under review

நடன. காசிநாதன்: Difference between revisions

From Tamil Wiki
(Being Created)
(Corrected typo errors;)
 
(8 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
நடன. காசிநாதன் (பிறப்பு: நவம்பர் 01, 1940) தொல்லியல் துறை அறிஞர். வரலாற்றாய்வாளர். கல்வெட்டியல் ஆய்வாளர். எழுத்தாளர். தமிழ்நாடு தொல்பொருள் துறை இயக்குநராகப் பணியாற்றினார். தமிழ்நாட்டில் பல்வேறு வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். ’வரலாற்றுப் பேரறிஞர்’ விருது, தமிழக அரசின் உ.வே.சா. விருது உள்படப் பல்வேறு பட்டங்களைப் பெற்றார்.
[[File:Nadana Kasinathan.jpg|thumb|நடன. காசிநாதன்]]
நடன. காசிநாதன் (நவம்பர் 01, 1940- அக்டோபர் 6, 2025) தொல்லியல் துறை அறிஞர். வரலாற்றாய்வாளர். கல்வெட்டியல் ஆய்வாளர். எழுத்தாளர். தமிழ்நாடு தொல்பொருள் துறை இயக்குநராகப் பணியாற்றினார். தமிழ்நாட்டில் பல்வேறு வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு பல குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். 'வரலாற்றுப் பேரறிஞர்' விருது, தமிழக அரசின் உ.வே.சா. விருது உள்படப் பல்வேறு விருதுகளை, பட்டங்களைப் பெற்றார்.
 
== பிறப்பு, கல்வி ==
நடன. காசிநாதன், நவம்பர் 01, 1940 அன்று, கடலூர் மாவட்டம், நெய்வேலிக்கு அருகில் உள்ள தொப்பளிக் குப்பத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். தாய்வழிப் பாட்டனார் ஊரான தே.புதுப்பேட்டையில் வளர்ந்தார். தொடக்கக்கல்வியை அங்குள்ள பள்ளியில் கற்றார். சிதம்பரம் இராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்புவரை படித்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் 'தொன்மை வரலாறு மற்றும் தொல்லியல்' பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
 
==தனி வாழ்க்கை==
நடன. காசிநாதன், 1967-ல் தொல்லியல் துறையில் கல்வெட்டாளராகப் பணியில் சேர்ந்தார். 1989-ல், இயக்குநராகப் பதவி உயர்வு பெற்று, 1998-ல், ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: திலகவல்லி. இவர்களுக்கு கா. கதிரவன், க. அருண்மொழி, கா. ஆதித்யன் என மூன்று மகன்கள்
[[File:Natana Kasinathan Image 2.jpg|thumb|தொல்லியல் ஆய்வாளர் நடன. காசிநாதன்]]
 
==ஆய்வு==
நடன. காசிநாதன், வட்டெழுத்துக்களைப் படிப்பதில் வல்லவராக அறியப்பட்டார். கன்னியாகுமரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கல்வெட்டுகளை ஆய்வு செய்து பல புதிய கோயிற் கல்வெட்டுகளையும், நடுகல் கல்வெட்டுகளையும் கண்டறிந்தார். செப்புப் பட்டயங்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள் பலவற்றைக் கண்டுபிடித்தார். திருத்தணிக்கு அருகிலுள்ள வேலஞ்சேரியில் பல்லவ மன்னன் அபராஜிதன், சோழ மன்னன் முதலாம் பராந்தகன் காலத்திய இரு அரிய செப்புப் பட்டயங்களைக் கண்டறிந்தார்.
 
தனியார் ஒருவரிடமிருந்த மராத்திய மன்னர் சரபோஜியின் திருவுருவச் சிலையையும், இராயப்பேட்டையில் ஒரு புற்றுக் கோயிலுக்கருகில் இருந்த பௌத்த புடைச் சிற்பத்தையும் கண்டறிந்தார். [[பிரான்சிஸ் வைட் எல்லிஸ்|எல்லிஸ்]], கிணறுகள் அமைத்ததைத் தெரிவிக்கும் கல்வெட்டையும், காரனெட் நிறுவனத்தார் சிற்பக் கிடங்கில் இருந்த வட்டெழுத்துக் கல்வெட்டுடன் கூடிய பல்லவர் காலத் துர்க்கைச் சிலையொன்றையும் கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்.
 
