under review

செ. அருட்செல்வ பேரரசன்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected Category:மொழிபெயர்ப்பாளர்கள் to Category:மொழிபெயர்ப்பாளர்)
 
(2 intermediate revisions by the same user not shown)
Line 25: Line 25:
* நாகவேள்வி
* நாகவேள்வி
======கிண்டில் மின் நூல்கள்======
======கிண்டில் மின் நூல்கள்======
* ஹரிவம்சம் 1 & 2 பாகங்கள் (3ம் பாகம் இன்னும் முற்றுபெறவில்லை)
* ஹரிவம்சம் 1 & 2 பாகங்கள் (3-ம் பாகம் இன்னும் முற்றுபெறவில்லை)
* ஜெயம் வரிசையில் அ) வெற்றிமுழக்கம் ஆ) கொற்றங்கூடல் என்ற இரு பாகங்கள்
* ஜெயம் வரிசையில் அ) வெற்றிமுழக்கம் ஆ) கொற்றங்கூடல் என்ற இரு பாகங்கள்
======கிண்டில் சிறு மின்நூல்கள்======
======கிண்டில் சிறு மின்நூல்கள்======
Line 48: Line 48:
== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 13:34:11 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:மொழிபெயர்ப்பாளர்கள்]]
[[Category:மொழிபெயர்ப்பாளர்]]

Latest revision as of 13:46, 17 November 2024

அருட்செல்வப்பேரரசன்
அரசன் பாரதம் நிறைவு விழா

செ. அருட்செல்வப்பேரரசன் (ஏப்ரல் 6, 1978) அருட்செல்வப் பேரரசன் புராண மொஅரசன்ழிபெயர்ப்பாளர். கிசாரிமோகன் கங்குலியின் மூலமகாபாரதத்தை தமிழில் முழுமையாக மொழிபெயர்த்தவர். ஹரிவம்சபுராணம், வான்மீகி ராமாயணம் போன்ற நூல்களை தொடர்ந்து மொழியாக்கம் செய்தார். கணினி வரைகலையாளர்.

பிறப்பு, கல்வி

அருட்செல்வப் பேரரசன் திருவொற்றியூரில் சி.செண்பகக்குட்டி, கு.பெரியநாயகி ஆகியோருக்கு ஏப்ரல் 6, 1978-ல் பிறந்தார் சென்னை பாரிமுனை, தூய மரியன்னை ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பள்ளிப்படிப்பையும், புழல் ஸ்ரீ நல்லழகு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயப் படிப்பையும் முடித்தார்.

தனி வாழ்க்கை

அ.லட்சுமியை ஜூன் 26, 2004-ல் மணந்தார், மகன்கள் செழியன் நன்மாறன், இளமாறன்

இலக்கிய வாழ்க்கை

கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட "The Mahabharata" ஆங்கில வடிவத்தை 2012 முதல் 2019 வரை மொழிபெயர்த்து தன் இணையதளத்தில் வெளியிட்டார். முழுமஹாபாரதம் என்னும் பெயர்கொண்ட அந்நூல் 2020-ல் ஸீரோ டிகிரி பதிப்பகத்தால் அச்சுவடிவில் வெளியிடப்பட்டது. இப்படைப்பு mahabharatham.arasan.info[1] என்னும் தளத்தில் இலவசமாக கிடைக்கிறது. ஒவ்வொரு பருவமும் ஒலி வடிவிலும் வெளியிட்டிருக்கிறார்.

அருட்செல்வப்பேரரசன் ஹரிவம்ச புராணத்தை மொழியாக்கம் செய்தார். வால்மீகி ராமாயணத்தை ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்தார். தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளென ஜெயகாந்தன், கல்கி ஆக்கியோரை குறிப்பிடுகிறார்

அரசன் பாரதம் முழுத்தொகுதிகள்

விருதுகள்

  • சிறுவாணி இலக்கிய விருது 2023
  • கோவை கொடீஷியா இலக்கிய விருது 2023

இலக்கிய இடம்

தமிழில் முழுமகாபாரதம் சம்ஸ்கிருதத்தில் இருந்து 1948-ல் தி.ஈ.ஸ்ரீனிவாசாச்சாரியாரால் மொழியாக்கம் செய்யப்பட்டு ம.வீ.இராமானுஜாச்சாரியாரால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இது கும்பகோணம் பதிப்பு எனப்படுகிறது. வேறு எவ்வகையிலும் மகாபாரதத்தின் முழுவடிவம் தமிழில் வெளிவரவில்லை. அருட்செல்வப்பேரரசனின் மகாபாரத மொழியாக்கம் அதன்பின் வெளிவந்த முழுமையான வடிவம். ஆங்கிலத்தில் இருந்து சொல்லுக்குச் சொல் மொழியாக்கம் செய்யப்பட்டது. இணையத்தில் இருப்பதனால் ஆய்வாளர்களுக்கு உதவியானது.

நூல்பட்டியல்

அச்சுநூல்கள்
  • முழுமஹாபாரதம் (14 தொகுதிகள்)
  • நளதமயந்தி
  • நாகவேள்வி
கிண்டில் மின் நூல்கள்
  • ஹரிவம்சம் 1 & 2 பாகங்கள் (3-ம் பாகம் இன்னும் முற்றுபெறவில்லை)
  • ஜெயம் வரிசையில் அ) வெற்றிமுழக்கம் ஆ) கொற்றங்கூடல் என்ற இரு பாகங்கள்
கிண்டில் சிறு மின்நூல்கள்
  • உதங்க சபதம்
  • கருடனும் அமுதமும்
  • துஷ்யந்தன் சகுந்தலை
  • யயாதி
  • சந்தனு சத்தியவதி
  • அம்பை – சிகண்டி
  • நாகவேள்வி

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:11 IST