under review

புக்கிட் ரோத்தான் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 21: Line 21:
* க. முருகன், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் (2015).
* க. முருகன், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் (2015).
* மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ் (2016).
* மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ் (2016).
{{Second review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:மலேசிய பண்பாடு]]
[[Category:மலேசிய பண்பாடு]]

Revision as of 09:15, 27 May 2024

பள்ளி சின்னம்

தேசிய வகை புக்கிட் ரோத்தான் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் இயங்கும் தமிழ்ப்பள்ளி. சிலாங்கூரின் கோல சிலாங்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

வரலாறு

புக்கிட் ரோத்தான் பாரு 2.jpg

புக்கிட் ரோத்தான் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி 1971-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. புக்கிட் ரோத்தான் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி தொடக்கத்தில் 1939-ல் ராஜகிரி தோட்டத்தில் தேசிய வகை ராஜகிரி தோட்டத் தமிழ்ப்பள்ளி எனும் பெயரில் இயங்கிய பள்ளி.

மாணவர் எண்ணிக்கை

1939,1940-ம் ஆண்டுகளில் புக்கிட் ரோத்தான் பாரு தமிழ்ப்பள்ளியில் சுமார் 50 மாணவர்கள் பயின்றனர். காலப்போக்கில், 1946 முதல் 1965-ம் ஆண்டுகளில் ஏறக்குறைய 100 மாணவர்கள் கல்வி கற்றனர். இந்த மாணவர்களின் எண்ணிக்கை 1966லிருந்து 1971-ம் ஆண்டுவாக்கில் 120 ஆக உயர்ந்தது. 1972, 1973-ம் ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை 234-ஐ எட்டியது.

கட்டடம்

புக்கிட் ரோத்தான் பாரு 3.jpg

ஆரம்பக் காலத்தில், தோட்டப் புறத்தில் 40 அடி நீளமும், 28 அடி அகலமும் கொண்ட பலகையிலான ஒரு தகரக் கொட்டகையில் ராஜகிரி தோட்டத்தில் இப்பள்ளி இயங்கியது. பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்ததால், இப்பள்ளிக் கட்டடத்தைப் புனரமைப்புச் செய்து, புதிய இடத்தில் பள்ளிக் கட்டடத்தைக் கொண்டுவர பள்ளி நிர்வாகமும், தோட்ட நிர்வாகமும் எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக, கோல சிலாங்கூர் - கோலாலம்பூர் நெடுஞ்சாலைக்கருகில் 2.8 ஏக்கர் நிலப்பரப்பில், புக்கிட் ரோத்தான் பட்டணத்திற்கு அருகில் புக்கிட் ரோத்தான் பாரு தமிழ்ப்பள்ளி எனும் பெயரில் புதிய கட்டடம் எழுப்பப்பட்டது. 2013-ம் ஆண்டு புக்கிட் ரோத்தான் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஒரு புதிய இணைக்கட்டடம் கல்வி அமைச்சால் கட்டித் தரப்பட்டது.

இன்றைய நிலை

தொடக்கக்காலத்தில் மாணவர் எண்ணிக்கையில் உயர்வு கண்ட புக்கிட் ரோத்தான் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தற்போது குறைவான மாணவர்கள் பயில்கின்றனர். குறைவான மாணவர் எண்ணிக்கை கொண்டுள்ள பள்ளி எனும் பிரிவில் இப்பள்ளி இயங்குகின்றது.

பள்ளியின் நூல்நிலையம்

உசாத்துணை

  • க. முருகன், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் (2015).
  • மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ் (2016).


✅Finalised Page