being created

வைகானஸம்: Difference between revisions

From Tamil Wiki
(Marked stage as Being created, to prevent public access during draft)
(6 intermediate revisions by the same user not shown)
Line 1: Line 1:
   
வைகானஸம் (வைகானசம்) வைணவ ஆகமம். வைணவ வழிபாட்டு மரபு பின்னாளில் வைணவ ஆகமத்தொகுப்பாக மாறியது. இது விஷ்ணுவின் உருவங்கள் (வியூக நிலை) மட்டுமே முதன்மையாகக் கொள்ளத்தக்கவை என நம்பும் தூய உருவவழிபாட்டு மரபாகும். தலைமுறையாகத் தொடரும் ஆசிரியர் மரபைக் கொண்டது. அம்மரபு பின்னாளில் சாதியாக ஆகியது.   

Line 4: Line 5:
[[ஆகமம்]] என்பது மதங்களின் வழிபாட்டு முறைகளின் தொகுப்பாக அமைந்த நூல். வைணவ ஆகமங்களில் முதன்மையானவை [[பாஞ்சராத்ரம்]], வைகானஸம் ஆகியவை.
[[ஆகமம்]] என்பது மதங்களின் வழிபாட்டு முறைகளின் தொகுப்பாக அமைந்த நூல். வைணவ ஆகமங்களில் முதன்மையானவை [[பாஞ்சராத்ரம்]], வைகானஸம் ஆகியவை.

நிறுவனர்
== நிறுவனர் ==
வைகானஸ மரபை தொடங்கியவர் விகனஸ முனிவர் என்று தொன்மம் உள்ளது. விஷ்ணுவே நாராயணர் வடிவில் நைமிஷாரண்யத்திற்கு வந்து தன் வியூக (உருவ) வடிவங்களை காட்டி இந்த வழிபாட்டு முறையை விகனஸ முனிவருக்கு வழங்கினார் என நம்பப்படுகிறது. வைகானச கல்ப சூத்திரம் இந்த மரபின் முதன்மையான நூலாக மதிக்கப்படுகிறது. விகனசரின் நான்கு மாணவர்கள் அந்நூலை விரித்தெழுதிய வைகானஸ சம்ஹிதைகள் (சாஸ்திரங்கள்) எனப்படும் துணைநூல்களும் வைகானஸ மரபின் வழிகாட்டு நூல்களாகும். (இந்நூல்களுக்கு தொன்மத்திலுள்ள முனிவர்களின் பெயர்களே ஆசிரியர்களாகச் சொல்லப்படுகிறது. அவர்கள்: அத்ரி, காசியபர், பிருகு , மரீசி)  இந்நூல்களின் மொழிநடையைக்கொண்டு இவை பொயு 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டில் உருவானவை என மதிப்பிடுகிறார்கள். வைகானஸர்கள் கிருஷ்ண யஜுர்வேதத்தின் தைத்ரிய சம்ஹிதையை மட்டுமே தங்கள் முதன்மை நூலாகக் கொள்கின்றனர்.
 
== வரலாறு  ==
விகனஸ முனிவர் வகுத்த வழிபாட்டுச் சடங்கு நெறிகளும் வாழ்க்கைநெறிகளும் தொல்காலத்திலேயே இந்தியாவில் இருந்திருக்கலாம். மனுஸ்மிருதி (மானவ தர்ம சாஸ்திரம்) பிரம்மசரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாஸம் என்னும் நான்கு வாழ்க்கைக் காலகட்டங்களை  (ஆசிரமங்கள்) விவரிக்கையில் வானப்பிரஸ்தம் வைகானஸ மரபின் அடிப்படையில் முன்வைக்கப்படுவதாகச் சொல்கிறார். வைகானஸ மரபு அந்தணர்கள் நடுவே ஒரு வழிபாட்டு முறை, வாழ்க்கைநெறியாக இருந்திருக்கலாம். பின்னர் அது வரையறை செய்யப்பட்டு ஆகமமாக ஆக்கப்பட்டது.
 
வைகானஸ ஆகம மரபு தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலும் கர்நாடகத்தின் தென்பகுதியிலும் மட்டுமே இருந்ததாகவே வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. வைகானஸ ஆகம நூல்கள் சம்ஸ்கிருதத்தில் இருந்தாலும், அவை தமிழகத்தில் எழுதப்பட்டவையாக இருக்கலாம் என்றும்; இங்கிருந்த வைணவ ஆலயத்தின் பூசகக்குடியினரால் அவை உருவாக்கப்பட்டிருக்கலாமென்றும் ஶ்ரீனிவாஸ ராவ் கருதுகிறார்.
 
