under review

தென்றல் சிவக்குமார்: Difference between revisions

From Tamil Wiki
 
(7 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
[[File:தென்றல் சிவக்குமார்.jpg|thumb|275x275px|தென்றல் சிவக்குமார்]]
[[File:தென்றல் சிவக்குமார்.jpg|thumb|275x275px|தென்றல் சிவக்குமார்]]
தென்றல் சிவக்குமார் (தாமரைச் செல்வி) (பிறப்பு: ஆகஸ்ட் 23, 1977) கவிஞர், மொழிபெயர்ப்பாளர். இணைய இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.
தென்றல் சிவக்குமார் (தாமரைச் செல்வி) (பிறப்பு: ஆகஸ்ட் 23, 1977) கவிஞர், மொழிபெயர்ப்பாளர். இணைய இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== பிறப்பு, கல்வி ==
தென்றல் சிவக்குமார் ஆகஸ்ட் 23, 1977-ல் குமார், விஜயலட்சுமி இணையருக்கு மகளாக சென்னையில் பிறந்தார். சென்னையில் வெவ்வேறு பள்ளிகளில் பள்ளிக்கல்வி பயின்றார். பள்ளி இறுதி வகுப்பை கோடம்பாக்கம் ஃபாத்திமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். கோடம்பாக்கம் மீனாட்சி மகளிர் கல்லூரியில் இளங்கலை பி.காம் பயின்றார். ICWAI(Qualified Cost Accountant) முடித்திருக்கிறார்.

== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
தென்றல் அக்டோபர் 31, 1999-ல் சிவக்குமாரை மணந்தார். மகள் குமுதா. கணக்கியல் துறையில் சில சிறிய நிறுவனங்களில் 2002-ஆம் ஆண்டுவரை பணிபுரிந்தார். 2020-ல் ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் ஓராண்டு காலம் பணிபுரிந்தார்.
தென்றல் அக்டோபர் 31, 1999-ல் சிவக்குமாரை மணந்தார். மகள் குமுதா. கணக்கியல் துறையில் சில சிறிய நிறுவனங்களில் 2002-ம் ஆண்டுவரை பணிபுரிந்தார். 2020-ல் ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் ஓராண்டு காலம் பணிபுரிந்தார்.

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
தென்றல் சிவக்குமார் 2017 முதல் கவிதைகள் எழுதி வருகிறார். ’எனில்’ என்ற முதல் கவிதைத் தொகுப்பு 2019-ல் சந்தியா பதிப்பக வெளியீடாக வெளியானது. மறைந்த தாமரைச் செல்வி அவர்களின் பெயரில் பெயரில் மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார். 'ஆவியின் வாதை', 'சுரேஷ் ரெய்னா - அறுபத்து ஏழாவது அடி' ஆகிய மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. சாரு நிவேதிதாவுடன் இணைந்து 'முகமூடிகளின் பள்ளத்தாக்கு' மொழிபெயர்ப்பு செய்தார். தொடர்ந்து அச்சு மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள், மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறார், இலக்கிய நிகழ்வுகளில் உரை நிகழ்த்துகிறார். இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக கல்யாண்ஜியும் வண்ணதாசனும் என்று குறிப்பிடுகிறார். தமிழினி, யாவரும் ஆகிய இணைய இதழ்களிலும், கணையாழி போன்ற அச்சு இதழ்களிலும் கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் எழுதி வருகிறார்.
தென்றல் சிவக்குமார் 2017 முதல் கவிதைகள் எழுதி வருகிறார். ’எனில்’ என்ற முதல் கவிதைத் தொகுப்பு 2019-ல் சந்தியா பதிப்பக வெளியீடாக வெளியானது. தொடர்ந்து அச்சு மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார், இலக்கிய நிகழ்வுகளில் உரை நிகழ்த்துகிறார். 'ஆவியின் வாதை', 'சுரேஷ் ரெய்னா - அறுபத்து ஏழாவது அடி' ஆகிய மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. சாரு நிவேதிதாவுடன் இணைந்து 'முகமூடிகளின் பள்ளத்தாக்கு' நூலை மொழியாக்கம் செய்தார். மறைந்த தன் சித்தியான தாமரைச் செல்வியின் பெயரைப் புனைபெயராகக் கொண்டு மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார். இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் [[வண்ணதாசன்|கல்யாண்ஜியும் வண்ணதாசனும்]] என்று குறிப்பிடுகிறார். தமிழினி, யாவரும் ஆகிய இணைய இதழ்களிலும், கணையாழி போன்ற அச்சு இதழ்களிலும் கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் எழுதி வருகிறார்.

== விருது ==
== விருது ==
* 'முகமூடிகளின் பள்ளத்தாக்கு' நாவல் மொழிபெயர்ப்புக்காக 2021-ல் வாசகசாலை விருது.
* 'முகமூடிகளின் பள்ளத்தாக்கு' நாவல் மொழிபெயர்ப்புக்காக 2021-ல் வாசகசாலை விருது.
== இலக்கிய இடம் ==
* தென்றல் சிவக்குமார் கவிஞர், சிறுகதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்னும் நிலைகளில் இலக்கியப்பங்களிப்பாற்றியுள்ளார்.

== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
Line 24: Line 27:
* [https://tamizhini.in/2021/07/27/%e0%ae%89%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf/ உப்பு மலையின் நுனி: ஆத்மார்த்தியின் மிட்டாய் பசி: கட்டுரை: தமிழினி]

* [https://www.yaavarum.com/%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ கேள்விகளின் விரல்கள்: குட்டி ரேவதியின் விரல்கள் (சிறுகதைத் தொகுப்பு): கட்டுரை: யாவரும்]

* [https://www.youtube.com/watch?v=XwHFWc-nbGM தென்றல் சிவக்குமார் - பிரபாகரன் சண்முகநாதன்]
* [https://uyirmmai.com/literature/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4/ தென்றல் சிவக்குமார் கவிதைகள் உயிர்மை]
* [https://tamizhini.in/author/thendral-sivakumar/ தென்றல் சிவக்குமார் தமிழினி]
* [https://nutpam.site/poems/7801/ தென்றல் சிவக்குமார் நுட்பம் இணையப்பக்கம்]
* [https://www.youtube.com/watch?v=1b6K1w1a-mU தென்றல் சிவக்குமார் உரை]
{{Finalised}}
{{Fndt|13-Nov-2023, 06:17:34 IST}}

{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 18:29, 17 June 2024

தென்றல் சிவக்குமார்

தென்றல் சிவக்குமார் (தாமரைச் செல்வி) (பிறப்பு: ஆகஸ்ட் 23, 1977) கவிஞர், மொழிபெயர்ப்பாளர். இணைய இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

தென்றல் சிவக்குமார் ஆகஸ்ட் 23, 1977-ல் குமார், விஜயலட்சுமி இணையருக்கு மகளாக சென்னையில் பிறந்தார். சென்னையில் வெவ்வேறு பள்ளிகளில் பள்ளிக்கல்வி பயின்றார். பள்ளி இறுதி வகுப்பை கோடம்பாக்கம் ஃபாத்திமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். கோடம்பாக்கம் மீனாட்சி மகளிர் கல்லூரியில் இளங்கலை பி.காம் பயின்றார். ICWAI(Qualified Cost Accountant) முடித்திருக்கிறார்.

தனிவாழ்க்கை

தென்றல் அக்டோபர் 31, 1999-ல் சிவக்குமாரை மணந்தார். மகள் குமுதா. கணக்கியல் துறையில் சில சிறிய நிறுவனங்களில் 2002-ம் ஆண்டுவரை பணிபுரிந்தார். 2020-ல் ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் ஓராண்டு காலம் பணிபுரிந்தார்.

இலக்கிய வாழ்க்கை

தென்றல் சிவக்குமார் 2017 முதல் கவிதைகள் எழுதி வருகிறார். ’எனில்’ என்ற முதல் கவிதைத் தொகுப்பு 2019-ல் சந்தியா பதிப்பக வெளியீடாக வெளியானது. தொடர்ந்து அச்சு மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார், இலக்கிய நிகழ்வுகளில் உரை நிகழ்த்துகிறார். 'ஆவியின் வாதை', 'சுரேஷ் ரெய்னா - அறுபத்து ஏழாவது அடி' ஆகிய மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. சாரு நிவேதிதாவுடன் இணைந்து 'முகமூடிகளின் பள்ளத்தாக்கு' நூலை மொழியாக்கம் செய்தார். மறைந்த தன் சித்தியான தாமரைச் செல்வியின் பெயரைப் புனைபெயராகக் கொண்டு மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார். இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் கல்யாண்ஜியும் வண்ணதாசனும் என்று குறிப்பிடுகிறார். தமிழினி, யாவரும் ஆகிய இணைய இதழ்களிலும், கணையாழி போன்ற அச்சு இதழ்களிலும் கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் எழுதி வருகிறார்.

விருது

  • 'முகமூடிகளின் பள்ளத்தாக்கு' நாவல் மொழிபெயர்ப்புக்காக 2021-ல் வாசகசாலை விருது.

இலக்கிய இடம்

  • தென்றல் சிவக்குமார் கவிஞர், சிறுகதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்னும் நிலைகளில் இலக்கியப்பங்களிப்பாற்றியுள்ளார்.

நூல் பட்டியல்

கவிதை
  • எனில் (2019, சந்தியா பதிப்பகம்)
மொழிபெயர்ப்பு
  • முகமூடிகளின் பள்ளத்தாக்கு (சாரு நிவேதிதாவுடன் இணைந்து) (2021, ஸீரோ டிகிரி-எழுத்துப் பிரசுரம்)
  • ஆவியின் வாதை - வங்கதேசச் சிறுகதைகள்(2021, ஸீரோ டிகிரி-எழுத்துப் பிரசுரம்)
  • சுரேஷ் ரெய்னா-அறுபத்து ஏழாவது அடி (2021, ஸீரோ டிகிரி-எழுத்துப் பிரசுரம்)

இணைப்புகள்

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Nov-2023, 06:17:34 IST