under review

யூசோப் லியூ பௌஜுன்: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
m (Moved image to separate line)
 
Line 30: Line 30:
* 2015-ம் ஆண்டு முதல், யூசோப் லியூ பௌஜுன், மலேசிய அரசு சாரா நிறுவனமான டுனியா மெலாயு டுனியா இஸ்லாம் (DMDI) இன் உச்ச கவுன்சில் உறுப்பினராகவும், சீன பிராந்தியத்தின் DMDI துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
* 2015-ம் ஆண்டு முதல், யூசோப் லியூ பௌஜுன், மலேசிய அரசு சாரா நிறுவனமான டுனியா மெலாயு டுனியா இஸ்லாம் (DMDI) இன் உச்ச கவுன்சில் உறுப்பினராகவும், சீன பிராந்தியத்தின் DMDI துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
* 2015-ல் DMDI ஆளுமைகளின் பங்களிப்புக்கான ஹாங் துவா விருது வழங்கப்பட்டது.
* 2015-ல் DMDI ஆளுமைகளின் பங்களிப்புக்கான ஹாங் துவா விருது வழங்கப்பட்டது.
*2022-ல் தேசிய நூலகத்தின் எழுத்துக்கான விருது வழங்கப்பட்டது[[File:20220828023736YUSUF LIU BAOJUN WINS 2022 WRITING AWARD IN MALAYSIAN NATIONAL LIBRARY BOOK AWARDS 2022 CHINA PRESS NATION PG 8.jpg|thumb|படம்; நன்றி China Press & UPM]]  
*2022-ல் தேசிய நூலகத்தின் எழுத்துக்கான விருது வழங்கப்பட்டது.
[[File:20220828023736YUSUF LIU BAOJUN WINS 2022 WRITING AWARD IN MALAYSIAN NATIONAL LIBRARY BOOK AWARDS 2022 CHINA PRESS NATION PG 8.jpg|thumb|படம்; நன்றி China Press & UPM]]  


== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==

Latest revision as of 08:11, 25 June 2024

யூசோப் லியூ பௌஜுன்

யூசோப் லியூ பௌஜுன் (Yusuf Liu Baojun)(பிறப்பு:ஏப்ரல் 8, 1963) சீன-முஸ்லீம் வரலாற்றாசிரியர், எழுத்தாளர், க்ஹாட் (khat) எழுத்துக்கலையில் தேர்ந்தவர். இவர் மலாய், மென்ட்ரின், ஆங்கில மொழிகளில் முழு நேர எழுத்தாளராக எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

யூசோப் லியூ பௌஜுன் ஏப்ரல் 8, 1963-ல் தியன்சுய், கன்சூ, சீனதேசத்தில் பிறந்தார்.

1987-ல் யூசோப் லியூ பௌஜுன் நொர்த்வெஸ்ட் நோர்மல் (Northwest Normal University) பல்கலைகழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். எக்ஸ்தர் ­(Exeter) பல்கலைகழகத்தில் சீன இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1998-ல் மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைகழகத்தில் (International Islamic University Malaysia (IIUM) சமூகவியல் மற்றும் மானுடவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2002-ல் அதே பல்கலைகழகத்தில் கற்பித்தலில் முதுகலை பட்டம் பெற்றார்.

1989-ல் மலேசியாவுக்கு புலம் பெயர்ந்தார்.

தனி வாழ்க்கை

யூசோப் லியூ பௌஜுன் CM Diverse Sdn Bhd எனும் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்.

யூசோப் லியூ பௌஜுனின் மனைவியின் பெயர் அய்ஷா ஷாங் பௌஹொங். இவர்களுக்கு மூன்று குழந்தைகள்.

எழுத்துப்பணி

யூசோப் லியூ பௌஜுன் ஒர் அபுனைவு எழுத்தாளர். அவரின் தேடல், ஆராய்ச்சி, எழுத்து முழுவதும் சீன-முஸ்லிம் தொடர்பை, சீனாவில் உள்ள சீன முஸ்லீம்கள், ஹுய் இனக்குழு மற்றும் மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் இடையேயான உறவை உள்ளடக்கமாகக் கொண்டது. 1993 தொடங்கி யூசோப் லியூ பௌஜுன் தனது ஆய்வு கட்டுரைகளை நாளிதள்களிலும் மலேசிய-சீன பல்கலைக்கழக ஜர்னல்களிலும் எழுதுகிறார்.