1984-ல், தஞ்சாவூரில், ராஜராஜ சோழனின் 1000-மாவது பிறந்த நாள் விழாவை அந்நாளைய முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன், அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி முன்னிலையில் நடத்தினார். அதனையொட்டித் தஞ்சையில் இராஜராஜன் அகழ்வைப்பகம் ஏற்படுத்தினார். தஞ்சை மாவட்டம் பூம்புகாரில் கடலகழாய்வை மேற்கொண்டு கடலினுள், பொ.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த ஐந்து கட்டட அமைப்புக்களைக் கண்டுபிடித்தார். பொ.யு. 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிதைந்த கப்பல் ஒன்றைக் கண்டுபிடித்தார். பூம்புகாரில் ஆழ்கடல் தொல்லியல் அகழ் வைப்பகத்தை நிறுவினார்.
 
1994-ல் தஞ்சையில் நடைபெற்ற எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது தஞ்சாவூர் அரண்மனை, மதுரைத் திருமலை நாயக்கர் அரண்மனை, சரபேந்திரராசன் பட்டின மனோரா, தரங்கம்பாடி கோட்டை, இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் ஆகியவற்றை அவற்றின் பழைமை மாறாது புதுப்பித்தார்.
 
பொதுமக்களிடையே மரபுச் சின்னங்கள் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்டந்தோறும் வரலாற்றுக் கருத்தரங்குகள் பலவற்றை நடத்தினார். ஆழ்கடல் அகழாய்வுக் கருத்தரங்குகளை சென்னையிலும், பூம்புகாரிலும் நடத்தினார். வெளிநாடு வாழ் ஆய்வாளர்கள் கலந்துகொண்ட அகில உலக ஆழ்கடல் அகழாய்வுக் கருத்தரங்கினைச் சென்னையில் நடத்தினார். பத்துக்கும் மேற்பட்ட தொண்டை மண்டல வரலாற்றுக் கருத்தரங்குகளை நடத்தினார்.
 
======தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம்======
நடன. காசிநாதன், பணி ஓய்வுக்குப் பின் 'தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம்' என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். ஆய்வு அறிஞர்களின் உதவியுடன் அரிய பல தொல்பொருள்களைக் கண்டறிந்தார்.
[[File:Kasinathan books.jpg|thumb|நடன. காசிநாதன் நூல்கள்]]
 
==இலக்கியம்==
நடன. காசிநாதன், வரலாறு மற்றும் ஆய்விதழ்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதினார். தனது கண்டுபிடிப்புகளை நூல்களாக ஆவணப்படுத்தினார்.
 
தமிழிலும், ஆங்கில மொழியிலும் தொண்ணூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். நடன. காசிநாதன் எழுதிய 'தமிழக காசு இயல்' நூல் குறிப்பிடத்தகுந்த நாணயவியல் ஆய்வு நூலாக அறியப்படுகிறது. தமிழக அரசின் வரலாற்று நூல்களான பல்லவ - பாண்டியர் வரலாறு, சோழப் பெருவேந்தர் வரலாறு, தமிழக வரலாறு ஆகிய நூல்களின் சில பகுதிகளை எழுதினார்.
 
வரலாறு தொடர்பான பல தேசியக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பல ஆய்வுக்கட்டுரைகளை வாசித்தார். அகில இந்திய வானொலியிலும், தொலைக்காட்சியிலும் தொல்லியல் துறை தொடர்பான கண்டுபிடிப்புகளையும் அகழாய்வில் வெளிக் கொணரப்பட்ட முக்கியத் தொல்பொருள்கள் குறித்தும் உரை நிகழ்த்தினார்.
 
==பதிப்பு==
சென்னை அரசினர் கீழ்த்திசை ஓலைச்சுவடி நூல் நிலையத்தில் இருந்த 51-க்கும் மேற்பட்ட சுவடிகளை நூல்களாக அச்சிட்டு வெளியிட்டார்.
 
==அமைப்புச் செயல்பாடுகள்==
நடன. காசிநாதன், கோடைக் காலக் கல்வெட்டுப் பயிற்சியையும், ஓராண்டு காலக் கல்வெட்டுப் பட்டய வகுப்புப் பயிற்சியையும் தொடங்கி நடத்தினார். தமிழகத்தின் நாகரிகச் சிறப்பு குறித்த 'உங்கள் பெருமையை உணர்வீர்' என்னும் திரைப்படத்தை தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும், துறையின் செயல்பாடுகள் குறித்த வீடியோ படத்தைத் தமிழிலும் தயாரித்தளித்தார்.
 
