கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில்: Difference between revisions
(Corrected text format issues) |
(Corrected the links to Disambiguation page) |
||
(4 intermediate revisions by the same user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=கன்னியாகுமரி|DisambPageTitle=[[கன்னியாகுமரி (பெயர் பட்டியல்)]]}} | |||
{{Read English|Name of target article=Kanyakumari Guganatheeswarar Temple|Title of target article=Kanyakumari Guganatheeswarar Temple}} | {{Read English|Name of target article=Kanyakumari Guganatheeswarar Temple|Title of target article=Kanyakumari Guganatheeswarar Temple}} | ||
[[File:கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில்.jpg|alt=கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில்|thumb|கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில்]] | [[File:கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில்.jpg|alt=கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில்|thumb|கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில்]] | ||
Line 11: | Line 12: | ||
== தொன்மம் == | == தொன்மம் == | ||
கன்னியாகுமரித் தலப்புராணம் முருகன்(குகன்) தனது தந்தையான சிவனை(ஈஸ்வரனை) வழிபட்ட இடம் என்று கூறும். இதற்கு துணையாக கந்தபுராணத்தில் வரும்,<blockquote>''மகமெனும் குகன்தான் அந்த மகிமைசேர் குமரியங்கண்'' | கன்னியாகுமரித் தலப்புராணம் முருகன்(குகன்) தனது தந்தையான சிவனை(ஈஸ்வரனை) வழிபட்ட இடம் என்று கூறும். இதற்கு துணையாக கந்தபுராணத்தில் வரும்,<blockquote>''மகமெனும் குகன்தான் அந்த மகிமைசேர் குமரியங்கண்'' | ||
''அகமகிழ் தாதையான அரன்தனைத் தாபித்து'' | ''அகமகிழ் தாதையான அரன்தனைத் தாபித்து'' | ||
''அன்பால்தகைமைசேர் உபசாரங்கள் தம்மொடும் பூசைசெய்து'' | ''அன்பால்தகைமைசேர் உபசாரங்கள் தம்மொடும் பூசைசெய்து'' | ||
''குகன்தனை ஆண்ட ஈசன்''</blockquote>என்னும் பாடல் வரிகளை எடுத்து கூறுகின்றனர். | ''குகன்தனை ஆண்ட ஈசன்''</blockquote>என்னும் பாடல் வரிகளை எடுத்து கூறுகின்றனர். | ||
== கோவில் அமைப்பு == | == கோவில் அமைப்பு == | ||
[[File:கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில்4.png|thumb|கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில்]] | [[File:கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில்4.png|thumb|கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில்]] | ||
குகநாதீஸ்வரர் கோவில் கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், உள்பிராகாரம், வெளிப்பிராகாரம் என்னும் அமைப்பில் உள்ளது. கோவில் கட்டுமானம் சோழர் பாணியிலான ரதம் போன்ற தோற்றம் உடையது. | குகநாதீஸ்வரர் கோவில் கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், உள்பிராகாரம், வெளிப்பிராகாரம் என்னும் அமைப்பில் உள்ளது. கோவில் கட்டுமானம் சோழர் பாணியிலான ரதம் போன்ற தோற்றம் உடையது. | ||
கருவறையில் மூலவர் உயரமான லிங்க வடிவில் உள்ளார். மூலவருக்கு எதிரே நந்தி உள்ளது. கருவறை வாசலில் கணபதி சிற்பம் உள்ளது. உட்பிரகாரத்தில் பார்வதி, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளன. நவக்கிரக சன்னிதி அருகில், பைரவருக்கு தனிச் சன்னிதி உள்ளது. ஆலய வெளிப் பிரகாரத்தில் கன்னிமூலை கணபதி, மகாலட்சுமி சன்னிதிகள் உள்ளன. முருகன், வள்ளி மற்றும் வள்ளி தெய்வானையுடன் இருக்கும் சன்னதியும் உள்ளது. ஆலய வளாகத்தில் உள்ள நந்த வனத்தில் அரசமரம் அடியில் நாகர் சிலைகள் உள்ளன. | கருவறையில் மூலவர் உயரமான