வைகானஸ மரபு குறித்த கல்வெட்டுச்சான்றுகள் தமிழகத்தில் பொயு 9க்குப் பின்னர்தான் கிடைக்கின்றன, குறிப்பாக ராஜராஜசோழனின் ஆட்சிக்காலத்தில். ராஜராஜ சோழன் தமிழக ஆலயங்களை ஆகம முறைக்கு மாற்றியபோது வைணவத்துக்கு வைகானஸ மரபையே நெறியாக்கினார். பல்லவர்களின் காலகட்டத்தில் வைணவ ஆலயங்கள் சிறிய அளவிலேயே இருந்தன, அவை வெவ்வேறு பூசகக்குடியினரின் வழிபாட்டுரிமையின்கீழ் இருந்திருக்கலாம். சோழப்பேரரசு உருவாகி, ஆலயங்கள் பெரிதாகக் கட்டப்பட்டபோது வைகானஸம் என்னும் பொதுமரபின் கீழ் அந்த வைணவ வழிபாட்டுமுறைமை தொகுக்கப்பட்டிருக்கலாம்.
 
பொயு 11 ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் பாஞ்சராத்ர மரபு பரவத் தொடங்கியது. பாஞ்சராத்ர மரபு அந்த ஒரு துணைமதம் என்னும் அளவுக்கு விரிவான நெறிகளும், ஆகமநூல்களும் கொண்டது. அந்த நெறிகளை ஏற்றுக்கொண்டு, அதில் இணைபவர் அனைவருக்கும் அது வழிபாட்டுரிமை அளித்தது. அதன்பொருட்டு ஐந்து அடையாளக்குறிகளை ஏற்றுக்கொள்ளுதல் (பஞ்ச சம்ஸ்காரம்) போன்ற சடங்குகளையும் வகுத்தது. ஆனால் வைகானஸ மரபு முழுக்க முழுக்க குலமுறையாகவே நீடித்தது. பாஞ்சராத்ர மரபிற்கு எதிராக வைகானஸ மரபு தன்னை இறுக்கமாக்கிக் கொண்டது. அதில் ஒருவர் கருவில் இருக்கையிலேயே விஷ்ணுவுக்கு உரியவராக தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் விஷ்ணுபலி போன்ற சடங்குகள் உருவாயின.
 
வைகானஸ மரபு பாஞ்சராத்ர மரபில் இருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ளும்பொருட்டு கறாரான பல நெறிகளை உருவாக்கிக் கொண்டது. வைகானஸத்தில் பரம்பரை, பந்தம் போன்ற கருதுகோள்கள் முக்கியமானவை. ஒருவர் வைகானஸர்களின் குடும்பத்தில் பிறந்தாகவேண்டும், தலைமுறைதலைமுறையாக ஒரு குருமரபிலேயே நீடிக்கவேண்டும், ஒரு வழிபாட்டாளர்குழுவுக்குள்ளும் இறுதிவரை இருந்தாகவேண்டும். பிற்கால வைகானஸ நூல்கள் இந்த பிறப்புசார்ந்த தொடர்ச்சியை வலியுறுத்துகின்றன. வைகானஸர்கள் தமிழில் எழுந்த நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் போன்ற பக்திநூல்களை ஏற்பதில்லை. தங்கள் மரபு பக்திநூல்களுக்கு முந்தையது என்றும், வேதத்திற்கு மட்டுமே அதிகாரபூர்வ ஏற்பு அளிப்பது என்றும் அவர்கள் கருதுகின்றனர். கிருஷ்ணயஜுர்வேதத்தின் தைத்ரிய சம்ஹிதை அவர்களின் மூலநூல்.
 
ராமானுஜர் வைகானஸ ஆகம முறைக்கு எதிரானவராக இருந்தார். ராமாஜுனரின் ஶ்ரீவைஷ்ணவ மரபு வைகானஸ மரபினரை ஆலயங்களில் இருந்து அகற்றி பாஞ்சராத்ர ஆகம முறையை நிறுவியது. இந்த போராட்டம் நூறாண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. இன்று தென்னிந்தியாவில் ஏறத்தாழ பாதி வைணவ ஆலயங்களில் வைகானஸர்களே பூசகர்களாக நீடிக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் பாஞ்சராத்ர மரபே மிகப்பெரும்பாலும் உள்ளது. இந்த வழிபாட்டுரிமைப்போர் இன்றும் சாதிப்பூசலாக நீடிக்கிறது.
 