==பொறுப்பு==
 
*சென்னைப் பல்கலைக் கழகப் பாடத் திட்டக் குழு உறுப்பினர்
*தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகப் பாடத் திட்டக் குழு உறுப்பினர்
*மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பாடத் திட்டக் குழு உறுப்பினர்
*அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவைக் குழு உறுப்பினர்
*தமிழ்நாடு வரலாறு எழுதும் உயர்மட்டக் குழு உறுப்பினர்
*தமிழ்நாடு அரசு ஆலய நிர்வாக உயர்மட்டக் குழு உறுப்பினர்
*தமிழ் ஆட்சிமொழி உயர்மட்டக்குழு உறுப்பினர்
*தமிழ்ச் செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் சான்றாதார வல்லுநர்
*வன்னியர் வரலாறு தொகுப்புக் குழுவின் தலைவர்
 
==விருதுகள்==
 
*வட்டெழுத்து வல்லவர்
*கல்வெட்டுச் செம்மல்
*தொல்லியல் அறிஞர்
*கல்வெட்டுச் சொல்லோவியர்
*கல்வெட்டறிஞர்
*தமிழக அரசின் [[உ.வே.சா விருது|உ. வே.சா. விருது]]
*திருவையாறு 'தமிழய்யா கல்விக் கழகம்' அளித்த கரிகாற் சோழன் விருது
*'கண்ணியம்' இதழ் அளித்த வரலாற்று அறிஞர் விருது
*'முத்தரையர்' நூலுக்காக புதுக்கோட்டை 'முத்தரையர் சங்கம்', 'திருச்சி முத்தரையர் வரலாற்றாய்வு மையம்' அளித்த பாராட்டு
*'தமிழகம் அரப்பன் நாகரிகத் தாயகம்' நூலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு
*'கல்லெழுத்துக்கலை' நூலுக்கு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு
 
==ஆவணம்==
நடன. காசிநாதனின் நூல்களில் சில தமிழ் இணைய மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.
 
==மதிப்பீடு==
நடன. காசிநாதன், தம் பணிக்காலத்தில் பல அரிய கண்டுபிடிப்புகளையும், சில புதிய செயல் திட்டங்களையும் நிகழ்த்தினார். கல்வெட்டாய்வு, அழகாய்வு, நாணயவியல் ஆய்வு, செப்பேடுகள் ஆய்வு, சுவடியியல் ஆய்வு எனப் பல்வேறு களங்களில் புதிய பல ஆய்வுகளை நிகழ்த்தினார். புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். [[இரா. நாகசாமி]], தியாக. சத்தியமூர்த்தி வரிசையில், தமிழ்நாட்டின் குறிப்பிடத்தகுந்த தொல்லியல் ஆய்வாளர்களுள் ஒருவராக நடன. காசிநாதன் மதிப்பிடப்படுகிறார்.
 
== மறைவு ==
நடன. காசிநாதன் அக்டோபர் 6, 2025 அன்று  சென்னை சேலையூரில் காலமானார்.
 
