under review

எம். பக்தவத்சலம்: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
 
(5 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
[[File:எம். பக்தவத்சலம்.png|thumb|எம். பக்தவத்சலம்]]
[[File:எம். பக்தவத்சலம்.png|thumb|எம். பக்தவத்சலம்]]
எம் பக்தவத்சலம் (அக்டோபர் 9, 1897 – பிப்ரவரி 13, 1987) விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அபிமானி. விடுதலைக்கு முன்னும் பின்னும் காங்கிரஸ் கட்சியிலிருந்து தேர்தலில் நின்று வெற்றி பெற்று மக்கள் பணியாற்றினார். இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் கடைசி முதலமைச்சர்.
எம் பக்தவத்சலம் (அக்டோபர் 9, 1897 – பிப்ரவரி 13, 1987) விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அபிமானி. விடுதலைக்கு முன்னும் பின்னும் காங்கிரஸ் கட்சி சார்பாகத்  தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்றினார். இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் கடைசி முதலமைச்சர்.

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
எம் பக்தவத்சலம் சென்னையில் சி.என்.கனகசபாபதி முதலியார்(மீஞ்சூர்), மல்லிகா (பூந்தமல்லி நாசரேத்பேட்டை) இணையருக்கு அக்டோபர் 9, 1897-ல் பிறந்தார். தன் ஐந்து வயதில் தந்தையை இழந்தார். அவரது மாமாக்கள் சி.என். முத்துரங்க முதலியார் மற்றும் சி.என். எவலப்ப முதலியார் ஆகியோரால் வளர்க்கப்பட்டார். சி.என். முத்துரங்க முதலியார் பிராமணரல்லாதோர் சங்கத்தில் முக்கியப்பங்களிப்பாற்றியவர்,  1934-லேயே மத்திய சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரை முன்மாதிரியாகக் கொண்டு வளர்ந்தவர் எம். பக்தவத்சலம்.  
எம். பக்தவத்சலம் சென்னையில் சி.என்.கனகசபாபதி முதலியார், மல்லிகா இணையருக்கு அக்டோபர் 9, 1897-ல் பிறந்தார். தன் ஐந்து வயதில் தந்தையை இழந்தார். அவரது மாமாக்கள் சி.என். முத்துரங்க முதலியார் மற்றும் சி.என். எவலப்ப முதலியார் ஆகியோரால் வளர்க்கப்பட்டார். சி.என். முத்துரங்க முதலியார் பிராமணரல்லாதோர் சங்கத்தில் முக்கியப்பங்களிப்பாற்றியவர்,  1934-லேயே மத்திய சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரை முன்மாதிரியாகக் கொண்டு வளர்ந்தவர் எம். பக்தவத்சலம்.  

சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் 1923-ல் பட்டம் பெற்றார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சியைத் தொடங்கினார்.  
பக்தவத்சலம்  சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் 1923-ல் பட்டம் பெற்றார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சியைத் தொடங்கினார்.  
== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
எம். பக்தவத்சலம் ஞான சுந்தராம்பாளை மணந்தார். மகள் சரோஜினி வரதப்பன்.
எம். பக்தவத்சலம் ஞான சுந்தராம்பாளை மணந்தார். மகள் சரோஜினி வரதப்பன்.
Line 12: Line 12:
[[File:எம் பக்தவத்சலம்.png|thumb|எம் பக்தவத்சலம்]]
[[File:எம் பக்தவத்சலம்.png|thumb|எம் பக்தவத்சலம்]]

=== சுதந்திரத்திற்கு முன் ===
===== சுதந்திரத்திற்கு முன் =====
பக்தவத்சலம் கல்லூரிக் காலத்திலேயே இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். முழு நேரமாக சுதந்திரப் போராட்டத்திலும், அரசியலில் ஈடுபட்டார்.  
பக்தவத்சலம் கல்லூரிக் காலத்திலேயே இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். முழு நேரமாக சுதந்திரப் போராட்டத்திலும், அரசியலிலும் ஈடுபட்டார்.  

