under review

கெஜாமன்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Added First published date)
 
(4 intermediate revisions by 2 users not shown)
Line 2: Line 2:
கெஜாமன் (Kejaman) சரவாக்கில் வாழும் பழங்குடி மக்கள் ஆவர். ‘காஜாங்’ பழங்குடி இனத்தின் பிரிவினராக கெஜாமன் இன மக்கள் அறியப்படுகின்றனர். கெஜாமன் இன மக்கள் கயாமன் மக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
கெஜாமன் (Kejaman) சரவாக்கில் வாழும் பழங்குடி மக்கள் ஆவர். ‘காஜாங்’ பழங்குடி இனத்தின் பிரிவினராக கெஜாமன் இன மக்கள் அறியப்படுகின்றனர். கெஜாமன் இன மக்கள் கயாமன் மக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
==இனப்பரப்பு==
==இனப்பரப்பு==
கெஜாமன் மக்கள் நீண்ட வீடுகளில் வாழ்பவர்கள். சரவாக்கின் 'பெலாகா' (Belaga) மாவட்டத்தில் உள்ள 'ரெஜாங்' (Rejang) ஆற்றின் மேல் பகுதியில் உள்ள 'லாங் லிட்டன்' (Long Liten) மற்றும் 'லாங் செகாஹாம்' (Segaham) ஆகிய இரண்டு கிராமங்களில் கெஜாமன் மக்களின் குடியிருப்பு அமைந்திருக்கிறது. 17-ஆம் நூற்றாண்டின் போது லினாவ் ஆற்றங்கரையில்கெஜாமன் இன மக்கள் வாழ்ந்து வந்தனர். அதே பகுதியில் செகப்பன், லஹானான், புனான், பெனான் பூசாங் ஆகிய இன மக்களும் வாழ்ந்தனர். அங்கு வாழ்ந்து வந்த மற்ற பழங்குடி மக்களுடனான பூசலைத் தவிர்க்கவும் நன்செய் நிலத்தைத் தேடியும் பெலாகா ஆற்றங்கரைக்கும், பத்தாங் பாலூய் பகுதிக்கும் குடிபெயர்ந்தனர். பெலாகா மாவட்டத்தில் இருக்கும் டத்தே லித்தேன் (Rumah Kejaman Datah Liten), துஜு சட்சா (Tuju Sadza), துஜு மெத்தாப் (Tuju Meta'ap) , டத்தா மும்மா ( Datah Muma), கெஜாமன் டத்தா தியெங் (Datah Tiveng), கெஜாமன் துஜு ஜகுவா (Tuju Jagu'ah), துஜு ஹா (Tuju Ha'), பெலூயிட் (Belu'it), டத்தா நியான் (Datah Nian)ஆகிய தொடர் வீடுகளைக் கொண்ட நீண்டவீட்டுக் குடியிருப்புகளில் கெஜாமன் இனத்தவர் குடியிருக்கின்றனர்.
கெஜாமன் மக்கள் நீண்ட வீடுகளில் வாழ்பவர்கள். சரவாக்கின் 'பெலாகா' (Belaga) மாவட்டத்தில் உள்ள 'ரெஜாங்' (Rejang) ஆற்றின் மேல் பகுதியில் உள்ள 'லாங் லிட்டன்' (Long Liten) மற்றும் 'லாங் செகாஹாம்' (Segaham) ஆகிய இரண்டு கிராமங்களில் கெஜாமன் மக்களின் குடியிருப்பு அமைந்திருக்கிறது. 17-ம் நூற்றாண்டின் போது லினாவ் ஆற்றங்கரையில்கெஜாமன் இன மக்கள் வாழ்ந்து வந்தனர். அதே பகுதியில் செகப்பன், லஹானான், புனான், பெனான் பூசாங் ஆகிய இன மக்களும் வாழ்ந்தனர். அங்கு வாழ்ந்து வந்த மற்ற பழங்குடி மக்களுடனான பூசலைத் தவிர்க்கவும் நன்செய் நிலத்தைத் தேடியும் பெலாகா ஆற்றங்கரைக்கும், பத்தாங் பாலூய் பகுதிக்கும் குடிபெயர்ந்தனர். பெலாகா மாவட்டத்தில் இருக்கும் டத்தே லித்தேன் (Rumah Kejaman Datah Liten), துஜு சட்சா (Tuju Sadza), துஜு மெத்தாப் (Tuju Meta'ap) , டத்தா மும்மா ( Datah Muma), கெஜாமன் டத்தா தியெங் (Datah Tiveng), கெஜாமன் துஜு ஜகுவா (Tuju Jagu'ah), துஜு ஹா (Tuju Ha'), பெலூயிட் (Belu'it), டத்தா நியான் (Datah Nian)ஆகிய தொடர் வீடுகளைக் கொண்ட நீண்டவீட்டுக் குடியிருப்புகளில் கெஜாமன் இனத்தவர் குடியிருக்கின்றனர்.
