being created

மலாய் நாட்டார் கதைகள்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|ஹாங் துவா மலாய் மொழி புழங்கிய தீவுக்கூட்டங்களில் வாழ்ந்த எளிய மக்கள் மத்தியில் எழுத்து அறிமுகமாகாத காலத்தில் வாய்மொழியாகவே பல கதைகள் உருவாகி உலவி வந்தன. மலேசியாவ...")
(No difference)

Revision as of 15:47, 2 October 2022

ஹாங் துவா

மலாய் மொழி புழங்கிய தீவுக்கூட்டங்களில் வாழ்ந்த எளிய மக்கள் மத்தியில் எழுத்து அறிமுகமாகாத காலத்தில் வாய்மொழியாகவே பல கதைகள் உருவாகி உலவி வந்தன. மலேசியாவிலும் அவ்வாறான கதைகள் உள்ளன. மலாய் நாட்டார் கதைகளை மலாய் மொழியில் CERITA LAGENDA எனக் குறிப்பிடுகின்றனர்.

பிரிவுகள்

மலாய் நாட்டாரியல் இலக்கியங்களில் இரு பிரிவுகள் உள்ளன.

முதலாவது பிரிவு:

உரைநடையில் கதைகளைச் சொல்வதாகும். அவை வரலாற்றுச் சான்றோடு பின்னப்பட்ட  சுவாரசியம் நிறைந்த கதைகள் (legend), இயற்கைக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யங்களும்   தேவதைகளும் உள்ளடக்கிய கதைகள் (myth), மற்றும் நாட்டுப்புறக் கதைகள் (folklore) என வகைப்படுத்தப்படுகின்றன.

இரண்டாவது பிரிவு:

லேடாங் மலை இளவரசி திரைப்படம்

பாடல், கவிதைகள், ஸ்லோகங்கள், விடுகதைகள் வடிவில் அமைந்திருக்கும்.

தன்மைகள்/கூறுகள்

கடந்த   காலத்தில் புனையப்பட்ட புராணக்கதைகளின் பாடுபொருள்களும் கருப்பொருள்களும் நீண்ட காலத்திற்கு முன்பு வாழ்ந்ததாக           நம்பப்படும் புகழ்பெற்ற நபர்களுடன் தொடர்புடையவையாக இருக்கும்.

இணையற்ற  வீரத்துடணும்  புனிதமாகக் கருதப்படும் உள்ளூர் மலாய் சமூகத்தின் பெருமைகளும்  பண்பாடுகளும்   இந்த கதைகளினூடே ஊடுருவி செல்லும்.

இடப்பின்னணி உண்மையான உலகத்தை மையமாகக் கொண்டதாகவே அமைந்திருக்கும்.

இப்புராணக்கதைகளின் கதாபாத்திரங்கள் ஒரு நாட்டின் அரசியலுடன் நெருக்கமான தொடர்பு கொண்டு அந்நாட்டின் அடையாளமாக மாறும் சாதாரண மக்களாக இருப்பர்.

சில கதாபாத்திரங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்டு வியக்க வைக்கும் சக்திகளைக் கொண்டுள்ளதாகப் புனையப்பட்டிருக்கும்.  

உதாரணங்கள்

மலேசியாவில் பிரபலமான பல தொன்ம கதைகள் நாடு கடந்து பிரசித்தி பெற்றுப் புத்தகமாகவும் படமாகவும் வெளியிடப்படுள்ளன. அவற்றில் சில பின்வருமாறு:-

  • மசூரி-

- அழகியான மசூரி கணவன் போரிடச் சென்றப்பின் கள்ள தொடர்பு கொண்டதாகப் பழி சுமத்தப்படுகிறாள். அவளுக்குத் தண்டனைக்கொடுக்கும் முன் அவள் வாழும் மண் ஏழேழு தலைமுறைக்கும் செழிக்காது என்று சாபமிடுகிறாள். இன்றும் அவளின் கல்லறை லங்காவி தீவில் உள்ளது.