===== விடுதலைப் போராட்டம் =====
====== விடுதலைப் போராட்டம் ======
வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தின் போது பக்தவத்சலம் காயமடைந்தார். 1932-ல் இந்தியாவின் சுதந்திர தின விழாவை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறையில் இருந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார். 1944-ல் விடுதலை செய்யப்பட்டார். மும்முறை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி, வேலூர், மதுரை உள்ளிட்ட சிறைகளில் தண்டனையை அனுபவித்தார்.  
வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தில் பங்கு கொண்டபோது பக்தவத்சலம் காயமடைந்தார். 1932-ல் இந்தியாவின் சுதந்திர தின விழாவை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறையில் இருந்தார். 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்று ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார். 1944-ல் விடுதலை செய்யப்பட்டார். மும்முறை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி, வேலூர், மதுரை உள்ளிட்ட சிறைகளில் தண்டனையை அனுபவித்தார்.  

===== அரசியல் =====
===== பதவிகள் =====
* 1936 மாநகராட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு துணை மேயராக ஆனார்.  
* 1936-ன் மாநகராட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு துணை மேயராக ஆனார்.
* 1937-ல் நடைபெற்ற சென்னை சட்டமன்றத் தேர்தலில் நின்று திருவள்ளூர் ஊரகத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.  
* 1937-ல் நடைபெற்ற சென்னை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு திருவள்ளூர் ஊரகத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* [[சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார்|ராஜாஜி]] அரசில் உள்ளாட்சித் துறை அமைச்சக நாடாளுமன்றச் செயலாளராக பக்தவத்சலம் பணியாற்றினார்.  
* [[சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார்|ராஜாஜி]] அரசில் உள்ளாட்சித் துறை அமைச்சக நாடாளுமன்றச் செயலாளராக பக்தவத்சலம் பணியாற்றினார்.  
* இரண்டாவது உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் போர் பிரகடனப்படுத்தப்பட்டதன் பேரில் பக்தவத்சலம் இந்திய தேசிய காங்கிரஸின் மற்ற அலுவலக உறுப்பினர்களுடன் ராஜினாமா செய்தார்.
* இரண்டாவது உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் போர் பிரகடனப்படுத்தப்பட்டதன் பேரில் பக்தவத்சலம் இந்திய தேசிய காங்கிரஸின் மற்ற அலுவலக உறுப்பினர்களுடன் ராஜினாமா செய்தார்.
* 1946-ல் நடைபெற்ற சென்னை சட்டமன்றத் தேர்தலில் நின்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  
* 1946-ல் நடைபெற்ற சென்னை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* ஓ.பி.ராமசாமி ரெட்டியார் அமைச்சரவையில் பொதுப்பணி மற்றும் செய்தித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
* ஓ.பி.ராமசாமி ரெட்டியார் அமைச்சரவையில் பொதுப்பணி மற்றும் செய்தித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

Line 29: Line 29:
* 1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார்.  
* 1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார்.  
* 1926-ல் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரானார்.  
* 1926-ல் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரானார்.  
* ”இந்தியா” நாளிதழைத் தொடங்கி 1933 வரை நிர்வகித்தார்.
* 'இந்தியா' நாளிதழைத் தொடங்கி 1933 வரை நிர்வகித்தார்.
* 1926 மற்றும் 1935 மாவட்ட வாரியம் மற்றும் நகராட்சித் தேர்தல்களின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பேரவை செயலாளராக இருந்தார்.
* 1926 மற்றும் 1935 மாவட்ட வாரியம் மற்றும் நகராட்சித் தேர்தல்களின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பேரவை செயலாளராக இருந்தார்.
* சில காலம் சென்னை மகாஜன சபையின் செயலாளராக இருந்தார்.
* சில காலம் சென்னை மகாஜன சபையின் செயலாளராக இருந்தார்.
Line 38: Line 38:

