under review

சி.எம் ஆகூர்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Added First published date)
 
(One intermediate revision by the same user not shown)
Line 2: Line 2:
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
சி.எம்.ஆகூரின் இயற்பெயர் கிறிஸ்டியன் மாசிலாமணி ஆகூர் (Christian Masillimani Agur ). 1858-ல் நாகர்கோயிலில் புகழ்பெற்ற கிறிஸ்தவ போதகரான [[சி.மாசிலாமணி]]- எஸ்தர் ஃபேன்னி பரமானந்தம் (Esther Fanny Paramanandam) இணையரின் மூத்த மகனாகப் பிறந்தார்.  சீர்திருத்த கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். [[மகாராஜன் வேதமாணிக்கம்]] என அழைக்கப்பட்ட கிறிஸ்தவ முன்னோடியின் வம்சாவளியைச் சேர்ந்தவர். வேதமாணிக்கம் குமரிமாவட்டம் மைலாடியைச் சேர்ந்தவர். குமரிமாவட்டத்தில் முதலில் சீர்திருத்த கிறிஸ்தவராக மதமாற்றம் செய்யப்பட்டவர்.  

ஆகூர் திருவனந்தபுரத்திலேயே ஆரம்பக்கல்வி பயின்றார். நாகர்கோயிலிலும் திருவனந்தபுரத்திலும் கல்விகற்ற ஆகூர் பி.ஏ. பட்டம் பெற்றவர்.

== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
ஆகூர் 1884 முதல் 1904 வரை திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் ரெசிடென்ட் அலுவலகத்தில் அலுவலகப் பொறுப்பாளராகப் பணியாற்றினார். ஜெனரல் ஹன்னிங்டன் முதல் கர்னல் ஜேம்ஸ் ஆண்ட்ரூ வரை ஒன்பது ரெஸிடெண்டுகளின் கீழ் பணிபுரிந்தார்.  

ஆகூர் 1900-ல் புகழ்பெற்ற ஆங்கிலேய கிறிஸ்தவ போதகர் ரெவெ. [[சார்ல்ஸ் மீட்]]டின் மகள் [[ஜோனா கார்லொட்டா]] (Joanna Carlotta)வை மணந்தார். ஜோன்னா திருவனந்தபுரம் தேவாலயத்தில் இசைப்பயிற்றுநராக இருந்தார்.  

== வரலாற்றுப் பணி ==
== வரலாற்றுப் பணி ==
சி.எம்.ஆகூர் எழுதிய 'திருவிதாங்கூர் கிறிஸ்தவ திருச்சபை வரலாறு' (Church History Of Travancore) 1183 பக்கங்கள் கொண்ட நூல். 1903-ல் இந்நூல் வெளியாகியது. திருவிதாங்கூரில் கிறிஸ்தவம் உருவாகி வலுப்பெற்ற வரலாற்றை விவரிக்கும் முதன்மையான நூல் இது. நான்கு பகுதிகள் கொண்ட இப்பெரிய நூல் தென்தமிழகத்தின் வரலாற்றைச் சொல்லும் முதன்மையான ஆதாரநூலாகவும் கருதப்படுகிறது.   

நூல் பகுதிகள்  
நூல் பகுதிகள்  
# சிரியன் தேவாலயம்
# சிரியன் தேவாலயம்
Line 18: Line 21:
* [https://www.geni.com/people/Christian-Agur/6000000037587400268?through=6000000011891205707 Christian Masillimani Agur Geni]

* [https://milestonesofkanyakumari.blogspot.com/2015/05/remarkable-church-historian-mrchristian.html பாபு மனோகரன். ஆகூர் நினைவுக்குறிப்பு]

{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|12-Jun-2023, 19:25:27 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:கிறிஸ்தவம்]]
[[Category:கிறிஸ்தவம்]]
[[Category:கிறிஸ்தவ மதப்பணியாளர்கள்]]
[[Category:கிறிஸ்தவ மதப்பணியாளர்கள்]]

Latest revision as of 13:51, 13 June 2024

சி.எம்.ஆகூர் (C. M. Agur) (1858- 1904) கிறிஸ்தவ அறிஞர், வரலாற்றாசிரியர். திருவிதாங்கூரின் கிறிஸ்தவச் சபை வரலாறு என்னும் புகழ்பெற்ற நூலின் ஆசிரியர். ரெவெரெண்ட் மீட்டின் மகளை மணந்தவர்.

