under review

சூனார்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors in article)
 
(One intermediate revision by the same user not shown)
Line 57: Line 57:




[[Category:மலேசிய ஆளுமைகள்]]
[[Category:மலேசியா]]
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 00:08, 15 October 2024

சூனார்

சூனார் (மே 15, 1962) (Zunar) மலேசியாவைச் சேர்ந்த கேலிச் சித்திரக் கலைஞர் (Cartoonist). அரசியல் பகடி கேலிச் சித்திரங்கள் வரைந்து சிறை சென்றவர்.

பிறப்பு, கல்வி

சூனார் (இயற்பெயர்: ஜுல்கிஃப்லீ அன்வர் உஹாக்) மே 15, 1962-ல் கெடாவில் பிறந்தார். கெடா பெண்டாங்கில் உள்ள பாடாங் டுரியான் ஆரம்பப்பள்ளியில் ஆரம்பக்கல்விக் கற்றார். இடைநிலைக் கல்வியை சூனார் சுங்காய் டியாங், பெண்டாங் மற்றும் ஜித்ராவில் உள்ள பள்ளிகளில் கற்றார்.

பெற்றோரின் வற்புறுத்தலால் கலைத் துறையில் சேர முடியாமல் 1980-ம் ஆண்டு மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைகழகத்தில் அறிவியல் துறையில் மேற்கல்வியைத் தொடர்ந்தார். அறிவியல் துறையில் சேர்ந்த ஓராண்டில் படிப்பை முடிக்க முடியாமல் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தனி வாழ்க்கை

சூனார் திருமதி. ஃபாஸ்லினாவை திருமணம் செய்துக் கொண்டார்.

பல்கலைகழகப் படிப்பு நின்றுவிட்டதும் கோலாலம்பூரில் தொழிற்சாலையிலும், கட்டுமானத் தளங்களிலும் வேலை செய்தார். 1986-ம் ஆண்டு முதல் முழு நேர கேலிச் சித்திரக் கலைஞராகப் பணியாற்றினார்.

கேலிச் சித்திரக் கலைஞர்

சூனார் கேலிச்சித்திரங்களில் ஒன்று

1973-ம் ஆண்டு, ஐந்தாம் வகுப்பு பயிலும்போது சூனாரின் முதல் கேலிச் சித்திரம் ‘பம்பினோ’ இதழில் வெளிவந்தது. ‘அனாக் கிஜாங்’ மற்றும் ‘பாக் அடில்’ போன்ற இதழ்களில் தொடர்ந்து சூனாரின் கேலிச் சித்திரங்கள் வெளிவந்தன. 1980-ல் நகைச்சுவைக்காக ‘தொம்தொம்பாக்’ எனும் தலைப்பில் பள்ளி இதழில் வரையப்பட்ட சூனாரின் கேலிச் சித்திரம் சர்ச்சைக்குரியதாகியது. அக்கேலிச் சித்திரம் பள்ளியையும் ஆசிரியர்களையும் விமர்சிக்கும் வண்ணம் வரையப்பட்டது.

கோலாலம்பூரில் தொழிற்சாலையிலும் கட்டுமானத் தளங்களில் வேலை செய்த காலக்கட்டத்தில் சூனார் வரைந்த கேலிச் சித்திரங்கள் 'பிந்தாங் திமூர்' நாளிதழிலும் 'கிசா சின்தா' பொழுதுபோக்கு இதழிலும் வெளிவந்தன. அதற்காக சூனாருக்கு மலேசியா ரிங்கிட் 4.00 சன்மானமாக வழங்கப்பட்டது. ‘கீலா-கீலா’, ‘பெரித்தா ஹரியான்’, ‘ஹராக்கா’, ‘மலேசியாகினி’, ‘கெடுங் கார்டுன்’, ‘கார்டுன்-ஒ-ப்ஹொபியா’ போன்ற இதழ்களிலும் நாளிதழ்களிலும் கேலிச் சித்தரங்களை வரைந்தார்.