===== அரசியல் =====
===== அரசியல் =====
சுதந்திரத்துக்கு முன்பும் பின்புமாக காங்கிரஸ் அமைச்சரவைகளில் விவசாயம், கல்வி, பொதுப் பணித் துறை, அற நிலையத் துறை என்று பல்வேறு துறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சரவை அனுபவம் பெற்றவர். 1952 முதல் 1954 வரை ராஜாஜி அமைச்சரவையிலும், 1954 முதல் 1963 வரை [[காமராஜர்]] அமைச்சரவையிலும் மூத்த அமைச்சராகப்  பணியாற்றினார். 'வெள்ளையனே வெளியேறு' காலகட்டத்தில் காங்கிரஸிலிருந்து ராஜாஜி வெளியேறியபோது, காமராஜருடனும் காங்கிரஸுடனும் இணைந்து நின்ற பக்தவத்சலம் இந்திரா காலத்தில் காங்கிரஸ் உடைந்தபோது சி.சுப்ரமணியத்துடன் இணைந்து இந்திரா காந்தியுடன் நின்றார். 1967-க்குப் பிறகு பலமுறை அவருக்கு ஆளுநர் பதவிக்கான அழைப்புகள் வந்தபோது அவற்றைத் தவிர்த்தார்.
பக்தவத்சலம் சுதந்திரத்துக்கு முன்பும் பின்புமாக காங்கிரஸ் அமைச்சரவைகளில் விவசாயம், கல்வி, பொதுப் பணித் துறை, அறநிலையத் துறை என்று பல்வேறு துறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சரவை அனுபவம் பெற்றவர். 1952 முதல் 1954 வரை ராஜாஜி அமைச்சரவையிலும், 1954 முதல் 1963 வரை [[காமராஜர்]] அமைச்சரவையிலும் மூத்த அமைச்சராகப்  பணியாற்றினார். 'வெள்ளையனே வெளியேறு' காலகட்டத்தில் காங்கிரஸிலிருந்து ராஜாஜி வெளியேறியபோது, காமராஜருடனும் காங்கிரஸுடனும் இணைந்து நின்ற பக்தவத்சலம் இந்திரா காலத்தில் காங்கிரஸ் உடைந்தபோது சி.சுப்ரமணியத்துடன் இணைந்து இந்திரா காந்தியுடன் நின்றார். 1967-க்குப் பிறகு பலமுறை அவருக்கு ஆளுநர் பதவிக்கான அழைப்புகள் வந்தபோது அவற்றைத் தவிர்த்தார்.

===== முதலமைச்சர் =====  
===== முதலமைச்சர் =====  
Line 46: Line 46:

===== விவேகானந்தர் பாறை =====
===== விவேகானந்தர் பாறை =====
ஆகஸ்ட் 1963-ல் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் செயலாளர் எம்.எஸ். கோல்வால்கர், [[விவேகானந்தர்|சுவாமி விவேகானந்தர்]] நூற்றாண்டுக் குழுவையும் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை நினைவுக் குழுவையும் அமைத்து அதன் செயலாளராக ஏக்நாத் ரானடேவை நியமித்தார். கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் அவருக்கு நினைவுச்சின்னம் அமைப்பதே இக்குழுவின் முக்கிய பணியாக இருந்தது. இதற்கு முதல்வர் பக்தவத்சலம் மற்றும் மத்திய கலாச்சார விவகார அமைச்சர் ஹுமாயுன் கபீர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஒரு நினைவுச் சின்னத்திற்கு ஆதரவாக 323 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை ரானடே அவரிடம் அளித்தபோது பக்தவத்சலம் ஒப்புக்கொண்டார்.
ஆகஸ்ட் 1963-ல் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் செயலாளர் எம்.எஸ். கோல்வால்கர், [[விவேகானந்தர்|சுவாமி விவேகானந்தர்]] நூற்றாண்டுக் குழுவையும் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை நினைவுக் குழுவையும் அமைத்து அதன் செயலாளராக ஏக்நாத் ரானடேவை நியமித்தார். கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் அவருக்கு நினைவுச்சின்னம் அமைப்பதே இக்குழுவின் முக்கிய பணியாக இருந்தது. இதற்கு முதல்வர் பக்தவத்சலம் மற்றும் மத்திய கலாச்சாரத்துறை  அமைச்சர் ஹுமாயுன் கபீர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஒரு நினைவுச் சின்னத்திற்கு ஆதரவாக 323 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை ரானடே அவரிடம் அளித்தபோது பக்தவத்சலம் ஒப்புக்கொண்டார்.

