காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்: Difference between revisions
(Added links to Disambiguation page) |
(Corrected Category:புலவர்கள் to Category:புலவர்) |
||
(One intermediate revision by the same user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|கண்ணனார்|[[கண்ணனார் (பெயர் பட்டியல்)]]}} | {{OtherUses-ta|TitleSection=கண்ணனார்|DisambPageTitle=[[கண்ணனார் (பெயர் பட்டியல்)]]}} | ||
{{Read English|Name of target article=Katturkilar Makanar Kannanar|Title of target article=Katturkilar Makanar Kannanar}} | {{Read English|Name of target article=Katturkilar Makanar Kannanar|Title of target article=Katturkilar Makanar Kannanar}} | ||
Line 42: | Line 42: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category: | [[Category:புலவர்]] |
Latest revision as of 12:10, 17 November 2024
- கண்ணனார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கண்ணனார் (பெயர் பட்டியல்)
To read the article in English: Katturkilar Makanar Kannanar.
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூற்றில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
சேரநாட்டில் காட்டூர் என்ற ஊரில் பிறந்தார். இது தற்போதைய கரூர் மாவட்டத்தில் உள்ளது.
இலக்கிய வாழ்க்கை
தலைவன் பிரிவால் கவலை கொள்ளும் தலைவியைத் தோழி பொறுத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தும் பாலைத்திணைப் பாடல் அகநானூற்றில்(85) இடம்பெறுகிறது.
அறியவரும் செய்திகள்
- திருவேங்கட மலையைச் சூழ்ந்த நாட்டை 'வென்வேல் திரையன்' ஆண்டான்.
- அவன் நாட்டில் யானைகள் மிகுதி.
- தமிழ்மக்கள் இவனது நாட்டைக் கடந்து பொருள் தேடச் சென்றனர்.
- திரையன் வேற்படை உடையவன்.
- இந்தத் திரையன் தொண்டைமான் இளந்திரையனுக்கு முன் ஆண்டவன்.
பாடல் நடை
- அகநானூறு: 85
'நல் நுதல் பசப்பவும், பெருந் தோள் நெகிழவும்,
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்,
இன்னம் ஆகவும், இங்கு நத் துறந்தோர்
அறவர்அல்லர் அவர்' எனப் பல புலந்து,
ஆழல் வாழி, தோழி! 'சாரல்,
ஈன்று நாள் உலந்த மெல் நடை மடப் பிடி,
கன்று, பசி களைஇய, பைங் கண் யானை
முற்றா மூங்கில் முளை தருபு. ஊட்டும்
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை,
நல் நாள் பூத்த நாகு இள வேங்கை 10
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை
நனைப் பசுங் குருந்தின் நாறு சினை இருந்து,
துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார்,
வருதும், யாம்' எனத் தேற்றிய
பருவம்காண் அது; பாயின்றால் மழையே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:31:57 IST