== ஆசிரியர்கள் ==
வைகானஸ ஆகமங்களுக்கு விளக்கவுரை எழுதி அந்த மரபை வலியுறுத்தியவர்கள் என ந்ருசிம்ஹ வாஜ்பேயி, பட்ட பாஸ்கராச்சார்யா, அனந்தாச்சார்யா மற்றும் ஶ்ரீனிவாச மகி ஆகியோர் முக்கியமானவர்களாக கூறப்படுகின்றனர்
 
== தத்துவம் ==
 
====== இருநிலை ======
பிற வைணவ மரபுகளைப்போலவே வைகானஸமும் இறைவனாகிய விஷ்ணுவை இரண்டு நிலைகளில் ஒரே சமயம் உருவகிக்கிறது. அறியமுடியக்கூடிய, வழிபடத்தக்க உருவங்கள். மற்றும் அறியமுடியாத, பிரபஞ்சரூபமான பிரம்மம். வைகானஸ மரபு என்பது தொன்மையான வேத ஞானதரிசனமாகிய பிரம்மம் என்னும் கருத்துருவை விஷ்ணுவாகவும், விஷ்ணுவை பல்வேறு வழிபாட்டு உருவங்களாகவும் மாற்றிக்கொள்வதற்கான தொடர்ச்சியான முயற்சியின் விளைவாக உருவானது.  சடங்கு,அழகியல், தத்துவம் ஆகிய தளங்களில் வைகானஸம் இதைச் செய்கிறது.
 
விஷ்ணு இரண்டு நிலைகளில் இருக்கிறார். அறியப்படவே முடியாத பிரம்மம் நிஷ்கல வடிவம் எனப்படுகிறது (நி+கல. கலை என்பது அடையாளம். அடையாளங்களே அற்றது) சகல வடிவம் (அனைத்து அடையாளங்களும் கொண்ட வடிவம்). இதை புஷ்கல வடிவம் (பொலிவுத்தோற்றம்) என்றும் கூறுகிறார்கள்
 
====== சாங்கியம் ======
வைகானஸம் சாங்கிய தரிசனத்தை இந்த இணைப்புக்குப் பயன்படுத்திக்கொள்கிறது. சாங்கியதரிசனத்திலுள்ள புருஷ தத்துவம் , பரமபுருஷனாக அல்லது விஷ்ணுவாக இந்நூல்களில் உருவகிக்கப்படுகிறது.
 
====== நான்கு நிலைகள் ======
வைகானஸம் முன்வைக்கும் விஷ்ணுவின் நான்கு நிலைகள் குறிப்பிடத்தக்கவை
 
* புருஷன்: பிரபஞ்சத்தின் சாரமான பேருள்ளம், முழுமையுள்ளம்
* சத்யம் : பிரபஞ்சமே ஆகி நின்றுள்ள முழுமுதல் உண்மை
* அச்சுதன்: பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றிலும் உணரப்படும் மாறாநெறி
* அனிருத்தன்: எவருடைய எச்செயல்களும் எதனாலும் குறைவுபடாதிருக்கும் பிரபஞ்சத்தன்மை
 
====== மந்திரங்கள் ======
வைகானஸ மரபு இரண்டு மந்திரங்களை முன்வைக்கிறது. பரவாசுதேவன், நாராயணன் ஆகிய இரண்டு பெருந்தெய்வ உருவகங்களைப் போற்றும் மந்திரங்கள் அவை
 
* ஓம் நமோ பகவதே வாசுதேவாய
* ஓம் நமோ நாராயணாய.
 
====== மீட்பு ======
வைகானஸ மரபின்படி வீடுபேறு (மோக்ஷம்) என்பது விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்தை அடைதல். அதற்கு நான்கு வழிமுறைகள் உள்ளன
 
* ஜபம் (மந்திரங்களை உளம்கொள்ளுதல்)
* ஹூத (வேள்வி)
* அர்ச்சனை (வழிபாடு)
* தியானம் (யோகம், தியானம்)
 
ஆனால் வைகானஸ ஆகமநூல்கள் மரீசி சம்ஹிதை போன்றவை நான்கில் அர்ச்சனையே முதன்மையானது, அதுவே போதுமானது என்று சொல்கின்றன.
 
== வைகானஸ ஆலயங்கள் ==
வைகானச ஆகமத்தைப் பின்பற்றும் சில முதன்மையான பெருமாள் கோயில்கள்
 
