under review

பா. ராகவன்: Difference between revisions

From Tamil Wiki
(பா. ராகவன்)
(Added First published date)
 
(40 intermediate revisions by 8 users not shown)
Line 1: Line 1:
'''பா. ராகவன்''' (08.10.1971)
[[File:Pa.Ra..jpg|thumb|எழுத்தாளர் பா. ராகவன்]]
[[File:Para3.jpg|thumb|பா.ராகவன் 2004]]
[[File:பாரா குடும்பம்.jpg|thumb|பா.ரா குடும்பம் (நன்றி குங்குமம்)]]
பா. ராகவன் (அக்டோபர் 08, 1971) தமிழ் எழுத்தாளர், பதிப்பாளர்,பத்திரிகை ஆசிரியர். ‘மெட்ராஸ் பேப்பர்’ என்ற இணைய வார இதழினை நடத்துகிறார். பல்வேறு வெகுஜன இதழ்களில் ஆசிரியராகவும் கிழக்கு பதிப்பகத்தில் பதிப்பாளராகவும் பங்காற்றினார். நாவல்களையும் சிறுகதைகளையும்  எழுதிவருகிறார். உலக அரசியல், வரலாறு பற்றிய நூல்களை எழுதுகிறார்.  திரைப்படங்கள், தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு வசன கர்த்தாவாக பணிபுரிந்தார். 
== பிறப்பு, கல்வி ==
பா. ராகவன் சென்னையில் ஆர். பார்த்தசாரதி, ரமாமணி இணையருக்கு மகனாக அக்டோபர் 08, 1971-ல்  பிறந்தார்.  உடன்பிறந்தவர்கள் இரு தம்பியர். தந்தை ஆர். பார்த்தசாரதி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர், கல்வியாளர். [[ஆர்.பி. சாரதி]] என்ற பெயரில் சிறுகதைகள், கவிதைகள் எழுதியவர். மொழிபெயர்ப்பாளர். ராமச்சந்திர குஹாவின் ‘காந்திக்குப் பின் இந்தியா(இருபகுதிகள்), 'பாபர் நாமா', 'மகா வம்சம்' நூல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தார். 
 
பா. ராகவன் தன் தந்தையின் பணி மாறுதல்கள் காரணமாக காஞ்சிபுரம் கிருஷ்ணா பள்ளி, கோவூர் பஞ்சாயத்துப் பள்ளி, கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை அரசினர் உயர்நிலைப் பள்ளிகளில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். சென்னை தரமணி மத்திய தொழில் நுட்பப் பள்ளியில் (Polytechnic) இளங்கலை இயந்திரவியல் பயின்றார்.
 
== தனிவாழ்க்கை ==
பா. ராகவன் கல்லூரிப் படிப்புக்குப்பின் துறவறத்தை நாடி  சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம், திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள் மடம், புரவிபாளையம் கோடி சுவாமிகள் வசிப்பிடம்  போன்ற ஆசிரமங்களுக்குச் சென்றார். ராமகிருஷ்ண மடத்தின் அன்றைய தலைவராக இருந்த சுவாமி [[தபஸ்யானந்தா]]வின் அறிவுரையால் அந்த எண்ணத்தைக் கைவிட்டார்.  இதழாளராகவும் ஊடகத்துறையாளராகவும் பணியாற்றினார். 
 
பா. ராகவன் 1997-ல்  ரம்யாவைத் திருமணம் செய்துகொண்டார். ஒரே மகள் பாரதி. 
 
== இதழியல் ==
பா.ராகவன் தொடக்கத்தில் [[அமுதசுரபி]] இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கல்கி இதழில் 1992 முதல் 2000 வரை எட்டு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். 2000த்தில் குமுதம் குழுமத்தின் இலக்கிய இதழான குமுதம் ஜங்ஷனின் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றினார். இதழாளராக, புனைவிலக்கியங்களை மேம்படுத்துவதில் திறன் கொண்டவர் என அறியப்பட்டவர். பல படைப்பாளிகளை அறிமுகம் செய்தவர். 
 
