌ பதங்களே. பக்திப்‌ பாடல்களும்‌ பதங்களென்றே வழங்கப்பட்டன. இவர்‌ பாடியவை அதிகம் ஆனாலும் கிடைத்துள்ளவை 382 பதங்களே. அவற்றுள்‌ 128தான்‌ இசைக்குறிப்புடன்‌ அச்சிடப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம்‌, திருவள்ளுர்‌, காஞ்சி, சிதம்பரம்‌, திருப்பதி, கதிர்காமம்‌ முதலிய தலங்களில் பாடினார்.  
க்ஷேத்ரக்ஞர்‌ காமச்சுவை அதிகம்‌ வெளிப்படுகின்ற தெலுங்குப்‌ பதங்களை அதிகம் இயற்றினார். 4200-க்கு மேற்பட்ட பதங்கள்‌ பாடினார். பதங்களை ரக்தி பாவத்தில்‌ செய்தார். நாயகி - நாயக இலட்சணங்கள்‌ அமையுமாறு பதங்கள்‌ செய்தார்‌. இவர்‌ காலத்தில்‌ கீர்த்தனை கிருதி என்ற பெயர்கள்‌ அதிகம்‌ வரவில்லை. இவர்‌ பாடியனவெல்லாம்‌ பதங்களே. பக்திப்‌ பாடல்களும்‌ பதங்களென்றே வழங்கப்பட்டன. இவர்‌ பாடியவை அதிகம் ஆனாலும் கிடைத்துள்ளவை 382 பதங்களே. அவற்றுள்‌ 128 மட்டுமே இசைக்குறிப்புடன்‌ அச்சிடப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம்‌, திருவள்ளுர்‌, காஞ்சி, சிதம்பரம்‌, திருப்பதி, கதிர்காமம்‌ முதலிய தலங்களில் பாடினார்.  
 
பிராமண சமூகத்துக்கு வெளியே இவரை யாருக்கும்‌ தெரியாது. தெலுங்கு மொழிக்கே சிற்றின்பச்சுவை  இயல்பானது. சிருங்காரம்‌ என்ற சுவை எல்லை கடந்து இவர்‌ காமக்கலைக்குள்ளேயே சஞ்சாரம்‌ செய்வார்‌. நாயக்கர்‌ அவைகளில்தான்‌ இவருக்குப்‌ பிரசித்தி அதிகம்‌, ஆதிகாலத்தில்‌ தெலுங்குநாட்டில்‌ அத்துணை பிரசாரம்‌ இல்லை. தியாகராச சுவாமிகளுடைய பக்திப்‌ பரவசம்‌ காரணமாக இந்த நாட்டில்‌ அவருடைய தெலுங்குப்‌ பாடல்களில்‌ ஈடுபாடு அதிகமாகவே பிராமண வித்துவான்கள்‌ இவருடைய காமரசப்‌ பதங்களிலும்‌ அதிகம்‌ ஈடுபடுவாராயினர்‌. இதற்கேற்றதொரு சூழ்நிலை முன்னமே நன்கு உருவாகியிருந்தது.
 
