சிங்கை நேசன்: Difference between revisions
(Corrected error in line feed character) |
(Corrected Category:இதழ்கள் to Category:இதழ்) |
||
(6 intermediate revisions by the same user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=சிங்கை|DisambPageTitle=[[சிங்கை (பெயர் பட்டியல்)]]}} | |||
{{OtherUses-ta|TitleSection=நேசன்|DisambPageTitle=[[நேசன் (பெயர் பட்டியல்)]]}} | |||
[[File:Singainesan.jpg|thumb|சிங்கைநேசன்]] | [[File:Singainesan.jpg|thumb|சிங்கைநேசன்]] | ||
சிங்கை நேசன் (1887 -1890) சிங்கப்பூரில் இருந்து வெளிவந்த தொடக்ககால இதழ். இஸ்லாமிய இதழ்களில் தொன்மையானது | சிங்கை நேசன் (1887 -1890) சிங்கப்பூரில் இருந்து வெளிவந்த தொடக்ககால இதழ். இஸ்லாமிய இதழ்களில் தொன்மையானது | ||
Line 45: | Line 47: | ||
*[https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper?nid=singai&tvw=PV NewspaperSG - Browse Newspaper] | *[https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper?nid=singai&tvw=PV NewspaperSG - Browse Newspaper] | ||
*[http://webcatplus.nii.ac.jp/webcatplus/details/book/30089149.html சிங்கை நேசன் - Webcat Plus] | *[http://webcatplus.nii.ac.jp/webcatplus/details/book/30089149.html சிங்கை நேசன் - Webcat Plus] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|15-Nov-2022, 13:33:41 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:இஸ்லாம்]] | [[Category:இஸ்லாம்]] | ||
[[Category: | [[Category:இதழ்]] |
Latest revision as of 15:20, 15 October 2024
- சிங்கை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சிங்கை (பெயர் பட்டியல்)
- நேசன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நேசன் (பெயர் பட்டியல்)
சிங்கை நேசன் (1887 -1890) சிங்கப்பூரில் இருந்து வெளிவந்த தொடக்ககால இதழ். இஸ்லாமிய இதழ்களில் தொன்மையானது
பார்க்க தமிழ் இதழ்கள்
வெளியீடு
சிங்கை நேசன் ஆசிரியர் மகுதூம் சாயபு ஏற்கனவே ஆகிய இதழ்களை நடத்தியவர். தமிழ், ஆங்கிலம், அரபு முதலிய மொழிகளை அறிந்தவர். தன் தீனோதய வேந்திர சாலை என்னும் அச்சகத்தின் வாயிலாகத் தமிழ், சீனம், மலாய் முதலிய மொழிகளில் நூல்களை அச்சிட்டுக் கொடுத்துள்ளார். இவர் சிங்கை நேசன் இதழை ஜூன் 27, 1887 முதல் ஜூன் 23, 1890 வரை சிங்கப்பூரில் வாரந்தோறும் அச்சிட்டு வெளியிட்டு உள்ளார். இவ்விதழ், விக்டோரிய மகாராணியின் பொன்விழா அன்று தொடங்கி அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இதழ்
இதழாசிரியர் மகுதூம் சாயபு, இவ்விதழின் நோக்கம், செல்ல வேண்டியபாதை முதலியன குறித்து இதழில் இவ்வாறு எழுதியுள்ளார். பேனாவைப் பிடித்துப் பத்திரிகை யெழுது கிறவர் தம்முடைய மனச்சாட்சிக்குச் சற்றேனும் மாறாமல் பொது நன்மையே எப்பொழுதும் நோக்கமாகக் கொண்டிருக்கல் வேண்டும். (சி.கு. மகுதூம் சாயபு, சிங்கைநேசன், ஜூன் 27, 1887, இதழ் 1, ப.1)
சிங்கை நேசன் இதழ் வெளிவந்த விபரத்தைப் பின்வரும் அட்டவணை காட்டுகிறது.
எண் | ஆண்டு | இதழ்கள் |
Volume 1 | ஜூன் 27, 1887 முதல் ஜூன் 25, 1888 வரை | 52 இதழ்கள் |
Volume 2 | ஜூலை 02, 1888 முதல் ஜூன் 04, 1889 வரை | 50 இதழ்கள் |
Volume 3 | ஜூலை 01, 1889 முதல் ஜூன் 23, 1890 வரை | 49 இதழ்கள் |
மொத்தம் | 151 |
சிங்கை நேசன் தொடங்கியது முதல் 151 இதழ்கள் தொடர்ந்து வந்துள்ளன. இதழ் ஒன்று முதல் இதழ் நூற்று ஒன்பது வரை தீனோதய வேந்திரசாலை எண் ஒன்று, முகம்மதலி லேன் என்ற முகவரியிலிருந்தும் இதழ் நூற்றுப் பத்து முதல் இதழ் நூற்று ஐம்பத்து ஒன்று வரை தீனோதய வேந்திரசாலை, எண் எழுபத்து நான்கு துல்லாயர் ஸ்திரீட் என்ற முகவரியிலிருந்தும் மகுதூம் சாயபு அச்சிட்டு வெளியிட்டு உள்ளார்.
அமைப்பு
இவ்விதழின் தொடக்கத்தில் சிங்கை நேசன் என்னும் பெயர் தமிழில் பெரிய எழுத்தில் உள்ளது. அதன் பிறகு திங்கட்கிழமை தோறும் பிரகடனஞ் செய்யப்படும் என்ற வாசகத்தின் கீழ் THE TAMIL JOURNEL SINGAI NESAN IS DESIGNED TO COMMEMORATE THE JUBLIEE OF HER MAJESTRY THE QUEEN – EMPRESS VICTORIA என ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து
தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்
என்குற்றமாகும் இறைக்கு
என்ற குறள் இடம்பெறுகிறது. இதற்கடுத்து ஆங்கில ஆண்டு, மாதம், தேதி முதலிய தகவல்கள் உள்ளன. நான்கு பக்கங்களில் நான்கு பத்திகளில் செய்திகள் இடம்பெற்றுள்ளன. இறுதிப் பக்கத்தில் வெளியிட்டவர், அச்சிட்டவர் விபரம் உள்ளது.
உள்ளடக்கம்
திருக்குறள், தலையங்கம், கடவுள் வாழ்த்து, சிங்கப்பூர்ச் செய்திகள், இந்தியச் செய்திகள், இலங்கைச் செய்திகள், உலகச் செய்திகள், தந்திச் சமாச்சாரம், சமாசாரத் திரட்டு, விளம்பரங்கள், மார்கட் சரக்குவிலை, நூலறிமுகம், பேங்நாணயம், கடிதம் என்ற உள்ளடக்கங்கள் சிங்கை நேசனில் தொடக்கம் முதல் இறுதி வரை இடம்பெற்றுள்ளன.
உசாத்துணை
- கோட்டி திருமுருகானந்தம். சிங்கப்பூர் தொடக்ககால இதழ்கள். திண்ணை
- சாமி அ.மா. தமிழில் இஸ்லாமிய இதழ்கள், நவமணி பதிப்பகம் சென்னை. 600 004
- NewspaperSG - Browse Newspaper
- சிங்கை நேசன் - Webcat Plus
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:33:41 IST