==இலக்கிய வாழ்க்கை ==
பா. ராகவன் ஒன்பதாம் வகுப்பில் இருக்கும்போது கவிதைகள் எழுதத் தொடங்கினார். முதல் படைப்பு 'குழந்தைப்பாடல்' கோகுலம் சிறுவர் இதழில் வெளிவந்தது.  தொடர்ந்து சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். கவிஞர் நா.சீ. வரதராஜன்,  [[ம.வே. சிவகுமார்]] இருவரும்  கொடுத்த ஊக்கத்தால் தொடர்ந்து எழுதினார்.[[லா.ச. ராமாமிர்தம்|லா.ச. ரா]], [[தி.ஜானகிராமன்|தி. ஜானகிராமன்]] போன்றோரின் எழுத்துக்களால் கவரப்பட்டவர்.   
 
====== சிறுகதைகள் ======
பா.ராகவன் எழுதிய முதல் சிறுகதை 1990ல் கணையாழி இதழில் வெளிவந்தது. 1992ல் ‘மொஹஞ்சதாரோ’ என்னும் சிறுகதையை அயோத்தி பாபர் மசூதி- ராமர்கோயில் விவாதத்தை ஒட்டி எழுதினார். அவருக்குக் கவனம்பெற்றுத்தந்த சிறுகதை அது. 1992-ல் [[கல்கி (வார இதழ்)|கல்கி]] வார இதழில் முதல் சிறுகதை வெளிவந்தது. முதல் சிறுகதைத் தொகுதி மூவர்.   
 
====== நாவல்கள் ======
பா.ராகவனின் தொடக்ககால நாவல்கள் வார இதழ்களில் தொடராக வெளிவந்தன. முதல் குறுநாவல் நிலாவேட்டை கல்கியில் வெளிவந்தது. அலை உறங்கும் கடல் வாசக வரவேற்பைப் பெற்றது. பின்னர்  தனிநாவல்களாக எழுதி வெளியிடலானார். துறவு வாழ்க்கையை பேசுபொருளாகக் கொண்ட [[யதி]] அவர் படைப்புகளில் குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது. 2020ல் வெளிவந்த [[இறவான்]] , 'பூனைக்கதை' போன்ற நாவல்களில் பல்வேறு புதிய புனைவு உத்திகளை பயன்படுத்தினார்.
 
====== அரசியல்/வரலாற்று நூல்கள் ======
பா. ராகவன் 2000 -ம் ஆண்டு குமுதம் வார இதழில் பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றை ‘பாக் ஒரு புதிரின் சரிதம்’ என்னும் தலைப்பில் தொடராக எழுதினார்.  தொடர்ந்து  பத்தாண்டுகாலம் உலக அரசியல் வரலாற்று நிகழ்வுகளைப் பற்றிய நூல்களை எளிய தமிழில் எழுதினார்.  'டாலர் தேசம்' (அமெரிக்க அரசியல் வரலாறு), 'நிலமெல்லாம் ரத்தம்' (இஸ்ரேல்-பாலஸ்தீன் சிக்கல்களின் வரலாறு), 'மாயவலை' (சர்வதேச தீவிரவாத வலைப்பின்னல் குறித்த விரிவான ஆய்வு நூல்) குறிப்பிடத்தக்கவை. தமிழ் மட்டும் அறிந்த மக்களுக்கு உலக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளையும், திருப்புமுனைகளையும் அறிமுகப்படுத்தின.
====== ஆன்மிகம் ======
ராமானுஜரின் வரலாற்றை 'பொலிக பொலிக' என்ற பெயரில் தினமலரில் 108 வாரத் தொடராக எழுதினார். அத்தொடர் கிழக்குப் பதிப்பக வெளியீடாக 2017-ல் நூலாக வெளிவந்தது.
====== பதிப்பாளர் ======
பா. ராகவன் சபரி பப்ளிகேஷனில் பதிப்பாளராகப் பணியாற்றினார். 2004ல் கிழக்கு பதிப்பகத்தில் பொதுஆசிரியராக இணைந்து அங்கு ஏறத்தாழ 1000 நூல்களைப் பதிப்பித்தார். 2011 வரை அங்கே பணியாற்றினார்.
====== தொலைக்காட்சித் தொடர்கள் ======
பா ராகவன் சித்தி-2, வாணி-ராணி, கெட்டிமேளம் உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களுக்கு வசனம் எழுதினார். வாணி-ராணி  நெடுந்தொடர்  சன் தொலைக்காட்சியில் 1750 அத்தியாயங்களைக் (episodes) கடந்து சாதனை படைத்தது. 'வனதேவரு' உட்பட சில கன்னடத் தொடர்களுக்கும் தமிழில் வசனம் எழுதினார். அவை கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டன. 
 
