under review

மலேசியத் தமிழர் கலைமன்றம்: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
[[File:நாடகம் 01.jpg|thumb|சின்னம்|218x218px]]
[[File:நாடகம் 01.jpg|thumb|சின்னம்|218x218px]]
மலேசியத் தமிழர் கலைமன்றம் மலேசியாவின் ஆக்ப்பழமையான நாடக மன்றம். மலேசியத் தமிழர்களின் மொழி, பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றை நாடக வடிவில் நிலைக்கச் செய்வதே மலேசியத் தமிழர் கலைமன்றத்தின் நோக்கம்.
மலேசியத் தமிழர் கலைமன்றம் மலேசியாவின் ஆகப்பழமையான நாடக மன்றம். மலேசியத் தமிழர்களின் மொழி, பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றை நாடக வடிவில் நிலைக்கச் செய்வதைத் தன் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.  
== முழக்கம் ==
== முழக்கம் ==
"முத்தமிழ் முழங்கும் நற்கலை வாழி" என்பது மலேசியத் தமிழர் கலைமன்றத்தின் முழக்கம்.  
"முத்தமிழ் முழங்கும் நற்கலை வாழி" என்பது மலேசியத் தமிழர் கலைமன்றத்தின் முழக்கம்.  
== வரலாறு ==
== வரலாறு ==
[[File:நாடகம் 02.jpg|thumb|271x271px]]
[[File:நாடகம் 02.jpg|thumb|271x271px]]
மலேசியத் தமிழர் கலைமன்றம் 1960-ல் அந்தோணிசாமி, குகினன், ஹமீது, கே. எஸ். மணியம், வெங்கடாசலம் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இதன் ஆரம்பகாலப் பெயர் 'கூட்டரசு மலாய் மாநிலங்கள் தமிழர் கலைமன்றம்' என்பதாகும். மலேசிய தமிழர் கலைமன்றம் என்ற பெயர் 1965-ல் வழங்கப்பட்டது. இக்கலைமன்றத்தின் முதல் ஆண்டுப் பொதுக்கூட்டம் பிப்ரவரி 6, 1960-அன்று நடைபெற்றது. ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் [[ஆழி. அருள்தாசன்]] கலைமன்றத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றார். கலைமன்றம் சங்கம் -1420 என்ற பதிவு எண்ணுடன் அதிகாரப்பூர்வமாகப் பதிவு கண்டது. மாநில ரீதியில் மட்டுமே பதிவு பெற்றிருந்த இக்கலைமன்றம் தேசிய ரீதியில் பதிவு காணவேண்டும் என்ற நோக்கத்தில் 2016-ல் மறுபதிவு கண்டது. அதன்வழி இரண்டு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்தன. கலைமன்றம் PPM-011-10-0702016 என்ற புதிய பதிவு எண்ணைப் பெற்றது. கலைமன்றத்தின் செயலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 14-ல் இருந்து 21-ஆக மாறியது.
மலேசியத் தமிழர் கலைமன்றம் 1960-ல் அந்தோணிசாமி, குகினன், ஹமீது, கே. எஸ். மணியம், வெங்கடாசலம் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இதன் ஆரம்பகாலப் பெயர் 'கூட்டரசு மலாய் மாநிலங்கள் தமிழர் கலைமன்றம்'. மலேசியத் தமிழர் கலைமன்றம் என்ற பெயர் 1965-ல் வழங்கப்பட்டது. இக்கலைமன்றத்தின் முதல் ஆண்டுப் பொதுக்கூட்டம் பிப்ரவரி 6, 1960-அன்று நடைபெற்றது. ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் [[ஆழி. அருள்தாசன்]] கலைமன்றத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றார். கலைமன்றம் சங்கம் -1420 என்ற பதிவு எண்ணுடன் அதிகாரப்பூர்வமாகப் பதிவு கண்டது. மாநில அளவில் மட்டுமே பதிவு பெற்றிருந்த இக்கலைமன்றம் தேசிய ரீதியில் பதிவு காணவேண்டும் என்ற நோக்கத்தில் 2016-ல் மறுபதிவு கண்டது. அதன்வழி இரண்டு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்தன. கலைமன்றம் PPM-011-10-0702016 என்ற புதிய பதிவு எண்ணைப் பெற்றது. கலைமன்றத்தின் செயலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 14-ல் இருந்து 21-ஆக மாறியது.