லிங்க வடிவில் உள்ளார். மூலவருக்கு எதிரே நந்தி உள்ளது. கருவறை வாசலில் கணபதி சிற்பம் உள்ளது. உட்பிரகாரத்தில் பார்வதி, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளன. நவக்கிரக சன்னிதி அருகில், பைரவருக்கு தனிச் சன்னிதி உள்ளது. ஆலய வெளிப் பிரகாரத்தில் கன்னிமூலை கணபதி, மகாலட்சுமி சன்னிதிகள் உள்ளன. முருகன், வள்ளி மற்றும் வள்ளி தெய்வானையுடன் இருக்கும் சன்னதியும் உள்ளது. ஆலய வளாகத்தில் உள்ள நந்த வனத்தில் அரசமரம் அடியில் நாகர் சிலைகள் உள்ளன. | ||
== வரலாறு == | == வரலாறு == | ||
[[File:கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில்6.png|thumb|நாகர்கள், குகநாதீஸ்வரர் கோவில்]] | [[File:கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில்6.png|thumb|நாகர்கள், குகநாதீஸ்வரர் கோவில்]] | ||
பிற்கால சோழர் ஆட்சி இங்கு நிலவியபோது கோவில் கட்டப்பட்டுள்ளது. பொ.யு. 11- | பிற்கால சோழர் ஆட்சி இங்கு நிலவியபோது கோவில் கட்டப்பட்டுள்ளது. பொ.யு. 11-ம் நூற்றாண்டு கல்வெட்டு இக்கோவில் இறைவனை ’ராஜராஜப் பாண்டியநாட்டு உத்தமதோழ வளநாட்டு புறத்தாயநாட்டு அழிக்குடி ராஜராஜேஸ்வரமுடையார்’ என்ற அடைமொழியுடன் கூறுகிறது. திருப்பொந்தீஸ்வரமுடையார் என கல்வெட்டில் மூலவர் குறிப்பிடப்படுகிறார். | ||
கல்வெட்டுகளில் இக்கோவிலை தனிச்சபை நிர்வகித்ததாக செய்தி உள்ளது. மேலும் செவ்வாய் கிழமை , பூச நட்சத்திர நா கோவில் முகமண்டபத்தில் கோவில் சபை மற்றும் பக்தர்கள் கூடி அவர்கள் முன்னிலையில் கங்கைகொண்ட சோழபுரம் வியாபாரி ஆச்சான் மாற்றிலி என்பவன் நன்கொடை அளித்த செய்தி கல்வெட்டொன்றில் உள்ளது. | கல்வெட்டுகளில் இக்கோவிலை தனிச்சபை நிர்வகித்ததாக செய்தி உள்ளது. மேலும் செவ்வாய் கிழமை , பூச நட்சத்திர நா கோவில் முகமண்டபத்தில் கோவில் சபை மற்றும் பக்தர்கள் கூடி அவர்கள் முன்னிலையில் கங்கைகொண்ட சோழபுரம் வியாபாரி ஆச்சான் மாற்றிலி என்பவன் நன்கொடை அளித்த செய்தி கல்வெட்டொன்றில் உள்ளது. | ||
கோவில் கல்வெட்டில் உள்ள நிபந்தம் அளித்தவர்கள் பட்டியல், | கோவில் கல்வெட்டில் உள்ள நிபந்தம் அளித்தவர்கள் பட்டியல், | ||
* வீரநிலை வேளாளன் அப்பி பொண்ணாண்டி(பொ.யு. 1042) | * வீரநிலை வேளாளன் அப்பி பொண்ணாண்டி(பொ.யு. 1042) | ||
Line 30: | Line 37: | ||
[[File:கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில்7.jpg|thumb|கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில்]] | [[File:கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில்7.jpg|thumb|கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில்]] | ||
கோவிலில் தினமும் கோ பூஜை நடக்கிறது. ஆண்டுதோறும் புரட்டாசி திருவாதிரை நட்சத்திரத்தில் 1008 சங்காபிஷேகமும் சிறப்பாக நடைபெறுகிறது. சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, விசாகம், சஷ்டி, பஞ்சமி, திருவாதிரை, பிரதோஷம், சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. | கோவிலில் தினமும் கோ பூஜை நடக்கிறது. ஆண்டுதோறும் புரட்டாசி திருவாதிரை நட்சத்திரத்தில் 1008 சங்காபிஷேகமும் சிறப்பாக நடைபெறுகிறது. சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, விசாகம், சஷ்டி, பஞ்சமி, திருவாதிரை, பிரதோஷம், சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. | ||