2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு டிசம்பர் வரை நீண்ட வாணி ராணி தொலைக்காட்சித் தொடர் இந்திய தொலைக்காட்சித் தொடர்களில்,  மிக நீண்ட தொலைக்காட்சித் தொடர்களில் ஒன்று. 1750 பகுதிகள் வெளியான இத்தொடர் முழுமைக்கும் வசனம் எழுதியவர் இவரே. இந்திய அளவில் இது ஒரு சாதனையாகக் கணிக்கப்படுகிறது 
== இலக்கிய இடம் ==
பா. ராகவன் தனது நாவல்களுக்காகவும் கட்டுரைநூல்களுக்காகவும் அறியப்பட்டவர். தமிழ் மட்டும் அறிந்த வாசகர்களுக்கு சர்வதேச அரசியல் நிகழ்வுகளையும், வரலாற்றையும்  சிக்கலற்ற எளிய மொழியில் விவரிப்பவர் என்ற வகையில் இவரது வரலாற்று நூல்கள்  குறிப்பிடத்தக்கவை. வெகுஜன வாசகரை ஈர்க்கும் வகையில் தொடர்கதைகளை எழுதியவர் பின்னர் இலக்கியக் களத்தில் பெரிதும் மதிக்கப்படும் நாவல்களை எழுதினார். இதழாளர், இலக்கியப்பிரதி மேம்படுத்துநர், இலக்கியப் பயிற்றுநர் ஆகிய களங்களில் முக்கியமான பங்களிப்பாற்றுபவர். 
 
== விருதுகள் ==
* பாரதிய பாஷா பரிஷத் விருது 2004
* இலக்கிய சிந்தனை விருது (தீமொட்டு சிறுகதை)
* இலக்கியப்பீடம் சிறந்த நாவலாசிரியர் விருது ( அலகிலா விளையாட்டு - 2003)
* திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு (மெல்லினம் நாவலுக்காக)
* கம்பம் பாரதி இலக்கியப் பேரவை விருது (இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் - 2008)
* சன் குடும்பம் சிறந்த வசன கர்த்தா விருது - வாணி ராணி தொடருக்காக [2018]
* வாசகசாலை சிறந்த நாவலாசிரியர் விருது (பூனைக்கதை, 2018)
== நூல்கள் ==
====== நாவல் ======
*அலை உறங்கும் கடல்
*புவியிலோரிடம்
*மெல்லினம்
*கால் கிலோ காதல் அரை கிலோ கனவு
*அலகிலா விளையாட்டு
* கொசு
* தூணிலும் இருப்பான்
* புல்புல்தாரா
* பூனைக்கதை [2017]
* [[யதி]] [2018]
* இறவான்
* கபடவேடதாரி
* ரெண்டு
====== சிறுகதைத் தொகுப்புகள் ======
* மூவர்
* காந்தி சிலைக் கதைகள்
* குதிரைகளின் கதை பறவை யுத்தம்
* மாலுமி [2018]
* முந்நூறு வயதுப் பெண்
* ஊர்வன
* நிலா வேட்டை
* நிழலற்றவன்
* அப்பா வேலை
====== அரசியல் வரலாறுகள் ======
* மாயவலை - சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் பற்றிய விரிவான ஆய்வு
* பாக். ஒரு புதிரின் சரிதம் - பாகிஸ்தானின் அரசியல் வரலாறு
* டாலர் தேசம் (அமெரிக்காவின் அரசியல் வரலாறு)
* 9/11: சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி (2004)
* நிலமெல்லாம் ரத்தம் (2005)
* அல் காயிதா: பயங்கரத்தின் முகவரி (2005)
* ஹிஸ்புல்லா: பயங்கரத்தின் முகவரி (2006)
* இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் (2006)
* அன்புடையீர் நாங்கள் பயங்கரமானவர்கள் (ஸ்பெயினின் ETA போராளிகளைப்பற்றியது)
* தாலிபன்
* மீண்டும் தாலிபன் (2021)
* ஜமா இஸ்லாமியா
* ஐ.எஸ்.ஐ: நிழல் அரசின் நிஜ முகம்
* மாவோயிஸ்ட்: அபாயங்களும் பின்னணிகளும்
* ஆர்.எஸ்.எஸ் - வரலாறும் அரசியலும்
* காஷ்மீர்
* சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு
* ஆயில் ரேகை
* கலவரகாலக் குறிப்புகள்
* ஆடிப்பாரு மங்காத்தா
* பொன்னான வாக்கு
* ஐ.எஸ்..எஸ் - கொலைகாரன்பேட்டை ஜெயித்த கதை
* 154 கிலோபைட்
* 24 கேரட்
* ஓப்பன் டிக்கெட்
* எக்சலண்ட்!
* உக்ரையீனா
 
