under review

வேணு. குணசேகரன்: Difference between revisions

From Tamil Wiki
(Page Created by ASN)
 
(Added First published date)
 
(4 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
[[File:Venu Gunasekaran.jpg|thumb|கவிஞர் வேணு. குணசேகரன்]]
[[File:Venu Gunasekarans.jpg|thumb|கவிஞர், எழுத்தாளர் வேணு. குணசேகரன்]]
வேணு. குணசேகரன் (1953) கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், திரைக்கதை-வசன ஆசிரியர், பாடலாசிரியர். பொது வாசிப்புக்குரிய நாவல்களையும் வரலாற்று நாவல்களையும் எழுதினார். இந்தியன் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றினார். அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.  
வேணு. குணசேகரன் (1953 -ஜனவரி 13, 2024) கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், திரைக்கதை-வசன ஆசிரியர், நாடக ஆசிரியர், பாடலாசிரியர். பொது வாசிப்புக்குரிய நாவல்களையும் வரலாற்று நாவல்களையும் எழுதினார். இந்தியன் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றினார். அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.  

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
வேணு. குணசேகரன், 1953-ம் ஆண்டு, சென்னையில், ப. வேணுகோபால் – சகுந்தலாம்மாள் இணையருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். பெரம்பூர் ஜமாலியா பள்ளியில் பள்ளிக் கல்வி கற்றார். சென்னை வைணவக் கல்லூரியில் பயின்று பி.காம். பட்டம் பெற்றார். பச்சையப்பன் கல்லூரியில் எம்.காம். முதுகலைப் பட்டம் பெற்றார். வங்கியியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பாகப் பயின்று சி.ஏ.ஐ.ஐ.பி. (CAIIB-Certified Associate of Indian Institute of Bankers) பட்டம் பெற்றார்.  

[[File:Venu Gunasekaran.jpg|thumb|வேணு. குணசேகரன்]]

== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
வேணு. குணசேகரன், இந்தியன் வங்கியில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: அரங்க நாயகி. மகள்கள்: பூர்ணிமா, சித்ரலேகா, அருண்பிரபா.  
வேணு. குணசேகரன், இந்தியன் வங்கியில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: அரங்க நாயகி. மகள்கள்: பூர்ணிமா, சித்ரலேகா, அருண்பிரபா.  
[[File:Book by Venu Gunasekaran.jpg|thumb|வேணு. குணசேகரன் நூல்கள்]]

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==

வேணு. குணசேகரன், கவிஞராக இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். 1972-ல் [[டி.கே.ஷண்முகம்|அவ்வை சண்முக]]த்தின் [[சி.சுப்ரமணிய பாரதியார்|பாரதி]] சங்கம் நடத்திய கல்லூரிகளுக்கான கவிதைப் போட்டியில் வேணு. குணசேகரனும் [[வைரமுத்து]]வும் பரிசு பெற்றனர். தொடர்ந்து [[கண்ணதாசன்]], குங்குமம், [[மாலை முரசு]], மத்தாப்பு, [[கல்கி (வார இதழ்)|கல்கி]], கவிக்கொண்டல், [[கலைமகள்]], கவிதை உறவு, முரசொலி போன்ற இதழ்களில் வேணு. குணசேகரனின் கவிதைகள் வெளியாகின.

வேணு. குணசேகரன், பல்வேறு கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதை வாசித்தார். பல கவியரங்குகளைத் தலைமை தாங்கி நடத்தினார். வேணு. குணசேகரனின் மெல்லிசைப் பாடல்கள், கதைகள் சில வானொலியில் ஒலிபரப்பாகின. பாடல்கள் சில ஒலிநாடாக்களாக வெளிவந்தன.

வேணு. குணசேகரன் பல இதழ்களில் சிறுகதை, தொடர்கதை, கட்டுரைகளை எழுதினார். களப்பிரர் காலத்தை மையமாக வைத்து வேணு. குணசேகரன் எழுதிய ‘பல்லக்குத் தூக்கிகள்’ வரலாற்று நாவல் குறிப்பிடத்தகுந்த ஒன்று. மூன்று பாகங்கள் கொண்ட இந்நாவல் 1100 பக்கங்களில் வெளியானது.

== இதழியல் ==
வேணு. குணசேகரன், தனது 15-ம் வயதில், ‘மத்தாப்பு’ என்னும் சிறுவர் இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார்.