==நூல்கள்==
 
====== கட்டுரை, ஆய்வு நூல்கள்======
 
*காலச் சுவடுகள்
*மனோரா
*முத்தரையர்
*தொல்லியல் கட்டுரைகள்
*களப்பிரர்
*கல்வெட்டின் கதை
*இராசராசேச்சுரம்
*கல்லெழுத்துக்கலை
*தமிழகத்தில் தொல்மாந்தர் பண்பாடு
*தமிழர் தெய்வங்கள்
*வன்னியர்
*வரலாற்றுத் தடயம்
*சோழ வேந்தர் பரம்பரை
*பிச்சாவரம் வன்னியப் பாளையக்காரர் வரலாறு
*வன்னியர் மாட்சி
*தமிழக வரலாற்றுச் சின்னங்கள்
*கண்டி மன்னர் கல்லறை
*வளரும் தமிழகத்தில் மலரும் மாவட்டத் தலைநகர் நாகப்பட்டினம்
*தமிழர் காசு இயல்
*பூம்புகாரும், கடல் அகழாய்வும்
*மாமல்லபுரம்
*தமிழகச் சிற்பிகள் வரலாறு
*வன்னியர் வரலாறு, முதல்தொகுதி
*தமிழகம் அரப்பன் நாகரிகத் தாயகம்
*தமிழக வரலாற்று வரிசை (களப்பிரர்காலத் தமிழகம்)
*தொன்மைத் தமிழும் தொன்மைத் தமிழரும்
*தென் பகுதிப் பாளையக்காரர்கள் வரலாறு
*தமிழர் பண்பாட்டுச் சிதறல்கள்
*நெல்லை அதன் வரலாற்றெல்லை
*தமிழக வரலாற்றுத் தடயங்கள்
*சோழர் செப்பேடுகள்
*கல்வெட்டியல் (இணை ஆசிரியர்)
*கல்வெட்டு ஓர் அறிமுகம் (இணை ஆசிரியர்)
*ஆய்வுக் கொத்து (இணை ஆசிரியர்)
*பூம்புகார் (இணை ஆசிரியர்)
*ஆய்வுத்தேன் (இணை ஆசிரியர்)
*கும்பகோணமும் மகாமகப் பெருவிழாவும் (இணை ஆசிரியர்)
*தொல்லியல் துறையின் அரிய கண்டுபிடிப்புகள் (இணை ஆசிரியர்)
*தடயம் (இணை ஆசிரியர்)
*தொன்மைத் தடயம் (இணை ஆசிரியர்)
*பண்டைத் தடயம் (இணை ஆசிரியர்)
*சமணத் தடயங்கள் (இணை ஆசிரியர்)
*பெரம்பலூர் மாவட்டத் தடயங்கள் (இணை ஆசிரியர்)
*காஞ்சிபுரம் மாவட்டத் தடயங்கள் (இணை ஆசிரியர்)
*தமிழ் எழுத்தியல் வரலாறு (இணை ஆசிரியர்)
*காஞ்சிபுரம் மாவட்டக் கலைகள், தொகுதி - 1 (இணை ஆசிரியர்)
*வேலூர் மாவட்டத் தடயங்கள், தொகுதி - 1 (இணை ஆசிரியர்)
*வேலூர் மாவட்டத் தடயங்கள், தொகுதி - 2 (இணை ஆசிரியர்)
*கடலூர் மாவட்டத் தடயங்கள், தொகுதி - 1 (இணை ஆசிரியர்)
*கடலூர் மாவட்டத் தடயங்கள், தொகுதி - 2 (இணை ஆசிரியர்)
 
======பதிப்பித்த நூல்கள்======
 
*அருண்மொழி
*தமிழர் நாகரிகம்
*கன்னியாகுமரிக் கல்வெட்டுகள் (முதல்தொகுதி)
*கன்னியாகுமரிக் கல்வெட்டுகள் (இரண்டாம்தொகுதி)
*கன்னியாகுமரிக் கல்வெட்டுகள் (மூன்றாம் தொகுதி)
*தொல்லியல் கருத்தரங்கம், பகுதி - 11, பொதுப் பதிப்பாசிரியர்
*திருக்கோடிகா கல்வெட்டுகள், பொதுப் பதிப்பாசிரியர்
*தமிழ்க் கீர்த்தனைகள், பொதுப் பதிப்பாசிரியர்
*திருக்குறள் பழைய உரை, பொதுப் பதிப்பாசிரியர்
*வன்னியர் வரலாறு, இரண்டாம்தொகுதி, பகுதி - 1, பதிப்பாசிரியர்   
* வன்னியர் வரலாறு, இரண்டாம்தொகுதி, பகுதி - 2, பதிப்பாசிரியர்   
* திருவீழிமிழலைக் கல்வெட்டுகள், பொதுப் பதிப்பாசிரியர்
*அரசு கீழ்த்திசை ஓலைச்சுவடி நூலக வெளியீடுகள் (மொத்தம் - 51 ) பொதுப் பதிப்பாசிரியர்
*பெருமுக்கல் கல்வெட்டுகள், இணைத் தொகுப்பாளர்
 
======ஆங்கில நூல்கள்======
 
*Hero Stones in Tamil Nadu                 
* Functions of the Department of Archaeology                           
*Under Sea Exploration off the shore of Pumpuhar                           
*The Metropolis of the Medieval Cholas
*Seminar on Marine Archaeology             
* Art panorama of the Tamils           
* Padavedu Excavation                     
* Alagankulam - A Preliminary Report of Excavation                     
* Collected papers (Studies in Tamil Culture) Author     
*Achievements of Archaeology Department   
*Ancient Industries of Tamil Nadu           
* Cultural Heritage of Tamil Nadu           
*Ancient Ports of Tamil Nadu and their trade contact with Foreign Countries       
* Tirukkoyilur Excavation             
* The Metropolis of the Medieval Cholas
*Tamils Heritage                         
* Ancient Port Towns and their busy Trade Activities, Capital Cities and Trade Contact
* Hero-Stones, Pallava Period
*Cultural Heritage of the Tamils
 