முத்துத்தாண்டவருடைய தெய்வப்‌ பதங்கள்‌ தமிழ்நாடெங்கும்‌ கணிகையர்‌ அபிநயத்தால்‌ புகழ்பெற்றிருந்தன. அந்த இடத்தில்‌, கணிகையர்‌ கையாளும்படி இவருடைய சிற்றின்பச்சுவை மலிந்த பதங்களைப்‌ புகுத்துவது பிராமண வித்துவான்‌௧ளுக்கு எளிதாயிருந்தது. வெளியே செல்லாமலே இவர்களுக்கு உள்ளுக்குள்ளிருந்த ஒரே நோக்கம்‌ மேளக்காரரை ஒடுக்கிவிடுவது. இதற்கு க்ஷேத்ரக்ஞருடைய பதங்கள்‌ சிறந்த கருவியாயமைந்தன. காலம்‌ தியாகராசருக்கு முற்பட்ட காலமல்ல, பிற்பட்டகாலம்‌. நாயக்கர்‌ அவைகளில்‌ தெலுங்குக்கு ஏற்பட்டிருந்த கொஞ்சப்‌ பிரசாரமும்‌. இவர்களுக்கு அனுகூலமாயிருந்தது. பிராமணர்போல மேளக்காரருக்குத்‌ தெலுங்கு வராது. இத்தனைத்‌ தன்மைகளும்‌ மேளக்காரரை இசையுலகில்‌ தாழ்த்தவும்‌ அந்த ஸ்தானத்தில்‌ பிராமணரை உயர்த்தவும்‌ காரணமாய்‌
இருந்தன. மேளக்காரரும்‌, வித்துவான்‌௧ள்‌ என்ற கெளரவம்‌ இருந்தபோதிலும்கூட, சமூகத்தில்‌ தாழ்ந்த அந்தஸ்துதான்‌ அளிக்கப்பட்டிருந்தார்கள்‌. இவர்களும்‌ தங்கள்‌ ஓப்பற்ற இசையின்‌ உன்னத ஸ்தானத்தை மறந்துவிட்டு, சமூகத்தில்‌ பிராமணருக்கு உயர்ந்த ஸ்தானம்‌ இருந்தபடியால்‌, தாங்களும்‌ இந்தப்‌ பிராமண சுவாமிகளுக்கு அடிமைகளாகவே நடந்து கொண்டார்கள்‌. இதனால்‌ விளைந்ததே உத்தமமான பாவசங்கிதத்தின்‌ வீழ்ச்சி. அதனுடைய இடத்தில்‌ வெறும்‌ வறட்டுச்‌ சுரசங்கீதம்‌ பிரதிட்டை செய்யப்பட்டது. இந்தப்‌ பிரதிட்டையில்‌ க்ஷேத்ரக்ஞர்‌ தங்களுக்கும்‌ சிறப்‌பிடம்‌ உண்டு.
 
===== இசைப்பயணம் =====
===== இசைப்பயணம் =====
* மதுரை: சென்று திருமலை நாயக்கர்‌ (1623 - 6509) ஆதரவு பெற்று அங்கே 1000 பதங்கள்‌ பாடினார்.
* மதுரை: திருமலை நாயக்கர்‌ (1623 - 6509) ஆதரவு பெற்று அங்கே 1000 பதங்கள்‌ பாடினார்.
* தஞ்சை: தஞ்சையை ஆண்ட விஜயாங்க சொக்கநாத நாயக்கர் (பொ.யு. 1654 - 1673) அவைக்கு வந்தார்‌. நாயக்கர்‌ தெலுங்கரானமையாலும்‌ சிற்றின்பப்‌ பதங்களை அதிகம்‌ விரும்புவரானமையாலும்‌ இவருக்கு அரசவையில்‌ மிக்க சிறப்பு இருந்தது. அவைப்புலவர்கள்‌ இவர்‌ மீது மிக்க பொறாமை கொண்டார்கள்‌. அதை இவர்‌ அறிந்து வெளியேபோக முடிவு செய்தவராய்‌, ”பரமனோச தினமு வடிஇதி” என்று புதிதாய்‌ ஒரு பதம்பாடி, “இதன்‌ மூன்றாவது சரணத்தை நீங்களே பூர்த்தி செய்து வையுங்கள்‌, நான்‌ காசி யாத்திரை போய்வருகிறேன்‌” என்று சொல்லி புறப்பட்டுப்‌ போனார். பல மாதங்கள்‌ கழித்துத்‌ திரும்பிய போது யாரும்‌ பாடலை முடிக்க முடியாமல்‌ இவரிடம்‌ மன்னிப்புக்‌ கேட்டபின் இவரே பாடினார்.
* தஞ்சை: தஞ்சையை ஆண்ட விஜயாங்க சொக்கநாத நாயக்கர் (பொ.யு. 1654 - 1673) அவைக்கு வந்தார்‌. நாயக்கர்‌ தெலுங்கர் ஆனதனாலும்‌ சிற்றின்பப்‌ பதங்களை அதிகம்‌ விரும்புவர் ஆதனாலும்‌ இவருக்கு அரசவையில்‌ மிக்க சிறப்பு இருந்தது. அவைப்புலவர்கள்‌ இவர்‌ மீது மிக்க பொறாமை கொண்டார்கள்‌. அதை இவர்‌ அறிந்து வெளியேபோக முடிவு செய்தவராய்‌, "பரமனோச தினமு வடிஇதி" என்று புதிதாய்‌ ஒரு பதம்பாடி, "இதன்‌ மூன்றாவது சரணத்தை நீங்களே பூர்த்தி செய்து வையுங்கள்‌, நான்‌ காசி யாத்திரை போய்வருகிறேன்‌" என்று சொல்லி புறப்பட்டுப்‌ போனார். பல மாதங்கள்‌ கழித்துத்‌ திரும்பிய போது யாரும்‌ பாடலை முடிக்க முடியாமல்‌ இவரிடம்‌ மன்னிப்புக்‌ கேட்டபின் இவரே பாடினார்.
* விஜயரங்கன்‌ இறந்தபின்‌ இவர்‌ கோல்கொண்டா சென்று அங்கிருந்த பாதுஷா மீது 2000 பதங்கள்‌ பாடினார். கோல்கொண்டா சமஸ்தானத்தில்‌ நடைபெற்ற போட்டியில் நாற்பதே நாட்களில்‌ 1500 பதங்கள்‌ பாடி வெற்றி பெற்றார்.
* விஜயரங்கன்‌ இறந்தபின்‌ இவர்‌ கோல்கொண்டா சென்று அங்கிருந்த பாதுஷா மீது 2000 பதங்கள்‌ பாடினார். கோல்கொண்ட சமஸ்தானத்தில்‌ நடைபெற்ற போட்டியில் நாற்பதே நாளில்‌ 1500 பதங்கள்‌  
* தென்னாடு சுற்றிய காலத்தில்‌ காஞ்சி வரதராஜப்‌ பெருமாளிடம்‌ மிக்க ஈடுபாடு கொண்டு பாடினார். சிறந்த கவிஞரும்‌ இலக்கண வித்துவானுமாகவும்‌ இருந்தார்.
பாடி வெற்றி பெற்றார்.  
 
