படப்பெட்டி (இதழ்)

From Tamil Wiki
Revision as of 02:39, 19 June 2024 by Editorgowtham (talk | contribs) (Created page with "தீவிர சினிமா ஆர்வலர்களுக்கான காலாண்டிதழாக சென்னையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த முக்கியமான இதழ் படப்பெட்டி. சலன ஊடகம் குறித்த பு‌ரிதலை விசாலப்படுத்தவும், சந்தேகங்களை கள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தீவிர சினிமா ஆர்வலர்களுக்கான காலாண்டிதழாக சென்னையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த முக்கியமான இதழ் படப்பெட்டி.

சலன ஊடகம் குறித்த பு‌ரிதலை விசாலப்படுத்தவும், சந்தேகங்களை களையவும், உலக அளவிலான முயற்சிகளை தெ‌ரிந்து கொள்ளவும் மக்கள் திரைப்பட இயக்கத்தின் சார்பில் 'படப்பெட்டி' இதழ் வந்து வெளியானது. ’பரிசல்’ புத்தக விற்பனை நிலையத்தை நடத்தி வரும் சிவ. செந்தில்நாதன் அவர்கள் இவ்விதழை பதிப்பித்து வெளியிட்டார்.

துவக்கம்

படப்பெட்டி முதல் இதழ் ஜீன் 2005-ல் வெளியானது.

இவரது ஆசிரியர் குழுவில் மா. பாலசுப்ரமணியன், சோமிதரன், இரா.குமரகுருபரன் போன்றோரும், ஆலோசகர்களாக ட்ராஸ்ட்கி மருது, ஷாஜி, ஆர்.ஆர்.சீனிவாசன், அமுதன், செழியன், மாமல்லன் கார்த்தி ஆகியோரும் செயல்பட்டார்கள்.

உள்ளடக்கம்

திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள், இவைகளைப் பற்றிய ஆழமான கட்டுரைகள், அறிமுகம், நேர்காணல் ஆகியவை ஒவ்வொரு இதழிலும் இடம் பெறும்.

உசாத்துணை