==சமயம்==
==சமயம்==
[[File:Kejaman.jpg|thumb|கெஜாமன் இன மக்கள்]]கெஜாமன் இன மக்கள் புங்கான் எனப்படும் சமயநம்பிக்கையைக் கொண்டிருந்தனர். கிருஸ்துவச் சமயத்தின் வருகைக்குப் பின்னர் தங்கள் நம்பிக்கைகளைக் கைவிட்டுக் கிறிஸ்துவச் சமயத்தைத் தழுவினர்.
[[File:Kejaman.jpg|thumb|கெஜாமன் இன மக்கள்]]
கெஜாமன் இன மக்கள் புங்கான் எனப்படும் சமயநம்பிக்கையைக் கொண்டிருந்தனர். கிருஸ்துவச் சமயத்தின் வருகைக்குப் பின்னர் தங்கள் நம்பிக்கைகளைக் கைவிட்டுக் கிறிஸ்துவச் சமயத்தைத் தழுவினர்.
==மொழி==
==மொழி==
[[File:Kejaman dictionary.jpg|thumb|கெஜாமன் மொழி அகராதி]]கெஜாமன் இன மக்கள் கெஜாமன் மொழியைப் பேசுகின்றனர். இடம்பெயர்வு, நவீனக்கல்வி ஆகியவற்றின் தாக்கத்தினால் கெஜாமன் மொழியைப் பேசும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. 2017-ஆம் ஆண்டு கெஜாமன் மொழியைப் பாதுகாக்கும் பொருட்டு 246 அன்றாடப் பயன்பாட்டுச் சொற்கள், பொருட்கள் ஆகியவற்றுக்கான மலாய், ஆங்கிலத்தின் சொற்களும் படங்களும் கொண்ட கெஜாமன் மொழி அகராதி ஒன்றனை வெளியீட்டனர். 2013-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஏறக்குறைய 1200 மக்கள் கெஜாமன் மொழியைப் பயன்படுத்துகின்றனர் என அறியப்படுகின்றது.
[[File:Kejaman dictionary.jpg|thumb|கெஜாமன் மொழி அகராதி]]
கெஜாமன் இன மக்கள் கெஜாமன் மொழியைப் பேசுகின்றனர். இடம்பெயர்வு, நவீனக்கல்வி ஆகியவற்றின் தாக்கத்தினால் கெஜாமன் மொழியைப் பேசும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. 2017-ம் ஆண்டு கெஜாமன் மொழியைப் பாதுகாக்கும் பொருட்டு 246 அன்றாடப் பயன்பாட்டுச் சொற்கள், பொருட்கள் ஆகியவற்றுக்கான மலாய், ஆங்கிலத்தின் சொற்களும் படங்களும் கொண்ட கெஜாமன் மொழி அகராதி ஒன்றனை வெளியீட்டனர். 2013-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஏறக்குறைய 1200 மக்கள் கெஜாமன் மொழியைப் பயன்படுத்துகின்றனர் என அறியப்படுகின்றது.
==பண்பாடு==
==பண்பாடு==
======தலைவர்======
======தலைவர்======
Line 26: Line 28:
*[https://nomadictribe.com/tribes/the-kenjaman கெஜாமன் இன மக்கள் அறிமுகம்]
*[https://nomadictribe.com/tribes/the-kenjaman கெஜாமன் இன மக்கள் அறிமுகம்]
*[https://www.pressreader.com/ கெஜாமன் இனப் பெருநாள்]
*[https://www.pressreader.com/ கெஜாமன் இனப் பெருநாள்]
 