== நோக்கங்கள் ==
== நோக்கங்கள் ==
* தமிழர் பண்பாட்டை அனைவரும் அறியச் செய்யும் வகையில் தமிழர் கலைகளான நாடகம், மேடை படைப்புகள், சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை முன்னெடுப்பது.
* தமிழர் பண்பாட்டை அனைவரும் அறியச் செய்யும் வகையில் தமிழர் கலைகளான நாடகம், மேடை படைப்புகள், சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை முன்னெடுப்பது.
Line 33: Line 33:
* 1970 – நள்ளிரவில் – எழுத்தும் இயக்கமும் ஆழி. அருள்தாசன்.
* 1970 – நள்ளிரவில் – எழுத்தும் இயக்கமும் ஆழி. அருள்தாசன்.
* 1972 – கடாரம் – எழுத்தும் இயக்கமும் ஆழி அருள்தாசன். இது ஆழி. அருள்தாசன் கடைசியாக இயக்கிய நாடகம்
* 1972 – கடாரம் – எழுத்தும் இயக்கமும் ஆழி அருள்தாசன். இது ஆழி. அருள்தாசன் கடைசியாக இயக்கிய நாடகம்
* 1978 – முல்லைத் தேர் – தமிழ் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. இது ஆழி அருள்தாசன் அவர்களால் மேடை படைப்புக்கு ஏற்ற வகையில் எடுத்தாளப்பட்டது. இந்த நாடகம் அரங்கேற்றம் காணும் முன்பே 1976இல் ஆழி அருள்தாசன் இயற்கை எய்தினார். இந்நாடகத்தை இயக்கும் பொறுப்பை ஜோ. அந்தோணிசாமி ஏற்றுக் கொண்டார்.  
* 1978 – முல்லைத் தேர் – தமிழ் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. இது ஆழி அருள்தாசன் அவர்களால் மேடை படைப்புக்கு ஏற்ற வகையில் எடுத்தாளப்பட்டது. இந்த நாடகம் அரங்கேற்றம் காணும் முன்பே 1976-ல் ஆழி அருள்தாசன் இயற்கை எய்தினார். இந்நாடகத்தை இயக்கும் பொறுப்பை ஜோ. அந்தோணிசாமி ஏற்றுக் கொண்டார்.  
* 1983 – மின்னொலி – 1962இல் அரங்கேற்றம் கண்ட நாடகம் ஜோ. அந்தோனிசாமியின் இயக்கத்தில் மீண்டும் அரங்கேறியது.
* 1983 – மின்னொலி – 1962-ல் அரங்கேற்றம் கண்ட நாடகம் ஜோ. அந்தோனிசாமியின் இயக்கத்தில் மீண்டும் அரங்கேறியது.
* 1984 – இருளிலே மோகனம் – எழுத்தும் இயக்கமும் எம். ஏ. கண்ணன்.
* 1984 – இருளிலே மோகனம் – எழுத்தும் இயக்கமும் எம். ஏ. கண்ணன்.
* 1984 – அக்கினிப் பாதை – மயில் கிருஷ்ணமூர்த்தி. இயக்கம் ஜோ. அந்தோணிசாமி.
* 1984 – அக்கினிப் பாதை – மயில் கிருஷ்ணமூர்த்தி. இயக்கம் ஜோ. அந்தோணிசாமி.
* 1986 – கடாரம் – 1972இல் முதல் அரஙேற்றத்தைத் தொடர்ந்து ஜோ. அந்தோனிசாமி இயக்கத்தில் மீண்டும் அரங்கேறியது.
* 1986 – கடாரம் – 1972-ல் முதல் அரஙேற்றத்தைத் தொடர்ந்து ஜோ. அந்தோனிசாமி இயக்கத்தில் மீண்டும் அரங்கேறியது.
* 1988 – திருமுடி – எழுதியவர் ஜி.எஸ். மணியம். இயக்கம் எம். எஸ். மணியம்.
* 1988 – திருமுடி – எழுதியவர் ஜி.எஸ். மணியம். இயக்கம் எம். எஸ். மணியம்.
* 1996 – தெய்வத்தின் தீர்ப்பு - எழுதி இயக்கியவர் ஜி. எஸ். மணியம்.
* 1996 – தெய்வத்தின் தீர்ப்பு - எழுதி இயக்கியவர் ஜி. எஸ். மணியம்.
Line 52: Line 52:
1981 – கிராமியக் கலை இரவு – பாரம்பரிய நடனங்கள், பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள் கொண்ட கலைநிகழ்ச்சி.
1981 – கிராமியக் கலை இரவு – பாரம்பரிய நடனங்கள், பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள் கொண்ட கலைநிகழ்ச்சி.