* வெங்கடேஸ்வரா கோவில், திருமலை
* ஸ்ரீ பார்த்தசாரதி கோவில், திருவல்லிக்கேணி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
* யோகானந்த லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், மட்டப்பள்ளி
* அருள்மிகு வெங்கடாசலபதி சுவாமி திருக்கோயில், ஒப்பிலியப்பன் கோயில், திருநாகேஸ்வரம்
* ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோவில் (சின்ன திருப்பதி), துவாரகாத்திருமலை, எலுரு மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
* ஸ்ரீ வீரநாராயண சுவாமி கோவில், பெலவாடி, சிக்மகளூர் மாவட்டம், கர்நாடகா
* ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில் (கோணசீமா திருப்பதி), வடபள்ளி, கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
* ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயில் (திருமலை கிரி), திருமலை கிரி, ஜக்கையாபேட்டை, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
* ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவில் பல்லாப்பூர் பெட், பெங்களூர் கர்நாடகா
* ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில், ஸ்ரீகிரி, ஓங்கோல், ஆந்திரப் பிரதேசம்
* ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவில், மங்களகிரி, ஆந்திரப் பிரதேசம்
* ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயில், வேதாத்ரி, ஜக்கய்யப்பேட்டை, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
* ஸ்ரீ பிலிகிரிரங்கசுவாமி கோவில் பிலிகிரிரங்கனா பெட்டா, எலந்தூர் Tq சாமராஜநகர் மாவட்டம் கர்நாடகா
* ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவில், கேரே தொண்டனூர் பாண்டவபுரா, மாண்டியா மாவட்டம், கர்நாடகா
* ஸ்ரீ வீராஞ்சநேய சுவாமி கோவில் மூலபாகிலு , கோலார் மாவட்டம், கர்நாடகா
* ஸ்ரீ வால்மீகி ஆஞ்சநேய ஸ்வாமி கோவில் சஜ்ஜனராவ் வட்டம் பெங்களூரு கர்நாடகா
* கிரேட்டர் சிகாகோவின் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி (பாலாஜி) கோவில்
* ஸ்ரீ லக்ஷ்மி கோவில் Ashland Boston US
* சிங்கப்பூர் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில்
* டெக்சாஸின் மலர் மேடு இந்து கோவில்
* ஸ்ரீ தேவநாதன் பெருமாள் கோவில் திருவஹிந்தராபுரம், கடலூர், இந்தியா
* ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் புதுச்சேரி, இந்தியா
* ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோவில், திருமலை, மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர்
* ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவில், குராசா, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
* ஸ்ரீ சென்னகேசவ சுவாமி கோவில், தரகதுரு, மச்சிலிப்பட்டினம், கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
* ஸ்ரீ சென்னகேசவ சுவாமி கோவில், மல்லவோலு, மச்சிலிப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
* ஸ்ரீ சென்னகேசவ சுவாமி கோவில், வள்ளிபாலம், ரேபள்ளே, குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
* ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில், கோடாலி, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
* ஸ்ரீ லக்ஷ்மிநரசிமா சுவாமி கோவில், சோளிங்கர், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
* ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமி கோவில், பெத்தமங்களா, கோலார் மாவட்டம், கர்நாடகா, இந்தியா
* ஸ்ரீ சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில், உத்திரமேரூர், காஞ்சிபுரம், தமிழ்நாடு, இந்தியா
* ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில், வெளியநல்லூர் கிராமம், காஞ்சிபுரம், தமிழ்நாடு, இந்தியா
* ஸ்ரீ சென்னகேசவ சுவாமி கோவில், மல்லவோலு, மச்சிலிப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
* ஸ்ரீ கள்ளழகர் கோயில், திருமாலிருஞ்சோலை, அழகர்கோயில், மதுரை, தமிழ்நாடு, இந்தியா.
* ஸ்ரீ ஆதி ஜெகந்நாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி, ராம்நாடு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
* ஸ்ரீ வேகு சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில், சக்கரமல்லூர், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
* ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், நுங்கம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
* ஸ்ரீ மாதவப் பெருமாள் கோயில், மயிலாப்பூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
* ஸ்ரீ கேசவ சுவாமி கோவில், கந்த்ரேடு, பெடபுடி மண்டலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்.
* ஸ்ரீ திருவேங்கடமுடியன் கோவில், தெற்கு திருப்பதி, அரியக்குடி சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு.
* வெங்கடாசலபதி கோவில், குமாரபுரம் கிராமம்
* ஸ்ரீமத் காத்ரி லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோயில், கதிரி, ஆந்திரப் பிரதேசம்.
* மதனகோபாலசுவாமி கோயில், டாங்கேரு, கே. கங்காவரம் மண்டலம், கோனசீமா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
* ஸ்ரீ பூ சமேத ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில், சீவாலா, கே. கங்காவரம் மண்டலம், கோனசீமா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
* ஸ்ரீ சீதாராமச்சந்திரசுவாமி கோயில், கோட்டா, கே. கங்காவரம் மண்டல், கோனசீமா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
* ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோவில், திருப்பதி, ஆந்திரப் பிரதேசம்.
* ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவில், திருப்பதி, ஆந்திரப் பிரதேசம்.
* ஸ்ரீ கஜேந்திர வரத ராஜ பெருமாள் கோவில், திருப்பத்தூர் (635601), தமிழ்நாடு
* ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில், ஸ்ரீநிவாச மங்காபுரம், திருப்பதி, ஆந்திரப் பிரதேசம்.
* ஸ்ரீ வேதநாராயண சுவாமி கோவில், நாகலாபுரம், ஆந்திரப் பிரதேசம்.
 
