being created

க. இரவிசங்கர்

From Tamil Wiki
Revision as of 21:33, 5 May 2024 by Ramya (talk | contribs)
க. இரவிசங்கர்

க. இரவிசங்கர் (ஜூன் 7, 1954 - மே 4, 2024) எழுத்தாளர், பேராசிரியர், மொழியியல் அறிஞர். புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

க. இரவிசங்கர் கும்பகோணத்தில் ஜூன் 7, 1954-ல் பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார்.

தனிவாழ்க்கை

க. இரவிசங்கர் மாலதியை மணந்தார். மாலதி ஸ்டான்ஃபோர்ட் இண்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

ஆசிரியப் பணி

தெற்குக் குஜராத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகத் தன் பணி வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் மொழியியல் துறையில் பணியாற்றினார். அயல்நாட்டு மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் பாட நூல்களை உருவாக்கினார். புதுச்சேரியில் பணியாற்றும் பிற மாநிலத்து உயரதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் தமிழ் பயிற்றுவிக்கும் பணியைச் செய்தார்.

ஆய்வுப்பணி

க. இரவிசங்கர் ஒரு மொழியியல் அறிஞர். இவரின் ஆய்வேடு ”Intonation Patterns in Tamil” என்ற பெயரில் நூலாக வெளியானது. தமிழ் ஒலிப்பு முறை குறித்து விரிவாக ஆராயும் நூல் இது. இந்திய மொழிகளைக் குறித்து, குறிப்பாகத் திராவிட மொழிகளின் ஒலிப்புமுறை குறித்து ஆராயும் அறிஞர்களுக்குப் இந்த நூல் உதவிகரமானது. பல்வேறு ஆய்வரங்குகளில் – பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.

இலக்கிய வாழ்க்கை

க. இரவிசங்கர் “தொல்காப்பிய - எழுத்து சொல் மரபுகள்” என்ற நூலை த. பரசுராமனுடன் இணைந்து எழுதினார். The Languages of Puduchery, Intonation Patterns in Tamil ஆகியவை இவரின் ஆய்வு நூல்கள்.

மறைவு

க. இரவிசங்கர் மே 4, 2024-ல் புதுச்சேரியில் காலமானார்.

நூல் பட்டியல்

  • தொல்காப்பிய - எழுத்து சொல் மரபுகள்
ஆங்கிலம்
  • Intonation Patterns in Tamil
  • The Languages of Puduchery (People's Linguistic Survey Of India) (Vol 23, Part 2)

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.