===== இந்தி எதிர்ப்பு =====
===== இந்தி எதிர்ப்பு =====
Line 53: Line 53:

== பங்களிப்பு  ==
== பங்களிப்பு  ==
* ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்திலிருந்து ஆந்திர பிரதேசம் பிரிந்து சென்றதால் வேளாண் உற்பத்தி சரிந்த நிலையில், தமிழகத்தைத் தொழில் துறையில் முன்னணி மாநிலமாக உயர்த்தியதில் காமராஜர் தலைமையிலான சி.சுப்ரமணியன், பக்தவத்சலம், ஆர்.வெங்கட்ராமன் கூட்டணிக்கு முக்கியப் பங்குண்டு. பக்தவத்சலம் முதல்வராகப் பொறுப்பு வகித்தபோது ஆர்.வெங்கட்ராமன் தொழில் துறை அமைச்சராக இருந்தார். அவரை முழுச் சுதந்திரத்துடன் பணியாற்ற பக்தவத்சலம் அனுமதித்தார். தமிழகத்தின் தொழில் துறை வளர்ச்சியில் பக்தவத்சலம்-வெங்கட்ராமன் நட்புறவின் பங்களிப்பு முக்கியமானது.
* ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திர பிரதேசம் பிரிந்து சென்றதால் வேளாண் உற்பத்தி சரிந்த நிலையில், தமிழகத்தைத் தொழில் துறையில் முன்னணி மாநிலமாக உயர்த்தியதில் காமராஜர் தலைமையிலான சி.சுப்ரமணியன், பக்தவத்சலம், ஆர்.வெங்கட்ராமன் கூட்டணிக்கு முக்கியப் பங்குண்டு. பக்தவத்சலம் முதல்வராகப் பொறுப்பு வகித்தபோது ஆர்.வெங்கட்ராமன் தொழில் துறை அமைச்சராக இருந்தார். அவரை முழுச் சுதந்திரத்துடன் பணியாற்ற பக்தவத்சலம் அனுமதித்தார். தமிழகத்தின் தொழில் துறை வளர்ச்சியில் பக்தவத்சலம்-வெங்கட்ராமன் நட்புறவின் பங்களிப்பு முக்கியமானது.

* பக்தவத்சலம் ஆட்சிக் காலத்தில் உயர்நிலைப் பள்ளிகளில் மீண்டும் ஆங்கில வழி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் ஆங்கிலம் கற்பிக்கும் திறனை மேம்படுத்துவதற்காகப் பணியிடைப் பயிற்சிகள் நடத்தப்பட்டன.  

Line 59: Line 59:
* கல்லூரிகளில் தமிழில் கற்கும் வாய்ப்பு உருவானதும் அவரது ஆட்சிக் காலத்தில்தான். புகுமுக வகுப்புகளைத் தமிழில் நடத்துவதற்கு மானியங்களை அளித்து ஊக்குவித்தார்.  
* கல்லூரிகளில் தமிழில் கற்கும் வாய்ப்பு உருவானதும் அவரது ஆட்சிக் காலத்தில்தான். புகுமுக வகுப்புகளைத் தமிழில் நடத்துவதற்கு மானியங்களை அளித்து ஊக்குவித்தார்.  

* தமிழ் நூல் வெளியீட்டுக் கழகம்தான் இவர் காலத்தில் தொடங்கப்பட்டது.  
* தமிழ் நூல் வெளியீட்டுக் கழகம் இவர் காலத்தில் தொடங்கப்பட்டது.

