under review

தினபூமி: Difference between revisions

From Tamil Wiki
(Page Created: Para Added and Edited: Image Added: Link Created: Proof Checked)
 
(Corrected typo errors;)
 
(7 intermediate revisions by 4 users not shown)
Line 3: Line 3:

== வெளியீடு ==
== வெளியீடு ==
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு 1990 முதல் அதிர்ஷ்டம் என்ற நாளிதழ் வெளிவந்தது. முழுக்க முழுக்க பரிசுச்சீட்டு, லாட்டரிச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த அந்த இதழின் விரிவாக, அக்டோபர் 14, 1994-ல், தினபூமி நாளிதழ் தொடங்கப்பட்டது. மதுரை மட்டுமல்லாமல், சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர், பாண்டிச்சேரியிலிருந்தும் அச்சானது. எல். மணிமாறன் இதன் நிறுவனர் மற்றும் ஆசிரியராகச் செயல்பட்டார்.
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு 1990 முதல் 'அதிர்ஷ்டம்' என்ற நாளிதழ் வெளிவந்தது. முழுக்க முழுக்க பரிசுச்சீட்டு, லாட்டரிச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த அந்த இதழின் விரிவாக, அக்டோபர் 14, 1994-ல், தினபூமி நாளிதழ் தொடங்கப்பட்டது. மதுரை மட்டுமல்லாமல், சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர், பாண்டிச்சேரியிலிருந்தும் அச்சானது. எல். மணிமாறன் இதன் நிறுவனர் மற்றும் ஆசிரியராகச் செயல்பட்டார்.

== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
Line 11: Line 11:
தினபூமி தினந்தோறும் பல்வேறு இணைப்பிதழ்களை வெளியிட்டது. ஞாயிறு பூமி (ஞாயிறு), மருத்துவ பூமி (திங்கள்), மங்கையர் பூமி (செவ்வாய்), டி.வி. பூமி (புதன்), கதை பூமி (வியாழன்), ஆன்மீக பூமி (வெள்ளி), மாணவர் பூமி (சனி) ஆகிய இணைப்புக்களை வெளியிட்டது. விளையாட்டு பூமி, ஞாயிறு பூமி ஆகியன தனிப்புத்தகங்களாக வெளியிடப்பட்டன.

மாணவர் பூமி, வாழ்வியல் பூமி, வேளாண் பூமி ஆகியன் சிறப்புப் பகுதிகளாக வெளியாகின.  
மாணவர் பூமி, வாழ்வியல் பூமி, வேளாண் பூமி ஆகிய சிறப்புப் பகுதிகள் வெளியாகின.  

தினபூமி நிறுவனத்திலிருந்து மாத இதழாக ’சாம்பியன்’ என்ற விளையாட்டு சார்ந்த இதழ் வெளிவந்தது. ஆன்மிகம் சார்ந்து ’அருள் பூமி’ இதழும், ஜோதிடம் சார்ந்து ‘ஜோதிட பூமி’ இதழும் வெளிவந்தன.
தினபூமி நிறுவனத்திலிருந்து மாத இதழாக 'சாம்பியன்' என்ற விளையாட்டு சார்ந்த இதழ் வெளிவந்தது. ஆன்மிகம் சார்ந்து 'அருள் பூமி' இதழும், ஜோதிடம் சார்ந்து 'ஜோதிட பூமி' இதழும் வெளிவந்தன.

== இணைய இதழ் ==
== இணைய இதழ் ==
Line 25: Line 25:
* [https://www.thinaboomi.com/ தினபூமி இணையதளம்]  

* தமிழ் இதழ்கள் - விடுதலைக்குப் பின்: முனைவர் வே. சசிகலா, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, முதல் பதிப்பு: 2006.

{{Ready for review}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Finalised}}
{{Fndt|20-Jul-2024, 09:25:24 IST}}

Latest revision as of 17:33, 22 November 2025

தினபூமி இதழ்

தினபூமி (1994) மதுரையில் தொடங்கப்பட்டு வெளிவந்த நாளிதழ். இதன் ஆசிரியர் எல். மணிமாறன்.

வெளியீடு

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு 1990 முதல் 'அதிர்ஷ்டம்' என்ற நாளிதழ் வெளிவந்தது. முழுக்க முழுக்க பரிசுச்சீட்டு, லாட்டரிச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த அந்த இதழின் விரிவாக, அக்டோபர் 14, 1994-ல், தினபூமி நாளிதழ் தொடங்கப்பட்டது. மதுரை மட்டுமல்லாமல், சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர், பாண்டிச்சேரியிலிருந்தும் அச்சானது. எல். மணிமாறன் இதன் நிறுவனர் மற்றும் ஆசிரியராகச் செயல்பட்டார்.

உள்ளடக்கம்

தினபூமி எட்டு பக்கங்களுடன், மூன்று ரூபாய் விலையில் வெளியானது. தின மற்றும் பூமி என்ற சொற்களுக்கிடையில் பூமியைக் குறிக்கும் வகையில் உலக உருண்டையின் படம் இடம்பெற்றது. அரசியல், சமூகம், விளையாட்டு, கல்வி, விவசாயம், ஜோதிடம், எண் கணிதம், திரைப்படம், உடல் நலம் சார்ந்த பல செய்திகளை வெளியிட்டது. பல்வேறு வண்ணப் படங்களுடன் வெளியான தினபூமி இதழ் விளம்பரங்களுக்கும் இடமளித்தது.

இணைப்பிதழ்கள்

தினபூமி தினந்தோறும் பல்வேறு இணைப்பிதழ்களை வெளியிட்டது. ஞாயிறு பூமி (ஞாயிறு), மருத்துவ பூமி (திங்கள்), மங்கையர் பூமி (செவ்வாய்), டி.வி. பூமி (புதன்), கதை பூமி (வியாழன்), ஆன்மீக பூமி (வெள்ளி), மாணவர் பூமி (சனி) ஆகிய இணைப்புக்களை வெளியிட்டது. விளையாட்டு பூமி, ஞாயிறு பூமி ஆகியன தனிப்புத்தகங்களாக வெளியிடப்பட்டன.

மாணவர் பூமி, வாழ்வியல் பூமி, வேளாண் பூமி ஆகிய சிறப்புப் பகுதிகள் வெளியாகின.

தினபூமி நிறுவனத்திலிருந்து மாத இதழாக 'சாம்பியன்' என்ற விளையாட்டு சார்ந்த இதழ் வெளிவந்தது. ஆன்மிகம் சார்ந்து 'அருள் பூமி' இதழும், ஜோதிடம் சார்ந்து 'ஜோதிட பூமி' இதழும் வெளிவந்தன.

இணைய இதழ்

தினபூமி, இணையத்தில் டிஜிடல் இதழாக வெளிவருகிறது.

மதிப்பீடு

மதுரையில் தொடங்கி குறுகிய காலத்தில் பரவலான வாசகப் பரப்பைப் பெற்ற இதழ் தினபூமி. கிரானைட் அத்துமீறல்கள் பற்றி பல விரிவான தகவல்களை வெளியிட்டது.

உசாத்துணை

  • தினபூமி இணையதளம்
  • தமிழ் இதழ்கள் - விடுதலைக்குப் பின்: முனைவர் வே. சசிகலா, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, முதல் பதிப்பு: 2006.

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Jul-2024, 09:25:24 IST