under review

கயமை: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
Tag: Reverted
(Added First published date)
 
(One intermediate revision by the same user not shown)
Line 8: Line 8:
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
"சமுதாயத்திலும்‌, அரசியலிலும்‌ காணப்‌படும்‌ கயமைத்தனங்களின்‌ ஒரு மொத்த உருவமாகவே இவர்‌ ஆணவர் படைக்கப்பட்டுள்ளார்‌. இரக்கமின்மை, மற்றவர்களுடைய பலவீனங்‌களை அறிந்து செயல்படுதல்‌, தயங்காமல்‌ பொய்‌ பேசுதல்‌, அதிகாரத்‌ திமிர்‌, கோழை மனம்‌, மனமறிந்து தீயவை. செய்தல்‌, நட்புக்கும்‌ வஞ்சகம்‌ செய்தல்‌, ஆடம்பரம்‌, ஆரவாரம்‌, சொல்‌ வேறு செயல்‌ வேறு என்று வாழும்‌ வாழ்க்கை ஆகிய பல்வேறு சமுதாயத்‌ தீமைகளையும்‌ ஆணவர்‌ ஒருவர்‌ உருவகத்திலே காட்டி, பாத்திரப்‌ படைப்பை ஓர்‌ உருவகமாகசவே இந்நாவலில்‌ டாக்டர்‌ மு.வ. செய்துள்ளார்‌" என்று இரா. தண்டாயுதம் குறிப்பிடுகிறார் (மு.வ. நினைவுமலர்)  

கயமை ஒழுக்கத்தின் இன்றியமையாமை குறித்த மரபான பார்வையை புதிய வாழ்க்கைச்சூழலில் விவரிக்கும் நாவல். ஆசிரியரின் கருத்துக்களைச் சொல்லும் உருவகங்களாகவே கதைமாந்தர்கள் அமைந்துள்ளனர். "அவர்‌ எழுத்தராகப்‌ பணியாற்றிய காலத்துப்‌ பெற்ற அனுபவங்களின்‌ எதிரொலியே கயமை ஆகும்‌" என டாக்டர் விஸ்வநாதன் மு.வ.நினைவுமலர் கட்டுரையில் பதிவுசெய்கிறார்.  

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%B5/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%B5._%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D மு.வ.நாவல்களில் சமுதாயநோக்கு]

* [https://archive.org/stream/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZp0kZty/TVA_BOK_0009063_%E0%AE%AE%E0%AF%81_%E0%AE%B5_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_djvu.txt மு.வ.நினைவுமலர் இணையநூலகம்]

{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 13:38:04 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 16:31, 13 June 2024

To read the article in English: Kayamai. ‎

கயமை

கயமை (1956 ) மு.வரதராசன் எழுதிய நாவல். ஆடம்பர வாழ்க்கைக்கான மோகத்தால் ஒழுக்கம் தவறும் ஒரு பெண்ணின் வாழ்க்கையின் சிதைவை இந்நாவலில் ஆசிரியர் சித்தரிக்கிறார்

எழுத்து வெளியீடு

மு. வரதராசன் இந்நாவலை 1956-ல் எழுதினார். அவருடைய 'தாயகம்' பதிப்பகம் வெளியிட்டது.

கதைச்சுருக்கம்

'கயமை' திருக்குறளின் ஓர் அதிகாரத்தின் தலைப்பு. மு.வரதராசனார் திருக்குறள் கருத்துக்களை விவரிக்கும்பொருட்டு இந்நாவலை எழுதியிருக்கிறார். இதில் கதைமாந்தர்களுக்கே பல்வேறு குண இயல்புகளைப் பெயராக அளித்துள்ளார். ஆணவர், வசீகரம் போன்று பெயர் கொண்ட கதாபாத்திரங்கள் மனிதனின் இயல்பான கயமையை இந்நாவலில் வெளிப்படுத்துகின்றனர். இந்நாவல் ஒழுக்கமின்மை உருவாக்கும் அழிவைப் பற்றிப் பேசுவது. கதைநாயகியான வசீகரம் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தன் வாழ்க்கையை அழித்துக்கொள்கிறாள்.

இலக்கிய இடம்

"சமுதாயத்திலும்‌, அரசியலிலும்‌ காணப்‌படும்‌ கயமைத்தனங்களின்‌ ஒரு மொத்த உருவமாகவே இவர்‌ ஆணவர் படைக்கப்பட்டுள்ளார்‌. இரக்கமின்மை, மற்றவர்களுடைய பலவீனங்‌களை அறிந்து செயல்படுதல்‌, தயங்காமல்‌ பொய்‌ பேசுதல்‌, அதிகாரத்‌ திமிர்‌, கோழை மனம்‌, மனமறிந்து தீயவை. செய்தல்‌, நட்புக்கும்‌ வஞ்சகம்‌ செய்தல்‌, ஆடம்பரம்‌, ஆரவாரம்‌, சொல்‌ வேறு செயல்‌ வேறு என்று வாழும்‌ வாழ்க்கை ஆகிய பல்வேறு சமுதாயத்‌ தீமைகளையும்‌ ஆணவர்‌ ஒருவர்‌ உருவகத்திலே காட்டி, பாத்திரப்‌ படைப்பை ஓர்‌ உருவகமாகசவே இந்நாவலில்‌ டாக்டர்‌ மு.வ. செய்துள்ளார்‌" என்று இரா. தண்டாயுதம் குறிப்பிடுகிறார் (மு.வ. நினைவுமலர்)

கயமை ஒழுக்கத்தின் இன்றியமையாமை குறித்த மரபான பார்வையை புதிய வாழ்க்கைச்சூழலில் விவரிக்கும் நாவல். ஆசிரியரின் கருத்துக்களைச் சொல்லும் உருவகங்களாகவே கதைமாந்தர்கள் அமைந்துள்ளனர். "அவர்‌ எழுத்தராகப்‌ பணியாற்றிய காலத்துப்‌ பெற்ற அனுபவங்களின்‌ எதிரொலியே கயமை ஆகும்‌" என டாக்டர் விஸ்வநாதன் மு.வ.நினைவுமலர் கட்டுரையில் பதிவுசெய்கிறார்.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:38:04 IST