திருப்பாம்புரம் சோமசுந்தரம் பிள்ளை: Difference between revisions
(Corrected error in line feed character) |
(Corrected Category:வாத்திய இசைக்கலைஞர்கள் to Category:வாத்திய இசைக்கலைஞர்) |
||
(5 intermediate revisions by the same user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=சோமசுந்தரம்|DisambPageTitle=[[சோமசுந்தரம் (பெயர் பட்டியல்)]]}} | |||
{{OtherUses-ta|TitleSection=திருப்பாம்புரம்|DisambPageTitle=[[திருப்பாம்புரம் (பெயர் பட்டியல்)]]}} | |||
திருப்பாம்புரம் சோமசுந்தரம் பிள்ளை (1904-ஜூன் 6, 1971) ஒரு நாதஸ்வரக் கலைஞர். | திருப்பாம்புரம் சோமசுந்தரம் பிள்ளை (1904-ஜூன் 6, 1971) ஒரு நாதஸ்வரக் கலைஞர். | ||
== இளமை, கல்வி == | == இளமை, கல்வி == | ||
[[திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை]] என்ற புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞருக்கு 1904- | [[திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை]] என்ற புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞருக்கு 1904-ம் ஆண்டில் சோமசுந்தரம் பிள்ளை பிறந்தார். | ||
சோமசுந்தரம் பிள்ளை தந்தையிடம் வாய்ப்பாட்டும் நாதஸ்வரமும் கற்று பின்னர் தன் சகோதரர்களுடன் இணைந்து நாதஸ்வரம் வாசிக்க ஆரம்பித்தார். மூத்த சகோதரர் சுவாமிநாத பிள்ளை புல்லாங்குழல் கலைஞராகவும் இளையவர் சிவசுப்பிரமணியம் பிள்ளை வாய்ப்பாட்டுக் கலைஞராகவும் புகழ்பெற்ற பின்னும் சோமசுந்தரம் பிள்ளை நாதஸ்வரக் கலையைத் தொடர்ந்தார். | சோமசுந்தரம் பிள்ளை தந்தையிடம் வாய்ப்பாட்டும் நாதஸ்வரமும் கற்று பின்னர் தன் சகோதரர்களுடன் இணைந்து நாதஸ்வரம் வாசிக்க ஆரம்பித்தார். மூத்த சகோதரர் சுவாமிநாத பிள்ளை புல்லாங்குழல் கலைஞராகவும் இளையவர் சிவசுப்பிரமணியம் பிள்ளை வாய்ப்பாட்டுக் கலைஞராகவும் புகழ்பெற்ற பின்னும் சோமசுந்தரம் பிள்ளை நாதஸ்வரக் கலையைத் தொடர்ந்தார். | ||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
Line 15: | Line 17: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013 | * மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013 | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|19-Jun-2023, 07:59:54 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:வாத்திய | [[Category:வாத்திய இசைக்கலைஞர்]] |
Latest revision as of 13:51, 17 November 2024
- சோமசுந்தரம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சோமசுந்தரம் (பெயர் பட்டியல்)
- திருப்பாம்புரம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: திருப்பாம்புரம் (பெயர் பட்டியல்)
திருப்பாம்புரம் சோமசுந்தரம் பிள்ளை (1904-ஜூன் 6, 1971) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.
இளமை, கல்வி
திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை என்ற புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞருக்கு 1904-ம் ஆண்டில் சோமசுந்தரம் பிள்ளை பிறந்தார். சோமசுந்தரம் பிள்ளை தந்தையிடம் வாய்ப்பாட்டும் நாதஸ்வரமும் கற்று பின்னர் தன் சகோதரர்களுடன் இணைந்து நாதஸ்வரம் வாசிக்க ஆரம்பித்தார். மூத்த சகோதரர் சுவாமிநாத பிள்ளை புல்லாங்குழல் கலைஞராகவும் இளையவர் சிவசுப்பிரமணியம் பிள்ளை வாய்ப்பாட்டுக் கலைஞராகவும் புகழ்பெற்ற பின்னும் சோமசுந்தரம் பிள்ளை நாதஸ்வரக் கலையைத் தொடர்ந்தார்.
தனிவாழ்க்கை
கோனேரிராஜபுரம் குப்புசாமிப் பிள்ளையின் மகள் மீனாட்சி அம்மாளை சோமசுந்தரம் பிள்ளை முதலில் மணந்தார். பின்னர் சோமசுந்தரம் பிள்ளை, சென்னை வன்மீகநாதன் பிள்ளையின் மகள் பட்டம்மாள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு சண்முகசுந்தரம் (வாய்ப்பாட்டுக் கலைஞர், தமிழக அரசு இசைக்கல்லூரியின் முதல்வராக இருந்தவர்), நடராஜன், புனிதவதி, சம்பூர்ணம் ஆகியோர் பிறந்தனர். மூன்றவதாக திருவாரூரைச் சேர்ந்த ஆனந்தவல்லியம்மாளை மணந்து இரு மகன்கள் பிறந்தனர்.
இசைப்பணி
சோமசுந்தரம் பிள்ளையின் அதிவேகமான பிருகாக்கள் புகழ்பெற்றவை. முத்துஸ்வாமி தீக்ஷிதர், முத்துத்தாண்டவர் கீர்த்தனைகளை முறை வழுவாது வாசிப்பவர், பாடல்வரிகளின் பொருளுக்கு குறை ஏற்படாத வண்ணம் பதச்சேதம் இன்றி வாசிப்பவர் எனப் பெயர் பெற்றவர். பழனி தேவஸ்தானத்தில் தொடங்கப்பட்ட நாதஸ்வரக் கல்லூரியின் முதல் முதல்வராகப் பணி புரிந்தவர்.
சோமசுந்தரம் பிள்ளை பல ஆதீனங்களிலும் அரசவைகளிலும் பரிசுகள் பெற்றிருக்கிறார்.
மாணவர்கள்
திருப்பாம்புரம் சோமசுந்தரம் பிள்ளையிடம் கற்ற முக்கியமான மாணவர் புதுச்சத்திரம் முத்துவீருஸ்வாமி பிள்ளை. தன்னிடம் நாதஸ்வரம் பயில வருபவர்களுக்கு பிழையின்றிப் பாடவும் கற்றுக் கொடுப்பது சோமசுந்தரம் பிள்ளையின் வழக்கம்.
மறைவு
திருப்பாம்புரம் சோமசுந்தரம் பிள்ளை ஜூன் 6, 1971 அன்று காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
19-Jun-2023, 07:59:54 IST