* தென்னாடு சுற்றிய காலத்தில்‌ காஞ்சி வரதராஜப்‌ பெருமாளிடம்‌ மிக்க ஈடுபாடு கொண்டு பாடினார். இவர்‌ வெறும்‌ பாடகர்‌ மட்டுமல்லாமல்‌ சிறந்த கவிஞரும்‌ இலக்கண வித்துவானுமாகவும்‌ இருந்தார்.  
 
== பாடல் நடை ==
== பாடல் நடை ==
* இவர்‌ பாடிய முதல்பதம்‌ ஆனந்தபைரவியில்‌, “ஸ்ரீபதி சதுவாரிஇ' என்பது. பின்னும்‌ சிறப்புள்ள சில பதங்கள்‌.  
* இவர்‌ பாடிய முதல்பதம்‌ ஆனந்தபைரவியில்‌, "ஸ்ரீபதி சதுவாரி' என்பது. பின்னும்‌ சிறப்புள்ள சில பதங்கள்‌.
<poem>
“எவ்வடே னு பாமா: - சங்கராபரணம்‌; “பால வினவே'-
காம்போதி; 'ஏமோ தெலியது' - சாவேரி; “அலிகிதே' - உசேனி என்பன.
</poem>
 
== சிறப்புகள் ==
== சிறப்புகள் ==
* இவருடைய பதங்களில்‌ ராகத்தின்‌ வடிவம்‌ தொடக்கத்திலேயே தெளிவாகப்‌ புலப்படும்‌. சாதாரணமாக, ராக பாவத்தைத்‌ தெரிந்துகொள்ள விரும்புபவர்‌ அந்தந்த ராகத்தில்‌ இவர்‌ செய்துள்ள பதங்களைக்‌ கற்பது பயனுடையது என்று சொல்வர்‌.  

Line 39: Line 26:
* இவர்‌ காலத்தில்‌ சில புதிய இராகங்கள்‌ பழைய இராகங்களை ஓடுக்கிவிட்டன எடுத்துக்காட்டுக்கள்‌: நீலாம்பரி - சாமந்தா; கானடா - பலமஞ்சரி; பிலகரி - தேசாட்சி. இன்று சில இராகங்களின்‌ முழுவடிவத்தை இவருடைய பதங்களில்‌ மட்டுமே காணமுடிகிறது என்று இசைவாணர்‌ கூறுவர்‌. உதாரணம்‌: கண்டா, நவரோஸ்‌, சுத்தகாபி, சைந்தவி, சஹானா, பியாகடை, கல்யாணி. இவருடைய சாகித்தியங்களில்‌ இசைத்தன்மை நிரம்பியிருக்கும்‌.  

