being created

வைகானஸம்

From Tamil Wiki
Revision as of 16:07, 4 June 2024 by Jeyamohan (talk | contribs)

வைகானஸம் (வைகானசம்) வைணவ ஆகமம். வைணவ வழிபாட்டு மரபு பின்னாளில் வைணவ ஆகமத்தொகுப்பாக மாறியது. இது விஷ்ணுவின் உருவங்கள் (வியூக நிலை) மட்டுமே முதன்மையாகக் கொள்ளத்தக்கவை என நம்பும் தூய உருவவழிபாட்டு மரபாகும். தலைமுறையாகத் தொடரும் ஆசிரியர் மரபைக் கொண்டது. அம்மரபு பின்னாளில் சாதியாக ஆகியது.

ஆகமம்

ஆகமம் என்பது மதங்களின் வழிபாட்டு முறைகளின் தொகுப்பாக அமைந்த நூல். வைணவ ஆகமங்களில் முதன்மையானவை பாஞ்சராத்ரம், வைகானஸம் ஆகியவை.

நிறுவனர்

வைகானஸ மரபை தொடங்கியவர் விகனஸ முனிவர் என்று தொன்மம் உள்ளது. விஷ்ணுவே நாராயணர் வடிவில் வந்து இந்த வழிபாட்டு முறையை விகனஸ முனிவருக்கு வழங்கினார் என நம்பப்படுகிறது. வைகானச கல்ப சூத்திரம் இந்த மரபின் முதன்மையான நூலாக மதிக்கப்படுகிறது. விகனசரின் நான்கு மாணவர்கள் அந்நூலை விரித்தெழுதிய வைகானஸ சாஸ்த்ரங்கள் எனப்படும் துணைநூல்களும் வைகானஸ மரபின் மூலநூல்களாகும். இந்நூல்களின் மொழிநடையைக்கொண்டு இவை பொயு 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டில் உருவானவை என மதிப்பிடுகிறார்கள்.

வைகானஸ மரபு குறித்த கல்வெட்டுச்சான்றுகள் தமிழகத்தில் பொயு 9க்குப்பின் கிடைக்கின்றன, குறிப்பாக ராஜராஜசோழனின் ஆட்சிக்காலத்தில். ராஜராஜ சோழன் தமிழக ஆலயங்களை ஆகம முறைக்கு மாற்றியபோது வைணவத்துக்கு வைகானஸ மரபையே நெறியாக்கினார். சோழர்களின் ஆட்சிக்காலத்தில், பொயு 11க்குப்பின் வைகானஸ மரபினர் 68.3. By about the 11th century, Sri Vaishnavas established themselves as the dominant sect among the Vaishnavas. And, their way of worship (pancharatra) took charge of most Vaishnava temples in South India, and made it open to a larger participation by larger segments of the community.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.