under review

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected Category:புலவர்கள் to Category:புலவர்)
 
(11 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை சங்க காலப் புலவர், சேர அரசர். அகநானூற்றிலும் (148) புறநானூற்றிலும்(245) அவர் பாடிய பாடல் ஒன்று உள்ளது.
{{OtherUses-ta|TitleSection=சேரமான்|DisambPageTitle=[[சேரமான் (பெயர் பட்டியல்)]]}}
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை சங்க காலப் புலவர், சேர அரசர். அகநானூற்றிலும் (148) புறநானூற்றிலும்(245) அவர் பாடிய பாடல் ஒன்று உள்ளது.  
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
சேர மரபைச் சேர்ந்த அரசர். தமிழரசர்கள் இறந்த இடங்களைத் தங்கள் பெயர்களோடு இணைத்து வழங்கும் வழக்கம் இருந்தது. சேர நாட்டில் கோட்டம்பலத்தில் வாழ்ந்து உயிர்விட்டதால் சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என்றழைக்கப்பட்டார். தற்போது கோட்டம்பலம் அம்பலப்புழை என்றழைக்கப்படுகிறது. சில இடங்களில் இவர் பெயர் “கூத்தம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை” என்றும் உள்ளது. சேரநாடு கூத்துகளுக்குப் பெயர்பெற்றதால் இப்பெயரும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ”கோதை” என்பது சேர அரசர்களைக் குறிக்கும் சொல் என்றும் கூறுவர்.  
சேர மரபைச் சேர்ந்த அரசர். தமிழரசர்கள் இறந்த இடங்களைத் தங்கள் பெயர்களோடு இணைத்து வழங்கும் வழக்கம் இருந்தது. சேர நாட்டில் கோட்டம்பலத்தில் வாழ்ந்து உயிர்விட்டதால் சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என்றழைக்கப்பட்டார். தற்போது கோட்டம்பலம் அம்பலப்புழை என்றழைக்கப்படுகிறது. சில இடங்களில் இவர் பெயர் "கூத்தம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை" என்றும் உள்ளது. சேரநாடு கூத்துகளுக்குப் பெயர்பெற்றதால் இப்பெயரும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. "கோதை" என்பது சேர அரசர்களைக் குறிக்கும் சொல் என்றும் கூறுவர்.  
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
அகநானூற்றில் உள்ள(148-வது பாடல்) ஒரு பாடலும், புறநானூற்றில் உள்ள (245-வது பாடல்) ஒரு பாடலும் இவர் எழுதியுள்ளார். மாக்கோதையின் மனைவி இறந்தபோது ஈமத்தீயில் அவள் எரிவது கண்டு தான் உயிர்விடவில்லையே என்று வருந்திப்பாடும் பாடலாக புறநானூற்றின் 245-வது பாடல் அமைகிறது.  

== பாடல் நடை ==
== பாடல் நடை ==
புறநானூறு 245
புறநானூறு 245
<poem>
<poem>
யாங்குப்பெரிது ஆயினும், நோய்அளவு எனைத்தே
யாங்குப்பெரிது ஆயினும், நோய்அளவு எனைத்தே
Line 16: Line 18:
</poem>
</poem>
அகநானூறு 148
அகநானூறு 148
<poem>
<poem>
கொடைக்கடன் என்ற கோடா நெஞ்சின்
கொடைக்கடன் என்ற கோடா நெஞ்சின்
Line 26: Line 29:
</poem>
</poem>
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/ புலவர் கா. கோவிந்தன் – திரு நெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-3]
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/ புலவர் கா. கோவிந்தன் – திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-3]
{{Standardised}}
 
{{Finalised}}
 
{{Fndt|03-Dec-2022, 08:36:55 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்]]

Latest revision as of 13:47, 17 November 2024

சேரமான் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சேரமான் (பெயர் பட்டியல்)

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை சங்க காலப் புலவர், சேர அரசர். அகநானூற்றிலும் (148) புறநானூற்றிலும்(245) அவர் பாடிய பாடல் ஒன்று உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

சேர மரபைச் சேர்ந்த அரசர். தமிழரசர்கள் இறந்த இடங்களைத் தங்கள் பெயர்களோடு இணைத்து வழங்கும் வழக்கம் இருந்தது. சேர நாட்டில் கோட்டம்பலத்தில் வாழ்ந்து உயிர்விட்டதால் சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என்றழைக்கப்பட்டார். தற்போது கோட்டம்பலம் அம்பலப்புழை என்றழைக்கப்படுகிறது. சில இடங்களில் இவர் பெயர் "கூத்தம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை" என்றும் உள்ளது. சேரநாடு கூத்துகளுக்குப் பெயர்பெற்றதால் இப்பெயரும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. "கோதை" என்பது சேர அரசர்களைக் குறிக்கும் சொல் என்றும் கூறுவர்.

இலக்கிய வாழ்க்கை

அகநானூற்றில் உள்ள(148-வது பாடல்) ஒரு பாடலும், புறநானூற்றில் உள்ள (245-வது பாடல்) ஒரு பாடலும் இவர் எழுதியுள்ளார். மாக்கோதையின் மனைவி இறந்தபோது ஈமத்தீயில் அவள் எரிவது கண்டு தான் உயிர்விடவில்லையே என்று வருந்திப்பாடும் பாடலாக புறநானூற்றின் 245-வது பாடல் அமைகிறது.

பாடல் நடை

புறநானூறு 245

யாங்குப்பெரிது ஆயினும், நோய்அளவு எனைத்தே
உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல் என்இதன் பண்பே.

அகநானூறு 148

கொடைக்கடன் என்ற கோடா நெஞ்சின்
உதியன் அட்டில்போல ஒலியெழுந்து
அருவியார்க்கும் பெருவரைச் சிலம்பின்
ஈன்றணி இரும்பிடி தழீஇக் களிறுதன்
தூங்கு நடைக் குழவி துயில்புறங் காப்ப
ஒடுங்கலைப் புலம்பப் போகி கடுங்கண்
வாள்வரி வயப்புலி கண்முறை உரற

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Dec-2022, 08:36:55 IST