மங்கையர் மலர்: Difference between revisions
No edit summary |
(Corrected typo errors;) |
||
| (3 intermediate revisions by the same user not shown) | |||
| Line 14: | Line 14: | ||
நவராத்திரி, பொங்கல் , தீபாவளி, புத்தாண்டு என விழாக் காலங்களிலும், திருமண ஸ்பெஷல், சுற்றுலா ஸ்பெஷல் என மங்கையர் மலருடன் இலவச இணைப்பாக துணை இதழ்களும் வெளியிடப்பட்டன. இவை கட்டுரை, துணுக்குகள், சமையல் குறிப்பு, அழகுக் குறிப்பு, பெண் கல்வி, சிறுகதை போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டு மூல இதழின் அமைப்பிலேயே வெளிவந்தன | நவராத்திரி, பொங்கல் , தீபாவளி, புத்தாண்டு என விழாக் காலங்களிலும், திருமண ஸ்பெஷல், சுற்றுலா ஸ்பெஷல் என மங்கையர் மலருடன் இலவச இணைப்பாக துணை இதழ்களும் வெளியிடப்பட்டன. இவை கட்டுரை, துணுக்குகள், சமையல் குறிப்பு, அழகுக் குறிப்பு, பெண் கல்வி, சிறுகதை போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டு மூல இதழின் அமைப்பிலேயே வெளிவந்தன | ||
== இலக்கிய இடம் == | == இலக்கிய இடம் == | ||
"மகளிரை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தல், பொதுப் பணியில் ஈடுபட வைக்கத் துணைநிற்றல், மகளிர் பலரைப் படைப்பாளராக்கி ஊக்கம் தருதல், பல்வேறு படைப்பாக்கங்களில் மகளிரைப் பங்கு கொள்ளச்செய்தல், பிரச்சினைகளை எதிர்த்து ஆக்கபூர்வமாகச் செயல்படுதல் போன்ற பணிகளை இதழில் முன்னிருத்தியது" என மங்கையர் மலரின் முக்கியத்துவம் குறித்து முனைவர் சா. கீதா குறிப்பிடுகிறார். | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://archive.org/stream/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0005864/TVA_BOK_0005864_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_djvu.txt மகளிர் இதழ்கள்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம்: இதழியல் ஆய்வு தொகுதி 9: முனைவர் சா. கிருட்டினமூர்த்தி] | * [https://archive.org/stream/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0005864/TVA_BOK_0005864_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_djvu.txt மகளிர் இதழ்கள்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம்: இதழியல் ஆய்வு தொகுதி 9: முனைவர் சா. கிருட்டினமூர்த்தி] | ||
* [https://kalkionline.com/our-magazines/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-1981#:~:text=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D,%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D யாதுமாகி நிற்பாள் மங்கையர் மலர் | * [https://kalkionline.com/our-magazines/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-1981#:~:text=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D,%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D யாதுமாகி நிற்பாள் மங்கையர் மலர் - 1981: கல்கி ஆன்லைன்.காம்] | ||
* மங்கையர் மலர் புனைகதைகள் ஓர் ஆய்வு (1990), எம்ஃபில் பட்ட ஆய்வேடு, ச. கீதா, சென்னை, 1991. | * மங்கையர் மலர் புனைகதைகள் ஓர் ஆய்வு (1990), எம்ஃபில் பட்ட ஆய்வேடு, ச. கீதா, சென்னை, 1991. | ||
* காலச் சூழலில் பெண், முனைவர் ச. சிவகாமி, மாதவி பதிப்பகம், சென்னை, 1996. | * காலச் சூழலில் பெண், முனைவர் ச. சிவகாமி, மாதவி பதிப்பகம், சென்னை, 1996. | ||
| Line 24: | Line 24: | ||
== இணைப்புகள் == | == இணைப்புகள் == | ||
* [https://kalkionline.com/about-us மங்கையர்மலர்: வலைதளம்] | * [https://kalkionline.com/about-us மங்கையர்மலர்: வலைதளம்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|23-Sep-2023, 08:29:19 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category: | [[Category:பெண் இதழ்]] | ||
[[Category: | [[Category:இதழ்]] | ||
Latest revision as of 15:57, 22 November 2025
மங்கையர் மலர் (பிப்ரவரி, 1981) பெண்களுக்கான தமிழ் மாத இதழாக ஆரம்பித்து இணைய இதழாக கல்கி குழுமத்தில் இருந்து வெளிவருகிறது. பெண்களுக்கான கதை கட்டுரைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டது.
வெளியீடு
மங்கையர் மலர் இதழ் கல்கி குழுமத்தில் இருந்து 1981 முதல் மாத இதழாக வெளிவந்தது. பரதன் பப்ளிகேஷன்ஸ் நிறுவன வெளியீடு (Bharathan Publications in Chennai, Tamilnadu).