== உசாத்துணை ==
 
*[https://muelangovan.wordpress.com/2012/11/25/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8/ நடன. காசிநாதன் வாழ்க்கைக் குறிப்பு, முனைவர் மு. இளங்கோவன் தளம்]
*[https://www.tamildigitallibrary.in/book-list-view-editor?act=%E0%AE%95&id=jZY9lup2kZl6TuXGlZQdjZp1kuIy&tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%2C+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9. நடன. காசிநாதன் நூல்கள், தமிழ் இணைய மின்னூலகம்]
*[https://www.tamildigitallibrary.in/book-list-view-author?act=%E0%AE%95&id=jZY9lup2kZl6TuXGlZQdjZY9luhy&tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%2C+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9. நடன. காசிநாதன் நூல்கள் - 2]
*[https://www.tamildigitallibrary.in/book-list-view-editor?act=%E0%AE%95&id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8k0t6&tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D கல்வெட்டு ஆய்வு நூல்கள், தமிழ் இணைய மின்னூலகம்]
*[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8k0U9&tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%2C+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9#book1/ இராசராசேச்சுரம் நூல், தமிழ் இணைய மின்னூலகம்]
*[https://www.youtube.com/watch?v=gsgI-ijRLk8 பூம்புகார் அகழாய்வு, நடன. காசிநாதன் உரை]
 
{{Finalised}}
{{Fndt|22-Nov-2024, 13:13:58 IST}}

{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 17:38, 22 November 2025

நடன. காசிநாதன்

நடன. காசிநாதன் (நவம்பர் 01, 1940- அக்டோபர் 6, 2025) தொல்லியல் துறை அறிஞர். வரலாற்றாய்வாளர். கல்வெட்டியல் ஆய்வாளர். எழுத்தாளர். தமிழ்நாடு தொல்பொருள் துறை இயக்குநராகப் பணியாற்றினார். தமிழ்நாட்டில் பல்வேறு வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு பல குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். 'வரலாற்றுப் பேரறிஞர்' விருது, தமிழக அரசின் உ.வே.சா. விருது உள்படப் பல்வேறு விருதுகளை, பட்டங்களைப் பெற்றார்.

பிறப்பு, கல்வி

நடன. காசிநாதன், நவம்பர் 01, 1940 அன்று, கடலூர் மாவட்டம், நெய்வேலிக்கு அருகில் உள்ள தொப்பளிக் குப்பத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். தாய்வழிப் பாட்டனார் ஊரான தே.புதுப்பேட்டையில் வளர்ந்தார். தொடக்கக்கல்வியை அங்குள்ள பள்ளியில் கற்றார். சிதம்பரம் இராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்புவரை படித்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் 'தொன்மை வரலாறு மற்றும் தொல்லியல்' பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

நடன. காசிநாதன், 1967-ல் தொல்லியல் துறையில் கல்வெட்டாளராகப் பணியில் சேர்ந்தார். 1989-ல், இயக்குநராகப் பதவி உயர்வு பெற்று, 1998-ல், ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: திலகவல்லி. இவர்களுக்கு கா. கதிரவன், க. அருண்மொழி, கா. ஆதித்யன் என மூன்று மகன்கள்

தொல்லியல் ஆய்வாளர் நடன. காசிநாதன்

ஆய்வு

நடன. காசிநாதன், வட்டெழுத்துக்களைப் படிப்பதில் வல்லவராக அறியப்பட்டார். கன்னியாகுமரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கல்வெட்டுகளை ஆய்வு செய்து பல புதிய கோயிற் கல்வெட்டுகளையும், நடுகல் கல்வெட்டுகளையும் கண்டறிந்தார். செப்புப் பட்டயங்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள் பலவற்றைக் கண்டுபிடித்தார். திருத்தணிக்கு அருகிலுள்ள வேலஞ்சேரியில் பல்லவ மன்னன் அபராஜிதன், சோழ மன்னன் முதலாம் பராந்தகன் காலத்திய இரு அரிய செப்புப் பட்டயங்களைக் கண்டறிந்தார்.

தனியார் ஒருவரிடமிருந்த மராத்திய மன்னர் சரபோஜியின் திருவுருவச் சிலையையும், இராயப்பேட்டையில் ஒரு புற்றுக் கோயிலுக்கருகில் இருந்த பௌத்த புடைச் சிற்பத்தையும் கண்டறிந்தார். எல்லிஸ், கிணறுகள் அமைத்ததைத் தெரிவிக்கும் கல்வெட்டையும், காரனெட் நிறுவனத்தார் சிற்பக் கிடங்கில் இருந்த வட்டெழுத்துக் கல்வெட்டுடன் கூடிய பல்லவர் காலத் துர்க்கைச் சிலையொன்றையும் கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்.

