under review

அவஸ்தை: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Added First published date)
 
(One intermediate revision by one other user not shown)
Line 1: Line 1:
[[File:avasthe.jpg|thumb|அவஸ்தை]]
[[File:avasthe.jpg|thumb|அவஸ்தை]]
அவஸ்தை. கன்னட மொழி எழுத்தாளர் யூ.ஆர். ஆனந்தமூர்த்தி எழுதிய நாவல். 1978-ல் கன்னடத்தில் முதல் பதிப்பு வெளியானது. தமிழில் இதை நஞ்சுண்டன் மொழிபெயர்த்துள்ளார். அரசியல் மற்றும் அதிகாரம் வழியாக கிருஷ்ணப்பா கெளடா என்ற மைய கதாபாத்திரம் செய்யும் ஒரு முழு வாழ்க்கைப் பயணம் இந்த நாவல். எளிய கிராமத்தில் பிறந்து மாநிலத்தின் முக்கியமான அரசியல் தலைவராவதன் நீண்ட பயணம் வழியாக கிருஷ்ணப்பா கெளடா இழந்ததும் பெற்றதும் எதை என்று இந்த நாவல் காட்டுகிறது. கர்நாடகத்தை சேர்ந்த ஷந்தேவரி கோபால கௌடா என்ற அரசியல் ஆளுமையின் உன்மையான வாழ்க்கை அடியொற்றி இந்த நாவல் அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  
அவஸ்தை. கன்னட மொழி எழுத்தாளர் யூ.ஆர். ஆனந்தமூர்த்தி எழுதிய நாவல். 1978-ல் கன்னடத்தில் முதல் பதிப்பு வெளியானது. தமிழில் இதை நஞ்சுண்டன் மொழிபெயர்த்துள்ளார். அரசியல் மற்றும் அதிகாரம் வழியாக கிருஷ்ணப்பா கெளடா என்ற மைய கதாபாத்திரம் செய்யும் ஒரு முழு வாழ்க்கைப் பயணம் இந்த நாவல். எளிய கிராமத்தில் பிறந்து மாநிலத்தின் முக்கியமான அரசியல் தலைவராவதன் நீண்ட பயணம் வழியாக கிருஷ்ணப்பா கெளடா இழந்ததும் பெற்றதும் எதை என்று இந்த நாவல் காட்டுகிறது. கர்நாடகத்தை சேர்ந்த ஷந்தேவரி கோபால கௌடா என்ற அரசியல் ஆளுமையின் உண்மையான வாழ்க்கையை அடியொற்றி இந்த நாவல் அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  
==தமிழ்பதிப்பு==
==தமிழ்பதிப்பு==
தமிழில் காலச்சுவடு பதிப்பகம் இந்த நாவலை வெளியிட்டுள்ளது. (முதல் பதிப்பு: டிசம்பர் 2011. இரண்டாம் (குறும்) பதிப்பு, டிசம்பர் 2017). இந்த நாவலை தமிழில் மொழிபெயர்த்துள்ள நஞ்சுண்டன் யூ.ஆர். ஆனந்தமூர்த்தின் மற்றொரு நாவலை 'பிறப்பு' என தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.  

Line 7: Line 7:
யூ. ஆர். ஆனந்தமூர்த்தி. [உடுப்பி இராஜகோபாலாச்சாரிய அனந்தமூர்த்தி ]. [21 டிசம்பர் 1932 - 22 ஆகஸ்ட் 2014]. நவீன இலக்கியத்தில் இந்திய அளவி்லும் கன்னடத்திலும் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவராக விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறார். ஞான பீடம், பத்ம பூஷன் ஆகிய இந்திய அரசின் உயரிய விருதுகளை பெற்றவர். 8 நாவல்கள் மற்றும் 8 சிறுகதை தொகுப்புகள் அடங்கிய இவரின் புனைவுலகிலிருந்து பல படைப்புகள் ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவஸ்தை அல்லாமல் சம்ஸ்காரா என்ற இவருடைய மற்றொரு நாவல் தமிழில் கிடைக்கிறது. [பார்க்க: யூ. ஆர். அனந்தமூர்த்தி].