பிறப்பு, கல்வி

சி.எம்.ஆகூரின் இயற்பெயர் கிறிஸ்டியன் மாசிலாமணி ஆகூர் (Christian Masillimani Agur ). 1858-ல் நாகர்கோயிலில் புகழ்பெற்ற கிறிஸ்தவ போதகரான சி.மாசிலாமணி- எஸ்தர் ஃபேன்னி பரமானந்தம் (Esther Fanny Paramanandam) இணையரின் மூத்த மகனாகப் பிறந்தார். சீர்திருத்த கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். மகாராஜன் வேதமாணிக்கம் என அழைக்கப்பட்ட கிறிஸ்தவ முன்னோடியின் வம்சாவளியைச் சேர்ந்தவர். வேதமாணிக்கம் குமரிமாவட்டம் மைலாடியைச் சேர்ந்தவர். குமரிமாவட்டத்தில் முதலில் சீர்திருத்த கிறிஸ்தவராக மதமாற்றம் செய்யப்பட்டவர்.

ஆகூர் திருவனந்தபுரத்திலேயே ஆரம்பக்கல்வி பயின்றார். நாகர்கோயிலிலும் திருவனந்தபுரத்திலும் கல்விகற்ற ஆகூர் பி.ஏ. பட்டம் பெற்றவர்.

தனிவாழ்க்கை

ஆகூர் 1884 முதல் 1904 வரை திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் ரெசிடென்ட் அலுவலகத்தில் அலுவலகப் பொறுப்பாளராகப் பணியாற்றினார். ஜெனரல் ஹன்னிங்டன் முதல் கர்னல் ஜேம்ஸ் ஆண்ட்ரூ வரை ஒன்பது ரெஸிடெண்டுகளின் கீழ் பணிபுரிந்தார்.

ஆகூர் 1900-ல் புகழ்பெற்ற ஆங்கிலேய கிறிஸ்தவ போதகர் ரெவெ. சார்ல்ஸ் மீட்டின் மகள் ஜோனா கார்லொட்டா (Joanna Carlotta)வை மணந்தார். ஜோன்னா திருவனந்தபுரம் தேவாலயத்தில் இசைப்பயிற்றுநராக இருந்தார்.

வரலாற்றுப் பணி

சி.எம்.ஆகூர் எழுதிய 'திருவிதாங்கூர் கிறிஸ்தவ திருச்சபை வரலாறு' (Church History Of Travancore) 1183 பக்கங்கள் கொண்ட நூல். 1903-ல் இந்நூல் வெளியாகியது. திருவிதாங்கூரில் கிறிஸ்தவம் உருவாகி வலுப்பெற்ற வரலாற்றை விவரிக்கும் முதன்மையான நூல் இது. நான்கு பகுதிகள் கொண்ட இப்பெரிய நூல் தென்தமிழகத்தின் வரலாற்றைச் சொல்லும் முதன்மையான ஆதாரநூலாகவும் கருதப்படுகிறது.

நூல் பகுதிகள்

  1. சிரியன் தேவாலயம்
  2. கத்தோலிக்க தேவாலயம்
  3. சீர்திருத்த தேவாலயம்
  4. கிறிஸ்தவ இலக்கியங்களும் நினைவிடங்களும்

மறைவு

ஆகூர் 1904-ல் மறைந்தார். திருவனந்தபுரம் கிறிஸ்து தேவாலயத்தில் (Church of Christ) அடக்கம் செய்யப்பட்டார்.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Jun-2023, 19:25:27 IST