  • லேடாங் மலை இளவரசி

- லாக்காவின் எட்டாவது சுல்தான் மஹ்முட் ஷாவிற்கு ஒரு கனவு வருகிறது. கனவில் அவர் கண்ட விசித்திரம் நிறைந்த அழகிய பெண் லேடாங் மலையில் வாழும் இளவரசி. வயது முதிர்ந்த அவர் அவளை திருமணம் புரிய ஆசை படுகிறார். அவள் பலநூறு வருடங்களாக அந்த மலையைக் காப்பவள் என அறிகிறார். அப்படி ஒருத்தி தனக்கு மனைவியாக வந்தால் நாடு செழிக்கும் என்றும் நம்புகிறார். ஆனால் லேடாங் மலை இளவரசி அதற்கு விசித்திரமான நிபந்தனை வைக்கிறார். நிபந்தனை நிறைவேற்றப்பட்டதா என்பதுதான் கதை.

  • சாடோங் இளவரசி

-நாட்டின் நலனுக்காகப் போரைத் தடுத்து நிறுத்தி சயாம் மன்னனோடு சாடோங் இளவரசி செல்கிறாள். மீண்டும் மீண்டு வந்தப்பின் அவள் கணவன் கலங்கப்பட்டவள் எனக் குற்றம் சாட்டுகிறான். அவள் புனிதமாக இருந்தால் அவளது இரத்தம் வெள்ளை நிறத்தில் வர வேண்டும் இல்லையெனில் மரணதண்டனை வழங்கப்படும் என்கிறான். வெண் ரத்தம் வெளிப்படுகிறது. தன்னை சந்தேகப்பட்டதற்காக இளவரசி சாடோங் கணவனைக் குத்திக் கொல்கிறாள்.

  • ஹாங் துவா

- இவர் ஹங் ஜெபாத், ஹங் கஸ்தூரி, ஹங் லெகிர் மற்றும் ஹங் லெகியு தன் சகாக்களாகக் கொண்டவர். அவரின் வீரத்தால் கவரப்பட்ட மன்னன் ஹங் துவாவை கடற்படைக்குத் தளபதியாக நியமிக்கிறார். ஹங் துவா போன்ற வீரனின் இருப்பு நாட்டுக்குப் பெரும் பாதுகாப்பாக அமைந்தது. சந்தர்ப்ப வசத்தால் மன்னன் ஹாங் துவாவிற்கு மரண தண்டனை விதிக்கிறான். தனக்காக நீதி கேட்ட தன் நண்பன் ஹாங் ஜெபாட்டையே ஹாங் துவா கொல்ல நேரிடுகிறது.

  • சி தங்காங்

- தங்காங் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். ஒருநாள் அவன் வசிக்கும் ஊரில் வணிகக் கப்பல் கறையேறியது. அக்கப்பலில் பணியாற்றி பொருளீட்ட ஆசைக் கொண்டு தன் குடும்பத்தை விட்டுச் செல்கிறான். பல ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் பணக்காரனாகி அவனின் சொந்த ஊருக்கே திரும்புகிறான். அங்கு ஆவலோடு அவனைக் காண வந்த அவனின் தாயை யாரென்று தெரியாது எனவும் அவனின் பெற்றோர்கள் சிறு வயதிலேயே இறந்து விட்டனர் என்றும் ஏமாற்றுகிறான். கோபம் கொண்ட தாய் அவனைக் கல்லாக ஆகும்படி சபிக்கிறாள்.

தேவைகள்

மசூரி ஓவியம்

இத்தகைய தொன்ம கதைகள் வழி பண்டைய வரலாறு மட்டுமல்லாது ஒரு சமுதாயத்தின் கோட்பாடுகள், பண்புநலன்கள், அரசியல் சட்டத்திட்டங்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், அறம் சார்ந்த வாழ்வியல், அழகியல்  என பல நுட்பமான தகவல்கள் வாய்மொழியாக எவ்வாறு கடத்தப்பட்டு இன்றும் தனித்தன்மை இழக்காமல் இருப்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.