{{First review completed}}
 
 
{{Finalised}}
 
{{Fndt|06-Sep-2023, 06:09:18 IST}}
 
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:மலேசிய இலக்கிய அமைப்புகள்]]
[[Category:மலேசிய இலக்கிய அமைப்புகள்]]

Latest revision as of 12:03, 13 June 2024

சின்னம்

மலேசியத் தமிழர் கலைமன்றம் மலேசியாவின் ஆகப்பழமையான நாடக மன்றம். மலேசியத் தமிழர்களின் மொழி, பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றை நாடக வடிவில் நிலைக்கச் செய்வதைத் தன் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

முழக்கம்

"முத்தமிழ் முழங்கும் நற்கலை வாழி" என்பது மலேசியத் தமிழர் கலைமன்றத்தின் முழக்கம்.

வரலாறு

நாடகம் 02.jpg

மலேசியத் தமிழர் கலைமன்றம் 1960-ல் அந்தோணிசாமி, குகினன், ஹமீது, கே. எஸ். மணியம், வெங்கடாசலம் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இதன் ஆரம்பகாலப் பெயர் 'கூட்டரசு மலாய் மாநிலங்கள் தமிழர் கலைமன்றம்'. மலேசியத் தமிழர் கலைமன்றம் என்ற பெயர் 1965-ல் வழங்கப்பட்டது. இக்கலைமன்றத்தின் முதல் ஆண்டுப் பொதுக்கூட்டம் பிப்ரவரி 6, 1960-அன்று நடைபெற்றது. ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் ஆழி. அருள்தாசன் கலைமன்றத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றார். கலைமன்றம் சங்கம் -1420 என்ற பதிவு எண்ணுடன் அதிகாரப்பூர்வமாகப் பதிவு கண்டது. மாநில அளவில் மட்டுமே பதிவு பெற்றிருந்த இக்கலைமன்றம் தேசிய ரீதியில் பதிவு காணவேண்டும் என்ற நோக்கத்தில் 2016-ல் மறுபதிவு கண்டது. அதன்வழி இரண்டு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்தன. கலைமன்றம் PPM-011-10-0702016 என்ற புதிய பதிவு எண்ணைப் பெற்றது. கலைமன்றத்தின் செயலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 14-ல் இருந்து 21-ஆக மாறியது.

நோக்கங்கள்

  • தமிழர் பண்பாட்டை அனைவரும் அறியச் செய்யும் வகையில் தமிழர் கலைகளான நாடகம், மேடை படைப்புகள், சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை முன்னெடுப்பது.
  • கலை, இசை, நடனம் ஆகியவற்றை ஊக்குவிப்பதும் மக்களை மகிழ்விப்பதற்காக நிகழ்ச்சிகள் நடத்துவதும்.
  • தொண்டு நிறுவனங்களுக்கும் தொண்டு நோக்கங்களுக்கும் உதவும் பொருட்டு மேடை நிகழ்ச்சிகள் நடத்துவது.
  • மேற்கூறிய நோக்கங்கள் நிறைவேறும் பொருட்டு மன்றம் முடிவு செய்யும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்வது.

உறுப்பியம்

நாடகம் 04.jpg
எம்.எஸ்.மணியம்
விஸ்வநாதன்

மலேசிய தமிழர் கலைமன்றத்தில் மலேசியாவில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தமிழர்களும் உறுப்பியம் பெறலாம். ‘தமிழர்’ என இங்குச் சொல்லப்படுவது இந்தியாவைப் பூர்வீகமாகவோ தாயகமாகவோ கொண்ட அனைவரையும் குறிக்கும். இவர்களைத் தவிர்த்து, தமிழ் மொழியில் பேசுபவர்களும் தமிழர் கலைகளின்பால் ஆர்வம் கொண்டுள்ளவர்களும் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுகின்றனர்.

