under review

தச்சூர் ஆதிநாதர் கோயில்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(Added First published date)
 
Line 20: Line 20:
* தொண்டை நாட்டுச் சமணக் கோயில்கள் (டாக்டர்.ஏ. ஏகாம்பர நாதன்); 1991
* தொண்டை நாட்டுச் சமணக் கோயில்கள் (டாக்டர்.ஏ. ஏகாம்பர நாதன்); 1991
* [http://www.ahimsaiyatrai.com/2014/12/thatchur.html அகிம்சை யாத்திரை-தச்சூரர்]
* [http://www.ahimsaiyatrai.com/2014/12/thatchur.html அகிம்சை யாத்திரை-தச்சூரர்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 13:34:51 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சமணத் தலங்கள்]]
[[Category:சமணத் தலங்கள்]]

Latest revision as of 16:20, 13 June 2024

தச்சூர் ஆதிநாதர் கோயில் (நன்றி பத்மாராஜ்)

தச்சூர் ஆதிநாதர் கோயில் (பொ.யு. 16-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) திருவண்ணாமலை மாவட்டம் தச்சூரில் அமைந்த சமணக் கோயில்.

இடம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணியிலிருந்து பத்து கிலோமீட்டர் தெற்கில் தேவிகாபுரம் நோக்கிச் செல்லும் சாலையை ஒட்டி தச்சூர் அமைந்துள்ளது.

வரலாறு

பொ.யு. 16-ம் நூற்றாண்டில் ஆதிநாத தீர்த்தங்கரருக்கெனக் கோயில் ஒன்று கட்டப்பட்டது. காலப்போக்கில் இது மிகவும் பழுதுபட்டமையால் அண்மைக் காலத்தில் முற்றிலுமாகப் புதுப்பிக்கப்பட்டது.

அமைப்பு

தச்சூர் ஆதிநாதர்

இந்த கோயில் கருவறை, மண்டபம் ஆகிய இரு பகுதிகளை மட்டும் கொண்டது. கருவறை, மண்டபம், மகாமண்டபம், முகமண்டபம் ஆகியவை பழுதுபார்க்கப்பட்டு புதியதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. கருவறையிலும், அதனை அடுத்துள்ள மண்டபத்திலும் பொ.யு. 16-ம் நூற்றாண்டைய கட்டடக்கலையம்சங்களைக் காணலாம். இக்கோயிலின் கருவறை பிற இடங்களைப் போன்று உயரமாக அமைக்கப்படாமல் ஏழு அடி உயரத்தை மட்டும் கொண்டுள்ளது.

கருவறை, மண்டபம் ஆகியவற்றின் வெளிச்சுவர்களில் மாடங்கள் உள்ளன. இவற்றுள் சிற்பங்கள் எவையும் இல்லை. மாடங்களின் மேற் பகுதியில் சிற்றுருவக் கோயில் வகையாகிய சாலை அல்லது கூடம் போன்ற அமைப்புகள் இல்லை. அலங்கார வேலைப்பாடுகள் இல்லாத தோரணமும், அவற்றின் நடுவில் மனித வடிவங்களற்ற வட்டப் பகுதிகளும் உள்ளன. வெளிப்புறச் சுவர்களிலும் அரைத் தூண்களின் வடிவம் இல்லை. சிறிய கோயிலாகத் தோற்றுவிக்கப்பட்டிருப்பதால் பிற கோயில்களில் காணப்படும் அலங்காரக் கட்டடக் கலையம்சங்கள் இதில் அமைக்கப்படவில்லை.

தச்சூர் கோயில் நவகிரகங்கள்

கருவறையில் அமர்ந்த கோலத்திலுள்ள ஆதிநாதர் சிற்பமும் அவரின் தலைக்கு மேலாக முக்குடையும், அலங்கார பிரபையும் உள்ளன. இவரது மார்பில் புருஷலக்ஷணத்தைக் குறிக்கும் வகையில் முக்கோண வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தேவரின் இருபுறமும் சாமரம் வீசுவோர் சிறிய அளவில் உள்ளனர். இது பொ.யு. 16-ம் நூற்றாண்டைய கலைப்பாணியைச் சார்ந்தது.

கருவறையை அடுத்துள்ள மண்டபத்தில் தீர்த்தங்கரர், ஜுவாலமாலினி, பத்மாவதி, தருமதேவி ஆகியோரது சிற்பங்கள் உள்ளன. இவற்றுள் தீர்த்தங்கரர் சிற்பம் பொ.யு. 16-ம் நூற்றாண்டையும், யக்ஷியர் திருவுருவங்கள் அண்மைக் காலத்தையும் சார்ந்தவை. இந்த தீர்த்தங்கரர் மகாவீரரைக் குறிப்பதெனக் கூறப்படுகிறது இக்கோயிலில் ஆதிநாதர், யக்ஷன், யக்ஷி முதலியோரைக் குறிக்கும் உலோகத் திருமேனிகள் சிலவும் உள்ளன.

ஸ்ரீபாலவர்ணி

தச்சூர் கோயில் தீர்த்தங்கரர் பாதங்கள்

சித்தாமூர் மடத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்று நடத்தி வந்த ஸ்ரீபாலவர்ணி தச்சூரைச் சார்ந்தவர். இளமையிலிருந்தே சமண சாத்திரங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் சிரவண பெல்கோலாவிற்குச் சென்று சமயக் கல்வியினை கற்றுத் தேர்ந்து பின்னர் சமயப் பணியாற்றும் பொருட்டுச் சித்தாமூர் மடாதிபதிப் பொறுப்பை ஏற்றார். தமது காலத்தில் பல்வேறு சமணக் கோயில்களைப் புதுப்பித்தார். தச்சூரிலுள்ள கோயில் முற்றிலுமாகப் புதுப்பித்தார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:51 IST