* பதங்கள்‌ விளம்ப காலத்துக்குரியனவாதலின்‌ அபிநயத்துக்குப்‌ பெரிதும்‌ உகந்தன என்பர்‌.  
* பதங்கள்‌ விளம்ப காலத்துக்குரியனவாதலின்‌ அபிநயத்துக்குப்‌ பெரிதும்‌ உகந்தன என்பர்‌.  
* சங்கீத சம்பிரதாயப்‌ பிரதரிசினீ எழுதிய சுப்பராம தீட்சிதர்‌, “நாயகி நாயக பாவத்தை நன்கு விளக்கி இசைத்தன்மை குன்றாமல்‌ பாடுவதில்‌ இவருக்கு இணையாக முன்னும்‌ யாரும்‌ இருந்ததில்லை; பின்னும்‌ யாரும்‌ வரப்போவதில்லை” என்று எழுதியிருக்கிறார்‌.  
* சங்கீத சம்பிரதாயப்‌ பிரதர்சினீ எழுதிய சுப்பராம தீட்சிதர்‌, "நாயகி நாயக பாவத்தை நன்கு விளக்கி இசைத்தன்மை குன்றாமல்‌ பாடுவதில்‌ இவருக்கு இணையாக முன்னும்‌ யாரும்‌ இருந்ததில்லை; பின்னும்‌ யாரும்‌ வரப்போவதில்லை" என்று எழுதியிருக்கிறார்‌.
 
== மறைவு ==
* க்ஷேத்ரக்ஞர் தன் ஐம்பத்தி ஐந்தாவது வயதில் 1675-ம் ஆண்டு காலமானார்.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* * தமிழ்‌ இசை இலக்கிய வரலாறு (தொகுதி - 1) - அசிரியர்‌ மு. அருணாசலம்‌: பதிப்பாசிரியர்‌ உல. பாலசுப்பிரமணியன்‌ - அக்டோபர்‌ 2009.
* தமிழ்‌ இசை இலக்கிய வரலாறு (தொகுதி - 1) - ஆசிரியர்‌ மு. அருணாசலம்‌: பதிப்பாசிரியர்‌ உல. பாலசுப்பிரமணியன்‌ - அக்டோபர்‌ 2009.
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 18:07, 29 September 2023

க்ஷேத்ரக்ஞர்

க்ஷேத்ரக்ஞர் (பொ.யு. 1620-1675) இசைவாணர். தெலுங்கில் கோபாலன் (கண்ணன்) மீது காமச்சுவை கொண்ட பதங்கள் நான்காயிரத்திற்குமேல் பாடினார்.

பெயர்க்காரணம்

கீதையின் அடிப்படையில் வேதாந்த மரபில் உடல் க்ஷேத்ரம் (ஆலயம்) என்றும் உடலில் உறையும் ஆத்மா க்ஷேத்ரக்ஞன்‌ (ஆலயத்தில் உறைவோன்) என்றும் சொல்லப்படுகிறது. ஞானம் முதிர்ந்த அவதூதர் உடலில்லாமல் தூய ஆத்மாவாகவே ஆனவர்கள் என்னும் பொருளில் க்ஷேத்ரக்ஞன்‌ எனப்படுவதுண்டு. இவர் அவதூதராக கருதப்பட்டமையால் இப்பெயர் வழக்கத்திற்கு வந்தது.

க்ஷேத்திரங்கள் தோறும் சுற்றிய காரணத்தினால்‌ இவருக்கு 'க்ஷேத்ரக்ஞர்‌' என்று பெயர்‌ வந்தது என்பவரும் உண்டு. க்ஷேத்ரக்ஞன்‌ என்ற சொல்லுக்கு க்ஷேத்ரங்களை அறிந்தவன்‌ என்றும் பொருள்‌ அளிக்கிறார்கள்.

வாழ்க்கைக் குறிப்பு

க்ஷேத்ரக்ஞரின் இயற்பெயர்‌ வரதையன்‌. ஆந்திர மாகாணத்தில்‌ சித்தூர்‌ மாவட்டத்திலுள்ள முவ்வாபுரி என்ற சிற்றூரில் தெலுங்கு அந்தண குடும்பத்தில் பிறந்தார்.

இளமையில்‌ இவருக்குத்‌ துறவியொருவர்‌ கோபால மந்திரத்தை உபதேசித்தார்‌. மந்திரத்தை நன்கு ஜெபித்த வரதையருக்குக்‌ கோபாலன் மீது விருப்பம் மிகுந்தது. சிருங்காரம்‌ மிகுந்த பாடல்களால்‌ கோபாலனையே பாடிக்கொண்டு நாடெங்கும்‌ சஞ்சரித்தார்‌. பெரும்பான்மையான நேரம்‌ கோபாலனையே துதித்துக் கொண்டு அவன்‌ சந்நிதியிலேயே கிடந்தார்‌. க்ஷேத்ரக்ஞரும்‌ வேங்கடமகியும்‌ சமகாலத்திலிருந்தவர்கள்‌.

