being created

ஞானமாதங்கி

From Tamil Wiki

ஞானமாதங்கி ஈழத்துப் பெண் எழுத்தாளர், இதழாசிரியர், நாடக நடிகர். சிறுகதைகள், கவிதைகள் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஞானமாதங்கி இலங்கை நாட்டின் வட மாகாணம் யாழ்ப்பாணத்தில் செல்வராசா, மகேஸ்வரி இணையருக்குப் பிறந்தார். மந்துவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வி கற்றார். கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் இடைநிலை மற்றும் உயர் கல்வி கற்றார். கிழக்குப் பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்தா அழகியல் நிறுவகத்தில் நாடகமும் அரங்கியலையும் சிறப்புப் பாடமாகப் பயின்றார். இளம் நுண்கலைமாணிப் பட்டத்தை பெற்றார். அயர்லாந்து பல்கலைக்கழகத்தில் உளவளத்துணை டிப்ளோமா பட்டம் பெற்றார்.

பொறுப்புகள்

  • அஞ்சலியகம் நிறுவனத்தில் உளவளத்துணையாளராகப் பணிபுரிந்தார்.
  • ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் உள்ளார்.
  • ஐ.பி.சி தமிழ் தயாரிப்பில உருவாகிய மர்மமக்குழல் தொடர் நாடகத்தின் இணை இயக்குனராகவும் நடிகையாகவும் இருந்தார்.

இதழியல்

ஞானமாதங்கி உவங்கள் இணைய சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக உள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

சிறுகதை, கவிதை, நாடகம் என்பவற்றையும் எழுதி வருகின்றார். இவரின் ஆக்கங்கள் ஜீவநதி சஞ்சிகையிலும் உவங்கள் இணைய சஞ்சியிலும் வெளிவந்துள்ளன.

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.