நா.மம்மது: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
(Corrected Category:தமிழறிஞர்கள் to Category:தமிழறிஞர்) |
||
(One intermediate revision by the same user not shown) | |||
Line 30: | Line 30: | ||
*[https://rajagambeeran.blogspot.com/2011/01/blog-post_17.html ராஜகம்பீரன்: அறிந்து கொள்வோம் இவரை: தமிழிசை ஆய்வாளர் நா. மம்மது] | *[https://rajagambeeran.blogspot.com/2011/01/blog-post_17.html ராஜகம்பீரன்: அறிந்து கொள்வோம் இவரை: தமிழிசை ஆய்வாளர் நா. மம்மது] | ||
*https://ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua/82833/1/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.html | *https://ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua/82833/1/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.html | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|02-Nov-2023, 08:12:56 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category: | [[Category:தமிழறிஞர்]] |
Latest revision as of 13:55, 17 November 2024
நா. மம்மது (பிறப்பு: டிசம்பர் 24, 1946) தமிழிசை ஆய்வாளர், தமிழறிஞர். தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் பற்றிய ஆய்வுகளை செய்து வருபவர். தமிழிசைப் பேரகராதியை எழுதியவர்.
பிறப்பு, கல்வி
நா. மம்மது திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகிலுள்ள இடைகால் என்ற ஊரில் டிசம்பர் 24, 1946-ல் பிறந்தார். கணிதத்தில் இளங்கலைப் பட்டமும், தத்துவவியலில் முதுகலைப் பட்டமும், இசையில் எம்.ஃபில் பட்டமும் பெற்றார்.
தனிவாழ்க்கை
நா. மம்மது நெடுஞ்சாலைத் துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி 2004-ல் ஓய்வு பெற்றார். தற்போது மதுரையில் வசித்துவருகிறார்
இசை ஆய்வு
புகழ்பெற்ற தமிழிசை ஆய்வாளரான வீ. ப. கா. சுந்தரம் மம்மதுவின் இசை ஆசிரியர். நா. மம்மது மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழிசை ஆய்வு மையத்தில் முதன்மை ஆய்வாளராக பணியாற்றினார். தமிழிசையை தமிழ்ப்பண்பாட்டின் வெளிப்பாடாகக் கண்டு ஆராய்பவர். தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் பற்றிய ஆய்வுகளைத் தொடங்கி தமிழிசைப் பேரகராதியை உருவாக்கினார்.
(பார்க்க தமிழிசைப் பேரகராதி)
விருதுகள்
- தமிழக அரசின் பாரதியார் விருது (2010)
- எஸ். ஆர். எம். பல்கலைக்கழக தமிழ்ப் பேராயத்தின் முத்துத்தாண்டவர் தமிழிசை விருது (2012)
- வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் 'வாழ்நாள் சாதனையாளர் விருது' (2008)
- பொங்குதமிழ் அறக்கட்டளையின் "மக்கள் விருது" (2008)
- தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் பெரியார் விருது (2008)
- நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் தமிழ் இசைப்பணி விருது (2009)
- சென்னை சோமசுந்தரா் ஆகமப் பண்பாட்டு ஆய்வுமன்றம் வழங்கிய தமிழிசைத் தளபதி விருது (2012)
- அனைத்துலக இசுலாமியத் தமிழ் இலக்கிய விருது, கும்பகோணம் (2014)
நூல்கள்
- தமிழிசைப் பேரகராதி, சொற்களஞ்சியம் - இன்னிசை அறக்கட்டளை
- ஆபிரகாம் பண்டிதர் - சாகித்திய அகாதெமி
- தமிழிசை வேர்கள் - எதிர் வெளியீடு
- தமிழிசைத் தளிர்கள் - தமிழோசை பதிப்பகம்
- இழையிழையாய் இசைத் தமிழாய் - தென்திசை
- ஆதி இசையின் அதிர்வுகள் - வம்சி புக்ஸ்
- தமிழிசை வரலாறு - நாதன் பதிப்பகம்
உசாத்துணை
- நா. மம்மதுவுடனான ஜெயமோகன், வேதசகாயகுமார் ஆகியோரின் சந்திப்பு
- ராஜகம்பீரன்: அறிந்து கொள்வோம் இவரை: தமிழிசை ஆய்வாளர் நா. மம்மது
- https://ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua/82833/1/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.html
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
02-Nov-2023, 08:12:56 IST