‘கீலா-கீலா’ இதழில் ‘கெபாங்-கெபாங்’ என்னும் பகுதி நிரந்தரமாக சூனாருக்கு வழங்கப்பட்டது. இதுவே சூனாருக்கு நையாண்டி மற்றும் அரசியல் கேலிச் சித்திரங்கள் வரைவதற்கான தொடக்கமாக அமைந்தது. சூனாரின் அரசியல் கேலிச் சித்திர துண்டு ‘பாபா’ என்னும் பகுதியைப் பெரித்தா ஹரியான் நாளிதழில் வெளியிட ஒப்புக் கொண்டனர். 1990-ல் ‘சென்டவாரா’ என்ற தலையங்கக் கேலிச் சித்திரம் வரைய தனியாக ஒரு பகுதி சூனாருக்குக் கிடைத்தது.

1991-ல் பெரித்தா ஹரியானில் முழு நேரமாக வேலை செய்ய கீலா-கீலா இதழில் இருந்து சூனார் வெளியேறினார். 1996-ம் ஆண்டில் பெரித்தா ஹரியானை விட்டு சூனார் வெளியேறினார். வரைவதையும் நிறுத்தினார். அக்காலகட்டத்தில் சூனார் கேலிச் சித்திரங்கள் வரைவது, அதை சுயமாக சந்தைப்படுத்துவது, கேலிச் சித்திரப் பட்டறை நடத்துவது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வசனம் எழுதுவது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது போன்ற பல வகையான வேலைகளைச் செய்தார்.

பிப்ரவரி 1999-ல் சூனாரின் அரசியல் கேலிச் சித்திரம் ஹராக்காவில் வெளிவந்தது. அச்சித்திரம் வாசகர்களிடம் வரவேற்ப்பை பெற்றதால் ஹராக்கா சூனாருக்கு முழு சுதந்திரம் கொடுத்தது. 2003-ம் ஆண்டு மார்ச் மாதம் சூனார் மலேசியாகினியில் சேர்ந்தார்.

பொது அமைப்பில் பங்களிப்பு

சூனார் கேலிச்சித்திரங்களில் ஒன்று

1991-ம் ஆண்டு சிலாங்கூர் மற்றும் கூட்டரசு பகுதி கேலிச் சித்திரக் கலைஞர்கள் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் செயலாளராக சூனார் நியமிக்கப்பட்டார்.

நூல்கள்

  • கார்ட்டூன் ஓன் துன் (2006)
  • 1 ஃபனி மலேசியா (2009)
  • கார்ட்டூன்-ஓ-ஃபோபியா(2010)
  • இவன் மை பேன் ஹஸ் எ ஸ்தேன் (2011)
  • கெடுங் கார்டுன்(2009)
  • பேராக் டாரூல் கார்டூண்(2009)
  • ஈசு டலாம் கார்டூன்(2010)

கண்காட்சிகள்

  • 1993-ல் டோக்கியோ ஷிபியாவில் உள்ள ஆசியான் கேலிச் சித்திர கண்காட்சியில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த சூனார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2021-ல் மனித உரிமை என்ற கருவில் இயங்கலையில் கண்காட்சி நடத்தினார். ஆசியான் நாடுகளைச் சேர்ந்த 37 கேலிச் சித்திரக் கலைஞர்களின் 100 கேலிச் சித்திரங்கள் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.
Zunar-sues-police.jpg

சர்ச்சைகள்/ கேலிச் சித்திரக் கலையில் எதிர்நோக்கிய சிக்கல்கள்

  • பொது ஒழுங்கிற்குத் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைக்கொண்டிருப்பதாகக் கூறி ஐந்து கேலிச் சித்திர புத்தகங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. (2010)
  • புத்தக வெளியீடு நடக்கவிருந்த கடைசி நிமிடத்தில் அதிரடி சோதனையில் கைது செய்யப்பட்டார். (செப்டம்பர், 2010)
  • பதிப்பு நிறுவனம் முடக்கப்பட்டது. (2009)
  • வேறெந்த பதிப்பகத்திலும் இவரது புத்தகங்கள் பதிப்பிக்கப்படக்கூடாது என்று பதிப்பு நிறுவனங்களுக்கு மிரட்டல்கள். (2009)
  • வெளிநாட்டுக் கடப்பிதழ் முடக்கம் (அக்டோபர், 2016)

விருதுகள்

  • ‘CRNI’ - ‘துணிவுமிகு கேலிச் சித்திரக் கலையாக்கம்’ விருது. (2011)
  • BilbaoArte/Fundacion and BBK, Spain. நாட்டின் ‘Artist-in-Residence’ விருது(2011)
  • Hammett விருது (2011 & 2015)
  • Cartooning For Peace விருது (2016)
  • International Press Freedom விருது (2015)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:39:15 IST