இதழ் வரலாறு
1981-ல் கல்கி குழுமத்தின் நிர்வாக இயக்குநராகவும், கல்கி இதழின் ஆசிரியராகவும் இருந்த 'கல்கி' ராஜேந்திரன் சிறிய அளவில் வெளிவந்து கொண்டிருந்த மங்கையர் மலரை எடுத்து நடத்த முடிவு செய்தார். 1981 தொடங்கி இருபத்து நான்கரை ஆண்டுகள் மஞ்சுளா ரமேஷ் மங்கையர் மலரின் ஆசிரியராக இருந்தார். மஞ்சுளா ரமேஷ்க்குப் பிறகு ரேவதி சங்கரன் ஒரு வருட காலம் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அதன்பின் பத்தாண்டுகளுக்கும் மேலாக கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பேத்தியும், கல்கி ராஜேந்திரனின் இரண்டாவது மகளுமான லக்ஷ்மி நடராஜன் மங்கையர் மலரின் ஆசிரியராக இருந்தார்.
மங்கையர் மலர் பிப்ரவரி, 2013 முதல் புதிய வடிவமாற்றத்துடன் வெளிவந்தது. செப்டெம்பர், 2013 முதல் 'மாதம் இருமுறை' இதழாக வந்தது. 2015 முதல் எஸ். மீனாட்சி பொறுப்பாசிரியராக இருந்தார். செப்டெம்பர் 2021 முதல் மங்கையர் மலர் www.kalkionline.com இணையதளத்தில் கல்கி குழுமம் வெளியிடும் மின்னிதழாக வெளிவருகிறது. தற்போது இணைய இதழின் மூன்று வருட சந்தா இந்திய ரூபாய் 7000/-.
உள்ளடக்கம்
மங்கையர் மலரின் உள்ளடக்கம் சமூகநலம், பொருளாதாரம், சமயம், மருத்துவம், கலை, விளையாட்டு, சமையல், மகளிர் வாழ்வியல், மகளிர் சிறப்பு, மகளிர் சந்திக்கும் பிரச்சினைகள், மகளிர்க்கான பொழுதுபோக்கு, மகளிர்க்கான ஆலோசனை, அழகுக்குறிப்பு, உடை, நகை, இசை, நாடகம், நாட்டியம், கைத்தொழில் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தது
கட்டுரைகள்
மகளிருக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் கட்டுரைகள், சமுதாயத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கான கருத்துகள், தன் வாழ்வில் அவ்வாறு முன்னேறியவர்களின் பட்டறிவையும் பகிர்ந்து கொள்ளும் நேர்காணல்கள், மகளிருக்குப் பயன்படும் மருத்துவக் குறிப்புகள் போன்றவை வெளிவந்தன. சமூக நலம், பொருளாதாரம், கலை, விளையாட்டு, சமயம் போன்றவை சார்ந்த கட்டுரைகள் வெளிவந்தன.
இலவச இணைப்பு
நவராத்திரி, பொங்கல் , தீபாவளி, புத்தாண்டு என விழாக் காலங்களிலும், திருமண ஸ்பெஷல், சுற்றுலா ஸ்பெஷல் என மங்கையர் மலருடன் இலவச இணைப்பாக துணை இதழ்களும் வெளியிடப்பட்டன. இவை கட்டுரை, துணுக்குகள், சமையல் குறிப்பு, அழகுக் குறிப்பு, பெண் கல்வி, சிறுகதை போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டு மூல இதழின் அமைப்பிலேயே வெளிவந்தன
இலக்கிய இடம்
"மகளிரை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தல், பொதுப் பணியில் ஈடுபட வைக்கத் துணைநிற்றல், மகளிர் பலரைப் படைப்பாளராக்கி ஊக்கம் தருதல், பல்வேறு படைப்பாக்கங்களில் மகளிரைப் பங்கு கொள்ளச்செய்தல், பிரச்சினைகளை எதிர்த்து ஆக்கபூர்வமாகச் செயல்படுதல் போன்ற பணிகளை இதழில் முன்னிருத்தியது" என மங்கையர் மலரின் முக்கியத்துவம் குறித்து முனைவர் சா. கீதா குறிப்பிடுகிறார்.
உசாத்துணை
- மகளிர் இதழ்கள்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம்: இதழியல் ஆய்வு தொகுதி 9: முனைவர் சா. கிருட்டினமூர்த்தி
- யாதுமாகி நிற்பாள் மங்கையர் மலர் - 1981: கல்கி ஆன்லைன்.காம்
- மங்கையர் மலர் புனைகதைகள் ஓர் ஆய்வு (1990), எம்ஃபில் பட்ட ஆய்வேடு, ச. கீதா, சென்னை, 1991.
- காலச் சூழலில் பெண், முனைவர் ச. சிவகாமி, மாதவி பதிப்பகம், சென்னை, 1996.
- தமிழ் இதழியல் வரலாறு, மா.சு. சம்பந்தன், தமிழர் பதிப்பகம், சென்னை, 1987.
- மங்கையர் மலர்- சோஷியல் வில்லேஜ் தளம்
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
23-Sep-2023, 08:29:19 IST
