under review

வீ. அப்பாச்சாமி முதலியார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
Line 25: Line 25:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/3 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/3 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|11-Oct-2023, 05:59:40 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 16:25, 13 June 2024

வீ. அப்பாச்சாமி முதலியார் (பொ.யு. 1906) தமிழ்ப்புலவர். சைவ சமயப் பற்றாளர். சுத்தாத்வித சைவ சித்தாந்த பரபோதம் இவரின் முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

வீ. அப்பாச்சாமி முதலியார் சென்னை பொன்னேரிக்கு அருகேயுள்ள கள்ளிப்புத்தூர் வேளாளர் குலத்தில் வீராச்சாமி முதலியாருக்கு மகனாகப் பிறந்தார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றார். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார். மாவட்டத்தலைவர் அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளராக இருந்தார். சிதம்பரம், விருத்தாச்சலத்தில் தாசில்தாராக வேலை பார்த்தார்.தில்லை கூத்தாண்டவர் மீது பக்தி கொண்டிருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

வீ. அப்பாச்சாமி முதலியார் செய்யுள்கள் பல இயற்றினார். சிவபெருமானின் இலக்கணம், ஆன்ம இலக்கணம், பதிபாசுச இலக்கணம் ஆகியவற்றை ஆராய்ந்து 'சுத்தாத்வித சைவ சித்தாந்த பரபோதம்' என்னும் நூலை எழுதினார். இந்நூலில் ஞானானந்த ரசப்பிரசங்கம், வேதாந்த ஞானசார போதனை, ஞானோபதேச ரத்தினாவளி என மூன்று பிரிவுகளாக உள்ளன.

சிறப்புப்பாயிரம் பாடியவர்கள்

சுத்தாத்வித சைவ சித்தாந்த பரபோதம் நூலைப் பாராட்டி சிறப்புப்பாயிரம் பாடியவர்கள்.

  • சித்தாந்த சாபம் அட்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியார்
  • திருநெல்வேலி புதுத் தெற்குத்தெரு கவிராச நெல்லையப்பபிள்ளை
  • திருவில்லிபுத்தூர் தையல்பாகம்பிள்ளை
  • அய்யம்பட்டிப் புலவர் பொன்னுச் செட்டியார்
  • மே.சொ. சுப்பிரமணியக்கவி

பாடல் நடை

சீர்பூத்த இடப்பாலும் வலப்பாலும்
அரியயர்கள் செவ்வே நின்று
பார்பூத்த தண்ணுமைதா எங்கொண்டு
கனிமுழக்கிப் பரவி சிற்க
ஏர்பூத்த பொற்சபையில் சிவகாமி
களிக்காடம் என்றுஞ் செய்யும்
தார்பூத்த நடராசன் குஞ்சிதசே

நூல் பட்டியல்

  • சுத்தாத்வித சைவ சித்தாந்த பரபோதம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Oct-2023, 05:59:40 IST