அசன்பே சரித்திரம்: Difference between revisions
m (Spell check) |
No edit summary |
||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 29: | Line 29: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] | ||
[[Category: | [[Category:இலங்கை இலக்கியம்]] | ||
[[Category:19ம் நூற்றாண்டு]] | [[Category:19ம் நூற்றாண்டு]] | ||
[[Category:வரலாற்று கற்பனை | [[Category:வரலாற்று கற்பனை புனைவு]] | ||
[[Category: | [[Category:நாவல்]] |
Latest revision as of 21:54, 18 November 2024
To read the article in English: Asanbey Sarithiram (novel).
அசன்பே சரித்திரம் (1885) சித்திலெப்பை மரைக்காயர் எழுதிய நாவல். இந்நாவல் தமிழில் எழுதப்பட்ட முதல் வரலாற்று கற்பனை நாவல். தமிழில் எழுதப்பட்ட இரண்டாவது நாவல் என்றும் இதை கருதலாம் என ஆய்வாளர் சிலர் சொல்வதுண்டு. இந்நாவல் அரேபியக்கதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. இது நாவல் என்னும் தலைப்புடன் வெளிவராமல் மதநூலாக வெளிவந்தமையால் நாவலாக ஆய்வாளர்களால் கருத்தில் கொள்ளப்படவில்லை.
எழுத்து, பிரசுரம்
அசன்பே சரித்திரம் இலங்கையைச் சேர்ந்த சித்தி லெப்பை (லெவ்வை) மரைக்காயர் என்னும் முகம்மது காசிம் மரைக்காயர் எழுதிய நாவல். 1885-ல் இந்நாவலை எழுதி வெளியிட்டார். 1890-ல் மறுபதிப்பு வெளிவந்தது. 1974-ல் அடுத்த பதிப்பு வெளியாகியது.
கதைச்சுருக்கம்
இந்நாவல் 170 பக்கங்கள் கொண்டது. அத்தியாயப் பகுப்புகள் இல்லை. எகிப்து நாட்டின் கெய்ரோவில் இந்தக்கதை தொடங்குகிறது. இந்தியாவில் பம்பாய், சூரத், கல்கத்தா முதலிய நகரங்களிலும் அலக்ஸாண்ட்ரியா, பெய்ரூத் போன்ற ஊர்களிலும் கதை நிகழ்கிறது. அசன் என்பவன் கெய்ரோவில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்து கொடியவர்களால் கடத்தப்படுகிறான். அவன் பல்வேறு ஊர்களில் கல்வி கற்று, பல தொழில்கள் செய்து, இறுதியில் கெய்ரோவில் தன் பெற்றோரிடம் சேர்கிறான். தன் வீரச்செயல்களுக்காக பே (Bey) என்னும் பட்டத்தை துருக்கிய கலிஃப் திமிஷ்க் பாஷாவிடமிருந்து அசன் பெறுகிறான். ஆகவே அவன் அசன் பே என அழைக்கப்படுகிறான். பாலின் என்னும் வெள்ளைக்காரப் பெண்ணை மணந்து அவளை முஸ்லீமாக ஆக்குகிறான். இந்நாவலை ஓர் உண்மை வரலாறு போல தேதிகள் மற்றும் அடிக்குறிப்புகளுடன் எழுதியிருக்கிறார் ஆசிரியர். இது அவர் அறிந்த உண்மை வரலாற்றின் ஒரு பதிவுதான் என்பவர்களும் உண்டு.
நடை
இந்நாவல் இவ்வாறு தொடங்குகிறது, ’’கல்விச் செல்வங்களிலேயே மிகச் சிறந்த விளங்கா நின்ற மிசுறு தேசத்தின் இராஜதானியாகிய காயிரென்னும் பட்டணத்திலேயே செய்யிது பாஷா என்பவர் இராச்சிய பரிபாலனம் செய்யும் காலத்தில், அந்த பாஷாவினுடைய மாளிகைக்குச் சமீபமான ஓர் அலங்காரமுள்ள மாளிகையில் யூசுபுபாஷா என்பவரொருவர் இருந்தார். அவர் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர். மஹா பாக்கியவந்தர். கதீவுடைய மந்திரிமார்களிலொருவர். மதம் பிடித்த யானையை நடத்தும் பாகன் அதை நயபயத்தினால நல்வழி நடத்துவதுபோல அரசன் கோபித்தாலும் அவனை விட்டகலாது அப்போது வேண்டும் யுக்தி புத்திகளை யிடித்திடித்துப் புகட்டும் தொழிலை விடாமலிருப்பவர். நேரான காரியங்களில் சோராத துணிவுள்ளவர். பின்னே வருங்கருமங்களை முன்னே அறிந்து தெரிவிக்கும் மூதறிவுடையவர். காலமும் இடமும் ஏற்ற கருவியும் தெரிந்தவர். பிரஜைகளெல்லாம் தமது திறமை முதலிய நற்குணங்களை புகழப் பெற்றவர். ஆங்கிலேயர், பிரான்ஸியர் முதலிய ஐரோப்பியர்களெல்லாம் தமது விவேக நுட்பத்தை வியந்து பாராட்டும்படி யதிகாரஞ் செலுத்துபவர்.’’
விவாதம்
அசன்பே சரிதிரம் தமிழின் முதல் சரித்திர நாவல் என சொல்லப்பட்டது. ஆனால் ஆய்வாளர்கள் அந்நூல் அரேபிய நாவல் ஒன்றின் தழுவல் என்பதனால் அந்த இடத்தை இதற்கு அளிக்கவில்லை. தி. த. சரவணமுத்துப் பிள்ளை எழுதிய மோகனாங்கிதான் தமிழின் முதல் சரித்திர நாவல் என்றனர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழக இஸ்லாமியத் தமிழ்த் துறைத் தலைவர் பீ. மு. அஜ்மல்கான் (தமிழகத்தில் முஸ்லிம்கள் 1984) கீழக்கரை தைக்கா ஸுஹைபு ஆலிம் ஆகியோர் மாப்பிள்ளை ஆலிம் எழுதிய ‘தமிரப் பட்டணம்’ என்னும் நாவல்தான் தமிழின் முதல் சரித்திர நாவல் என்று வாதிடுகிறார்கள். இந்நாவல் அரபு லிபியில் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது (பார்க்க அரபுத்தமிழ்). ஆகவே பலர் கவனத்துக்கு வரவில்லை.
இலக்கிய இடம்
தமிழில் நாவல் என்னும் கலைக்கு வரலாற்றுச் செய்திகளுடன் கற்பனையையும் கலந்து எழுதலாம் என வழிகாட்டிய நாவல் இது.
உசாத்துணை
- சித்திலெவ்வை – அசன்பே கதை, இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம், திருச்சிராப்பள்ளி 1974
- தமிழில் சிறுபான்மை இலக்கியம், ஜெயமோகன்
- திறனாய்வுக் கட்டுரைகள், எம். ஏ. நுஃமான்
- தமிழின் இரு முதல் நாவல்கள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:05:43 IST