under review

நாரதீய சம்ஹிதை

From Tamil Wiki
Revision as of 15:26, 4 June 2024 by Tamizhkalai (talk | contribs)

நாரதீய சம்ஹிதை : ஆகம விளக்க நூல். பாஞ்சராத்ர ஆகம முறையைச் சேர்ந்தது

காலம்

நாரதீய சம்ஹிதை பொ.யு. 4-ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என கணிக்கப்படுகிறது.

அமைப்பு

நாரதிய சம்ஹிதை 30 அத்தியாயங்களில் 3000-க்கும் மேற்பட்ட வரிகளைக் கொண்ட நூல். பிருகு முனிவர் கௌதமருக்கு நாரதர் கற்பித்தவற்றை அத்ரி முனிவரிடம் விவாதிக்கும் வகையில் அமைந்தது.

உள்ளடக்கம்

பாஞ்சராத்ர மரபை விளக்கும் நாரதீய சம்ஹிதை வைணவ வழிபாடு மற்றும் சடங்குகள் பற்றி விவாதிக்கிறது. யிலமைப்பு ஆகியநுஒஅஞ்யுடன் தொடர்புபடுத்துகிறது .

பாஞ்சராத்ர முறையில் முதல் ஆகமநூல்களை விஷ்ணுவே வாசுதேவனாக வந்து வெளிப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. வழிநூல்கள் முனிவர்களால் சொல்லப்பட்டவை என்னும் பொருளில் 'முனிப்ரோக்த' எனப்படுகின்றன. முனிவர்களால் சொல்லப்பட்ட நூல்கள் சாத்விகம், ராஜஸம், தாமஸம் என மூன்று வகைப்படும் . நாரதீய சம்ஹிதை சாத்விக வகையைச் சேர்ந்தது.

உசாத்துணை


✅Finalised Page