==கதைச்சுருக்கம்==
==கதைச்சுருக்கம்==
நாவலின் மைய கதாபாத்திரமான கிருஷ்ணப்ப கெளடா ஐம்பது வயது நிறைவதற்குள் பக்கவாதம் வந்து மரணப் படுக்கையிலிருக்கும் நிலையில் துவங்குகிறது நாவல். முன் நாட்களில் விவசாயிகளுக்காக போராடிய புரட்சிகர தலைவரும் இடதுசாரி அரசியல்வதியுமான கிருஷ்ணப்ப கெளடா நோய் வாய்பட்டு தன்னுடைய மனைவியின் பாராமரிப்பில் இருக்கிறார். அப்பொழுது தன்னுடைய மொத்த வாழ்வையும் நினைவுகளில் மீட்டுப் பார்க்கிறார், அந்த ஒழுங்கில் கதை விரிகிறது.

தன்னுடைய கிராமத்தில் மாடுகளை மேய்த்துக் கொண்டும் நீர்நிலைகளில் நீந்தி மகிழ்ந்து கொண்டும் கழிகிறது கிருஷ்ணப்பாவின் குழந்தைப் பருவம். இடதுசாரி சிந்தைனைகள் மீது முழுப்பற்றும் நம்பிக்கையும் கொண்ட புரட்சிகர இளைஞனாக சீற்றமும் கோவமும் கொண்டவனாக கல்லூரிப் பருவம் கழிகிறது. தன்னுடன் கல்லூரியில் படிக்கும் கெளரி என்ற பெண்ணைக் காதலிக்கும் கிருஷ்ணப்பனால் சில இடங்களில் அவளை சார்ந்து தானிருக்கும் நிலையை தாங்கிகொள்ள முடியவில்லை. தன் வாழ்க்கையில் நீண்ட பாதிப்பை செலுத்தபோகும் மனிதர்களையும் அனுபவங்களையும் தொடர்ந்து எதிர்கொண்டபடி இருக்கிறான் கிருஷ்ணப்ப கெளடா. காவல்துறையால் லாக்கப்பில் வைத்துக் கொல்லப்பட்ட புரட்சியாளர் ஒருவரின் வாழ்க்கை அவனை அதிகம் பாதிக்கிறது. காதலியோடு சென்ற கோயில் உள்ள மலை குன்று ஒன்றில் அவனை எச்சரித்து அறிவுறுத்துகிறார் ஒரு துறவி. கிருஷ்ணப்பாவைவும் அவனுடைய அதிகாரத்தையும் பயன்படுத்தி முன்னேறிய சில பெண்களும் மனிதர்களும் அவனை கைவிட்டுச் செல்கிறார்கள்.
 