1984-ல், தஞ்சாவூரில், ராஜராஜ சோழனின் 1000-மாவது பிறந்த நாள் விழாவை அந்நாளைய முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன், அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி முன்னிலையில் நடத்தினார். அதனையொட்டித் தஞ்சையில் இராஜராஜன் அகழ்வைப்பகம் ஏற்படுத்தினார். தஞ்சை மாவட்டம் பூம்புகாரில் கடலகழாய்வை மேற்கொண்டு கடலினுள், பொ.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த ஐந்து கட்டட அமைப்புக்களைக் கண்டுபிடித்தார். பொ.யு. 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிதைந்த கப்பல் ஒன்றைக் கண்டுபிடித்தார். பூம்புகாரில் ஆழ்கடல் தொல்லியல் அகழ் வைப்பகத்தை நிறுவினார்.

1994-ல் தஞ்சையில் நடைபெற்ற எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது தஞ்சாவூர் அரண்மனை, மதுரைத் திருமலை நாயக்கர் அரண்மனை, சரபேந்திரராசன் பட்டின மனோரா, தரங்கம்பாடி கோட்டை, இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் ஆகியவற்றை அவற்றின் பழைமை மாறாது புதுப்பித்தார்.

பொதுமக்களிடையே மரபுச் சின்னங்கள் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்டந்தோறும் வரலாற்றுக் கருத்தரங்குகள் பலவற்றை நடத்தினார். ஆழ்கடல் அகழாய்வுக் கருத்தரங்குகளை சென்னையிலும், பூம்புகாரிலும் நடத்தினார். வெளிநாடு வாழ் ஆய்வாளர்கள் கலந்துகொண்ட அகில உலக ஆழ்கடல் அகழாய்வுக் கருத்தரங்கினைச் சென்னையில் நடத்தினார். பத்துக்கும் மேற்பட்ட தொண்டை மண்டல வரலாற்றுக் கருத்தரங்குகளை நடத்தினார்.

தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம்

நடன. காசிநாதன், பணி ஓய்வுக்குப் பின் 'தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம்' என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். ஆய்வு அறிஞர்களின் உதவியுடன் அரிய பல தொல்பொருள்களைக் கண்டறிந்தார்.

நடன. காசிநாதன் நூல்கள்

இலக்கியம்

நடன. காசிநாதன், வரலாறு மற்றும் ஆய்விதழ்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதினார். தனது கண்டுபிடிப்புகளை நூல்களாக ஆவணப்படுத்தினார்.

தமிழிலும், ஆங்கில மொழியிலும் தொண்ணூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். நடன. காசிநாதன் எழுதிய 'தமிழக காசு இயல்' நூல் குறிப்பிடத்தகுந்த நாணயவியல் ஆய்வு நூலாக அறியப்படுகிறது. தமிழக அரசின் வரலாற்று நூல்களான பல்லவ - பாண்டியர் வரலாறு, சோழப் பெருவேந்தர் வரலாறு, தமிழக வரலாறு ஆகிய நூல்களின் சில பகுதிகளை எழுதினார்.

வரலாறு தொடர்பான பல தேசியக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பல ஆய்வுக்கட்டுரைகளை வாசித்தார். அகில இந்திய வானொலியிலும், தொலைக்காட்சியிலும் தொல்லியல் துறை தொடர்பான கண்டுபிடிப்புகளையும் அகழாய்வில் வெளிக் கொணரப்பட்ட முக்கியத் தொல்பொருள்கள் குறித்தும் உரை நிகழ்த்தினார்.

பதிப்பு

சென்னை அரசினர் கீழ்த்திசை ஓலைச்சுவடி நூல் நிலையத்தில் இருந்த 51-க்கும் மேற்பட்ட சுவடிகளை நூல்களாக அச்சிட்டு வெளியிட்டார்.

அமைப்புச் செயல்பாடுகள்

நடன. காசிநாதன், கோடைக் காலக் கல்வெட்டுப் பயிற்சியையும், ஓராண்டு காலக் கல்வெட்டுப் பட்டய வகுப்புப் பயிற்சியையும் தொடங்கி நடத்தினார். தமிழகத்தின் நாகரிகச் சிறப்பு குறித்த 'உங்கள் பெருமையை உணர்வீர்' என்னும் திரைப்படத்தை தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும், துறையின் செயல்பாடுகள் குறித்த வீடியோ படத்தைத் தமிழிலும் தயாரித்தளித்தார்.

