under review

மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
 
(One intermediate revision by one other user not shown)
Line 41: Line 41:
* [http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/narrinai/narrinai388.html#.Ym-4b9pBzIU தமிச்சுரங்கம்-நற்றிணை-]388
* [http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/narrinai/narrinai388.html#.Ym-4b9pBzIU தமிச்சுரங்கம்-நற்றிணை-]388
* [http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru247.html#.Ym-4ItpBzIU வைரத்தமிழ்-அகநானூறு-]247
* [http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru247.html#.Ym-4ItpBzIU வைரத்தமிழ்-அகநானூறு-]247
{{First review completed}}
 
 
{{Finalised}}
 
{{Fndt|26-Oct-2023, 12:13:05 IST}}
 
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 16:28, 13 June 2024

மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய மூன்று பாடல்கள் அக நானூற்றிலும்(2) ,நற்றிணையிலும்(1) உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரையில் மருதங்கிழாரின் மகனாகப் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

எட்டுத்தொகை நூல்களில் இவரது பாடல்கள் மூன்று உள்ளன. அகநானூற்றில்(247, 364) இரண்டும், நற்றிணை(388) ஒரு பாடலும் உள்ளது. அகநானூற்றில் பாலைத்திணை, முல்லைத்திணைப் பாடலகளும், நற்றிணையில் நெய்தல் திணைப்பாடலும் பாடினார்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

நெய்தல் திணையின் தொழில்: கடல்வேட்டம் உடைய பரதவர், உறுதியான படகில் வலிய வலைகளையும், பலபுரி சேர்த்து முறுக்கப் பெற்ற பெருங்கயிற்று நுனியில் கட்டப்பெற்ற பெரிய திமிங்கலத்தை எறிய வல்ல பெரிய ஈட்டிகளையும் வைத்துக் கொண்டும், பேரொளி தரும் விளக்குகளைக் கொளுத்திக் கொண்டும் இரவின் நடு யாமத்தில் கடல் மேல் சென்று நிறைய மீன்களை நிறையக் கைகொண்டு விடியற்காலையில் கரையேறி, கடற்கரைச் சோலைகளில், புன்னை மரத்தின் நிழல்களில் தம் சுற்றத்தாரோடு கள்ளுண்டு மகிழ்வர்.

பாடல் நடை

  • அகநானூறு: 247

மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை
நல் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர்
அருள் இலர் வாழி, தோழி! பொருள் புரிந்து,
இருங் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை,
கருங் கோட்டு இருப்பை வெண் பூ முனையின்,
பெருஞ் செம் புற்றின் இருந் தலை இடக்கும்
அரிய கானம் என்னார், பகை பட
முனை பாழ்பட்ட ஆங்கண், ஆள் பார்த்துக்
கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும்
ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி,
படு முடை நசைஇய பறை நெடுங் கழுத்தின்
பாறு கிளை சேக்கும் சேண் சிமைக்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.

  • நற்றிணை: 388

அம்ம வாழி, தோழி!- நன்னுதற்கு
யாங்கு ஆகின்றுகொல் பசப்பே- நோன் புரிக்
கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித்
திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ,
நடு நாள் வேட்டம் போகி, வைகறைக்
கடல் மீன் தந்து, கானற் குவைஇ,
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து,
தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி,
பெரிய மகிழும் துறைவன் எம்
சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே?

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Oct-2023, 12:13:05 IST