கிராமத்தில் உள்ள பெரிய நிலச்சுவாந்தார்களை எதிர்த்து கிருஷ்ணப்ப கெளடா செய்த விவசாயிகள் போராட்டத்தின் வழியாக அவன் முக்கியமான புரட்சியாளனும் இடதுசாரி அரசியல்வாதியாகவும் ஆகிறான். அதன் பின், நல்ல நோக்கதுடனும் லட்சியத்துடனும் கட்சி அரசியலுக்குள் நுழையும் கிருஷ்ணப்ப கெளடா அங்கு ஏழைகள் மற்றும் எளிய மக்கள் தன்மேல் கொண்டுள்ள அபிமானத்தைப் பயன்படுத்திகொண்டு ஆதாயம் தேட முயலும் அரசியல்வாதிகளை பார்க்கிறான். மேலும், தன் வழியாக சில அரசு சலுககளை பெற முயலும் மக்கள், தன்னுடை கொள்கை பிடிப்புக்கொண்டவன் புரட்சியாளன் போன்ற முகத்தை வாக்குக்காக பயன்படுத்திக் கொள்ள முயலும் கட்சி, முதலமைச்சர் ஆகும் ஆசையை ஊட்டும் தொண்டர்கள் என நச்சுச்சுழல் ஒன்றால் மூடப்படுகிறான் கிருஷ்ணப்ப கவுடா. உடல் நலிவுற்று இருக்கும் நிலையில் முதலமைச்சர் ஆவது அல்லது நேர்மையான புரட்சியாளன் என்ற முகத்தைத் தக்க வைத்துகொள்வது என்ற இரண்டில் எதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகிறான்.  
தன்னுடைய கிராமத்தில் மாடுகளை மேய்த்துக் கொண்டும் நீர்நிலைகளில் நீந்தி மகிழ்ந்து கொண்டும் கழிகிறது கிருஷ்ணப்பாவின் குழந்தைப் பருவம். இடதுசாரி சிந்தைனைகள் மீது முழுப்பற்றும் நம்பிக்கையும் கொண்ட புரட்சிகர இளைஞனாக சீற்றமும் கோவமும் கொண்டவனாக கல்லூரிப் பருவம் கழிகிறது. தன்னுடன் கல்லூரியில் படிக்கும் கெளரி என்ற பெண்ணைக் காதலிக்கும் கிருஷ்ணப்பனால் சில இடங்களில் அவளை சார்ந்து தானிருக்கும் நிலையை தாங்கிகொள்ள முடியவில்லை. தன் வாழ்க்கையில் நீண்ட பாதிப்பை செலுத்தபோகும் மனிதர்களையும் அனுபவங்களையும் தொடர்ந்து எதிர்கொண்டபடி இருக்கிறான் கிருஷ்ணப்ப கெளடா. காவல்துறையால் லாக்கப்பில் வைத்துக் கொல்லப்பட்ட புரட்சியாளர் ஒருவரின் வாழ்க்கை அவனை அதிகம் பாதிக்கிறது. காதலியோடு சென்ற கோயில் உள்ள மலை குன்று ஒன்றில் அவனை எச்சரித்து அறிவுறுத்துகிறார் ஒரு துறவி. கிருஷ்ணப்பாவையும் அவனுடைய அதிகாரத்தையும் பயன்படுத்தி முன்னேறிய சில பெண்களும் மனிதர்களும் அவனை கைவிட்டுச் செல்கிறார்கள்.  
 