== திரைப்படம் ==
வேணு. குணசேகரன், 1981-ல், ஊர்வசி ஷோபா நடித்த ’அன்புள்ள அத்தான்’ திரைப்படத்திற்குக் கதை, வசனம் எழுதினார்.

’ஸ்னேக்ஸ் ரிவஞ்ச்’ (Snake’s Revenge) – தாய்லாந்துத் திரைப்படத்தின் தமிழ் மொழி மாற்றத்திற்கு வசனம் எழுதினார் (2000)
[[File:Venu old.jpg|thumb|வேணு. குணசேகரன் இளவயதுப் படம்]]
== நாடகம் ==
வேணு. குணசேகரன் நாடகங்கள் பலவற்றை எழுதினார். அவற்றில் சில அகில இந்திய சென்னை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பாகின. ‘இந்தியன் வங்கி’ நடத்திய தென்மண்டல அனைத்து வங்கிகளுக்கான நாடகப் போட்டியில் வேணு. குணசேகரன் எழுதிய ‘அம்புகள்’ நாடகம் நான்கு பரிசுகளைப் பெற்றது. ’கல்யாணச் சந்தையிலே’ நாடகம் சென்னைத் தொலைக்காட்சியில் 1985-ல் வெளியானது. சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வாழ்க்கை’ - தொலைக்காட்சித் தொடருக்கு வசனம் எழுதினார். சன் தொலைக்காட்சியில் வெளியான, ‘கூடு விட்டு கூடு’ தொடருக்கு வசனம் எழுதினார். [[எம்.கே. தியாகராஜ பாகவதர்|எம்.கே.டி.பாகவதர்]] பற்றிய ஆவணப் படத்தைத் தயாரித்தார்
== அமைப்புச் செயல்பாடுகள் ==
வேணு. குணசேகரன் எழில் கலை மன்ற நிறுவனம் என்ற இலக்கிய அமைப்பை நிறுவி அதன் மூலம் பல இலக்கிய நிகழ்வுகளை முன்னெடுத்தார். ஆர்வமுள்ள பலருக்கு யாப்பிலக்கணப் பயிற்சி அளித்து அவர்களை மரபுக் கவிஞர்களாக்கினார்.
==பொறுப்புகள்==
*எழில் கலை மன்ற நிறுவனர்.
*`எழுத்துலகம்’ என்கிற இலக்கிய அமைப்பில் செயலாளராக கவிஞர் காவிரி நாடனுடன் இணைந்து செயல்பட்டார்.
==மறைவு==
வேணு. குணசேகரன், ஜனவரி 13, 2024 அன்று காலமானார்.
==விருதுகள்==
*1973-ல் சென்னை மாவட்ட அனைத்துக் கல்லூரிக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு.
*கலைமகள் மாத இதழ் நடத்திய அமரர் ராமரத்தினம் நினைவுக் கவிதைப் போட்டியில் வேணு. குணசேகரனின் ‘ஏழுவரி’ என்னும் வானவில் பற்றிய கவிதை பரிசு பெற்றது.
*கலைமகள் 2000-ம் ஆண்டு நடத்திய மரபுக் கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு.
*தினமலர் நாளிதழ் 2007-ல் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு.
*உலகத்தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்கா, அளித்த’ மதிப்புறு முனைவர்’ சிறப்புப் பட்டம் (2017)
*உருவகக் கவிஞர்
*பல்கலைக் குரிசில்
*பாசுரப் பாவலர்
==மதிப்பீடு==
வேணு. குணசேகரன் மரபில் தேர்ந்தவர். இலக்கிய நயங்களுடன் கூடிய பல கவிதைகளை இயற்றினார். பல இசைப் பாடல்களை எழுதினார். திரைப்படத்துறையிலும் பங்களித்தார். வேணு. குணசேகரனின் 'திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள்' குறிப்பிடத்தகுந்த நூலாகக் கருதப்படுகிறது. வேணு. குணசேகரன் இயல். இசை, நாடகம் என முத்தமிழிலும் பங்களித்தவராக அறியப்படுகிறார்.
==நூல்கள் ==
======நாவல்கள்======
*ஒரே உயிர்
*முத்தம் உனக்கல்ல
*பொன்வேலி
*பல்லக்குத் தூக்கிகள்
======சிறுகதைத் தொகுப்பு======
*பனிப்பாறைகள்
======காவியம்======
*போர்வாளும் பீரங்கியும்
*பாவேந்தரின் தன்மான வாழ்வினிலே
======கவிதை நூல்கள்======
*திருத்தமிழ்ப்பாவை (பாசுரங்கள்)
*குணக்குறள் (குறள்வெண்பாக்கள்)
======கட்டுரை நூல்======
*காலத்தை வென்ற கலைஞர்
==உசாத்துணை==
*[https://kavithai.fandom.com/ta/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81.%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D வேணு. குணசேகரன் வாழ்க்கைக் குறிப்பு மற்றும் படங்கள்]
*[http://www.akaramuthala.in/modernliterature/paadal/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-14/ வேணு. குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள்: அகர முதல் தளம்]