====== அறிமுகநூல்கள் ======
* இஸ்லாம் ஓர் அறிமுகம்
* இரண்டாம் உலகப்போர் ஓர் எளிய அறிமுகம்
* சமணம் ஓர் எளிய அறிமுகம்
* ஓம் ஷின்ரிக்கியோ ஓர் அறிமுகம்
* லஷ்கர் ஏ தொய்பா: ஓர் அறிமுகம்
* ஹமாஸ்: ஓர் அறிமுகம்
* ஹிஸ்புல்லா: ஓர் அறிமுகம்
* அமெரிக்க சுதந்திரப் போர்: ஓர் அறிமுகம்
 
====== கட்டுரைத் தொகுப்பு ======
* தொடு வர்மம்
* எழுதுதல் பற்றிய குறிப்புகள்
* ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் (சென்னை நினைவுக் குறிப்புகள்)
* 24 கேரட்
* 154 கிலோபைட்
* உணவின் வரலாறு
* வெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்
* இளைப்பது சுலபம்
* ருசியியல்
* மூன்றெழுத்து
* பின்கதைச் சுருக்கம்
* எக்ஸலண்ட்: செய்யும் எதிலும் உன்னதம்
* மகளிர் மட்டும்
 
====== நகைச்சுவை நூல்கள் ======
* அன்சைஸ்
* குற்றியலுலகம்
* இங்க்கி பிங்க்கி பாங்க்கி
* சந்து வெளி நாகரிகம்
* உய் - வரி இலக்கியம்
* வீட்டோடு மாப்பிள்ளை
 
====== வாழ்க்கை வரலாறு ======
* பொலிக பொலிக - ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு
* யானி: இசைப் போராளி
* ஹிட்லர்
* பர்வேஸ் முஷ்ரப்
* என் பெயர் எஸ்கோபார்
* பிரபாகரன் - வாழ்வும் மரணமும்
* மொஸார்ட்: கடவுள் இசைத்த குழந்தை
* மகாவீரர்
 
====== சிறுவர் நூல்கள் ======
* புதையல் தீவு
* ஐஸ் க்ரீம் பூதம்
* திரைப்படங்கள்
 
====== திரைப்படங்களுக்கு வசனம் ======
* கனகவேல் காக்க [2010]
* தம்பி வெட்டோத்தி சுந்தரம் [2011]
 
====== தொலைக்காட்சித் தொடர்களுக்கு வசனம் ======
* வாணி ராணி (சன் டிவி) கல்யாணப் பரிசு (சன் டிவி)
* கண்மணி (சன் டிவி)
* கெட்டி மேளம் (ஜெயா டிவி)
* சிவசக்தி (சன் டிவி)
* உதிரிப்பூக்கள் (சன் டிவி)
* செல்லமே (சன் டிவி )
* முந்தானை முடிச்சு (சன் டிவி)
* மனெ தேவுரு (உதயா டிவி)
* முத்தாரம் (சன் டிவி)
* செல்லக்கிளி ( சன் டிவி )
* தேவதை (சன் டிவி)
* புதுக்கவிதை (விஜய் டிவி)
* கல்யாணப்பரிசு (சன் டிவி )
* சிவசங்கரி (சன் டிவி)
* என் இனிய தோழியே (ராஜ் டிவி)
* அருந்ததி (ராஜ் டிவி)
* கண்மணி (சன் டிவி)
* சித்தி 2 (சன் டிவி)
* புதுப்புது அர்த்தங்கள் (ஜீ டிவி)
 