பொறுப்பு

  • சென்னைப் பல்கலைக் கழகப் பாடத் திட்டக் குழு உறுப்பினர்
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகப் பாடத் திட்டக் குழு உறுப்பினர்
  • மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பாடத் திட்டக் குழு உறுப்பினர்
  • அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவைக் குழு உறுப்பினர்
  • தமிழ்நாடு வரலாறு எழுதும் உயர்மட்டக் குழு உறுப்பினர்
  • தமிழ்நாடு அரசு ஆலய நிர்வாக உயர்மட்டக் குழு உறுப்பினர்
  • தமிழ் ஆட்சிமொழி உயர்மட்டக்குழு உறுப்பினர்
  • தமிழ்ச் செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் சான்றாதார வல்லுநர்
  • வன்னியர் வரலாறு தொகுப்புக் குழுவின் தலைவர்

விருதுகள்

  • வட்டெழுத்து வல்லவர்
  • கல்வெட்டுச் செம்மல்
  • தொல்லியல் அறிஞர்
  • கல்வெட்டுச் சொல்லோவியர்
  • கல்வெட்டறிஞர்
  • தமிழக அரசின் உ. வே.சா. விருது
  • திருவையாறு 'தமிழய்யா கல்விக் கழகம்' அளித்த கரிகாற் சோழன் விருது
  • 'கண்ணியம்' இதழ் அளித்த வரலாற்று அறிஞர் விருது
  • 'முத்தரையர்' நூலுக்காக புதுக்கோட்டை 'முத்தரையர் சங்கம்', 'திருச்சி முத்தரையர் வரலாற்றாய்வு மையம்' அளித்த பாராட்டு
  • 'தமிழகம் அரப்பன் நாகரிகத் தாயகம்' நூலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு
  • 'கல்லெழுத்துக்கலை' நூலுக்கு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு

ஆவணம்

நடன. காசிநாதனின் நூல்களில் சில தமிழ் இணைய மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.

மதிப்பீடு

நடன. காசிநாதன், தம் பணிக்காலத்தில் பல அரிய கண்டுபிடிப்புகளையும், சில புதிய செயல் திட்டங்களையும் நிகழ்த்தினார். கல்வெட்டாய்வு, அழகாய்வு, நாணயவியல் ஆய்வு, செப்பேடுகள் ஆய்வு, சுவடியியல் ஆய்வு எனப் பல்வேறு களங்களில் புதிய பல ஆய்வுகளை நிகழ்த்தினார். புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். இரா. நாகசாமி, தியாக. சத்தியமூர்த்தி வரிசையில், தமிழ்நாட்டின் குறிப்பிடத்தகுந்த தொல்லியல் ஆய்வாளர்களுள் ஒருவராக நடன. காசிநாதன் மதிப்பிடப்படுகிறார்.

மறைவு

நடன. காசிநாதன் அக்டோபர் 6, 2025 அன்று சென்னை சேலையூரில் காலமானார்.

