under review

மனவாசகங்கடந்தார்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors;)
 
(5 intermediate revisions by 3 users not shown)
Line 2: Line 2:


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
மனவாசகங்கடந்தார்‌ பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் ஏதும் அறியவரவில்லை. இவர்‌ திருவதிகையில் வாழ்ந்தவர்.  [[மெய்கண்டார்|மெய்கண்டாரின்‌]] 49 மாணாக்கர்களில் ஒருவர் என்பது பின்வரும் பாயிரச் செய்யுளிலிருந்து அறியவருகிறது.
மனவாசகங்கடந்தார் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இவர் திருவதிகையில் வாழ்ந்தவர்.  [[மெய்கண்டார்|மெய்கண்டாரின்]] 49 மாணாக்கர்களில் ஒருவர் என்பது பின்வரும் பாயிரச் செய்யுளிலிருந்து அறியவருகிறது.
<poem>
<poem>
“மன்னதிகை வாழும்‌ மனவாசங்கடந்தான்‌
"மன்னதிகை வாழும் மனவாசங்கடந்தான்
மின்னனைய வாழுவிலுரு மெய்கண்டான்‌ - பன்னுமறை  
மின்னனைய வாழுவிலுரு மெய்கண்டான் - பன்னுமறை  
வண்மை தரும்‌ ஆகமநூல்‌ வைத்த பொருள்‌ வழுவா  
வண்மை தரும் ஆகமநூல் வைத்த பொருள் வழுவா  
உண்மை விளக்கம்‌ செய்தான்‌ உற்று”
உண்மை விளக்கம் செய்தான் உற்று"
</poem>
</poem>
இப்பாயிரம்‌ இவ்வாசிரியரை மெய்கண்டாரின்‌ மாணாக்கர்‌ எனக்‌ குறிப்பிடுவதால்‌ சிவஞான சித்தியார்‌ அருளிய அருணந்ந்தி சிவாச்சாரியாரோடு இவர்‌ ஒருசாலை மாணக்கர்‌ ஆவர்‌ என்பது விளங்கும்‌. திருவதிகையில்‌ இவர்‌ பெயரால்‌ தெற்கு வீதியில்‌ ஒரு திருமடம்‌ உள்ளது. இவையன்றி இவரைப்‌ பற்றிய வேறு வரலாறு ஏதும்‌ தெரியவில்லை. இவர்‌ காலம்‌ மெய்கண்டாரின்‌ காலம்‌ பொ.யு..1232-க்கு அருகில்  என்பது ஆராய்ச்சியாளர்களின்‌ கருத்து.
இப்பாயிரம் இவ்வாசிரியரை மெய்கண்டாரின் மாணாக்கர் எனக் குறிப்பிடுவதால் சிவஞான சித்தியார் அருளிய [[அருணந்தி சிவாசாரியார்|அருணந்ந்தி சிவாச்சாரியாரோடு]] இவர் ஒருசாலை மாணக்கர் ஆவர் என்பது விளங்கும். திருவதிகையில் இவர் பெயரால் தெற்கு வீதியில் ஒரு திருமடம் உள்ளது. இவையன்றி இவரைப் பற்றிய வேறு வரலாறு ஏதும் தெரியவில்லை. இவர்  வாழ்ந்த காலம் மெய்கண்டாரின் காலமான பொ.யு.1232-க்கு அருகில்  என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.