== உசாத்துணை ==
 
* [https://ia903400.us.archive.org/0/items/acharya-pirabhavam-by-smt-ranganayaki-kannapiran-in-tamil/Acharya%20Pirabhavam%20By%20Smt.%20Ranganayaki%20kannapiran%20In%20Tamil_text.pdf ஆச்சாரியப்பிரபாவம். இணையநூலகம்]
* [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0007202_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F_%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.pdf திருவேங்கட தலபுராணம் இணையநூலகம்]
 
வைகானஸ மரபை தொடங்கியவர் விகனஸ முனிவர் என்று தொன்மம் உள்ளது. விஷ்ணுவே நாராயணர் வடிவில் வந்து இந்த வழிபாட்டு முறையை விகனஸ முனிவருக்கு வழங்கினார் என நம்பப்படுகிறது.

Revision as of 17:46, 4 June 2024

வைகானஸம் (வைகானசம்) வைணவ ஆகமம். வைணவ வழிபாட்டு மரபு பின்னாளில் வைணவ ஆகமத்தொகுப்பாக மாறியது. இது விஷ்ணுவின் உருவங்கள் (வியூக நிலை) மட்டுமே முதன்மையாகக் கொள்ளத்தக்கவை என நம்பும் தூய உருவவழிபாட்டு மரபாகும். தலைமுறையாகத் தொடரும் ஆசிரியர் மரபைக் கொண்டது. அம்மரபு பின்னாளில் சாதியாக ஆகியது.

ஆகமம்

ஆகமம் என்பது மதங்களின் வழிபாட்டு முறைகளின் தொகுப்பாக அமைந்த நூல். வைணவ ஆகமங்களில் முதன்மையானவை பாஞ்சராத்ரம், வைகானஸம் ஆகியவை.

நிறுவனர்

வைகானஸ மரபை தொடங்கியவர் விகனஸ முனிவர் என்று தொன்மம் உள்ளது. விஷ்ணுவே நாராயணர் வடிவில் நைமிஷாரண்யத்திற்கு வந்து தன் வியூக (உருவ) வடிவங்களை காட்டி இந்த வழிபாட்டு முறையை விகனஸ முனிவருக்கு வழங்கினார் என நம்பப்படுகிறது. வைகானச கல்ப சூத்திரம் இந்த மரபின் முதன்மையான நூலாக மதிக்கப்படுகிறது. விகனசரின் நான்கு மாணவர்கள் அந்நூலை விரித்தெழுதிய வைகானஸ சம்ஹிதைகள் (சாஸ்திரங்கள்) எனப்படும் துணைநூல்களும் வைகானஸ மரபின் வழிகாட்டு நூல்களாகும். (இந்நூல்களுக்கு தொன்மத்திலுள்ள முனிவர்களின் பெயர்களே ஆசிரியர்களாகச் சொல்லப்படுகிறது. அவர்கள்: அத்ரி, காசியபர், பிருகு , மரீசி) இந்நூல்களின் மொழிநடையைக்கொண்டு இவை பொயு 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டில் உருவானவை என மதிப்பிடுகிறார்கள். வைகானஸர்கள் கிருஷ்ண யஜுர்வேதத்தின் தைத்ரிய சம்ஹிதையை மட்டுமே தங்கள் முதன்மை நூலாகக் கொள்கின்றனர்.

வரலாறு

விகனஸ முனிவர் வகுத்த வழிபாட்டுச் சடங்கு நெறிகளும் வாழ்க்கைநெறிகளும் தொல்காலத்திலேயே இந்தியாவில் இருந்திருக்கலாம். மனுஸ்மிருதி (மானவ தர்ம சாஸ்திரம்) பிரம்மசரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாஸம் என்னும் நான்கு வாழ்க்கைக் காலகட்டங்களை (ஆசிரமங்கள்) விவரிக்கையில் வானப்பிரஸ்தம் வைகானஸ மரபின் அடிப்படையில் முன்வைக்கப்படுவதாகச் சொல்கிறார். வைகானஸ மரபு அந்தணர்கள் நடுவே ஒரு வழிபாட்டு முறை, வாழ்க்கைநெறியாக இருந்திருக்கலாம். பின்னர் அது வரையறை செய்யப்பட்டு ஆகமமாக ஆக்கப்பட்டது.

வைகானஸ ஆகம மரபு தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலும் கர்நாடகத்தின் தென்பகுதியிலும் மட்டுமே இருந்ததாகவே வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. வைகானஸ ஆகம நூல்கள் சம்ஸ்கிருதத்தில் இருந்தாலும், அவை தமிழகத்தில் எழுதப்பட்டவையாக இருக்கலாம் என்றும்; இங்கிருந்த வைணவ ஆலயத்தின் பூசகக்குடியினரால் அவை உருவாக்கப்பட்டிருக்கலாமென்றும் ஶ்ரீனிவாஸ ராவ் கருதுகிறார்.