ஆண்டுதோறும் ஆனி மாதம் பவுர்ணமி நாளில் காரைக்காலில் [[காரைக்கால் அம்மையார்]] சிவனடியாருக்கு மாங்கனி படைத்த நிகழ்வும், சிவபெருமான் காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனிகள் கொடுத்த நிகழ்வும் ’மாங்கனித் திருவிழா’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அதே நாளில் குகநாதீஸ்வரர் கோவிலிலும் 'மாங்கனித் திருவிழா' அந்திப் பொழுதில் கொண்டாடப்படுகிறது. | ஆண்டுதோறும் ஆனி மாதம் பவுர்ணமி நாளில் காரைக்காலில் [[காரைக்கால் அம்மையார்]] சிவனடியாருக்கு மாங்கனி படைத்த நிகழ்வும், சிவபெருமான் காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனிகள் கொடுத்த நிகழ்வும் ’மாங்கனித் திருவிழா’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அதே நாளில் குகநாதீஸ்வரர் கோவிலிலும் 'மாங்கனித் திருவிழா' அந்திப் பொழுதில் கொண்டாடப்படுகிறது. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
Line 37: | Line 45: | ||
* [https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/06/12103607/1245878/gangatheeswarar-temple-kanyakumari.vpf குகநாதீஸ்வரர் திருக்கோவில் - கன்னியாகுமரி || gangatheeswarar temple kanyakumari ] | * [https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/06/12103607/1245878/gangatheeswarar-temple-kanyakumari.vpf குகநாதீஸ்வரர் திருக்கோவில் - கன்னியாகுமரி || gangatheeswarar temple kanyakumari ] | ||
* புகைபடங்கள் நன்றி - [https://rajiyinkanavugal.blogspot.com/2019/03/blog-post_15.html http://rajiyinkanavugal.blogspot.com/2019/03/blog-post_15.html] | * புகைபடங்கள் நன்றி - [https://rajiyinkanavugal.blogspot.com/2019/03/blog-post_15.html http://rajiyinkanavugal.blogspot.com/2019/03/blog-post_15.html] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|15-Nov-2022, 13:31:25 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 18:16, 27 September 2024
- கன்னியாகுமரி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கன்னியாகுமரி (பெயர் பட்டியல்)
To read the article in English: Kanyakumari Guganatheeswarar Temple.
கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே உள்ள சிவ ஆலயம். மூலவர் பெயர் குகநாதீஸ்வரர். கன்னியாகுமரி தலப்புராணம் முருகன் தந்தையை வழிபட்ட இடம் என்று கூறும்.
இடம்
கன்னியாகுமரி ரயில் நிலயம் அருகில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் வடக்கில் விவேகானந்தபுரம் வெங்கடாசலபதி கோவிலுக்கு ஒரு கிலோமீட்டர் தெற்கில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது.
மூலவர்
மூலவர் குகநாதீஸ்வரர் என்னும் சிவன் கிழக்கு நோக்கி உயரமான லிங்க வடிவில் உள்ளார். மூலவரின் துணை பார்வதி தெற்கு நோக்கி உள்ளார். மூலவர் கோனாண்டேஸ்வரன் என்றும், குகனாண்டேஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார். கல்வெட்டில் மூலவர் திருப்பொந்தீஸ்வரமுடையார் எனப்படுகிறார்.
பெயர்
கருவறை குகைபோல் இருபதாலும் சுருங்கிய பிராகாரம் உடையதாலும் குகையில் இருக்கும் ஈஸ்வரன் என்னும் விளக்கமும் முருகன்(குகன்) வழிபட்ட சிவன்(ஈஸ்வரன்) என்னும் விளக்கமும் சொல்லப்படுகிறது.
தொன்மம்
கன்னியாகுமரித் தலப்புராணம் முருகன்(குகன்) தனது தந்தையான சிவனை(ஈஸ்வரனை) வழிபட்ட இடம் என்று கூறும். இதற்கு துணையாக கந்தபுராணத்தில் வரும்,
மகமெனும் குகன்தான் அந்த மகிமைசேர் குமரியங்கண்
அகமகிழ் தாதையான அரன்தனைத் தாபித்து
அன்பால்தகைமைசேர் உபசாரங்கள் தம்மொடும் பூசைசெய்து
குகன்தனை ஆண்ட ஈசன்
என்னும் பாடல் வரிகளை எடுத்து கூறுகின்றனர்.
கோவில் அமைப்பு
குகநாதீஸ்வரர் கோவில் கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், உள்பிராகாரம், வெளிப்பிராகாரம் என்னும் அமைப்பில் உள்ளது. கோவில் கட்டுமானம் சோழர் பாணியிலான ரதம் போன்ற தோற்றம் உடையது.
