first review completed

கோனாடு

From Tamil Wiki

கோனாடு சங்ககாலத்தில் வழங்கப்பட்ட ஊரின் பெயர்.

கோனாடு பற்றி

  • பழைய புதுக்கோட்டைத் தனியரசு நாட்டையே சங்கத்தமிழர்கள் கோனாடு என வழங்கினர்.
  • இதன் பரப்பு இருபத்து நாற்காத வட்டகை (இருபத்து நான்கு காதத்தை உள்ளடக்கிய நிலம்)
  • கோனாடு இரட்டபாடி கொண்ட சோழவளநாடான கோனாடு என்றும், கோளாந்தக வளநாடான கோனாடு என்றும் கல்வெட்டுகளில் உள்ளது.
  • கோனாடு வடகோனாடு, தென் கோனாடு, கீழ் கோனாடு என மூன்று கோனாடுகள் உள்ளன
  • சோழ நாட்டிற்கும், பாண்டிய நாட்டிற்கும் எல்லையாக ஓடும் தென் வெள்ளாற்றின் தென்கரை தென்கோனாடு என்றும், வடகரை வடகோனாடு என்றும் பெயர் பெற்றன
  • கீழ்கோனாடு இளங்கோனாடு என்றும் அழைக்கப்பட்டது
  • தஞ்சை மாவட்டத்தின் அறந்தாங்கியே கீழ்கோனாடு

சங்கப்புலவர்

”கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார்” கோனாட்டை முன்னொட்டாகக் கொண்ட பெயருடைய சங்ககாலப் புலவர்.

உசாத்துணை

சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 4: புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.