== உசாத்துணை ==
* [https://writerpara.com/ பா. ராகவன் வலைப்பக்கம்]
* [https://www.madraspaper.com/ மெட்ராஸ் பேப்பர்]
* [https://www.hindutamil.in/author/2011-%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D பா. ராகவன் கட்டுரைகள்-ஹிந்துதமிழ்]
* [http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14310&id1=3&issue=20181005 குங்குமம் இதழ் நேர்காணல்]
* [https://www.youtube.com/watch?v=51lhEeYFUW8 தமிழ், நூல்கள், நூலகங்கள்; அன்றும், இன்றும் - பா.ராகவன் உரை, youtbe.com]
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=5659 தென்றல் இதழ் கட்டுரை]
* [https://www.sirukathaigal.com/tag/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/ பா. ராகவன் சிறுகதைகள்]
* [https://www.youtube.com/watch?v=ftpd8lbjJKo&ab_channel=SunTV பா ராகவன் சந்திப்பு காணொளி]
* [https://venkatarangan.com/blog/2021/07/met-with-tamil-writer-mr-pa-raghavan/ பா.ராகவன் சந்திப்பு]
* [https://beyondwords.typepad.com/beyond-words/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/ யான்னி பற்றி விமர்சனம்- ரா கிரிதரன்]
* [http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14310&id1=3&issue=20181005 குங்குமம் பேட்டி]
* [https://writerpara.com/?page_id=2416 பாரா முதல் குழந்தைக் கவிதை]
* [https://youtu.be/2NMbXD9zjvM பா.ராகவன் பேட்டி காணொளி]
 
 
 
{{Finalised}}
 
{{Fndt|13-Sep-2023, 15:46:55 IST}}
 
 
[[Category:Tamil Content]]

Latest revision as of 13:50, 13 June 2024

எழுத்தாளர் பா. ராகவன்
பா.ராகவன் 2004
பா.ரா குடும்பம் (நன்றி குங்குமம்)

பா. ராகவன் (அக்டோபர் 08, 1971) தமிழ் எழுத்தாளர், பதிப்பாளர்,பத்திரிகை ஆசிரியர். ‘மெட்ராஸ் பேப்பர்’ என்ற இணைய வார இதழினை நடத்துகிறார். பல்வேறு வெகுஜன இதழ்களில் ஆசிரியராகவும் கிழக்கு பதிப்பகத்தில் பதிப்பாளராகவும் பங்காற்றினார். நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதிவருகிறார். உலக அரசியல், வரலாறு பற்றிய நூல்களை எழுதுகிறார். திரைப்படங்கள், தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு வசன கர்த்தாவாக பணிபுரிந்தார்.

பிறப்பு, கல்வி

பா. ராகவன் சென்னையில் ஆர். பார்த்தசாரதி, ரமாமணி இணையருக்கு மகனாக அக்டோபர் 08, 1971-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் இரு தம்பியர். தந்தை ஆர். பார்த்தசாரதி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர், கல்வியாளர். ஆர்.பி. சாரதி என்ற பெயரில் சிறுகதைகள், கவிதைகள் எழுதியவர். மொழிபெயர்ப்பாளர். ராமச்சந்திர குஹாவின் ‘காந்திக்குப் பின் இந்தியா(இருபகுதிகள்), 'பாபர் நாமா', 'மகா வம்சம்' நூல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தார்.

பா. ராகவன் தன் தந்தையின் பணி மாறுதல்கள் காரணமாக காஞ்சிபுரம் கிருஷ்ணா பள்ளி, கோவூர் பஞ்சாயத்துப் பள்ளி, கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை அரசினர் உயர்நிலைப் பள்ளிகளில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். சென்னை தரமணி மத்திய தொழில் நுட்பப் பள்ளியில் (Polytechnic) இளங்கலை இயந்திரவியல் பயின்றார்.

தனிவாழ்க்கை

பா. ராகவன் கல்லூரிப் படிப்புக்குப்பின் துறவறத்தை நாடி சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம், திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள் மடம், புரவிபாளையம் கோடி சுவாமிகள் வசிப்பிடம் போன்ற ஆசிரமங்களுக்குச் சென்றார். ராமகிருஷ்ண மடத்தின் அன்றைய தலைவராக இருந்த சுவாமி தபஸ்யானந்தாவின் அறிவுரையால் அந்த எண்ணத்தைக் கைவிட்டார். இதழாளராகவும் ஊடகத்துறையாளராகவும் பணியாற்றினார்.

பா. ராகவன் 1997-ல் ரம்யாவைத் திருமணம் செய்துகொண்டார். ஒரே மகள் பாரதி.