== ஆன்மிக/இலக்கிய வாழ்க்கை ==
== ஆன்மிக/இலக்கிய வாழ்க்கை ==
மனவாசகங்கடந்தார் இயற்றிய சைவசித்தாந்த நூல் [[உண்மை விளக்கம்]]. சைவ சித்தாந்தத்தில் அறிய வேண்டிய உண்மைகளை விளக்கி கூறுவதால்‌ இப்பெயர்‌ எய்தியது. உண்மை என்பது பதி, பசு பாச உண்மைகளைக்‌ குறிப்பதாகும்‌. பல நூல்களைப்‌ படித்தறிந்து தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகளை இந்நூல்‌ இனிய தமிழில்‌ உணர்த்துகிறது.  மாணவரான மனவாசகங் கடந்தார் கேள்விகள் எழுப்ப, குருநாதர் மெய்கண்டார், அவ்வினாக்களுக்கு விடை கூறும் விதத்தில் இந்நூல் அமைந்துள்ளது.
மனவாசகங்கடந்தார் இயற்றிய சைவசித்தாந்த நூல் [[உண்மை விளக்கம்]]. சைவ சித்தாந்தத்தில் அறிய வேண்டிய பசு, பதி, பாசம் பற்றிய உண்மைகளை விளக்கிக் கூறுவதால் இப்பெயர் பெற்றது.  மாணவரான மனவாசகங் கடந்தார் கேள்விகள் எழுப்ப, குருநாதர் மெய்கண்டார், அவ்வினாக்களுக்கு விடை கூறும் விதத்தில் இந்நூல் அமைந்துள்ளது.


.நாடகம்‌ நடிக்கும்‌ ஒரு நடிகன்‌ தான்‌ எந்தச்‌ செயலை நடித்துக்‌ காட்டினும்‌, தன்‌ உண்மை நிலையில்‌ அவன்‌ மாறுபாடூ ஒன்றும்‌ அடையான்‌. இதுபோன்று இறைவனும்‌ தன்‌ செயல்களால்‌ தன்‌ உண்மை நிலையில்‌ ஒரு மாறுபாடூம்‌ இன்றி ்‌. ஒரே பெற்றித்தாய்‌ நிற்பவன்‌ ஆதலின்‌, அவனது செயல்கள்‌, நாடகம்‌ அல்லது நடனம்‌ எனப்‌ பெற்றன. இந்நாடகம்‌ ஊன நடனம்‌, ஞான நடனம்‌, ஆனந்த நடனம்‌ என மூவகைப்படும்
மெய்ப்பொருளாகிய இறைவனின் இயல்பையும் அந்த இறைவனிடத்து  அடங்கியுள்ள பசு பாசங்களின் இயல்பையும்  விளக்கும்  உண்மை விளக்கம். சிவஞானபோதம் முதலிய விரிவான சாத்திரங்களைக் கற்க  தொடக்க நூலாக அமைகிறது.
 
மெய்கண்டார், அருணந்தி சிவம் ஆகிய இருவரும் பதியை முதலில் வைத்துப் பாடியதுபோலல்லாமல்  மனவாசகங் கடந்தார் பாசத்தை முன் வைத்துப் பாசம், பசு, பதி என்ற முறையில் வரிசைப்படுத்தி விளக்குகிறார். நடராச தத்துவத்தை இந்நூலில் சிறப்பாக விளக்குகிறார்.


== பாடல் நடை ==
== பாடல் நடை ==
<poem>
<poem>
நாற்கோணம்‌ பூமிபுன னண்ணுமதீ யின்பாதி
நாற்கோணம் பூமிபுன னண்ணுமதீ யின்பாதி
யேற்குமனல்‌ முக்கோண மெப்போதும்‌ - ஆக்கும்‌
யேற்குமனல் முக்கோண மெப்போதும் - ஆக்கும்
அறுகோணங் கால்வட்ட மாகாய்‌ மான்மா
அறுகோணங் கால்வட்ட மாகாய் மான்மா
வுறுகாய மாமிவற்றா லுற்று
வுறுகாய மாமிவற்றா லுற்று
</poem>
</poem>


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://archive.org/details/unmai-vilakkam-2019/page/14/mode/1up?view=theater உண்மை விளக்கம்-மூலமும் உரையும், ஆர்கைவ் வலைத்தளம்]
[https://archive.org/details/20200722_20200722_1017 உண்மை விளக்கம்- ஆனந்தராசன் உரை,ஆர்கைவ் வலைத்தளம்]
{{Ready for review}}
 
