வஸ்தியாம்பிள்ளை ஜேக்கப்: Difference between revisions
No edit summary |
(Corrected Category:நாடகக் கூத்துக் கலைஞர்கள் to Category:நாடகக் கூத்துக் கலைஞர்) |
||
(3 intermediate revisions by the same user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=ஜேக்கப்|DisambPageTitle=[[ஜேக்கப் (பெயர் பட்டியல்)]]}} | |||
[[File:வஸ்தியாம்பிள்ளை ஜேக்கப்.jpg|thumb|வஸ்தியாம்பிள்ளை ஜேக்கப் ]] | [[File:வஸ்தியாம்பிள்ளை ஜேக்கப்.jpg|thumb|வஸ்தியாம்பிள்ளை ஜேக்கப் ]] | ||
வஸ்தியாம்பிள்ளை ஜேக்கப் (அல்பிரட்) (பிறப்பு: டிசம்பர் 7, 1939) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். இசை நாடகங்கள், நாட்டுக்கூத்து என ஆயிரம் மேடைகள் கண்ட கலைஞர். | வஸ்தியாம்பிள்ளை ஜேக்கப் (அல்பிரட்) (பிறப்பு: டிசம்பர் 7, 1939) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். இசை நாடகங்கள், நாட்டுக்கூத்து என ஆயிரம் மேடைகள் கண்ட கலைஞர். | ||
Line 59: | Line 60: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://noolaham.net/project/75/7475/7475.pdf "இசை நாடகக் கூத்து - மூத்த கலைஞர் வரலாறு" செல்லையா - மெற்றாஸ்மயில்] | * [https://noolaham.net/project/75/7475/7475.pdf "இசை நாடகக் கூத்து - மூத்த கலைஞர் வரலாறு" செல்லையா - மெற்றாஸ்மயில்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|18-Sep-2023, 00:31:39 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:நாடகக் கூத்துக் | [[Category:நாடகக் கூத்துக் கலைஞர்]] |
Latest revision as of 18:09, 17 November 2024
- ஜேக்கப் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஜேக்கப் (பெயர் பட்டியல்)
வஸ்தியாம்பிள்ளை ஜேக்கப் (அல்பிரட்) (பிறப்பு: டிசம்பர் 7, 1939) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். இசை நாடகங்கள், நாட்டுக்கூத்து என ஆயிரம் மேடைகள் கண்ட கலைஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
அல்பிரட் இலங்கை யாழ்ப்பாணம் பாஷையூரில் டிசம்பர் 7, 1939-ல் புகழ்பெற்ற அண்ணாவியார் ஞானப்பு-வஸ்தியாம்பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார்.
கலை வாழ்க்கை
வஸ்தியாம்பிள்ளை பதின்மூன்று வயதில் 'புனிதவதி' நாட்டுக்கூத்தில் நடித்தார். 1953 முதல் நாற்பத்தியாறு ஆண்டுகள் கலைத்துறையில் பங்காற்றினார். நாட்டுக்கூத்து, நாடகம், இசை நாடகம் அரங்கேற்றினார். மிருதங்கம் வாசித்தலில் திறமை கொண்டிருந்தார். புதியவர்களைக் கொண்டு நாட்டுக்கூத்தையும் நாடகத்தையும் அரங்கேற்றினார். நாட்டுக்கூத்தில் ஆறரை கட்டை சுருதியில் வீரம், காதல், பாட்டுக்களை பாடக்கூடிய குரல்வளம் கொண்டவர். 'கண்டியரசன்' கூத்தில் இவரில் அரசன் வேடம் பாராட்டப்பட்டது. ஆயிரம் மேடைகளைக் கண்ட கலைஞர்.