இதழியல்

பா.ராகவன் தொடக்கத்தில் அமுதசுரபி இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கல்கி இதழில் 1992 முதல் 2000 வரை எட்டு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். 2000த்தில் குமுதம் குழுமத்தின் இலக்கிய இதழான குமுதம் ஜங்ஷனின் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றினார். இதழாளராக, புனைவிலக்கியங்களை மேம்படுத்துவதில் திறன் கொண்டவர் என அறியப்பட்டவர். பல படைப்பாளிகளை அறிமுகம் செய்தவர்.

இலக்கிய வாழ்க்கை

பா. ராகவன் ஒன்பதாம் வகுப்பில் இருக்கும்போது கவிதைகள் எழுதத் தொடங்கினார். முதல் படைப்பு 'குழந்தைப்பாடல்' கோகுலம் சிறுவர் இதழில் வெளிவந்தது. தொடர்ந்து சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். கவிஞர் நா.சீ. வரதராஜன், ம.வே. சிவகுமார் இருவரும் கொடுத்த ஊக்கத்தால் தொடர்ந்து எழுதினார்.லா.ச. ரா, தி. ஜானகிராமன் போன்றோரின் எழுத்துக்களால் கவரப்பட்டவர்.

சிறுகதைகள்

பா.ராகவன் எழுதிய முதல் சிறுகதை 1990ல் கணையாழி இதழில் வெளிவந்தது. 1992ல் ‘மொஹஞ்சதாரோ’ என்னும் சிறுகதையை அயோத்தி பாபர் மசூதி- ராமர்கோயில் விவாதத்தை ஒட்டி எழுதினார். அவருக்குக் கவனம்பெற்றுத்தந்த சிறுகதை அது. 1992-ல் கல்கி வார இதழில் முதல் சிறுகதை வெளிவந்தது. முதல் சிறுகதைத் தொகுதி மூவர்.

நாவல்கள்

பா.ராகவனின் தொடக்ககால நாவல்கள் வார இதழ்களில் தொடராக வெளிவந்தன. முதல் குறுநாவல் நிலாவேட்டை கல்கியில் வெளிவந்தது. அலை உறங்கும் கடல் வாசக வரவேற்பைப் பெற்றது. பின்னர் தனிநாவல்களாக எழுதி வெளியிடலானார். துறவு வாழ்க்கையை பேசுபொருளாகக் கொண்ட யதி அவர் படைப்புகளில் குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது. 2020ல் வெளிவந்த இறவான் , 'பூனைக்கதை' போன்ற நாவல்களில் பல்வேறு புதிய புனைவு உத்திகளை பயன்படுத்தினார்.

அரசியல்/வரலாற்று நூல்கள்

பா. ராகவன் 2000 -ம் ஆண்டு குமுதம் வார இதழில் பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றை ‘பாக் ஒரு புதிரின் சரிதம்’ என்னும் தலைப்பில் தொடராக எழுதினார். தொடர்ந்து பத்தாண்டுகாலம் உலக அரசியல் வரலாற்று நிகழ்வுகளைப் பற்றிய நூல்களை எளிய தமிழில் எழுதினார். 'டாலர் தேசம்' (அமெரிக்க அரசியல் வரலாறு), 'நிலமெல்லாம் ரத்தம்' (இஸ்ரேல்-பாலஸ்தீன் சிக்கல்களின் வரலாறு), 'மாயவலை' (சர்வதேச தீவிரவாத வலைப்பின்னல் குறித்த விரிவான ஆய்வு நூல்) குறிப்பிடத்தக்கவை. தமிழ் மட்டும் அறிந்த மக்களுக்கு உலக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளையும், திருப்புமுனைகளையும் அறிமுகப்படுத்தின.

ஆன்மிகம்

ராமானுஜரின் வரலாற்றை 'பொலிக பொலிக' என்ற பெயரில் தினமலரில் 108 வாரத் தொடராக எழுதினார். அத்தொடர் கிழக்குப் பதிப்பக வெளியீடாக 2017-ல் நூலாக வெளிவந்தது.

பதிப்பாளர்

பா. ராகவன் சபரி பப்ளிகேஷனில் பதிப்பாளராகப் பணியாற்றினார். 2004ல் கிழக்கு பதிப்பகத்தில் பொதுஆசிரியராக இணைந்து அங்கு ஏறத்தாழ 1000 நூல்களைப் பதிப்பித்தார். 2011 வரை அங்கே பணியாற்றினார்.