நூல்கள்

கட்டுரை, ஆய்வு நூல்கள்
  • காலச் சுவடுகள்
  • மனோரா
  • முத்தரையர்
  • தொல்லியல் கட்டுரைகள்
  • களப்பிரர்
  • கல்வெட்டின் கதை
  • இராசராசேச்சுரம்
  • கல்லெழுத்துக்கலை
  • தமிழகத்தில் தொல்மாந்தர் பண்பாடு
  • தமிழர் தெய்வங்கள்
  • வன்னியர்
  • வரலாற்றுத் தடயம்
  • சோழ வேந்தர் பரம்பரை
  • பிச்சாவரம் வன்னியப் பாளையக்காரர் வரலாறு
  • வன்னியர் மாட்சி
  • தமிழக வரலாற்றுச் சின்னங்கள்
  • கண்டி மன்னர் கல்லறை
  • வளரும் தமிழகத்தில் மலரும் மாவட்டத் தலைநகர் நாகப்பட்டினம்
  • தமிழர் காசு இயல்
  • பூம்புகாரும், கடல் அகழாய்வும்
  • மாமல்லபுரம்
  • தமிழகச் சிற்பிகள் வரலாறு
  • வன்னியர் வரலாறு, முதல்தொகுதி
  • தமிழகம் அரப்பன் நாகரிகத் தாயகம்
  • தமிழக வரலாற்று வரிசை (களப்பிரர்காலத் தமிழகம்)
  • தொன்மைத் தமிழும் தொன்மைத் தமிழரும்
  • தென் பகுதிப் பாளையக்காரர்கள் வரலாறு
  • தமிழர் பண்பாட்டுச் சிதறல்கள்
  • நெல்லை அதன் வரலாற்றெல்லை
  • தமிழக வரலாற்றுத் தடயங்கள்
  • சோழர் செப்பேடுகள்
  • கல்வெட்டியல் (இணை ஆசிரியர்)
  • கல்வெட்டு ஓர் அறிமுகம் (இணை ஆசிரியர்)
  • ஆய்வுக் கொத்து (இணை ஆசிரியர்)
  • பூம்புகார் (இணை ஆசிரியர்)
  • ஆய்வுத்தேன் (இணை ஆசிரியர்)
  • கும்பகோணமும் மகாமகப் பெருவிழாவும் (இணை ஆசிரியர்)
  • தொல்லியல் துறையின் அரிய கண்டுபிடிப்புகள் (இணை ஆசிரியர்)
  • தடயம் (இணை ஆசிரியர்)
  • தொன்மைத் தடயம் (இணை ஆசிரியர்)
  • பண்டைத் தடயம் (இணை ஆசிரியர்)
  • சமணத் தடயங்கள் (இணை ஆசிரியர்)
  • பெரம்பலூர் மாவட்டத் தடயங்கள் (இணை ஆசிரியர்)
  • காஞ்சிபுரம் மாவட்டத் தடயங்கள் (இணை ஆசிரியர்)
  • தமிழ் எழுத்தியல் வரலாறு (இணை ஆசிரியர்)
  • காஞ்சிபுரம் மாவட்டக் கலைகள், தொகுதி - 1 (இணை ஆசிரியர்)
  • வேலூர் மாவட்டத் தடயங்கள், தொகுதி - 1 (இணை ஆசிரியர்)
  • வேலூர் மாவட்டத் தடயங்கள், தொகுதி - 2 (இணை ஆசிரியர்)
  • கடலூர் மாவட்டத் தடயங்கள், தொகுதி - 1 (இணை ஆசிரியர்)
  • கடலூர் மாவட்டத் தடயங்கள், தொகுதி - 2 (இணை ஆசிரியர்)
பதிப்பித்த நூல்கள்
  • அருண்மொழி
  • தமிழர் நாகரிகம்
  • கன்னியாகுமரிக் கல்வெட்டுகள் (முதல்தொகுதி)
  • கன்னியாகுமரிக் கல்வெட்டுகள் (இரண்டாம்தொகுதி)
  • கன்னியாகுமரிக் கல்வெட்டுகள் (மூன்றாம் தொகுதி)
  • தொல்லியல் கருத்தரங்கம், பகுதி - 11, பொதுப் பதிப்பாசிரியர்
  • திருக்கோடிகா கல்வெட்டுகள், பொதுப் பதிப்பாசிரியர்
  • தமிழ்க் கீர்த்தனைகள், பொதுப் பதிப்பாசிரியர்
  • திருக்குறள் பழைய உரை, பொதுப் பதிப்பாசிரியர்
  • வன்னியர் வரலாறு, இரண்டாம்தொகுதி, பகுதி - 1, பதிப்பாசிரியர்
  • வன்னியர் வரலாறு, இரண்டாம்தொகுதி, பகுதி - 2, பதிப்பாசிரியர்
  • திருவீழிமிழலைக் கல்வெட்டுகள், பொதுப் பதிப்பாசிரியர்
  • அரசு கீழ்த்திசை ஓலைச்சுவடி நூலக வெளியீடுகள் (மொத்தம் - 51 ) பொதுப் பதிப்பாசிரியர்
  • பெருமுக்கல் கல்வெட்டுகள், இணைத் தொகுப்பாளர்
ஆங்கில நூல்கள்
  • Hero Stones in Tamil Nadu
  • Functions of the Department of Archaeology
  • Under Sea Exploration off the shore of Pumpuhar
  • The Metropolis of the Medieval Cholas
  • Seminar on Marine Archaeology
  • Art panorama of the Tamils
  • Padavedu Excavation
  • Alagankulam - A Preliminary Report of Excavation
  • Collected papers (Studies in Tamil Culture) Author
  • Achievements of Archaeology Department
  • Ancient Industries of Tamil Nadu
  • Cultural Heritage of Tamil Nadu
  • Ancient Ports of Tamil Nadu and their trade contact with Foreign Countries
  • Tirukkoyilur Excavation
  • The Metropolis of the Medieval Cholas
  • Tamils Heritage
  • Ancient Port Towns and their busy Trade Activities, Capital Cities and Trade Contact
  • Hero-Stones, Pallava Period
  • Cultural Heritage of the Tamils

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Nov-2024, 13:13:58 IST