கிராமத்தில் உள்ள பெரிய நிலச்சுவாந்தார்களை எதிர்த்து கிருஷ்ணப்ப கெளடா செய்த விவசாயிகள் போராட்டத்தின் வழியாக அவன் முக்கியமான புரட்சியாளனும் இடதுசாரி அரசியல்வாதியாகவும் ஆகிறான். அதன் பின், நல்ல நோக்கதுடனும் லட்சியத்துடனும் கட்சி அரசியலுக்குள் நுழையும் கிருஷ்ணப்ப கெளடா அங்கு ஏழைகள் மற்றும் எளிய மக்கள் தன்மேல் கொண்டுள்ள அபிமானத்தைப் பயன்படுத்திகொண்டு ஆதாயம் தேட முயலும் அரசியல்வாதிகளை பார்க்கிறான். மேலும், தன் வழியாக சில அரசு சலுகைகளை பெற முயலும் மக்கள், தன்னுடை கொள்கை பிடிப்புக்கொண்டவன் புரட்சியாளன் போன்ற முகத்தை வாக்குக்காக பயன்படுத்திக் கொள்ள முயலும் கட்சி, முதலமைச்சர் ஆகும் ஆசையை ஊட்டும் தொண்டர்கள் என நச்சுச்சுழல் ஒன்றால் மூடப்படுகிறான் கிருஷ்ணப்ப கவுடா. உடல் நலிவுற்று இருக்கும் நிலையில் முதலமைச்சர் ஆவது அல்லது நேர்மையான புரட்சியாளன் என்ற முகத்தைத் தக்க வைத்துகொள்வது என்ற இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகிறான்.  
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
அரசியல் மற்றும் அதிகாரத்தின் உண்மையான இயல்பு என்ன, அதன் வழியாக உண்மையான சமூக மாற்றம் சாத்தியமா. தனிமனித அகமோ அல்லது சித்தாந்தமோ அரசியல் அதிகாரத்தை அடைய முயல்வதன் பின்னால் உள்ள நோக்கம் நேர்நிலையானதா எதிர்மறையானதா,உயரிய அரசியல் பதவி ஒன்றை அடைவதற்காக ஒருவன் தன் லட்சியத்தில் எத்தகைய சமரசத்தைச் செய்துகொள்ள நேரும், அரசியல் அதிகாரத்திற்கான முதல் இச்சை சுயநலமா பொது நலமா, பதவிக்காகவும் பொருளுக்காகவும் உச்ச விசையில் மனங்கள் மோதிக்கொள்ளும் அரசியல் சூழலில் தானும் இயங்கும் ஒருவன் ஆன்மிகமாக சென்று சேரும் இடம் என்ன? இதுபோன்ற அந்த காலகட்டத்தின் கேள்விகள் சிலவற்றை கிருஷ்ணப்ப கெளடா என்ற மைய கதாப்பாத்திரம் வழியாக இந்த நாவல் விசாரணை  செய்கிறது.  
அரசியல் மற்றும் அதிகாரத்தின் உண்மையான இயல்பு என்ன, அதன் வழியாக உண்மையான சமூக மாற்றம் சாத்தியமா. தனிமனித அகமோ அல்லது சித்தாந்தமோ அரசியல் அதிகாரத்தை அடைய முயல்வதன் பின்னால் உள்ள நோக்கம் நேர்நிலையானதா எதிர்மறையானதா, உயரிய அரசியல் பதவி ஒன்றை அடைவதற்காக ஒருவன் தன் லட்சியத்தில் எத்தகைய சமரசத்தைச் செய்துகொள்ள நேரும், அரசியல் அதிகாரத்திற்கான முதல் இச்சை சுயநலமா பொது நலமா, பதவிக்காகவும் பொருளுக்காகவும் உச்ச விசையில் மனங்கள் மோதிக்கொள்ளும் அரசியல் சூழலில் தானும் இயங்கும் ஒருவன் ஆன்மிகமாக சென்று சேரும் இடம் என்ன? இதுபோன்ற அந்த காலகட்டத்தின் கேள்விகள் சிலவற்றை கிருஷ்ணப்ப கெளடா என்ற மைய கதாப்பாத்திரம் வழியாக இந்த நாவல் விசாரணை  செய்கிறது.
இன்னொரு விதத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வரும் அதிகார விருப்பமும் அதன் உளவியல் காரணங்களும் போரட்டங்களும், கூடவே கிருஷ்ணப்ப கெளடாவின் அகங்காரமும் அது புறத்தோடு முட்டி மோதிக்கொள்வதுமே இந்த நாவல் என்ற கோணத்தில்  பார்க்கலாம். ஒவ்வொரு உறவையும்  வெல்ல நினைக்கிறது அவன் மனம், ஒவ்வொரு பெண்ணையும் வெல்ல நினைக்கிறது, உயரிய பதவிகளை அவ்வாறே அடைய முயல்கிறது ஆனால் மறுபுறம் தான் துவங்கிய இடமான இடதுசாரி சிந்தனையும் அரசியலும், அது சொல்லும் அறம், தனக்குள் இருக்கும் கிராமத்தின் எளிய உள்ளம் இரண்டும் உண்டாக்கும் குற்றவுணர்வு. இது இரண்டுக்குமான போராட்டமாக நிறைந்துள்ளது அவன் அகம். அனைத்தையும் வென்ற பின்பும் இருக்கும் வெறுமையை, நோயின் முன்னும் மரணத்தின் முன்னும் வெல்லமுடியாது வீழ்ந்துபோகும் கிருஷ்ணப்ப கெளடாவின் அகங்காரத்தைக் காட்டுகிறது அவஸ்தை நாவல். மகாபாரதத்தில் கிருஷ்ணன் எதிலிருந்தெல்லாம் ஈடுபட்டபடி விலகி இருந்தோனா அதிலெல்லாம் மாட்டிகொண்ட மற்றொரு கிருஷ்ணனை பற்றிய கதை என்பதால் இது முக்கியமான நாவலாகிறது .  
 