கலைமன்றத் தலைவர்கள் வரிசை

  • ஆழி. அருள்தாசன் - 1960 - 1977 பி. ஷண்முகநாதன் (பி எஸ் நாதன்) - 1977 - 1987
  • ஆர். எஸ். கந்தசாமி - 1987 - 1989
  • பி. ஷண்முகநாதன் (பி எஸ் நாதன்) - 1989 - 2007
  • எம். பாலகிருஷ்ணன் - 2007 - 2009
  • எம்.ஏ. கண்ணன் - 2009 - 2010
  • எம். கிருஷ்ணன் (காப்பார் கிருஷ்ணன்) - 2010 - 2011
  • டாக்டர் எம். சுப்ரமணியம் (எம்.எஸ். மணியம்) 2011 தொடங்கி இன்று வரை

முழுநீள நாடகங்கள்

  • 1960 – யார் குற்றவாளி? – எழுத்தும் இயக்கமும் ஆழி. அருள்தாசன்.
  • 1962 – மின்னொளி – எழுத்தும் இயக்கமும் ஆழி. அருள்தாசன்.
  • 1963 – நினைவுச் சின்னம் – எழுத்தும் இயக்கமும் ஆழி. அருள்தாசன்.
  • 1964 – வாடாமலர் – எழுத்தும் இயக்கமும் ஆழி. அருள்தாசன்.
  • 1965 – உயிரோவியம் – எழுத்தும் இயக்கமும் ஆழி. அருள்தாசன்.
  • 1966 – ஒரே குரல் – எழுத்தும் இயக்கமும் ஆழி. அருள்தாசன்.
  • 1970 – நள்ளிரவில் – எழுத்தும் இயக்கமும் ஆழி. அருள்தாசன்.
  • 1972 – கடாரம் – எழுத்தும் இயக்கமும் ஆழி அருள்தாசன். இது ஆழி. அருள்தாசன் கடைசியாக இயக்கிய நாடகம்
  • 1978 – முல்லைத் தேர் – தமிழ் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. இது ஆழி அருள்தாசன் அவர்களால் மேடை படைப்புக்கு ஏற்ற வகையில் எடுத்தாளப்பட்டது. இந்த நாடகம் அரங்கேற்றம் காணும் முன்பே 1976-ல் ஆழி அருள்தாசன் இயற்கை எய்தினார். இந்நாடகத்தை இயக்கும் பொறுப்பை ஜோ. அந்தோணிசாமி ஏற்றுக் கொண்டார்.
  • 1983 – மின்னொலி – 1962-ல் அரங்கேற்றம் கண்ட நாடகம் ஜோ. அந்தோனிசாமியின் இயக்கத்தில் மீண்டும் அரங்கேறியது.
  • 1984 – இருளிலே மோகனம் – எழுத்தும் இயக்கமும் எம். ஏ. கண்ணன்.
  • 1984 – அக்கினிப் பாதை – மயில் கிருஷ்ணமூர்த்தி. இயக்கம் ஜோ. அந்தோணிசாமி.
  • 1986 – கடாரம் – 1972-ல் முதல் அரஙேற்றத்தைத் தொடர்ந்து ஜோ. அந்தோனிசாமி இயக்கத்தில் மீண்டும் அரங்கேறியது.
  • 1988 – திருமுடி – எழுதியவர் ஜி.எஸ். மணியம். இயக்கம் எம். எஸ். மணியம்.
  • 1996 – தெய்வத்தின் தீர்ப்பு - எழுதி இயக்கியவர் ஜி. எஸ். மணியம்.
  • 2007 – வள்ளித் திருமணம் – மேடைக்கு ஏற்ற வகையில் எழுதி இயக்கியவர் ஜி. எஸ். மணியம்.
  • 2017 – பொன்னியின் செல்வன் – எழுத்து ச. விஸ்வநாதன். இயக்கம் எம். எஸ். மணியம், விஸ்வநாதன் இணையர்.

குறு நாடகங்கள்

  • 1988 – தீபச்சுடர் – எழுத்து ஜி.எஸ். மணியம். இயக்கம் எம். எஸ். மணியம்.
  • 1989 – பெரியாழ்வார் – எழுத்து ஜி. எஸ். மணியம். இயக்கம் எம். எஸ். மணியம்.
  • 2011 – மனு நீதிச் சோழன் – எழுத்து ரெ. சண்முகம். இயக்கம் விஸ்வர்நாதன்.
  • 2011 – வீரபாகு – வெள்ளித் திரையிலிருந்து எடுத்தாளப்பட்டது. இயக்கம் எம். எஸ். மணியம்.
  • 2012 – புரட்சிக் கவிஞன் – எழுத்து ஜி .எஸ். மணியம். இயக்கம் எம். எஸ். மணியம்.
  • 2014 – துரோணர் – எழுத்து ஜி. எஸ். மணியம். இயக்கம் எம். எஸ். மணியம்.

மேடைக் கலைநிகழ்ச்சி

1981 – கிராமியக் கலை இரவு – பாரம்பரிய நடனங்கள், பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள் கொண்ட கலைநிகழ்ச்சி.



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Sep-2023, 06:09:18 IST