 
{{Finalised}}
 
{{Fndt|10-Jun-2024, 09:41:20 IST}}
 
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:57, 22 November 2025

மனவாசகங்கடந்தார்(திருவதிகை மனவாசகங்கடந்தார்) (பொ.யு. 13-ம் நூற்றாண்டு) உண்மை விளக்கம் என்னும் சைவ சித்தாந்த நூலை இயற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

மனவாசகங்கடந்தார் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இவர் திருவதிகையில் வாழ்ந்தவர். மெய்கண்டாரின் 49 மாணாக்கர்களில் ஒருவர் என்பது பின்வரும் பாயிரச் செய்யுளிலிருந்து அறியவருகிறது.

"மன்னதிகை வாழும் மனவாசங்கடந்தான்
மின்னனைய வாழுவிலுரு மெய்கண்டான் - பன்னுமறை
வண்மை தரும் ஆகமநூல் வைத்த பொருள் வழுவா
உண்மை விளக்கம் செய்தான் உற்று"

இப்பாயிரம் இவ்வாசிரியரை மெய்கண்டாரின் மாணாக்கர் எனக் குறிப்பிடுவதால் சிவஞான சித்தியார் அருளிய அருணந்ந்தி சிவாச்சாரியாரோடு இவர் ஒருசாலை மாணக்கர் ஆவர் என்பது விளங்கும். திருவதிகையில் இவர் பெயரால் தெற்கு வீதியில் ஒரு திருமடம் உள்ளது. இவையன்றி இவரைப் பற்றிய வேறு வரலாறு ஏதும் தெரியவில்லை. இவர் வாழ்ந்த காலம் மெய்கண்டாரின் காலமான பொ.யு.1232-க்கு அருகில் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

ஆன்மிக/இலக்கிய வாழ்க்கை

மனவாசகங்கடந்தார் இயற்றிய சைவசித்தாந்த நூல் உண்மை விளக்கம். சைவ சித்தாந்தத்தில் அறிய வேண்டிய பசு, பதி, பாசம் பற்றிய உண்மைகளை விளக்கிக் கூறுவதால் இப்பெயர் பெற்றது. மாணவரான மனவாசகங் கடந்தார் கேள்விகள் எழுப்ப, குருநாதர் மெய்கண்டார், அவ்வினாக்களுக்கு விடை கூறும் விதத்தில் இந்நூல் அமைந்துள்ளது.

மெய்ப்பொருளாகிய இறைவனின் இயல்பையும் அந்த இறைவனிடத்து அடங்கியுள்ள பசு பாசங்களின் இயல்பையும் விளக்கும் உண்மை விளக்கம். சிவஞானபோதம் முதலிய விரிவான சாத்திரங்களைக் கற்க தொடக்க நூலாக அமைகிறது.

மெய்கண்டார், அருணந்தி சிவம் ஆகிய இருவரும் பதியை முதலில் வைத்துப் பாடியதுபோலல்லாமல் மனவாசகங் கடந்தார் பாசத்தை முன் வைத்துப் பாசம், பசு, பதி என்ற முறையில் வரிசைப்படுத்தி விளக்குகிறார். நடராச தத்துவத்தை இந்நூலில் சிறப்பாக விளக்குகிறார்.

பாடல் நடை

நாற்கோணம் பூமிபுன னண்ணுமதீ யின்பாதி
யேற்குமனல் முக்கோண மெப்போதும் - ஆக்கும்
அறுகோணங் கால்வட்ட மாகாய் மான்மா
வுறுகாய மாமிவற்றா லுற்று

உசாத்துணை

உண்மை விளக்கம்- ஆனந்தராசன் உரை,ஆர்கைவ் வலைத்தளம்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jun-2024, 09:41:20 IST