under review

ப்ரியா தம்பி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
[[File:ப்ரியா தம்பி3.png|thumb|ப்ரியா தம்பி]]

ப்ரியா தம்பி (மார்ச் 17) ஊடகத்துறை சார்ந்த எழுத்தாளர், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் வசனம், திரைக்கதைகள் எழுதிவருகிறார்.

== ஊடகவியல் ==
ப்ரியா தம்பி கேரள‌ கைரளி நிறுவனம், சுட்டி விகடன், தமிழ் முரசு, கிழக்கு பதிப்பகம், குமுதம் ரிப்போர்ட்டர், டாக்டர் விகடன் ஆகிய ஊடகங்களில் பணி செய்தார்.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
ப்ரியா தம்பி இதழ்களில் கட்டுரைகள் எழுதிவருகிறார். ’பேசாத பேச்செல்லாம்’ என்ற கட்டுரைத்தொடர் விகடன் பிரசுரம் மூலம் வெளிவந்தது. ‘மின்னுவும் அம்மாவும்’ கயல் கவின் பதிப்பகம் மூலம் வெளிவந்தது.  

Revision as of 10:01, 22 June 2024

ப்ரியா தம்பி

ப்ரியா தம்பி (மார்ச் 17) ஊடகத்துறை சார்ந்த எழுத்தாளர், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் வசனம், திரைக்கதைகள் எழுதிவருகிறார்.

ஊடகவியல்

ப்ரியா தம்பி கேரள‌ கைரளி நிறுவனம், சுட்டி விகடன், தமிழ் முரசு, கிழக்கு பதிப்பகம், குமுதம் ரிப்போர்ட்டர், டாக்டர் விகடன் ஆகிய ஊடகங்களில் பணி செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

ப்ரியா தம்பி இதழ்களில் கட்டுரைகள் எழுதிவருகிறார். ’பேசாத பேச்செல்லாம்’ என்ற கட்டுரைத்தொடர் விகடன் பிரசுரம் மூலம் வெளிவந்தது. ‘மின்னுவும் அம்மாவும்’ கயல் கவின் பதிப்பகம் மூலம் வெளிவந்தது.

திரை வாழ்க்கை

தொலைக்காட்சித் தொடர் நாடகங்களுக்கு வசனங்கள் எழுதி வருகிறார். ப்ரியா தம்பி கலைஞர் தொலைக்காட்சியில் வந்த இயக்குநர் திருச்செல்வத்தின் ’பொக்கிஷம்’ சீரியலுக்கு முதன் முதலில் வசனம் எழுதினார். தொடர்ந்து விஜய் டிவியில் ”தர்மயுத்தம்” என்ற சீரியலில் வசனம் எழுதினார்.

வசனம் எழுதிய நாடகத் தொடர்கள்
  • பொக்கிஷம்
  • தர்மயுத்தம்
  • ஆஃபீஸ்
  • 7 B
  • பகல் நிலவு (2016)
  • மெளன ராகம் (2017 to 2021)
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் (2018- 2020)
  • பாக்கியலட்சுமி

மதிப்பீடு

பெண்கள் அதிகம் பார்க்கும், பெண்கள் கதாப்பாத்திரத்தைச் சுற்றி பெரும்பாலும் சுழலும் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் பெண்கள் அதிகமும் வசனம் எழுத வரவேண்டும் என்று முன்வைப்பவர் ப்ரியாதம்பி. பெண்கள் என்றாலே பழி வாங்குபவர்கள், மாமியார்- மருமகள் சண்டை என்ற எதிர்மறை அம்சம் இல்லாமல் இயல்பான குடும்பங்களை, இயல்பான பெண்களை காண்பித்தும் வெற்றி அடைய முடியும் என்பதை தொலைக்காட்சித் தொடர்களில் நிரூபித்தவர்.

நூல்கள் பட்டியல்

  • பேசாத பேச்செல்லாம் (விகடன் பிரசுரம்)
  • மின்னுவும் அம்மாவும் (கயல் கவின்)

உசாத்துணை

இணைப்புகள்

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.