தொன்மம்

க்ஷேத்ரக்ஞர்‌ முவ்வா கோபாலன்‌ மீது பதங்கள்‌ பாடிக்கொண்டே கோயிலிலேயே தங்கியிருந்த காலத்தில்‌ அவ்வூரில்‌ மோகனா என்ற தாசி மீது மோகங்கொண்டு தமக்கு இணங்கும்படி வற்புறுத்தினார். கோபாலன்‌ மீது சிற்றின்பம்‌ கலவாத பக்திப்‌ பாடல்கள்‌ மட்டுமே பாடிவந்தால்தான்‌ அவருக்கு இணங்குவதாகச்‌ சொன்னதால் பக்திப்‌ பாடல்கள் மட்டுமே பாடினார். மூன்றுநாள்‌ இரவும்‌ பகலும்‌ அவருடைய பக்திப்பாடல்களுக்கு ஆடியவள் மூன்றாம் நாள் அவருடைய ஆற்றல்‌ கண்டு தான்‌ அவருக்கு இணங்குவதாகச்‌ சொன்னாள்‌. அவர் அந்தப் பாடல்களின் வழி அடைந்த ஞானத்தால் தன் மோகத்தைக் கைவிட்டு அங்கிருந்து வெளியேறி பல ஊர்களும்‌ சுற்றினார்.

இசை வாழ்க்கை

க்ஷேத்ரக்ஞர்‌ காமச்சுவை அதிகம்‌ வெளிப்படுகின்ற தெலுங்குப்‌ பதங்களை அதிகம் இயற்றினார். 4200-க்கு மேற்பட்ட பதங்கள்‌ பாடினார். பதங்களை ரக்தி பாவத்தில்‌ செய்தார். நாயகி - நாயக இலட்சணங்கள்‌ அமையுமாறு பதங்கள்‌ செய்தார்‌. இவர்‌ காலத்தில்‌ கீர்த்தனை கிருதி என்ற பெயர்கள்‌ அதிகம்‌ வரவில்லை. இவர்‌ பாடியனவெல்லாம்‌ பதங்களே. பக்திப்‌ பாடல்களும்‌ பதங்களென்றே வழங்கப்பட்டன. இவர்‌ பாடியவை அதிகம் ஆனாலும் கிடைத்துள்ளவை 382 பதங்களே. அவற்றுள்‌ 128 மட்டுமே இசைக்குறிப்புடன்‌ அச்சிடப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம்‌, திருவள்ளுர்‌, காஞ்சி, சிதம்பரம்‌, திருப்பதி, கதிர்காமம்‌ முதலிய தலங்களில் பாடினார்.

இசைப்பயணம்
  • மதுரை: திருமலை நாயக்கர்‌ (1623 - 6509) ஆதரவு பெற்று அங்கே 1000 பதங்கள்‌ பாடினார்.
  • தஞ்சை: தஞ்சையை ஆண்ட விஜயாங்க சொக்கநாத நாயக்கர் (பொ.யு. 1654 - 1673) அவைக்கு வந்தார்‌. நாயக்கர்‌ தெலுங்கர் ஆனதனாலும்‌ சிற்றின்பப்‌ பதங்களை அதிகம்‌ விரும்புவர் ஆதனாலும்‌ இவருக்கு அரசவையில்‌ மிக்க சிறப்பு இருந்தது. அவைப்புலவர்கள்‌ இவர்‌ மீது மிக்க பொறாமை கொண்டார்கள்‌. அதை இவர்‌ அறிந்து வெளியேபோக முடிவு செய்தவராய்‌, "பரமனோச தினமு வடிஇதி" என்று புதிதாய்‌ ஒரு பதம்பாடி, "இதன்‌ மூன்றாவது சரணத்தை நீங்களே பூர்த்தி செய்து வையுங்கள்‌, நான்‌ காசி யாத்திரை போய்வருகிறேன்‌" என்று சொல்லி புறப்பட்டுப்‌ போனார். பல மாதங்கள்‌ கழித்துத்‌ திரும்பிய போது யாரும்‌ பாடலை முடிக்க முடியாமல்‌ இவரிடம்‌ மன்னிப்புக்‌ கேட்டபின் இவரே பாடினார்.
  • விஜயரங்கன்‌ இறந்தபின்‌ இவர்‌ கோல்கொண்டா சென்று அங்கிருந்த பாதுஷா மீது 2000 பதங்கள்‌ பாடினார். கோல்கொண்டா சமஸ்தானத்தில்‌ நடைபெற்ற போட்டியில் நாற்பதே நாட்களில்‌ 1500 பதங்கள்‌ பாடி வெற்றி பெற்றார்.
  • தென்னாடு சுற்றிய காலத்தில்‌ காஞ்சி வரதராஜப்‌ பெருமாளிடம்‌ மிக்க ஈடுபாடு கொண்டு பாடினார். சிறந்த கவிஞரும்‌ இலக்கண வித்துவானுமாகவும்‌ இருந்தார்.

