being created

ஞானாம்பிகைதேவி: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "ஞானாம்பிகைதேவி (பிறப்பு: நவம்பர் 23, 1936) ஈழத்துப் பெண் எழுத்தாளர் . == வாழ்க்கைக் குறிப்பு == ஞானாம்பிகைதேவி இலங்கை நாட்டின் வடமாகாணம் யாழ்ப்பாணத்தில் சிவசுப்பிரமணியம், வீரலட்சுமி...")
(No difference)

Revision as of 16:40, 25 June 2024

ஞானாம்பிகைதேவி (பிறப்பு: நவம்பர் 23, 1936) ஈழத்துப் பெண் எழுத்தாளர் .

வாழ்க்கைக் குறிப்பு

ஞானாம்பிகைதேவி இலங்கை நாட்டின் வடமாகாணம் யாழ்ப்பாணத்தில் சிவசுப்பிரமணியம், வீரலட்சுமி இணையருக்குப் பிறந்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைமாணிப்பட்டத்தையும் கல்விப்பின் டிப்ளோமாவையும் கோயிற்கலை தொடர்பாக முதுமாணிப்பட்டத்தையும் முடித்தார்.

ஆசிரியப்பணி

ஞானாம்பிகைதேவி வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியராகவும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் தஞ்சாவூர் பல்கலைக்கழக நுண்கலை ஆராய்ச்சித்துறை பேராசிரியராகவும் புதுடில்லி பல்கலைக்கழக மானியக்குழு பெருந்திட்ட முதன்மை ஆராய்வாளராகவும் பணியாற்றினார்.

பொறுப்புகள்

யாழ்ப்பாணம், சென்னை, பாண்டிச்சேரி, மதுரை, காமராசார், மைசூர், கேரளா, ஆந்திரா, காலடி சங்கராசாரியர், தஞ்சாவூர் ஆகிய பல்கலைக்கழகங்களில் ஆலோசகராயும் கலாநிதிப் பட்டப்படிப்பு நெறியாளராயும், பாடத்திட்டக்குழுத் தலைவராயும், பரீட்சைக்குழுத் தலைவராயும் , தேர்வாளராயும் இருந்துள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

ஞானாம்பிகைதேவி தெய்வத் தமிழிசை எனும் நூலை எழுதினார். பரத இசை மரபு, காரைக்காலம்மையார் ”தென்னிந்திய இசையின் தாய்” என்ற ஆய்வு நூல் எட்டாம் உலக தமிழராய்ச்சி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.

விருதுகள்

  • தெய்வத் தமிழிசை எனும் இவரின் நூல் தமிழக அரசின் சிறப்பு நூற்பரிசு பெற்றது.

நூல் பட்டியல்

  • தெய்வத் தமிழிசை
  • தென்னிந்திய இசையின் தாய்

உசாத்துணை

  • ஆளுமை:ஞானாம்பிகைதேவி, குலேந்திரன் - Noolaham



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.