* எம். பக்தவத்சலம் 1946-ல் பொதுப் பணித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தபோது கீழ்பவானி அணைக்கட்டுத் திட்டம் உருவானது. கொங்கு மண்டலத்தின் முன்னேற்றப் படிகளில் அது முக்கியமான ஒன்று.  
* எம். பக்தவத்சலம் 1946-ல் பொதுப் பணித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தபோது கீழ்பவானி அணைக்கட்டுத் திட்டம் உருவானது. கொங்கு மண்டலத்தின் முன்னேற்றப் படிகளில் அது முக்கியமான ஒன்று.  
Line 85: Line 85:
* [https://amritmahotsav.nic.in/unsung-heroes-detail.htm?2824 M. Bhakthavatsalam: amritmahotsav]
* [https://amritmahotsav.nic.in/unsung-heroes-detail.htm?2824 M. Bhakthavatsalam: amritmahotsav]

{{Ready for review}}
 
{{Finalised}}
 
{{Fndt|02-Jun-2024, 20:58:51 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 16:03, 13 June 2024

எம். பக்தவத்சலம்

எம் பக்தவத்சலம் (அக்டோபர் 9, 1897 – பிப்ரவரி 13, 1987) விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அபிமானி. விடுதலைக்கு முன்னும் பின்னும் காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்றினார். இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் கடைசி முதலமைச்சர்.

பிறப்பு, கல்வி

எம். பக்தவத்சலம் சென்னையில் சி.என்.கனகசபாபதி முதலியார், மல்லிகா இணையருக்கு அக்டோபர் 9, 1897-ல் பிறந்தார். தன் ஐந்து வயதில் தந்தையை இழந்தார். அவரது மாமாக்கள் சி.என். முத்துரங்க முதலியார் மற்றும் சி.என். எவலப்ப முதலியார் ஆகியோரால் வளர்க்கப்பட்டார். சி.என். முத்துரங்க முதலியார் பிராமணரல்லாதோர் சங்கத்தில் முக்கியப்பங்களிப்பாற்றியவர், 1934-லேயே மத்திய சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரை முன்மாதிரியாகக் கொண்டு வளர்ந்தவர் எம். பக்தவத்சலம்.

பக்தவத்சலம் சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் 1923-ல் பட்டம் பெற்றார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சியைத் தொடங்கினார்.

தனிவாழ்க்கை

எம். பக்தவத்சலம் ஞான சுந்தராம்பாளை மணந்தார். மகள் சரோஜினி வரதப்பன்.

அரசியல் வாழ்க்கை

எம் பக்தவத்சலம்
சுதந்திரத்திற்கு முன்

பக்தவத்சலம் கல்லூரிக் காலத்திலேயே இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். முழு நேரமாக சுதந்திரப் போராட்டத்திலும், அரசியலிலும் ஈடுபட்டார்.

விடுதலைப் போராட்டம்

வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தில் பங்கு கொண்டபோது பக்தவத்சலம் காயமடைந்தார். 1932-ல் இந்தியாவின் சுதந்திர தின விழாவை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறையில் இருந்தார். 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்று ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார். 1944-ல் விடுதலை செய்யப்பட்டார். மும்முறை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி, வேலூர், மதுரை உள்ளிட்ட சிறைகளில் தண்டனையை அனுபவித்தார்.

பதவிகள்
  • 1936-ன் மாநகராட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு துணை மேயராக ஆனார்.
  • 1937-ல் நடைபெற்ற சென்னை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு திருவள்ளூர் ஊரகத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • ராஜாஜி அரசில் உள்ளாட்சித் துறை அமைச்சக நாடாளுமன்றச் செயலாளராக பக்தவத்சலம் பணியாற்றினார்.
  • இரண்டாவது உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் போர் பிரகடனப்படுத்தப்பட்டதன் பேரில் பக்தவத்சலம் இந்திய தேசிய காங்கிரஸின் மற்ற அலுவலக உறுப்பினர்களுடன் ராஜினாமா செய்தார்.
  • 1946-ல் நடைபெற்ற சென்னை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • ஓ.பி.ராமசாமி ரெட்டியார் அமைச்சரவையில் பொதுப்பணி மற்றும் செய்தித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
பொறுப்புகள்
  • 1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார்.
  • 1926-ல் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரானார்.
  • 'இந்தியா' நாளிதழைத் தொடங்கி 1933 வரை நிர்வகித்தார்.
  • 1926 மற்றும் 1935 மாவட்ட வாரியம் மற்றும் நகராட்சித் தேர்தல்களின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பேரவை செயலாளராக இருந்தார்.
  • சில காலம் சென்னை மகாஜன சபையின் செயலாளராக இருந்தார்.
  • 1944-ல் இந்திய அரசியலமைப்புச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுதந்திரத்திற்குப் பின்