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|24-Dec-2022, 17:32:02 IST}}
[[Category:இனக்குழுக்கள்]]
[[Category:இனக்குழுக்கள்]]
[[Category:மலேசிய பண்பாடு]]
[[Category:மலேசிய பண்பாடு]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 12:03, 13 June 2024

கெஜாமன் மக்கள்

கெஜாமன் (Kejaman) சரவாக்கில் வாழும் பழங்குடி மக்கள் ஆவர். ‘காஜாங்’ பழங்குடி இனத்தின் பிரிவினராக கெஜாமன் இன மக்கள் அறியப்படுகின்றனர். கெஜாமன் இன மக்கள் கயாமன் மக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இனப்பரப்பு

கெஜாமன் மக்கள் நீண்ட வீடுகளில் வாழ்பவர்கள். சரவாக்கின் 'பெலாகா' (Belaga) மாவட்டத்தில் உள்ள 'ரெஜாங்' (Rejang) ஆற்றின் மேல் பகுதியில் உள்ள 'லாங் லிட்டன்' (Long Liten) மற்றும் 'லாங் செகாஹாம்' (Segaham) ஆகிய இரண்டு கிராமங்களில் கெஜாமன் மக்களின் குடியிருப்பு அமைந்திருக்கிறது. 17-ம் நூற்றாண்டின் போது லினாவ் ஆற்றங்கரையில்கெஜாமன் இன மக்கள் வாழ்ந்து வந்தனர். அதே பகுதியில் செகப்பன், லஹானான், புனான், பெனான் பூசாங் ஆகிய இன மக்களும் வாழ்ந்தனர். அங்கு வாழ்ந்து வந்த மற்ற பழங்குடி மக்களுடனான பூசலைத் தவிர்க்கவும் நன்செய் நிலத்தைத் தேடியும் பெலாகா ஆற்றங்கரைக்கும், பத்தாங் பாலூய் பகுதிக்கும் குடிபெயர்ந்தனர். பெலாகா மாவட்டத்தில் இருக்கும் டத்தே லித்தேன் (Rumah Kejaman Datah Liten), துஜு சட்சா (Tuju Sadza), துஜு மெத்தாப் (Tuju Meta'ap) , டத்தா மும்மா ( Datah Muma), கெஜாமன் டத்தா தியெங் (Datah Tiveng), கெஜாமன் துஜு ஜகுவா (Tuju Jagu'ah), துஜு ஹா (Tuju Ha'), பெலூயிட் (Belu'it), டத்தா நியான் (Datah Nian)ஆகிய தொடர் வீடுகளைக் கொண்ட நீண்டவீட்டுக் குடியிருப்புகளில் கெஜாமன் இனத்தவர் குடியிருக்கின்றனர்.

சமயம்

கெஜாமன் இன மக்கள்

கெஜாமன் இன மக்கள் புங்கான் எனப்படும் சமயநம்பிக்கையைக் கொண்டிருந்தனர். கிருஸ்துவச் சமயத்தின் வருகைக்குப் பின்னர் தங்கள் நம்பிக்கைகளைக் கைவிட்டுக் கிறிஸ்துவச் சமயத்தைத் தழுவினர்.