இன்னொரு விதத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வரும் அதிகார விருப்பமும் அதன் உளவியல் காரணங்களும் போராட்டங்களும், கூடவே கிருஷ்ணப்ப கெளடாவின் அகங்காரமும் அது புறத்தோடு முட்டி மோதிக்கொள்வதுமே இந்த நாவல் என்ற கோணத்தில்  பார்க்கலாம். ஒவ்வொரு உறவையும்  வெல்ல நினைக்கிறது அவன் மனம், ஒவ்வொரு பெண்ணையும் வெல்ல நினைக்கிறது, உயரிய பதவிகளை அவ்வாறே அடைய முயல்கிறது ஆனால் மறுபுறம் தான் துவங்கிய இடமான இடதுசாரி சிந்தனையும் அரசியலும், அது சொல்லும் அறம், தனக்குள் இருக்கும் கிராமத்தின் எளிய உள்ளம் இரண்டும் உண்டாக்கும் குற்றவுணர்வு. இது இரண்டுக்குமான போராட்டமாக நிறைந்துள்ளது அவன் அகம். அனைத்தையும் வென்ற பின்பும் இருக்கும் வெறுமையை, நோயின் முன்னும் மரணத்தின் முன்னும் வெல்லமுடியாது வீழ்ந்துபோகும் கிருஷ்ணப்ப கெளடாவின் அகங்காரத்தைக் காட்டுகிறது அவஸ்தை நாவல். மகாபாரதத்தில் கிருஷ்ணன் எதிலிருந்தெல்லாம் ஈடுபட்டபடி விலகி இருந்தோனா அதிலெல்லாம் மாட்டிகொண்ட மற்றொரு கிருஷ்ணனை பற்றிய கதை என்பதால் இது முக்கியமான நாவலாகிறது .  
==திரைவடிவம்==
==திரைவடிவம்==
'அவஸ்தை' என்ற பெயரில் இந்நாவல் 1987-ல் கன்னட மொழியில் திரைப்படமாக்கபட்டுள்ளது.

Line 18: Line 21:
*[[wikipedia:U._R._Ananthamurthy|ur ananthamurthy, English wikipedia]]

*[https://artreview.com/how-to-live-with-a-political-consciousness-u-r-ananthamurthy-avasthe/artreview,How To Live with a Political Consciousness: U. R. Ananthamurthy, 'Avasthe’]

{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|09-Dec-2022, 09:44:46 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 16:43, 13 June 2024

அவஸ்தை

அவஸ்தை. கன்னட மொழி எழுத்தாளர் யூ.ஆர். ஆனந்தமூர்த்தி எழுதிய நாவல். 1978-ல் கன்னடத்தில் முதல் பதிப்பு வெளியானது. தமிழில் இதை நஞ்சுண்டன் மொழிபெயர்த்துள்ளார். அரசியல் மற்றும் அதிகாரம் வழியாக கிருஷ்ணப்பா கெளடா என்ற மைய கதாபாத்திரம் செய்யும் ஒரு முழு வாழ்க்கைப் பயணம் இந்த நாவல். எளிய கிராமத்தில் பிறந்து மாநிலத்தின் முக்கியமான அரசியல் தலைவராவதன் நீண்ட பயணம் வழியாக கிருஷ்ணப்பா கெளடா இழந்ததும் பெற்றதும் எதை என்று இந்த நாவல் காட்டுகிறது. கர்நாடகத்தை சேர்ந்த ஷந்தேவரி கோபால கௌடா என்ற அரசியல் ஆளுமையின் உண்மையான வாழ்க்கையை அடியொற்றி இந்த நாவல் அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ்பதிப்பு

தமிழில் காலச்சுவடு பதிப்பகம் இந்த நாவலை வெளியிட்டுள்ளது. (முதல் பதிப்பு: டிசம்பர் 2011. இரண்டாம் (குறும்) பதிப்பு, டிசம்பர் 2017). இந்த நாவலை தமிழில் மொழிபெயர்த்துள்ள நஞ்சுண்டன் யூ.ஆர். ஆனந்தமூர்த்தின் மற்றொரு நாவலை 'பிறப்பு' என தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