தொலைக்காட்சித் தொடர்கள்

பா ராகவன் சித்தி-2, வாணி-ராணி, கெட்டிமேளம் உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களுக்கு வசனம் எழுதினார். வாணி-ராணி நெடுந்தொடர் சன் தொலைக்காட்சியில் 1750 அத்தியாயங்களைக் (episodes) கடந்து சாதனை படைத்தது. 'வனதேவரு' உட்பட சில கன்னடத் தொடர்களுக்கும் தமிழில் வசனம் எழுதினார். அவை கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டன.

2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு டிசம்பர் வரை நீண்ட வாணி ராணி தொலைக்காட்சித் தொடர் இந்திய தொலைக்காட்சித் தொடர்களில், மிக நீண்ட தொலைக்காட்சித் தொடர்களில் ஒன்று. 1750 பகுதிகள் வெளியான இத்தொடர் முழுமைக்கும் வசனம் எழுதியவர் இவரே. இந்திய அளவில் இது ஒரு சாதனையாகக் கணிக்கப்படுகிறது

இலக்கிய இடம்

பா. ராகவன் தனது நாவல்களுக்காகவும் கட்டுரைநூல்களுக்காகவும் அறியப்பட்டவர். தமிழ் மட்டும் அறிந்த வாசகர்களுக்கு சர்வதேச அரசியல் நிகழ்வுகளையும், வரலாற்றையும் சிக்கலற்ற எளிய மொழியில் விவரிப்பவர் என்ற வகையில் இவரது வரலாற்று நூல்கள் குறிப்பிடத்தக்கவை. வெகுஜன வாசகரை ஈர்க்கும் வகையில் தொடர்கதைகளை எழுதியவர் பின்னர் இலக்கியக் களத்தில் பெரிதும் மதிக்கப்படும் நாவல்களை எழுதினார். இதழாளர், இலக்கியப்பிரதி மேம்படுத்துநர், இலக்கியப் பயிற்றுநர் ஆகிய களங்களில் முக்கியமான பங்களிப்பாற்றுபவர்.

விருதுகள்

  • பாரதிய பாஷா பரிஷத் விருது 2004
  • இலக்கிய சிந்தனை விருது (தீமொட்டு சிறுகதை)
  • இலக்கியப்பீடம் சிறந்த நாவலாசிரியர் விருது ( அலகிலா விளையாட்டு - 2003)
  • திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு (மெல்லினம் நாவலுக்காக)
  • கம்பம் பாரதி இலக்கியப் பேரவை விருது (இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் - 2008)
  • சன் குடும்பம் சிறந்த வசன கர்த்தா விருது - வாணி ராணி தொடருக்காக [2018]
  • வாசகசாலை சிறந்த நாவலாசிரியர் விருது (பூனைக்கதை, 2018)