எம். பக்தவத்சலம்
அரசியல்

பக்தவத்சலம் சுதந்திரத்துக்கு முன்பும் பின்புமாக காங்கிரஸ் அமைச்சரவைகளில் விவசாயம், கல்வி, பொதுப் பணித் துறை, அறநிலையத் துறை என்று பல்வேறு துறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சரவை அனுபவம் பெற்றவர். 1952 முதல் 1954 வரை ராஜாஜி அமைச்சரவையிலும், 1954 முதல் 1963 வரை காமராஜர் அமைச்சரவையிலும் மூத்த அமைச்சராகப் பணியாற்றினார். 'வெள்ளையனே வெளியேறு' காலகட்டத்தில் காங்கிரஸிலிருந்து ராஜாஜி வெளியேறியபோது, காமராஜருடனும் காங்கிரஸுடனும் இணைந்து நின்ற பக்தவத்சலம் இந்திரா காலத்தில் காங்கிரஸ் உடைந்தபோது சி.சுப்ரமணியத்துடன் இணைந்து இந்திரா காந்தியுடன் நின்றார். 1967-க்குப் பிறகு பலமுறை அவருக்கு ஆளுநர் பதவிக்கான அழைப்புகள் வந்தபோது அவற்றைத் தவிர்த்தார்.

முதலமைச்சர்

1962-ல் இந்திய தேசிய காங்கிரஸ் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியை அமைத்தது. காந்தி ஜெயந்தி நாளில் அக்டோபர் 2, 1963 அன்று, காமராஜர் திட்டத்தின் (கே பிளான்) கீழ் காங்கிரஸ் கட்சியின் அலுவலகப் பொறுப்பாளராக அதிக நேரத்தை செலவிடுவதற்காக காமராஜர் ராஜினாமா செய்த பிறகு பக்தவத்சலம் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

கட்சியின் பெரும்பான்மையானோர் தேர்வின் பேரிலேயே பக்தவத்சலம் முதலமைச்சரானார். ஆனால் அவருடைய கட்சி சார்ந்த முடிவுகளும், மாநிலத்துக்கான திட்டங்கள் சார்ந்த முடிவுகள் அனைத்திலும் மத்தியிலிருந்த காங்கிரஸ் தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் செயல்பட்டதால் கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையையும், மக்களின் நம்பிக்கையையும் இழந்தார். 1967 தேர்தலில் தோல்வியடைந்தார். பக்தவத்சலம் இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் கடைசி முதலமைச்சராக ஆனார்.

விவேகானந்தர் பாறை

ஆகஸ்ட் 1963-ல் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் செயலாளர் எம்.எஸ். கோல்வால்கர், சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டுக் குழுவையும் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை நினைவுக் குழுவையும் அமைத்து அதன் செயலாளராக ஏக்நாத் ரானடேவை நியமித்தார். கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் அவருக்கு நினைவுச்சின்னம் அமைப்பதே இக்குழுவின் முக்கிய பணியாக இருந்தது. இதற்கு முதல்வர் பக்தவத்சலம் மற்றும் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஹுமாயுன் கபீர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஒரு நினைவுச் சின்னத்திற்கு ஆதரவாக 323 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை ரானடே அவரிடம் அளித்தபோது பக்தவத்சலம் ஒப்புக்கொண்டார்.

