சினிமாத் தூது (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
(Created page with "தமிழில் முதல் முதலாக வெளிவந்த மஞ்சள் பத்திரிகையாகக் கருதப்படுகிறது சினிமாத் தூது. இவ்விதழின் ஆசிரியர் சி. என். லட்சுமிகாந்தன். == தொடக்கம் == சி. என். லட்சுமிகாந்தன் 1940ஆம் ஆண்டு ம...")
 
No edit summary
 
Line 13: Line 13:


== இந்து நேசன் ==
== இந்து நேசன் ==
சினிமாத் தூது இதழ் நின்று போனதையடுத்து நல்ல முறையில், ஆனால் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த 'இந்து நேசன்’ எனும் பத்திரிக்கையை வாங்கி, அதில் சினிமா நடிகர்களின் நடத்தையை செய்திகளாக பதித்தார் லட்சுமிகாந்தன். அதிலும் முக்கியமாக ஆண், பெண் நட்சத்திரங்களின் காம சல்லாபங்களையும், கோணங்கித்தனங்களையும் வெளிப்படையாக எழுத ஆரம்பித்தார்.  அதில் குறிப்பிடத்தக்கவர்கள் எம். கே. தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன், இயக்குனர் ஸ்ரீராமுலு நாயுடு.
சினிமாத் தூது இதழ் நின்று போனதையடுத்து நல்ல முறையில், ஆனால் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த '[[இந்து நேசன் (1944 வார இதழ்)|இந்து நேசன்]]’ எனும் பத்திரிக்கையை வாங்கி, அதில் சினிமா நடிகர்களின் நடத்தையை செய்திகளாக பதித்தார் லட்சுமிகாந்தன். அதிலும் முக்கியமாக ஆண், பெண் நட்சத்திரங்களின் காம சல்லாபங்களையும், கோணங்கித்தனங்களையும் வெளிப்படையாக எழுத ஆரம்பித்தார்.  அதில் குறிப்பிடத்தக்கவர்கள் எம். கே. தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன், இயக்குனர் ஸ்ரீராமுலு நாயுடு.


இதன் விளைவாக நவம்பர் 8, 1944-ல் கத்தியால் குத்தப்பட்டு அடுத்தநாள் காலையில் சென்னை பொது மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதன் விளைவாக நவம்பர் 8, 1944-ல் கத்தியால் குத்தப்பட்டு அடுத்தநாள் காலையில் சென்னை பொது மருத்துவமனையில் [[லட்சுமிகாந்தன் கொலை வழக்கு|லட்சுமிகாந்தன்]] உயிரிழந்தார்.


== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Latest revision as of 04:27, 27 June 2024

தமிழில் முதல் முதலாக வெளிவந்த மஞ்சள் பத்திரிகையாகக் கருதப்படுகிறது சினிமாத் தூது. இவ்விதழின் ஆசிரியர் சி. என். லட்சுமிகாந்தன்.

தொடக்கம்

சி. என். லட்சுமிகாந்தன் 1940ஆம் ஆண்டு மதராஸில் (சென்னை) சினிமாத் தூது எனும் இதழை துவங்கினார்.

உள்ளடக்கம்

வார இதழாக வெளியான சினிமாத் தூது நடிகர், நடிகைகள் பற்றிய தகவலுடன் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், சில அவதூறான கருத்துகளும் கொண்டிருந்ததாக அறியப்படுகிறது.

நிறுத்தம்

இரண்டாம் உலகப் போர் சூழலில் காகித பற்றாக்குறை காரணமாக, அக்காலகட்டத்தில் புது இதழ்களை துவக்க அப்போதைய பிரிட்டிஷ் அரசு அனுமதிக்கவில்லை. திரைப்பட ஆளுமைகளை அவதூறாக எழுதியதன் காரணமாக கோபமடைந்த சிலர், அப்பத்திரிக்கை அனுமதியில்லாமல் வெளியிடுப்படுவதை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசென்றனர்.

அப்போதைய சென்னை ஆளுநரான ஆர்த்தர் ஆஸ்வால்ட் அவ்விதழை நிறுத்தும்படி செய்தார்.

இந்து நேசன்

சினிமாத் தூது இதழ் நின்று போனதையடுத்து நல்ல முறையில், ஆனால் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த 'இந்து நேசன்’ எனும் பத்திரிக்கையை வாங்கி, அதில் சினிமா நடிகர்களின் நடத்தையை செய்திகளாக பதித்தார் லட்சுமிகாந்தன். அதிலும் முக்கியமாக ஆண், பெண் நட்சத்திரங்களின் காம சல்லாபங்களையும், கோணங்கித்தனங்களையும் வெளிப்படையாக எழுத ஆரம்பித்தார். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் எம். கே. தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன், இயக்குனர் ஸ்ரீராமுலு நாயுடு.

இதன் விளைவாக நவம்பர் 8, 1944-ல் கத்தியால் குத்தப்பட்டு அடுத்தநாள் காலையில் சென்னை பொது மருத்துவமனையில் லட்சுமிகாந்தன் உயிரிழந்தார்.

உசாத்துணை