நூல்கள்

நாவல்
  • அலை உறங்கும் கடல்
  • புவியிலோரிடம்
  • மெல்லினம்
  • கால் கிலோ காதல் அரை கிலோ கனவு
  • அலகிலா விளையாட்டு
  • கொசு
  • தூணிலும் இருப்பான்
  • புல்புல்தாரா
  • பூனைக்கதை [2017]
  • யதி [2018]
  • இறவான்
  • கபடவேடதாரி
  • ரெண்டு
சிறுகதைத் தொகுப்புகள்
  • மூவர்
  • காந்தி சிலைக் கதைகள்
  • குதிரைகளின் கதை பறவை யுத்தம்
  • மாலுமி [2018]
  • முந்நூறு வயதுப் பெண்
  • ஊர்வன
  • நிலா வேட்டை
  • நிழலற்றவன்
  • அப்பா வேலை
அரசியல் வரலாறுகள்
  • மாயவலை - சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் பற்றிய விரிவான ஆய்வு
  • பாக். ஒரு புதிரின் சரிதம் - பாகிஸ்தானின் அரசியல் வரலாறு
  • டாலர் தேசம் (அமெரிக்காவின் அரசியல் வரலாறு)
  • 9/11: சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி (2004)
  • நிலமெல்லாம் ரத்தம் (2005)
  • அல் காயிதா: பயங்கரத்தின் முகவரி (2005)
  • ஹிஸ்புல்லா: பயங்கரத்தின் முகவரி (2006)
  • இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் (2006)
  • அன்புடையீர் நாங்கள் பயங்கரமானவர்கள் (ஸ்பெயினின் ETA போராளிகளைப்பற்றியது)
  • தாலிபன்
  • மீண்டும் தாலிபன் (2021)
  • ஜமா இஸ்லாமியா
  • ஐ.எஸ்.ஐ: நிழல் அரசின் நிஜ முகம்
  • மாவோயிஸ்ட்: அபாயங்களும் பின்னணிகளும்
  • ஆர்.எஸ்.எஸ் - வரலாறும் அரசியலும்
  • காஷ்மீர்
  • சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு
  • ஆயில் ரேகை
  • கலவரகாலக் குறிப்புகள்
  • ஆடிப்பாரு மங்காத்தா
  • பொன்னான வாக்கு
  • ஐ.எஸ்.ஐ.எஸ் - கொலைகாரன்பேட்டை ஜெயித்த கதை
  • 154 கிலோபைட்
  • 24 கேரட்
  • ஓப்பன் டிக்கெட்
  • எக்சலண்ட்!
  • உக்ரையீனா
அறிமுகநூல்கள்
  • இஸ்லாம் ஓர் அறிமுகம்
  • இரண்டாம் உலகப்போர் ஓர் எளிய அறிமுகம்
  • சமணம் ஓர் எளிய அறிமுகம்
  • ஓம் ஷின்ரிக்கியோ ஓர் அறிமுகம்
  • லஷ்கர் ஏ தொய்பா: ஓர் அறிமுகம்
  • ஹமாஸ்: ஓர் அறிமுகம்
  • ஹிஸ்புல்லா: ஓர் அறிமுகம்
  • அமெரிக்க சுதந்திரப் போர்: ஓர் அறிமுகம்
கட்டுரைத் தொகுப்பு
  • தொடு வர்மம்
  • எழுதுதல் பற்றிய குறிப்புகள்
  • ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் (சென்னை நினைவுக் குறிப்புகள்)
  • 24 கேரட்
  • 154 கிலோபைட்
  • உணவின் வரலாறு
  • வெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்
  • இளைப்பது சுலபம்
  • ருசியியல்
  • மூன்றெழுத்து
  • பின்கதைச் சுருக்கம்
  • எக்ஸலண்ட்: செய்யும் எதிலும் உன்னதம்
  • மகளிர் மட்டும்
நகைச்சுவை நூல்கள்
  • அன்சைஸ்
  • குற்றியலுலகம்
  • இங்க்கி பிங்க்கி பாங்க்கி
  • சந்து வெளி நாகரிகம்
  • உய் - வரி இலக்கியம்
  • வீட்டோடு மாப்பிள்ளை
வாழ்க்கை வரலாறு
  • பொலிக பொலிக - ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு
  • யானி: இசைப் போராளி
  • ஹிட்லர்
  • பர்வேஸ் முஷ்ரப்
  • என் பெயர் எஸ்கோபார்
  • பிரபாகரன் - வாழ்வும் மரணமும்
  • மொஸார்ட்: கடவுள் இசைத்த குழந்தை
  • மகாவீரர்
சிறுவர் நூல்கள்
  • புதையல் தீவு
  • ஐஸ் க்ரீம் பூதம்
  • திரைப்படங்கள்
திரைப்படங்களுக்கு வசனம்
  • கனகவேல் காக்க [2010]
  • தம்பி வெட்டோத்தி சுந்தரம் [2011]
தொலைக்காட்சித் தொடர்களுக்கு வசனம்
  • வாணி ராணி (சன் டிவி) கல்யாணப் பரிசு (சன் டிவி)
  • கண்மணி (சன் டிவி)
  • கெட்டி மேளம் (ஜெயா டிவி)
  • சிவசக்தி (சன் டிவி)
  • உதிரிப்பூக்கள் (சன் டிவி)
  • செல்லமே (சன் டிவி )
  • முந்தானை முடிச்சு (சன் டிவி)
  • மனெ தேவுரு (உதயா டிவி)
  • முத்தாரம் (சன் டிவி)
  • செல்லக்கிளி ( சன் டிவி )
  • தேவதை (சன் டிவி)
  • புதுக்கவிதை (விஜய் டிவி)
  • கல்யாணப்பரிசு (சன் டிவி )
  • சிவசங்கரி (சன் டிவி)
  • என் இனிய தோழியே (ராஜ் டிவி)
  • அருந்ததி (ராஜ் டிவி)
  • கண்மணி (சன் டிவி)
  • சித்தி 2 (சன் டிவி)
  • புதுப்புது அர்த்தங்கள் (ஜீ டிவி)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Sep-2023, 15:46:55 IST