under review

ஞானப்பிரகாச சுவாமிகள்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(Added First published date)
 
(One intermediate revision by the same user not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Gnanaprakasha Swami|Title of target article=Gnanaprakasha Swami}}
ஞானப்பிரகாச சுவாமிகள் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். சமஸ்கிருதத்திலும் தமிழிலும் புலமை பெற்றவர்.
ஞானப்பிரகாச சுவாமிகள் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். சமஸ்கிருதத்திலும் தமிழிலும் புலமை பெற்றவர்.

Line 27: Line 28:
* [http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 17 - 20-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா | யாழ்ப்பாணச் சரித்திரம் - நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1912) | சிற்றிலக்கியப் புலவர் அகராதி - ந.வீ.செயராமன் (1983) | இந்துக் கலைக்களஞ்சியம் - கலாகீர்த்தி பொ பூலோகசிங்கம் (1990)]

* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967]

{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 13:34:40 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 16:11, 13 June 2024

To read the article in English: Gnanaprakasha Swami. ‎

ஞானப்பிரகாச சுவாமிகள் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். சமஸ்கிருதத்திலும் தமிழிலும் புலமை பெற்றவர்.

(பார்க்க ஞானப்பிரகாசர்)

வாழ்க்கைக் குறிப்பு

ஞானப்பிரகாச சுவாமிகள் 16-ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் பிறந்தார். சிதம்பரத்தில் வாழ்ந்தார்.

போர்ச்சுகீசியர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் உணவுத்தேவைக்காக ஒவ்வொரு நாளும் ஒரு பசுவைக் கேட்டதால் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு சிதம்பரத்துக்குச் சென்றார். அங்கு சிறிது காலம் தங்கிய பின்னர், வங்காளம் (கௌட தேசம்) சென்றார். அங்கு வடமொழி பயின்ற பின் தமிழகம் திரும்பி வந்து திருவண்ணாமலை ஆதீனத்தில் சந்நியாசம் பெற்றார். திருவண்ணாமலையில் இருந்து பின்னர் சிதம்பரம் வந்தார். ஞானப்பிரகாச சுவாமிகள் சிதம்பரத்தில் ஞானப்பிரகாசம் என்னும் குளத்தினை வெட்டிக் கட்டினார்.

இலக்கிய வாழ்க்கை

சமஸ்கிருதத்திலும், தமிழிலும் பெரும் புலமை பெற்றவர். பல நூல்களை எழுதியுள்ளார். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் இவரது மரபில் பிறந்தவர். சிதம்பரத்தில் இருக்கும்போது பௌஷ்கர ஆகம விருத்தி, சிவஞானபோத விருத்தி ஆகிய நூல்களுக்கு உரை எழுதினார். சித்தாந்த சிகாமணி, பிரமாண தீபிகை, பிரசாத தீபிகை, அஞ்ஞான விவேசனம், சிவயோகசாரம், சிவயோக ரத்னம், சிவாகமாதி மாகான்மிய சங்கிரகம் போன்ற நூல்களை சமற்கிருதத்திலும், சிவஞான சித்தியார் உரை என்ற நூலைத் தமிழிலும் எழுதினார்.

மறைவு

ஞானப்பிரகாச சுவாமிகள் சிதம்பரத்தில் காலமானார்.

நூல்கள் பட்டியல்

பிள்ளைத்தமிழ்
  • செங்குந்தர் பிள்ளைத்தமிழ்
பிற
  • சித்தாந்த சிகாமணி
  • பிரமாண தீபிகை
  • பிரசாத தீபிகை
  • அஞ்ஞான விவேசனம்
  • சிவயோகசாரம்
  • சிவயோக ரத்னம்
  • சிவாகமாதி மாகான்மிய சங்கிரகம்

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:40 IST