கலைப்பணியில் யாழ் திருமறைக் கலாமன்றத்தில் நாட்டுக் கூத்து, இசை நாடகங்கள் பழக்குவதிலும், மிருதங்கம் வாசிப்பதிலும் பங்களிப்பு செய்ததுடன், பல பாடசாலைகள், பாடசாலை மன்றங்களில் நாடகம் பழக்குவதிலும் வானொலி, ரூபவாகினியிலும் பலகலை அரங்குகளிலும் தன் கலைச் சிறப்பினை வெளிப்படுத்தி மக்களின் பாராட்டைப் பெற்றார். பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகத்தில் நாட்டுக்கூத்து நிரந்தர மிருதங்க வித்துவானாக பணியாற்றினார்.
விருது
- ஆயர் தியோப்பிள்ளை "தேசிய கலை வேந்தன்" பட்டம் சூட்டினார்.
- ஜூன் 22, 1977-ல் தேவசகாயம்பிள்ளை நாடகத்தில் அதிகாரியாக நடித்ததைக் கெளரவித்து 'நாடக மாமன்னர்' பட்டம் வண பிதா குலாஸ் அடிகளால் கொய்யாத்தோட்ட கிறிஸ்து அரசர் முன்றலில் அளிக்கப்பட்டது.
- மன்னனாக அக்டோபர் 2, 1990-ல் வீரபாண்டிய கட்டப்பொம்மன் நடித்ததை பாராட்டி பேராசிரியர் யுகபாலசிங்கம் அவர்களால் ஈச்சமோட்டை ச.ச. நிலைய முன்றலில் பொன்னாடை போர்த்தி கௌரவித்து எழிலிசை மன்னன்" பட்டம் சூட்டப்பட்டது .
- 1993-ல் திருமறைக் கலாமன்றம் அண்ணாவிமார்களைக் கௌரவித்த மன்ற இயக்குனர் வண.பிதா.மரியசேவியர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
நடித்த நாடகங்கள், பாத்திரங்கள்
- புனிதவதி - அரசன், துற்குணன்
- வித்தியானந்தன் - வித்தியானந்தன்
- ஞானசவுந்தரி - பிலேந்திரன்
- கண்டி அரசன் - கண்டியரசன்
- சந்தியோமையர் - யாகப்பர்
- வீரத்தளபதி - வீரத்தளபதி
- சற்குணானந்தன் - சுதன்
- அந்தோனியார் - லெவ்வை
- கலாவதி - சீசன்
- சகோதரபாசம் - கள்ளன்
- கிளியோபெற்றா - யூலியசீசர்
- யோசவ்வாஸ் - யோசவ்வாஸ்
- கனகசபை - கொர்னல்
- சங்கிலியன் - சங்கிலியன்
- இம்மனுவல் - இம்மனுவல்
- பண்டாரவன்னியன் - பண்டாரவன்னியன்
- யூலியசீசர் - யூலியசீசர்
- சவேரியார் - சவேரியார்
- பவுலினப்பர் - பவுலினப்பர்
- செனகப்பு - அரசன்
- தேவசகாயம்பிள்ளை - அரசன் அதிகாரி
- கற்பலக்காரன் - அரசன்
- விசயமனோகரன் - விசயமனோகரன்
- தியாகராகம் - தளபதி
- மயானகாண்டம் - அரசன்
- சஞ்சுவான் - அருளப்பர்
- படைவெட்டு - சந்தியோமையர்
- செந்தூது - யாகப்பர்
- மனோகரா - மனோகரன்
- மரியகொறற்றி - அரசன்
- மனம்போல் மாங்கல்யம் - வேடன்
- யோகு - நண்பன்
- செபஸ்தியார் - அதிகாரி
- எஸ்தாக்கியர் - கப்பல்காரன்
- பூதத்தம்பி - பூதத்தம்பி
இசை நாடகங்கள்
- பத்துக்கட்டளை - மோசஸ்
- சங்கிலியன் - தளபதி
- வளையாபதி - புலவர்
- ஞான சவுந்தரி - சிமியோன்
- தங்கையின் காதலன் - தகப்பன்
- விதி - அரசன்
- யேசுவின் திருப்பாடுகள் - செந்தூரியன்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
18-Sep-2023, 00:31:39 IST