பாடல் நடை

  • இவர்‌ பாடிய முதல்பதம்‌ ஆனந்தபைரவியில்‌, "ஸ்ரீபதி சதுவாரி' என்பது. பின்னும்‌ சிறப்புள்ள சில பதங்கள்‌.

சிறப்புகள்

  • இவருடைய பதங்களில்‌ ராகத்தின்‌ வடிவம்‌ தொடக்கத்திலேயே தெளிவாகப்‌ புலப்படும்‌. சாதாரணமாக, ராக பாவத்தைத்‌ தெரிந்துகொள்ள விரும்புபவர்‌ அந்தந்த ராகத்தில்‌ இவர்‌ செய்துள்ள பதங்களைக்‌ கற்பது பயனுடையது என்று சொல்வர்‌.
  • இவர்‌ பாடியுள்ள சில அபூர்வ இராகங்கள்‌ ஆகிரி, கண்டா, கர்நாடக காபி, கெளரி, சாமந்தா, சைந்தவி, நவரோஸ்‌ முதலியன.
  • இவருடைய பதங்கள்‌ யாவும்‌ விளம்ப காலம்‌. ஆகவே அபிநயத்துக்குப்‌ பெரிதும்‌ பொருத்தமானவை. இவற்றின்‌ உல்லாசமான நடை சிறந்த பாவ ராக தாள நிபுணர்களிடம்‌ மட்டுமே சிறப்பாய்ப்‌ பிரகாசிக்கும்‌.
  • இவர்‌ காலத்தில்‌ சில புதிய இராகங்கள்‌ பழைய இராகங்களை ஓடுக்கிவிட்டன எடுத்துக்காட்டுக்கள்‌: நீலாம்பரி - சாமந்தா; கானடா - பலமஞ்சரி; பிலகரி - தேசாட்சி. இன்று சில இராகங்களின்‌ முழுவடிவத்தை இவருடைய பதங்களில்‌ மட்டுமே காணமுடிகிறது என்று இசைவாணர்‌ கூறுவர்‌. உதாரணம்‌: கண்டா, நவரோஸ்‌, சுத்தகாபி, சைந்தவி, சஹானா, பியாகடை, கல்யாணி. இவருடைய சாகித்தியங்களில்‌ இசைத்தன்மை நிரம்பியிருக்கும்‌.
  • பதங்கள்‌ விளம்ப காலத்துக்குரியனவாதலின்‌ அபிநயத்துக்குப்‌ பெரிதும்‌ உகந்தன என்பர்‌.
  • சங்கீத சம்பிரதாயப்‌ பிரதர்சினீ எழுதிய சுப்பராம தீட்சிதர்‌, "நாயகி நாயக பாவத்தை நன்கு விளக்கி இசைத்தன்மை குன்றாமல்‌ பாடுவதில்‌ இவருக்கு இணையாக முன்னும்‌ யாரும்‌ இருந்ததில்லை; பின்னும்‌ யாரும்‌ வரப்போவதில்லை" என்று எழுதியிருக்கிறார்‌.

மறைவு

  • க்ஷேத்ரக்ஞர் தன் ஐம்பத்தி ஐந்தாவது வயதில் 1675-ம் ஆண்டு காலமானார்.

உசாத்துணை

  • தமிழ்‌ இசை இலக்கிய வரலாறு (தொகுதி - 1) - ஆசிரியர்‌ மு. அருணாசலம்‌: பதிப்பாசிரியர்‌ உல. பாலசுப்பிரமணியன்‌ - அக்டோபர்‌ 2009.

✅Finalised Page