மொழி

கெஜாமன் மொழி அகராதி

கெஜாமன் இன மக்கள் கெஜாமன் மொழியைப் பேசுகின்றனர். இடம்பெயர்வு, நவீனக்கல்வி ஆகியவற்றின் தாக்கத்தினால் கெஜாமன் மொழியைப் பேசும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. 2017-ம் ஆண்டு கெஜாமன் மொழியைப் பாதுகாக்கும் பொருட்டு 246 அன்றாடப் பயன்பாட்டுச் சொற்கள், பொருட்கள் ஆகியவற்றுக்கான மலாய், ஆங்கிலத்தின் சொற்களும் படங்களும் கொண்ட கெஜாமன் மொழி அகராதி ஒன்றனை வெளியீட்டனர். 2013-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஏறக்குறைய 1200 மக்கள் கெஜாமன் மொழியைப் பயன்படுத்துகின்றனர் என அறியப்படுகின்றது.

பண்பாடு

தலைவர்

கெஜாமன் இன மக்கள் வசிக்கும் நீண்ட வீட்டின் தலைவர் லஜா லெயாவ் என அறியப்படுகின்றார். லஜா லெயாவ் குடியைச் சேர்ந்தவரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியை உடையவராகக் கருதப்படுகிறார். பன்வேன் என்றழைக்கப்படும் தம் குடிகளைப் பாதுகாக்கும் முழுப்பொறுப்பும் லஜா லெயாவைச் சேர்ந்தது என நம்பப்படுகிறது.

அணிகள்/ உடல் அலங்காரம்

சரவாக்கில் உள்ள பிற சிறிய பழங்குடியினரைப் போலவே, கெஜாமன் பழங்குடி மக்களும் பச்சை குத்தல்கள் மற்றும் காதாணி அணிதல் உட்பட தங்களை அழகுப்படுத்திக் கொள்ளும் வழக்கத்தைப் பின்பற்றியுள்ளனர்.

பெருநாட்கள்

காஜாங் பழங்குடிப் பேரினத்தைச் சேர்ந்த கெஜாமன் செகப்பன், புனான், லஹானான், சிஹான் ஆகிய இனத்தவர் ஒன்றிணைந்து சவியேக் கஜாங் (Pesta Adet Saviek Kajang) எனும் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

உணவுமுறை

இவர்களுடைய பாரம்பரிய உணவு 'சிகு' (Sigu ) என்னும் சவ்வரிசியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை உணவு ஆகும்.

கலை

'சுவே' (Suwey) என்பது கெஜமன் பழங்குடியின் பாரம்பரிய நடனமாகும். தங்களுடைய விருந்தினரை வரவேற்பதற்காக இந்நடனம் ஆடப்படும். கூட்டாக ஆடப்படும் நடனத்தை ஆண்களே பெரும்பாலும் தலைமையேற்று ஆடுவர். நீண்ட வீடுகளின் முற்றமான (துவார் ருவாய்) பகுதியில் இந்நடனம் ஆடப்படும்.

இறப்புச்சடங்குகள்

கெஜாமன் பழங்குடியின மக்கள் தங்கள் இறந்த முன்னோர்களின் உடலைப் பதப்படுத்தி அவற்றை மட்பாண்டத்தில் வைக்கின்றனர். பின்னர், மட்பாண்டத்தைக் கெலிரியாங் எனப்படும் தூணின் மீது வைத்திருக்கின்றனர். கெஜாமன் இன மக்களின் இறப்புச்சடங்குகள் பெரும்பாலும் காஜாங் பழங்குடிப் பேரினத்தின் மற்றைய இனத்தவர்களுடன் ஒத்திருக்கிறது. கிறிஸ்துவச் சமயத்தின் வருகையினால், கெஜாமன் இன மக்கள் தங்கள் பாரம்பரிய நம்பிக்கைகள் பலவற்றையும் கைவிட்டனர்.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Dec-2022, 17:32:02 IST