இந்தி எதிர்ப்பு

பக்தவத்சலம் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எந்தவித எதிர்ப்புமின்றி ஆதரித்தார். மார்ச் 7, 1964-ல் சென்னை சட்டமன்றத்தின் கூட்டத்தில் பக்தவத்சலம் ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளைக் கற்பிக்கப் பரிந்துரைத்தார். தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் ஆரம்பித்தது. ஜனவரி 26, 1965-ல் இந்திய நாடாளுமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட 15 ஆண்டு கால இடைமாற்றக் காலம் முடிவுக்கு வந்தபோது போராட்டங்கள் தீவிரமடைந்து காவல்துறை நடவடிக்கை மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. 1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. இந்தச் சூழலிலும் பக்தவத்சலம் மத்திய அரசின் அறிவுறுத்தலின் படியே நடந்து கொண்டார். 1967 தேர்தலில் தோல்வியடைந்தார். அதன்பின் இந்திய தேசிய காங்கிரஸைச் சார்ந்த ஒரு தலைவர் முதலமைச்சர் ஆகாமல் ஆனதற்கு இந்தச் சம்பவம் வழிவகுத்ததாக அறிஞர்கள் நம்புகின்றனர்.

எம் பக்தவத்சலம் அஞ்சல்தலை

பங்களிப்பு

  • ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திர பிரதேசம் பிரிந்து சென்றதால் வேளாண் உற்பத்தி சரிந்த நிலையில், தமிழகத்தைத் தொழில் துறையில் முன்னணி மாநிலமாக உயர்த்தியதில் காமராஜர் தலைமையிலான சி.சுப்ரமணியன், பக்தவத்சலம், ஆர்.வெங்கட்ராமன் கூட்டணிக்கு முக்கியப் பங்குண்டு. பக்தவத்சலம் முதல்வராகப் பொறுப்பு வகித்தபோது ஆர்.வெங்கட்ராமன் தொழில் துறை அமைச்சராக இருந்தார். அவரை முழுச் சுதந்திரத்துடன் பணியாற்ற பக்தவத்சலம் அனுமதித்தார். தமிழகத்தின் தொழில் துறை வளர்ச்சியில் பக்தவத்சலம்-வெங்கட்ராமன் நட்புறவின் பங்களிப்பு முக்கியமானது.
  • பக்தவத்சலம் ஆட்சிக் காலத்தில் உயர்நிலைப் பள்ளிகளில் மீண்டும் ஆங்கில வழி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் ஆங்கிலம் கற்பிக்கும் திறனை மேம்படுத்துவதற்காகப் பணியிடைப் பயிற்சிகள் நடத்தப்பட்டன.
  • கல்லூரிகளில் தமிழில் கற்கும் வாய்ப்பு உருவானதும் அவரது ஆட்சிக் காலத்தில்தான். புகுமுக வகுப்புகளைத் தமிழில் நடத்துவதற்கு மானியங்களை அளித்து ஊக்குவித்தார்.
  • தமிழ் நூல் வெளியீட்டுக் கழகம் இவர் காலத்தில் தொடங்கப்பட்டது.
  • எம். பக்தவத்சலம் 1946-ல் பொதுப் பணித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தபோது கீழ்பவானி அணைக்கட்டுத் திட்டம் உருவானது. கொங்கு மண்டலத்தின் முன்னேற்றப் படிகளில் அது முக்கியமான ஒன்று.
  • இவர் விவசாயத் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது கோவை விவசாயக் கல்லூரி மேம்படுத்தப்பட்டது.
  • அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது கைவிடப்பட்ட நிலையில் இருந்த நூற்றுக்கணக்கான கோயில்களைப் புனரமைத்தார். அதிக வருமானம் கிடைக்கும் கோயில்களின் சார்பில் கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார். தருமபுர ஆதீனம் அவருக்கு 'நல்லறங்காவலர்' என்று பட்டம் வழங்கியது. இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தார்.
  • 1960-ல் சோவியத் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் சென்றார். இந்தியாவின் ஐந்தாண்டு திட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தார்.
எம் பக்தவத்சலம் சிலை

நினைவிடம்

தமிழ்நாடு அரசு எம்.பக்தவத்சலம் நினைவாக சென்னை கிண்டியில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைத்தது. அங்கு அவரின் மார்பளவு சிலை வைக்கப்பட்டது.

மறைவு

எம். பக்தவத்ஸலம் தன் 89-ம் வயதில் ஜனவரி 31, 1987-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • குடியரசும் மக்களும்
  • சமுதாய வளர்ச்சி
  • வளரும் தமிழகம்

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Jun-2024, 20:58:51 IST