வைகானஸ மரபு குறித்த கல்வெட்டுச்சான்றுகள் தமிழகத்தில் பொயு 9க்குப் பின்னர்தான் கிடைக்கின்றன, குறிப்பாக ராஜராஜசோழனின் ஆட்சிக்காலத்தில். ராஜராஜ சோழன் தமிழக ஆலயங்களை ஆகம முறைக்கு மாற்றியபோது வைணவத்துக்கு வைகானஸ மரபையே நெறியாக்கினார். பல்லவர்களின் காலகட்டத்தில் வைணவ ஆலயங்கள் சிறிய அளவிலேயே இருந்தன, அவை வெவ்வேறு பூசகக்குடியினரின் வழிபாட்டுரிமையின்கீழ் இருந்திருக்கலாம். சோழப்பேரரசு உருவாகி, ஆலயங்கள் பெரிதாகக் கட்டப்பட்டபோது வைகானஸம் என்னும் பொதுமரபின் கீழ் அந்த வைணவ வழிபாட்டுமுறைமை தொகுக்கப்பட்டிருக்கலாம்.

பொயு 11 ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் பாஞ்சராத்ர மரபு பரவத் தொடங்கியது. பாஞ்சராத்ர மரபு அந்த ஒரு துணைமதம் என்னும் அளவுக்கு விரிவான நெறிகளும், ஆகமநூல்களும் கொண்டது. அந்த நெறிகளை ஏற்றுக்கொண்டு, அதில் இணைபவர் அனைவருக்கும் அது வழிபாட்டுரிமை அளித்தது. அதன்பொருட்டு ஐந்து அடையாளக்குறிகளை ஏற்றுக்கொள்ளுதல் (பஞ்ச சம்ஸ்காரம்) போன்ற சடங்குகளையும் வகுத்தது. ஆனால் வைகானஸ மரபு முழுக்க முழுக்க குலமுறையாகவே நீடித்தது. பாஞ்சராத்ர மரபிற்கு எதிராக வைகானஸ மரபு தன்னை இறுக்கமாக்கிக் கொண்டது. அதில் ஒருவர் கருவில் இருக்கையிலேயே விஷ்ணுவுக்கு உரியவராக தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் விஷ்ணுபலி போன்ற சடங்குகள் உருவாயின.

வைகானஸ மரபு பாஞ்சராத்ர மரபில் இருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ளும்பொருட்டு கறாரான பல நெறிகளை உருவாக்கிக் கொண்டது. வைகானஸத்தில் பரம்பரை, பந்தம் போன்ற கருதுகோள்கள் முக்கியமானவை. ஒருவர் வைகானஸர்களின் குடும்பத்தில் பிறந்தாகவேண்டும், தலைமுறைதலைமுறையாக ஒரு குருமரபிலேயே நீடிக்கவேண்டும், ஒரு வழிபாட்டாளர்குழுவுக்குள்ளும் இறுதிவரை இருந்தாகவேண்டும். பிற்கால வைகானஸ நூல்கள் இந்த பிறப்புசார்ந்த தொடர்ச்சியை வலியுறுத்துகின்றன. வைகானஸர்கள் தமிழில் எழுந்த நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் போன்ற பக்திநூல்களை ஏற்பதில்லை. தங்கள் மரபு பக்திநூல்களுக்கு முந்தையது என்றும், வேதத்திற்கு மட்டுமே அதிகாரபூர்வ ஏற்பு அளிப்பது என்றும் அவர்கள் கருதுகின்றனர். கிருஷ்ணயஜுர்வேதத்தின் தைத்ரிய சம்ஹிதை அவர்களின் மூலநூல்.

ராமானுஜர் வைகானஸ ஆகம முறைக்கு எதிரானவராக இருந்தார். ராமாஜுனரின் ஶ்ரீவைஷ்ணவ மரபு வைகானஸ மரபினரை ஆலயங்களில் இருந்து அகற்றி பாஞ்சராத்ர ஆகம முறையை நிறுவியது. இந்த போராட்டம் நூறாண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. இன்று தென்னிந்தியாவில் ஏறத்தாழ பாதி வைணவ ஆலயங்களில் வைகானஸர்களே பூசகர்களாக நீடிக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் பாஞ்சராத்ர மரபே மிகப்பெரும்பாலும் உள்ளது. இந்த வழிபாட்டுரிமைப்போர் இன்றும் சாதிப்பூசலாக நீடிக்கிறது.