ஆசிரியர் பற்றிய குறிப்பு

யூ. ஆர். ஆனந்தமூர்த்தி

யூ. ஆர். ஆனந்தமூர்த்தி. [உடுப்பி இராஜகோபாலாச்சாரிய அனந்தமூர்த்தி ]. [21 டிசம்பர் 1932 - 22 ஆகஸ்ட் 2014]. நவீன இலக்கியத்தில் இந்திய அளவி்லும் கன்னடத்திலும் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவராக விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறார். ஞான பீடம், பத்ம பூஷன் ஆகிய இந்திய அரசின் உயரிய விருதுகளை பெற்றவர். 8 நாவல்கள் மற்றும் 8 சிறுகதை தொகுப்புகள் அடங்கிய இவரின் புனைவுலகிலிருந்து பல படைப்புகள் ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவஸ்தை அல்லாமல் சம்ஸ்காரா என்ற இவருடைய மற்றொரு நாவல் தமிழில் கிடைக்கிறது. [பார்க்க: யூ. ஆர். அனந்தமூர்த்தி].

கதைச்சுருக்கம்

நாவலின் மைய கதாபாத்திரமான கிருஷ்ணப்ப கெளடா ஐம்பது வயது நிறைவதற்குள் பக்கவாதம் வந்து மரணப் படுக்கையிலிருக்கும் நிலையில் துவங்குகிறது நாவல். முன் நாட்களில் விவசாயிகளுக்காக போராடிய புரட்சிகர தலைவரும் இடதுசாரி அரசியல்வதியுமான கிருஷ்ணப்ப கெளடா நோய் வாய்பட்டு தன்னுடைய மனைவியின் பாராமரிப்பில் இருக்கிறார். அப்பொழுது தன்னுடைய மொத்த வாழ்வையும் நினைவுகளில் மீட்டுப் பார்க்கிறார், அந்த ஒழுங்கில் கதை விரிகிறது.

தன்னுடைய கிராமத்தில் மாடுகளை மேய்த்துக் கொண்டும் நீர்நிலைகளில் நீந்தி மகிழ்ந்து கொண்டும் கழிகிறது கிருஷ்ணப்பாவின் குழந்தைப் பருவம். இடதுசாரி சிந்தைனைகள் மீது முழுப்பற்றும் நம்பிக்கையும் கொண்ட புரட்சிகர இளைஞனாக சீற்றமும் கோவமும் கொண்டவனாக கல்லூரிப் பருவம் கழிகிறது. தன்னுடன் கல்லூரியில் படிக்கும் கெளரி என்ற பெண்ணைக் காதலிக்கும் கிருஷ்ணப்பனால் சில இடங்களில் அவளை சார்ந்து தானிருக்கும் நிலையை தாங்கிகொள்ள முடியவில்லை. தன் வாழ்க்கையில் நீண்ட பாதிப்பை செலுத்தபோகும் மனிதர்களையும் அனுபவங்களையும் தொடர்ந்து எதிர்கொண்டபடி இருக்கிறான் கிருஷ்ணப்ப கெளடா. காவல்துறையால் லாக்கப்பில் வைத்துக் கொல்லப்பட்ட புரட்சியாளர் ஒருவரின் வாழ்க்கை அவனை அதிகம் பாதிக்கிறது. காதலியோடு சென்ற கோயில் உள்ள மலை குன்று ஒன்றில் அவனை எச்சரித்து அறிவுறுத்துகிறார் ஒரு துறவி. கிருஷ்ணப்பாவையும் அவனுடைய அதிகாரத்தையும் பயன்படுத்தி முன்னேறிய சில பெண்களும் மனிதர்களும் அவனை கைவிட்டுச் செல்கிறார்கள்.