{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Finalised}}
{{Fndt|09-Jun-2024, 18:37:45 IST}}

Latest revision as of 15:57, 13 June 2024

கவிஞர், எழுத்தாளர் வேணு. குணசேகரன்

வேணு. குணசேகரன் (1953 -ஜனவரி 13, 2024) கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், திரைக்கதை-வசன ஆசிரியர், நாடக ஆசிரியர், பாடலாசிரியர். பொது வாசிப்புக்குரிய நாவல்களையும் வரலாற்று நாவல்களையும் எழுதினார். இந்தியன் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றினார். அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

வேணு. குணசேகரன், 1953-ம் ஆண்டு, சென்னையில், ப. வேணுகோபால் – சகுந்தலாம்மாள் இணையருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். பெரம்பூர் ஜமாலியா பள்ளியில் பள்ளிக் கல்வி கற்றார். சென்னை வைணவக் கல்லூரியில் பயின்று பி.காம். பட்டம் பெற்றார். பச்சையப்பன் கல்லூரியில் எம்.காம். முதுகலைப் பட்டம் பெற்றார். வங்கியியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பாகப் பயின்று சி.ஏ.ஐ.ஐ.பி. (CAIIB-Certified Associate of Indian Institute of Bankers) பட்டம் பெற்றார்.

வேணு. குணசேகரன்

தனி வாழ்க்கை

வேணு. குணசேகரன், இந்தியன் வங்கியில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: அரங்க நாயகி. மகள்கள்: பூர்ணிமா, சித்ரலேகா, அருண்பிரபா.

வேணு. குணசேகரன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

வேணு. குணசேகரன், கவிஞராக இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். 1972-ல் அவ்வை சண்முகத்தின் பாரதி சங்கம் நடத்திய கல்லூரிகளுக்கான கவிதைப் போட்டியில் வேணு. குணசேகரனும் வைரமுத்துவும் பரிசு பெற்றனர். தொடர்ந்து கண்ணதாசன், குங்குமம், மாலை முரசு, மத்தாப்பு, கல்கி, கவிக்கொண்டல், கலைமகள், கவிதை உறவு, முரசொலி போன்ற இதழ்களில் வேணு. குணசேகரனின் கவிதைகள் வெளியாகின.

வேணு. குணசேகரன், பல்வேறு கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதை வாசித்தார். பல கவியரங்குகளைத் தலைமை தாங்கி நடத்தினார். வேணு. குணசேகரனின் மெல்லிசைப் பாடல்கள், கதைகள் சில வானொலியில் ஒலிபரப்பாகின. பாடல்கள் சில ஒலிநாடாக்களாக வெளிவந்தன.

வேணு. குணசேகரன் பல இதழ்களில் சிறுகதை, தொடர்கதை, கட்டுரைகளை எழுதினார். களப்பிரர் காலத்தை மையமாக வைத்து வேணு. குணசேகரன் எழுதிய ‘பல்லக்குத் தூக்கிகள்’ வரலாற்று நாவல் குறிப்பிடத்தகுந்த ஒன்று. மூன்று பாகங்கள் கொண்ட இந்நாவல் 1100 பக்கங்களில் வெளியானது.

இதழியல்

வேணு. குணசேகரன், தனது 15-ம் வயதில், ‘மத்தாப்பு’ என்னும் சிறுவர் இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார்.

திரைப்படம்

வேணு. குணசேகரன், 1981-ல், ஊர்வசி ஷோபா நடித்த ’அன்புள்ள அத்தான்’ திரைப்படத்திற்குக் கதை, வசனம் எழுதினார்.