ஆசிரியர்கள்

வைகானஸ ஆகமங்களுக்கு விளக்கவுரை எழுதி அந்த மரபை வலியுறுத்தியவர்கள் என ந்ருசிம்ஹ வாஜ்பேயி, பட்ட பாஸ்கராச்சார்யா, அனந்தாச்சார்யா மற்றும் ஶ்ரீனிவாச மகி ஆகியோர் முக்கியமானவர்களாக கூறப்படுகின்றனர்

தத்துவம்

இருநிலை

பிற வைணவ மரபுகளைப்போலவே வைகானஸமும் இறைவனாகிய விஷ்ணுவை இரண்டு நிலைகளில் ஒரே சமயம் உருவகிக்கிறது. அறியமுடியக்கூடிய, வழிபடத்தக்க உருவங்கள். மற்றும் அறியமுடியாத, பிரபஞ்சரூபமான பிரம்மம். வைகானஸ மரபு என்பது தொன்மையான வேத ஞானதரிசனமாகிய பிரம்மம் என்னும் கருத்துருவை விஷ்ணுவாகவும், விஷ்ணுவை பல்வேறு வழிபாட்டு உருவங்களாகவும் மாற்றிக்கொள்வதற்கான தொடர்ச்சியான முயற்சியின் விளைவாக உருவானது. சடங்கு,அழகியல், தத்துவம் ஆகிய தளங்களில் வைகானஸம் இதைச் செய்கிறது.

விஷ்ணு இரண்டு நிலைகளில் இருக்கிறார். அறியப்படவே முடியாத பிரம்மம் நிஷ்கல வடிவம் எனப்படுகிறது (நி+கல. கலை என்பது அடையாளம். அடையாளங்களே அற்றது) சகல வடிவம் (அனைத்து அடையாளங்களும் கொண்ட வடிவம்). இதை புஷ்கல வடிவம் (பொலிவுத்தோற்றம்) என்றும் கூறுகிறார்கள்

சாங்கியம்

வைகானஸம் சாங்கிய தரிசனத்தை இந்த இணைப்புக்குப் பயன்படுத்திக்கொள்கிறது. சாங்கியதரிசனத்திலுள்ள புருஷ தத்துவம் , பரமபுருஷனாக அல்லது விஷ்ணுவாக இந்நூல்களில் உருவகிக்கப்படுகிறது.

நான்கு நிலைகள்

வைகானஸம் முன்வைக்கும் விஷ்ணுவின் நான்கு நிலைகள் குறிப்பிடத்தக்கவை

  • புருஷன்: பிரபஞ்சத்தின் சாரமான பேருள்ளம், முழுமையுள்ளம்
  • சத்யம் : பிரபஞ்சமே ஆகி நின்றுள்ள முழுமுதல் உண்மை
  • அச்சுதன்: பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றிலும் உணரப்படும் மாறாநெறி
  • அனிருத்தன்: எவருடைய எச்செயல்களும் எதனாலும் குறைவுபடாதிருக்கும் பிரபஞ்சத்தன்மை
மந்திரங்கள்

வைகானஸ மரபு இரண்டு மந்திரங்களை முன்வைக்கிறது. பரவாசுதேவன், நாராயணன் ஆகிய இரண்டு பெருந்தெய்வ உருவகங்களைப் போற்றும் மந்திரங்கள் அவை

  • ஓம் நமோ பகவதே வாசுதேவாய
  • ஓம் நமோ நாராயணாய.
மீட்பு

வைகானஸ மரபின்படி வீடுபேறு (மோக்ஷம்) என்பது விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்தை அடைதல். அதற்கு நான்கு வழிமுறைகள் உள்ளன

  • ஜபம் (மந்திரங்களை உளம்கொள்ளுதல்)
  • ஹூத (வேள்வி)
  • அர்ச்சனை (வழிபாடு)
  • தியானம் (யோகம், தியானம்)

ஆனால் வைகானஸ ஆகமநூல்கள் மரீசி சம்ஹிதை போன்றவை நான்கில் அர்ச்சனையே முதன்மையானது, அதுவே போதுமானது என்று சொல்கின்றன.