யூசோப் லியூ பௌஜுன் 2009-2012 ஆண்டுகளில் மலாயா பல்கலைகழத்தில் மலாய்-சீன ஆய்வில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார்.

யூசோப் லியூ பௌஜுன் தற்போது (2024) சர்வதேச இஸ்லாமிய சிந்தனை மற்றும் நாகரிகக் கழகத்தின் (ISTAC) - IIUM வருகை தரு விருந்தினர் எழுத்தாளராக உள்ளார். தென்கிழக்கு ஆசியாவுடனான சீன முஸ்லீம்கள் மற்றும் இன்று மலேசியாவில் உள்ள சீன முஸ்லிம்களின் வரலாற்று உறவின் ஆராய்ச்சியில் அவர் கவனம் செலுத்துகிறார்.

பிற பணிகள்

யூசோப் லியூ பௌஜுன் சீன-முஸ்லீம் கண்காட்சிகளைப் பினாங்கு, பேராக், கோலாலம்பூர் மாநிலங்களிலும், பல்கலைகழகங்களிலும் நிகழ்த்தி வருகிறார். லியூ ஜாவி எழுத்துக்கலையான khatல் தேர்ச்சி பெற்றவர். தன் எழுத்துகளைக் காட்சி செய்து வருகிறார்.

மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதில் யூசோப் லியூ பௌஜுன் தீவிரமாக உள்ளார். 2010 தொடங்கி, சீனதேசத்தின் முஸ்லீம் சமூகங்களைக் காணச் செல்லும் அரசியல்வாதிகளுடன் உடன் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

பொறுப்புகள், விருதுகள்

  • 2015-ம் ஆண்டு முதல், யூசோப் லியூ பௌஜுன், மலேசிய அரசு சாரா நிறுவனமான டுனியா மெலாயு டுனியா இஸ்லாம் (DMDI) இன் உச்ச கவுன்சில் உறுப்பினராகவும், சீன பிராந்தியத்தின் DMDI துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
  • 2015-ல் DMDI ஆளுமைகளின் பங்களிப்புக்கான ஹாங் துவா விருது வழங்கப்பட்டது.
  • 2022-ல் தேசிய நூலகத்தின் எழுத்துக்கான விருது வழங்கப்பட்டது.
படம்; நன்றி China Press & UPM

நூல் பட்டியல்

  • Flowing to East, Yellow River in 1992, Mandarin. Scholar Publication House of Malaysia.
  • A Glance at Chinese Muslims in 1998, English, Anzagain Book Company of Malaysia. (ISBN 983-2032-13-X)
  • To Know Islam (Booklet) in 1998, Mandarin, JAKIM.
  • Perkembangan Masyarakat China Muslim Di Dunia (The World Chinese Muslim's Development) in 1999, Malay. (ISBN 983-2032-18-0)
  • Understanding Confucianism in Islamic perspective (Booklet) in 1999, Mandarin, Ministry of Religion of Brunei Darussalam
  • Chinese Muslim Calligraphy in 2001, English, National Art Gallery of Malaysia. (ISBN 983-9572-28-8)
  • Muslims in China (Co-Author) in 2002, Malay and English, National Museum of Malaysia.
  • Overseas Chinese Muslims in 2004, Mandarin (China Edition),National Publication House of China. (ISBN 7-105-06350-5 G.1207)
  • Great Chinese Envoy Cheng Ho (Zheng He) in 2004, English,Malacca state government in Malaysia. (ISBN 983-418-280-5)
  • Exodus Through Tian Shan (The Tales of Donggan People in Former Russia) in 2004, (China Edition),Ningxia People's Publication House of China. (ISBN 7-227-02734-1)
  • Nanyang Sanji – the ASEAN Impression in 2010, Mandarin,Ningxia People's Publication House of China.
  • Exodus Through Tian Shan - The Tales of Donggan People in Former Russia 2nd edition in 2011, Mandarin,Ningxia People's Publication House of China.
  • The World Chinese Muslims in 2011, Mandarin, Ningxia People's Publication House of China. (ISBN 978-7-227-04403-1)
  • Malay Communities in China in 2013, English and Mandarin, Saba Islamic Media.
  • Dr Mahathir and Chinese Muslims in 2013, English and Mandarin, Saba Islamic Media.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-May-2024, 08:30:36 IST