’ஸ்னேக்ஸ் ரிவஞ்ச்’ (Snake’s Revenge) – தாய்லாந்துத் திரைப்படத்தின் தமிழ் மொழி மாற்றத்திற்கு வசனம் எழுதினார் (2000)

வேணு. குணசேகரன் இளவயதுப் படம்

நாடகம்

வேணு. குணசேகரன் நாடகங்கள் பலவற்றை எழுதினார். அவற்றில் சில அகில இந்திய சென்னை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பாகின. ‘இந்தியன் வங்கி’ நடத்திய தென்மண்டல அனைத்து வங்கிகளுக்கான நாடகப் போட்டியில் வேணு. குணசேகரன் எழுதிய ‘அம்புகள்’ நாடகம் நான்கு பரிசுகளைப் பெற்றது. ’கல்யாணச் சந்தையிலே’ நாடகம் சென்னைத் தொலைக்காட்சியில் 1985-ல் வெளியானது. சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வாழ்க்கை’ - தொலைக்காட்சித் தொடருக்கு வசனம் எழுதினார். சன் தொலைக்காட்சியில் வெளியான, ‘கூடு விட்டு கூடு’ தொடருக்கு வசனம் எழுதினார். எம்.கே.டி.பாகவதர் பற்றிய ஆவணப் படத்தைத் தயாரித்தார்

அமைப்புச் செயல்பாடுகள்

வேணு. குணசேகரன் எழில் கலை மன்ற நிறுவனம் என்ற இலக்கிய அமைப்பை நிறுவி அதன் மூலம் பல இலக்கிய நிகழ்வுகளை முன்னெடுத்தார். ஆர்வமுள்ள பலருக்கு யாப்பிலக்கணப் பயிற்சி அளித்து அவர்களை மரபுக் கவிஞர்களாக்கினார்.

பொறுப்புகள்

  • எழில் கலை மன்ற நிறுவனர்.
  • `எழுத்துலகம்’ என்கிற இலக்கிய அமைப்பில் செயலாளராக கவிஞர் காவிரி நாடனுடன் இணைந்து செயல்பட்டார்.

மறைவு

வேணு. குணசேகரன், ஜனவரி 13, 2024 அன்று காலமானார்.

விருதுகள்

  • 1973-ல் சென்னை மாவட்ட அனைத்துக் கல்லூரிக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு.
  • கலைமகள் மாத இதழ் நடத்திய அமரர் ராமரத்தினம் நினைவுக் கவிதைப் போட்டியில் வேணு. குணசேகரனின் ‘ஏழுவரி’ என்னும் வானவில் பற்றிய கவிதை பரிசு பெற்றது.
  • கலைமகள் 2000-ம் ஆண்டு நடத்திய மரபுக் கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு.
  • தினமலர் நாளிதழ் 2007-ல் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு.
  • உலகத்தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்கா, அளித்த’ மதிப்புறு முனைவர்’ சிறப்புப் பட்டம் (2017)
  • உருவகக் கவிஞர்
  • பல்கலைக் குரிசில்
  • பாசுரப் பாவலர்

மதிப்பீடு

வேணு. குணசேகரன் மரபில் தேர்ந்தவர். இலக்கிய நயங்களுடன் கூடிய பல கவிதைகளை இயற்றினார். பல இசைப் பாடல்களை எழுதினார். திரைப்படத்துறையிலும் பங்களித்தார். வேணு. குணசேகரனின் 'திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள்' குறிப்பிடத்தகுந்த நூலாகக் கருதப்படுகிறது. வேணு. குணசேகரன் இயல். இசை, நாடகம் என முத்தமிழிலும் பங்களித்தவராக அறியப்படுகிறார்.

நூல்கள்

நாவல்கள்
  • ஒரே உயிர்
  • முத்தம் உனக்கல்ல
  • பொன்வேலி
  • பல்லக்குத் தூக்கிகள்
சிறுகதைத் தொகுப்பு
  • பனிப்பாறைகள்
காவியம்
  • போர்வாளும் பீரங்கியும்
  • பாவேந்தரின் தன்மான வாழ்வினிலே
கவிதை நூல்கள்
  • திருத்தமிழ்ப்பாவை (பாசுரங்கள்)
  • குணக்குறள் (குறள்வெண்பாக்கள்)
கட்டுரை நூல்
  • காலத்தை வென்ற கலைஞர்

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Jun-2024, 18:37:45 IST