வைகானஸ ஆலயங்கள்

வைகானச ஆகமத்தைப் பின்பற்றும் சில முதன்மையான பெருமாள் கோயில்கள்

  • வெங்கடேஸ்வரா கோவில், திருமலை
  • ஸ்ரீ பார்த்தசாரதி கோவில், திருவல்லிக்கேணி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
  • யோகானந்த லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், மட்டப்பள்ளி
  • அருள்மிகு வெங்கடாசலபதி சுவாமி திருக்கோயில், ஒப்பிலியப்பன் கோயில், திருநாகேஸ்வரம்
  • ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோவில் (சின்ன திருப்பதி), துவாரகாத்திருமலை, எலுரு மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
  • ஸ்ரீ வீரநாராயண சுவாமி கோவில், பெலவாடி, சிக்மகளூர் மாவட்டம், கர்நாடகா
  • ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில் (கோணசீமா திருப்பதி), வடபள்ளி, கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
  • ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயில் (திருமலை கிரி), திருமலை கிரி, ஜக்கையாபேட்டை, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
  • ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவில் பல்லாப்பூர் பெட், பெங்களூர் கர்நாடகா
  • ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில், ஸ்ரீகிரி, ஓங்கோல், ஆந்திரப் பிரதேசம்
  • ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவில், மங்களகிரி, ஆந்திரப் பிரதேசம்
  • ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயில், வேதாத்ரி, ஜக்கய்யப்பேட்டை, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
  • ஸ்ரீ பிலிகிரிரங்கசுவாமி கோவில் பிலிகிரிரங்கனா பெட்டா, எலந்தூர் Tq சாமராஜநகர் மாவட்டம் கர்நாடகா
  • ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவில், கேரே தொண்டனூர் பாண்டவபுரா, மாண்டியா மாவட்டம், கர்நாடகா
  • ஸ்ரீ வீராஞ்சநேய சுவாமி கோவில் மூலபாகிலு , கோலார் மாவட்டம், கர்நாடகா
  • ஸ்ரீ வால்மீகி ஆஞ்சநேய ஸ்வாமி கோவில் சஜ்ஜனராவ் வட்டம் பெங்களூரு கர்நாடகா
  • கிரேட்டர் சிகாகோவின் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி (பாலாஜி) கோவில்
  • ஸ்ரீ லக்ஷ்மி கோவில் Ashland Boston US
  • சிங்கப்பூர் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில்
  • டெக்சாஸின் மலர் மேடு இந்து கோவில்
  • ஸ்ரீ தேவநாதன் பெருமாள் கோவில் திருவஹிந்தராபுரம், கடலூர், இந்தியா
  • ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் புதுச்சேரி, இந்தியா
  • ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோவில், திருமலை, மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர்
  • ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவில், குராசா, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
  • ஸ்ரீ சென்னகேசவ சுவாமி கோவில், தரகதுரு, மச்சிலிப்பட்டினம், கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
  • ஸ்ரீ சென்னகேசவ சுவாமி கோவில், மல்லவோலு, மச்சிலிப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
  • ஸ்ரீ சென்னகேசவ சுவாமி கோவில், வள்ளிபாலம், ரேபள்ளே, குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
  • ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில், கோடாலி, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
  • ஸ்ரீ லக்ஷ்மிநரசிமா சுவாமி கோவில், சோளிங்கர், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
  • ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமி கோவில், பெத்தமங்களா, கோலார் மாவட்டம், கர்நாடகா, இந்தியா
  • ஸ்ரீ சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில், உத்திரமேரூர், காஞ்சிபுரம், தமிழ்நாடு, இந்தியா
  • ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில், வெளியநல்லூர் கிராமம், காஞ்சிபுரம், தமிழ்நாடு, இந்தியா
  • ஸ்ரீ சென்னகேசவ சுவாமி கோவில், மல்லவோலு, மச்சிலிப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
  • ஸ்ரீ கள்ளழகர் கோயில், திருமாலிருஞ்சோலை, அழகர்கோயில், மதுரை, தமிழ்நாடு, இந்தியா.
  • ஸ்ரீ ஆதி ஜெகந்நாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி, ராம்நாடு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
  • ஸ்ரீ வேகு சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில், சக்கரமல்லூர், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
  • ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், நுங்கம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
  • ஸ்ரீ மாதவப் பெருமாள் கோயில், மயிலாப்பூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
  • ஸ்ரீ கேசவ சுவாமி கோவில், கந்த்ரேடு, பெடபுடி மண்டலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்.
  • ஸ்ரீ திருவேங்கடமுடியன் கோவில், தெற்கு திருப்பதி, அரியக்குடி சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு.
  • வெங்கடாசலபதி கோவில், குமாரபுரம் கிராமம்
  • ஸ்ரீமத் காத்ரி லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோயில், கதிரி, ஆந்திரப் பிரதேசம்.
  • மதனகோபாலசுவாமி கோயில், டாங்கேரு, கே. கங்காவரம் மண்டலம், கோனசீமா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
  • ஸ்ரீ பூ சமேத ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில், சீவாலா, கே. கங்காவரம் மண்டலம், கோனசீமா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
  • ஸ்ரீ சீதாராமச்சந்திரசுவாமி கோயில், கோட்டா, கே. கங்காவரம் மண்டல், கோனசீமா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
  • ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோவில், திருப்பதி, ஆந்திரப் பிரதேசம்.
  • ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவில், திருப்பதி, ஆந்திரப் பிரதேசம்.
  • ஸ்ரீ கஜேந்திர வரத ராஜ பெருமாள் கோவில், திருப்பத்தூர் (635601), தமிழ்நாடு
  • ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில், ஸ்ரீநிவாச மங்காபுரம், திருப்பதி, ஆந்திரப் பிரதேசம்.
  • ஸ்ரீ வேதநாராயண சுவாமி கோவில், நாகலாபுரம், ஆந்திரப் பிரதேசம்.

உசாத்துணை

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.