கருவறையில் மூலவர் உயரமான லிங்க வடிவில் உள்ளார். மூலவருக்கு எதிரே நந்தி உள்ளது. கருவறை வாசலில் கணபதி சிற்பம் உள்ளது. உட்பிரகாரத்தில் பார்வதி, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளன. நவக்கிரக சன்னிதி அருகில், பைரவருக்கு தனிச் சன்னிதி உள்ளது. ஆலய வெளிப் பிரகாரத்தில் கன்னிமூலை கணபதி, மகாலட்சுமி சன்னிதிகள் உள்ளன. முருகன், வள்ளி மற்றும் வள்ளி தெய்வானையுடன் இருக்கும் சன்னதியும் உள்ளது. ஆலய வளாகத்தில் உள்ள நந்த வனத்தில் அரசமரம் அடியில் நாகர் சிலைகள் உள்ளன.
வரலாறு
பிற்கால சோழர் ஆட்சி இங்கு நிலவியபோது கோவில் கட்டப்பட்டுள்ளது. பொ.யு. 11-ம் நூற்றாண்டு கல்வெட்டு இக்கோவில் இறைவனை ’ராஜராஜப் பாண்டியநாட்டு உத்தமதோழ வளநாட்டு புறத்தாயநாட்டு அழிக்குடி ராஜராஜேஸ்வரமுடையார்’ என்ற அடைமொழியுடன் கூறுகிறது. திருப்பொந்தீஸ்வரமுடையார் என கல்வெட்டில் மூலவர் குறிப்பிடப்படுகிறார்.
கல்வெட்டுகளில் இக்கோவிலை தனிச்சபை நிர்வகித்ததாக செய்தி உள்ளது. மேலும் செவ்வாய் கிழமை , பூச நட்சத்திர நா கோவில் முகமண்டபத்தில் கோவில் சபை மற்றும் பக்தர்கள் கூடி அவர்கள் முன்னிலையில் கங்கைகொண்ட சோழபுரம் வியாபாரி ஆச்சான் மாற்றிலி என்பவன் நன்கொடை அளித்த செய்தி கல்வெட்டொன்றில் உள்ளது.
கோவில் கல்வெட்டில் உள்ள நிபந்தம் அளித்தவர்கள் பட்டியல்,
- வீரநிலை வேளாளன் அப்பி பொண்ணாண்டி(பொ.யு. 1042)
- முதல் ராஜேந்திர சோழனின் சமயல்காரி அருமொழிவளநாட்டு புவியூர்நாட்டு பாலையூர்திட்டை சோழகுலவல்லி(பொ.யு. 1038)
- திருகுறும்குடி வெள்ளாட்டி(1044)
- கருங்குள நாட்டு கலிகாலசோழநல்லூர் வெள்ளாளன் சிவஞானப்படான்
பூஜைகளும் விழாக்களும்
கோவிலில் தினமும் கோ பூஜை நடக்கிறது. ஆண்டுதோறும் புரட்டாசி திருவாதிரை நட்சத்திரத்தில் 1008 சங்காபிஷேகமும் சிறப்பாக நடைபெறுகிறது. சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, விசாகம், சஷ்டி, பஞ்சமி, திருவாதிரை, பிரதோஷம், சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
ஆண்டுதோறும் ஆனி மாதம் பவுர்ணமி நாளில் காரைக்காலில் காரைக்கால் அம்மையார் சிவனடியாருக்கு மாங்கனி படைத்த நிகழ்வும், சிவபெருமான் காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனிகள் கொடுத்த நிகழ்வும் ’மாங்கனித் திருவிழா’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அதே நாளில் குகநாதீஸ்வரர் கோவிலிலும் 'மாங்கனித் திருவிழா' அந்திப் பொழுதில் கொண்டாடப்படுகிறது.
உசாத்துணை
- தென்குமரி கோவில்கள், முனைவர் அ.கா. பெருமாள், சுதர்சன் புக்ஸ், இரண்டாம் பதிப்பு 2018.
- கன்னியாகுமரித் தலபுராண மூலமும் சுருக்க வசனமும், மு.ரா. அருணாசலக்கவிராயர்.
- கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் திருக்கோயில் (Kanyakumari Guhanatheshwarar Temple)
- குகநாதீஸ்வரர் திருக்கோவில் - கன்னியாகுமரி || gangatheeswarar temple kanyakumari
- புகைபடங்கள் நன்றி - http://rajiyinkanavugal.blogspot.com/2019/03/blog-post_15.html
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:31:25 IST