under review

வே. நந்தகோபாலன்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
Tag: Manual revert
(Added First published date)
 
Line 18: Line 18:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://noolaham.net/project/75/7475/7475.pdf "இசை நாடகக் கூத்து - மூத்த கலைஞர் வரலாறு" செல்லையா - மெற்றாஸ்மயில்]
* [https://noolaham.net/project/75/7475/7475.pdf "இசை நாடகக் கூத்து - மூத்த கலைஞர் வரலாறு" செல்லையா - மெற்றாஸ்மயில்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|14-Sep-2022, 21:27:43 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:நாடகக் கூத்துக் கலைஞர்கள்]]
[[Category:நாடகக் கூத்துக் கலைஞர்கள்]]

Latest revision as of 16:36, 13 June 2024

வே. நந்தபோபாலன் (நன்றி: செல்லையா மெற்றாஸ்மயில்)
வே. நந்தகோபாலன்

வே. நந்தகோபாலன் (பிறப்பு: பிப்ரவரி 21, 1960) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். கற்கோவளம் வேணுகானசபாவில் அண்ணாவியாராகப் பொறுப்பேற்று காத்தவராயன் நாடகத்தை பலமுறை அரங்காற்றுகை செய்து புகழ்பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை, வடமராட்சியில் கற்கோவளம் பருத்தித்துறையில் பிப்ரவரி 21, 1960-ல் நந்தகோபாலன் பிறந்தார். உடன்பிறந்த சகோதரர் சரவணபவன் அண்ணாவியார்.

கலை வாழ்க்கை

1980 முதல் பல சிறிய நாடகங்களில் நடித்தார். காத்தவராயன் நாடகத்தில் நடுக்காத்தான் பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். 1980-களில் கும்பிமுத்துமாரியம்மன் ஆலயத்தை மையமாகக் கொண்டு வேணுகானசபா என்கின்ற நாடகக்குழுவை உருவாக்கி நாடகச் செயற்பாடுகளில் ஈடுபட்ட வே. சரவணபவன் 1990-ல் கற்கோவளத்தை விட்டு பிற இடத்திற்கு சென்றதால் அவருடைய சகோதரரான வே. நந்தகோபாலன் அண்ணாவியாராகத் செயல்படத்தொடங்கினார். 1999-ல் கற்கோவளம் வேணுகான சபாமன்றம் அண்ணாவியாராகப் பதவியேற்ற பின்பு ஊர்ப்பெரியோர்களை அழைத்து காத்தவராயன் நாடகத்தைப் பழக்கி கும்பிஅம்பாள் ஆலயத்தில் சித்திரா பௌர்ணமியில் அரங்கேற்றினார். இவர் வேணுகானசபாவை 1999ம் ஆண்டு அரசாங்கத்தில் பதிவு செய்ததோடு பிரதேச செயலகத்தின் கலாசாரவிழாக்கள், மரபுவழி நாடகங்களுக்கிடையே நிகழ்த்தப்படுகின்ற போட்டிகள், கற்கோவளத்தில் மட்டுமல்லாது பிற ஊர்களிலும் உள்ள ஆலயங்களில் வைக்கப்படுகின்ற நேர்த்திகள் போன்றவற்றிற்கு நாடகங்களை நிகழ்த்தியும் பாடசாலை மாணவர்கள், பிறகிராமமக்கள் போன்றோருக்கு நாடகங்களை பழக்கியும் வருகிறார்.

காத்தவராயன் நாடகம் முப்பத்தியாறு தடவை மேடையேறி வடமராட்சியில் புகழ்பெற்றது. 1992-ல் பதினாறு வயதுப் பெண் பிள்ளைகளுக்குக் காத்தவராயன் நாடகத்தைப் பழக்கி தும்பளை, நெல்லண்டை பத்திரகாளியம்மன் ஆலயத்தில் அரங்கேற்றினார். 1993-ல் சத்தியவான் சாவித்திரி நாடகம், அரிச்சந்திர மயானகாண்டம் ஆகிய இரு நாடகங்களையும் பழக்கி கும்பி அம்பாள் ஆலயத்தில் அரங்கேற்றினார். இந்த நாடகங்களில் நாரதராகவும், அரிச்சந்திரனாகவும் நடித்தார். 1997-ல் சிறுவர்களுக்கு காத்தவராயன் நாடகத்தைப் பழக்கி பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகம் நடத்திய காத்தவராயன் நாட்டுக் கூத்துப் போட்டியில் பெரிய கலைஞர்களுடன் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பெற வைத்தார்.

வேணுகானசபா நாடகக்குழுவினர் பல வருடங்களாக கூத்துக்களை மேடையேற்றி வருவதனால் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தடவை புதியவர்களை பழக்கி மேடையேற்றுவார்கள். புதிதாக சிறுவர்களையும், இளைஞர்களையும் இணைத்து கூத்தினை பழக்குவார்கள். கற்கோவளத்தினுடைய நாடக வளர்ச்சியில் நான்காவது சந்ததியிடம் 2009-ல் காத்தவராயன் கூத்து கையளிக்கப்பட்டு, ஆடிப்பூர விழாவில் மேடையேற்றப்பட்டது. இவ்வூரிலிருந்து எங்கு நாடகங்களை சென்று மேடையேற்றினாலும் கும்பிமுத்துமாரியம்மன் ஆலயத்தில் காப்பு படித்தே நாடகங்களை மேடையிடுகின்ற வழக்கம் தொடர்ச்சியாக பேணப்பட்டு வருகின்றது.

விருதுகள்

  • அரிச்சந்திரன் நாடகத்திற்காக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அரங்கேற்றிய கூத்துகள்

  • காத்தவராயன் கூத்து
  • சத்தியவான் சாவித்திரி
  • அரிச்சந்திர மயானகாண்டம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Sep-2022, 21:27:43 IST