கிராமத்தில் உள்ள பெரிய நிலச்சுவாந்தார்களை எதிர்த்து கிருஷ்ணப்ப கெளடா செய்த விவசாயிகள் போராட்டத்தின் வழியாக அவன் முக்கியமான புரட்சியாளனும் இடதுசாரி அரசியல்வாதியாகவும் ஆகிறான். அதன் பின், நல்ல நோக்கதுடனும் லட்சியத்துடனும் கட்சி அரசியலுக்குள் நுழையும் கிருஷ்ணப்ப கெளடா அங்கு ஏழைகள் மற்றும் எளிய மக்கள் தன்மேல் கொண்டுள்ள அபிமானத்தைப் பயன்படுத்திகொண்டு ஆதாயம் தேட முயலும் அரசியல்வாதிகளை பார்க்கிறான். மேலும், தன் வழியாக சில அரசு சலுகைகளை பெற முயலும் மக்கள், தன்னுடை கொள்கை பிடிப்புக்கொண்டவன் புரட்சியாளன் போன்ற முகத்தை வாக்குக்காக பயன்படுத்திக் கொள்ள முயலும் கட்சி, முதலமைச்சர் ஆகும் ஆசையை ஊட்டும் தொண்டர்கள் என நச்சுச்சுழல் ஒன்றால் மூடப்படுகிறான் கிருஷ்ணப்ப கவுடா. உடல் நலிவுற்று இருக்கும் நிலையில் முதலமைச்சர் ஆவது அல்லது நேர்மையான புரட்சியாளன் என்ற முகத்தைத் தக்க வைத்துகொள்வது என்ற இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகிறான்.

இலக்கிய இடம்

அரசியல் மற்றும் அதிகாரத்தின் உண்மையான இயல்பு என்ன, அதன் வழியாக உண்மையான சமூக மாற்றம் சாத்தியமா. தனிமனித அகமோ அல்லது சித்தாந்தமோ அரசியல் அதிகாரத்தை அடைய முயல்வதன் பின்னால் உள்ள நோக்கம் நேர்நிலையானதா எதிர்மறையானதா, உயரிய அரசியல் பதவி ஒன்றை அடைவதற்காக ஒருவன் தன் லட்சியத்தில் எத்தகைய சமரசத்தைச் செய்துகொள்ள நேரும், அரசியல் அதிகாரத்திற்கான முதல் இச்சை சுயநலமா பொது நலமா, பதவிக்காகவும் பொருளுக்காகவும் உச்ச விசையில் மனங்கள் மோதிக்கொள்ளும் அரசியல் சூழலில் தானும் இயங்கும் ஒருவன் ஆன்மிகமாக சென்று சேரும் இடம் என்ன? இதுபோன்ற அந்த காலகட்டத்தின் கேள்விகள் சிலவற்றை கிருஷ்ணப்ப கெளடா என்ற மைய கதாப்பாத்திரம் வழியாக இந்த நாவல் விசாரணை செய்கிறது.

இன்னொரு விதத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வரும் அதிகார விருப்பமும் அதன் உளவியல் காரணங்களும் போராட்டங்களும், கூடவே கிருஷ்ணப்ப கெளடாவின் அகங்காரமும் அது புறத்தோடு முட்டி மோதிக்கொள்வதுமே இந்த நாவல் என்ற கோணத்தில் பார்க்கலாம். ஒவ்வொரு உறவையும் வெல்ல நினைக்கிறது அவன் மனம், ஒவ்வொரு பெண்ணையும் வெல்ல நினைக்கிறது, உயரிய பதவிகளை அவ்வாறே அடைய முயல்கிறது ஆனால் மறுபுறம் தான் துவங்கிய இடமான இடதுசாரி சிந்தனையும் அரசியலும், அது சொல்லும் அறம், தனக்குள் இருக்கும் கிராமத்தின் எளிய உள்ளம் இரண்டும் உண்டாக்கும் குற்றவுணர்வு. இது இரண்டுக்குமான போராட்டமாக நிறைந்துள்ளது அவன் அகம். அனைத்தையும் வென்ற பின்பும் இருக்கும் வெறுமையை, நோயின் முன்னும் மரணத்தின் முன்னும் வெல்லமுடியாது வீழ்ந்துபோகும் கிருஷ்ணப்ப கெளடாவின் அகங்காரத்தைக் காட்டுகிறது அவஸ்தை நாவல். மகாபாரதத்தில் கிருஷ்ணன் எதிலிருந்தெல்லாம் ஈடுபட்டபடி விலகி இருந்தோனா அதிலெல்லாம் மாட்டிகொண்ட மற்றொரு கிருஷ்ணனை பற்றிய கதை என்பதால் இது முக்கியமான நாவலாகிறது .

திரைவடிவம்

'அவஸ்தை' என்ற பெயரில் இந்நாவல் 1987-ல் கன்னட மொழியில் திரைப்படமாக்கபட்டுள்ளது.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Dec-2022, 09:44:46 IST